இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது
புலிக்காச்சல்
புலிக்காச்சல் இதுவும் எலிக்காச்சல் பிளேக் கோழிகாச்சல் குனியா மாதிரி இதுவும் ஒரு காச்சல் தான் இதன் தோற்றம் இலங்கையில் புலிகள் ஆயுத போராட்டம் தொடங்கிய காலத்திலேயே இந்த காச்சலும் இலங்கையில் தேற்றம் பெற்று பின்னர் தமிழ்நாடு ஊடாக இந்தியா விரலும் பரவி இன்று அவுஸ்ரேலியா தொடக்கம் கனடாவரை பரவியிருக்கிறது.இது தானாகவும் தொற்றி கொள்ளும் மற்றது பரம்பரையாகவும் இது பரவும் ஆனால் மிக அபூர்வமாக இலட்சத்தில் ஒருவரே இந்த நோயால் பாதிக்கபடுகிறார்கள். சாதாரணமாக காச்சல் வருபவர்கள் எல்லோரும் வைத்தியரிடம்தான் போவார்கள் ஆனால் புலிகாச்சல் வந்தவர்கள் மட்டும் காவல்துறையினரிடம் போவார்கள்.
சரி இந்த காச்சலால் பாதிக்கபட்வர்கள் அல்லது பாதிக்கபட்டவர்களால் நிகழ்ந்த சம்பவங்கள் சிலதை பார்ப்பதே இந்த கட்டுரையின் நோக்கம். அண்மையை சில செய்திகளை பார்தால் சிலரிற்கு புலிகாச்சல் உச்சத்தில் எறியிருக்கிறது.உதாரணமாக ஒரு செய்தி அ.தி.மு.க. தலைவி ஜெயலிதாவிற்கு post card மூலம் புலிகள் மிரட்டல் இப்படி எல்லா ஊடகங்களிலும் பரபரப்பான செய்தி. இந்தியாவில் அவனவன் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற சொல்லி வட்டத்தை பிடித்து மாவட்டத்தை பிடித்து எம்.எல்.ஏ எம்.பி என்று கால் கடுக்க காத்து நின்று அதிகாரிகளிற்கு குடுக்கிறதை குடுத்து ஒரு மனுவை எல்லா கையெழுத்தோடையும் தயார் பண்ணி கொண்டு போய் முதல்வரிடம் குடுத்தாலும் அது அடுத்தவரிற்கு தெரியாமல் குப்பை கூடையிலையோ அல்லது கிடப்பிலையோ போய்விடும்.
ஆனால் யாரோ ஒரு பொழுது போகாத போக்கற்றவன் ஒரு 50 சத post card லை புலி எண்டு எழுதி முன்நாள் மதல்வரிற்கு அனுப்பினது மூலை முடுக்கெல்லாம் செய்தியா பரவிட்டுது. அது மட்டுமா தெழிலதிபரிற்கு தெலைபேசியில் மிரட்டல். துறைமுகத்தை தரைமட்டமாக்க போகிறோம் என்று மிரட்டல்.மீனவர்களை வைத்து ஒழிச்சு பிடிச்சு விழையாட்டு என்று இது இந்தியாவிலை இந்த காச்சலாலை பாதிக்கபட்டவையின்வை செயற்பாடு என்றால் புலத்திலை இந்த காச்சல் பிடிச்சஒரு சிலர்.அண்மையில் பிரான்சின் பொதுதேர்தல் நடந்து அதில் வலது சாரி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தபொழுது சோசலிச கட்சியின் தோல்வியை தாங்க முடியாத பலர் பிரான்சின் முக்கிய நகரங்களிலும் பாரீசிலும் ஆர்பாட்டங்களை நடாத்தினர் அது கலவரமாக மாறி ஆயிரக்கணக்கான வாகனங்களும் ஆர்ப்பாட்ட காரர்களால் கொழுத்தப்பட்டது.
அப்பொழுது பாரிஸ் பகுதியில் வாழும் புலிக்காச்சலில் திரியும் ரயாகரனின் வீட்டிற்கு அருகாமையிலும் ஒரு வானம் கொழுத்தபட்டு அந்த நெருப்பு அவர் இருந்த கட்டிடத்தின் ஒரு பகுதியையும் பாதித்திருந்தது. ஆனால் உடனடியாக தீயணைப்பு படையினரால் அந்த தீ அணைக்கபட்டாலும். பிறகென்ன வழைமை போல காவல் நிலையத்திற்கு ஓடிய அவர் அய்யோ புலிகள் என்னை கொல்ல சதி வீட்டை கொழுத்தி விட்டனர் என்று போட்டார் ஒரு போடு . அது மட்டுமல்ல இந்த காச்சல் காரர்களினால் நடாத்தபடும் இணையதளங்களிலும் செய்தியாக வந்தது.
இவரது கோமாளித்தனம் இப்படியென்றால் இன்னொருவர் அவர்தான் குகநாதன்: பிரான்சில் வானொலி பத்திரிகை தொலைக்காட்சி என்று அனைத்து ஊடக வழிகளையும் தன் சுருட்டலிற்காக பயன் படுத்த நினைத்து ஒரு வானொலி சேவை ஒன்றை தொடங்கினார் அந்த காலகட்டத்தில் தமிழை கேட்க கதைக்க ஏங்கிய புலத்து தமிழர்களிடையே இந்த வானொலி நல்லதொரு வரவேற்பை பெற்றது அந்த மக்களின் ஆதரவை தனக்கு லாபமாக்க முயன்ற இவர் அடிக்கடி பண பற்றாகுறை அதனால் வானொலியை நிறுத்தபோகின்றோம் என்று அடிக்கடி அறிவித்தல் விடுவார். தங்கள் வீட்டில் தமிழ் ஒலிக்காமல் போய் விடுமோ என்கிற ஆதங்கத்தில் மக்களும் பணமாகவும் காப்பு சங்கிலி தோடு ஏன் தாலிகொடியை கூட கழட்டி கொடுத்திருந்தனர்.
அதையே அவர் தொடர்ச்சியாக செய்து சுருட்டி கொண்டு தனது வானொலியில் வேலை செய்தவர்களிற்கோ இது பொது சேவைதானே எனவே பணத்தை எதிர் பார்காதீர்கள் என்று அவர்களிற்கு போக்கு வரத்து செலவு கூட கொடுத்ததில்லை.ஒரு காலத்தில் வானொலியென்றால் ஒரு உயர்வாக ஒரு உன்னத பொழுது போக்காக நினைத்த புலத்து தமிழர்கள் இன்று வானொலியென்றாலே வெண்டா வெறுப்பாகவும் உதை கேட்டாலே தலைவலி என்று நினைக்கின்ற அளவிற்கு ஒரு மாற்றிய பெருமை இவரையே சாரும்.இது மட்டுமல்ல உங்களிற்கு ஆறு அலைவரிசையில் படம் காட்டுகிறேன் என்று ஒரு தொலைகாட்சியை தொடங்கி இப்போ ஒரு அலைவரிசையில் அதில் மூன்று மதங்களின் கூட்டு பிரார்த்தனை போய்கொண்டிருக்கிறது
அதிலும் சுருட்டி வில்லங்கத்தில் மாட்டுபட்டு நிப்பவரால் பத்திரிகை கூட ஒழங்காக அடிக்க முடியாமல் அடித்த பத்திரிகைகளும் விற்காமல் போகின்ற வேகத்திலேயெ திரும்பி வந்து விடுகிற நிலையில்தான். இவர் பிரான்சிலிருக்கின்ற தன்னுடைய இரண்டு வீடுகளையும் விற்று விட்டு மலேசியாவில் போய் குடியேற திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்கியிருந்தபோதுதான் இவர் நாட்டை விட்டு ஓட போகிறார் என்கிற செய்தி கசிய தொடங்கி விடவே கடன் காரர்களை சமாளிப்பதற்காக உடனே தான் நாட்டை விட்டு ஓடவில்லை தனக்கு புலிகளால் ஆபத்து எனவே சில காலம் வேறொரு நாட்டில் தங்க யொசித்திருக்கிறேன் என்று சொல்லி சமாளித்து அதற்கு ஆதாரமாக இரண்டு இந்திய தமிழர்களான சக்தி மற்றும் அமீன் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து போய் சாட்சியாக்கி தனக்கு புலிளால் மிரட்டல் வருகிறதென்று ஒரு புகாரையும் கொடுத்திருக்கிறார்.
எற்கனவே இவருக்கு சாதுவாய் பிடித்திருந்த புலிக்காச்சல் இப்போ சன்னியாக்கி விட்டிருக்கிறது. இப்படி தங்களின் சய நலங்களிற்காகவும் சுருட்டல்களிற்காகவும் ஏன் சிலர் தங்கள் பெயர் பரபரப்பாக அடிபட்டாலே போதும் என்கிறதற்காகவும் இந்த காச்சலை தாங்களாகவே மன்வந்து எற்று கொள்கிறார்கள் எனவே இது உடல் சம்பத்த பட்டாத மனம் சம்பத்த பட்ட காச்சல் என்பதனால் இதை அவர்களாகவே குணப்படுத்தாமல் விட்டால் அது அவர்கள் இறக்கும் வரை இருந்து கொண்டேதான் இருக்கும் நன்றி சாத்திரி
skip to main |
skip to sidebar
விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்
Back on top ^
created by Nuvio | Webdesign
அவலங்கள் © 2008 Ken ahlin | Converted to XML Blogger Template by ThemeLib
சரி எல்லோருக்கும் புலிக்காச்சல்
உனக்கு புலி புலம்பல் காச்சலா மக்கா
வணக்கம் சாத்திரி!
ரயாகரன் றொம்பக்கடுப்பில் இருக்கிறார் இந்த கட்டுரையைப் பார்த்து.
அவர்தனது பழைய சிறைவாழ்க்கை சுமந்த துன்பங்களுக்கு அவரது பழிவாங்கும் உணர்வு உலகம் பூராவும் கொட்டிக் கிடக்கும் பாவங்களை புலிகளின் தலையில் போட்டு ஆறுதலடைகிற மாதிரியான ஒருவிதமான நோய்வாப்பட்டுள்ளார் எனத்தெரிகிறது.
புலிகளால் தான் எப்படித்துன்புறுத்தப் பட்டேன் என கூறுகிறார் தேசவிரோதம் என்ற காட்டைக் கொழுத்தியாவது புலிவஞ்சம் தன்சொந்த இரை ஆற வெறியோடு காத்து நிற்க்கிறது.
எனவே முனசிங்கா, றம்புக்கல அறிக்கைகள் எல்லாம் எந்த மூலைக்கு ரயாகரன் அறிக்கைக்கு ஈடு கொடுக்க முடியுமா?
புலிக்காச்சல் பிடிச்சு சேடமிழுக்கும் ரயாகரனுக்கு ரம்புக்வெலவின் பதவியை இல்லது வேறை ஏதாவது உயர் பதவிகள் கிடைக்க வேணும் என்று பிரார்த்திப்போம் தேவன். ஆரோ ஆற்றையோ வீட்டுக்கு நெருப்பு தன்ரை வீட்டை புலிகொழுத்தினதெண்டு புலம்பின திருவாளர் ரயாகரனுக்கு அறுத்தே கொல்லும் நோய் அதுதான் மனிசன் புலம்புறார். உதையெல்லாம் கண்டுக்காதையுங்கோ.
- கிருபா பரிஸ் -
பௌகுத்தறிவுக்கு விக்காத ரயாகரன் புலித்துவேசம் ....
http://paramparijam.blogspot.com/