Navigation


RSS : Articles / Comments


ஈழபோராட்டத்தில் எனது(பொய்) சாட்சியம் பாகம்4

4:34 AM, Posted by sathiri, No Comment

ஈழ போராட்டத்தில் எனது (பொய்) சாட்சியம் பாகம் 4


சபாலிங்கம் யார்?? எதற்காக ??? எப்படி கொலை செய்ய பட்டார்??
புலத்தில் மாற்று கருத்தாளர்கள் என்றும் மனிதவுரிமை வாதிகள் சனனாயக வாதிகள் என்னும் பல போர்வைகளை போர்த்துகொண்டவர்கள் அவர்யார் ?எப்படியானவர்? எப்படி இருப்பார் ?என்று கூட தெரியாதவர்களாய் வழைமை போல தங்கள் வசதிக்கேற்றபடி சாபலிங்கம் படு கொலை புலிகளால் என்று சில தளங்களில் இன்றும் எழுதி புலம்பியபடி இருக்கிறார்கள் எனவே அவரை பற்றியும் சுருக்கமாக முடிந்தளவு விபரமாக பார்த்தால் இவர் தமிழ் மாணவர் பேரவையில் மாணவனாக இருந்த போது இணைந்து கொண்டார்.
அந்த கால கட்டத்தில் தமிழ் மாணவர் பேரவை அமைப்பாளரான சத்திய சீலன் அவர்களால் 1971ம் அண்டு கார்த்திகை மாதம் திருநெல்வேலி சந்திக்கு அருகில் மாமரவளவு என்று அழைக்கபட்ட மாமரங்கள் நிறைந்த காணி ஒன்றினுள் அதன் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு ஒரு இலட்சியத்தை அடைவதற்கான போராட்டத்தில் எப்போதும் எதிரியை விட துரோகியே ஆபத்தானவன் என்கிற கோட்பாட்டிற்கு இணங்க ஆயுத விடுதலை போராட்டத்திற்கான தடை கற்களாக இருக்கும் துரோகிகளை ஒழிப்பதற்கானதீர்மானம் நிறைவேற்றபட்டுசில திட்டங்களும் தீட்டப்பட்டு அதற்கான சில வேலைதிட்டங்கள் பலரிற்கும் பகிர்ந்தளிக்கபடுகிறது அதில் சபாலிங்கத்திடமும் சில பொறுப்புகள் ஒப்படைக்கப் பட்டு அதனை அவர் சரியாக நிறை வெற்றாததாலும் .
அதை விட சபாலிங்கம் ஆரம்ப காலம் தொட்டேஇன்னொரு நாட்டின் இராணுவ உதவியுடனோ அல்லது இன்னொரு நாடு வந்துதான் எங்களிற்கான விடுதலையை வாங்கி தரமுடியும் என்று கனவு கண்டவர் ஆயுத விடுதலை போராட்டத்தினை எமது இளைஞர்களும் எமது மக்களாலும் சுயமாக நடத்தி வெற்றி பெற முடியாது என்று ஒரு தன்னம்பிகையற்ற போக்கினை அவர் கொண்டிருந்ததாலும் அவரின் முரண்பட்ட கருத்துகளால் தமிழ் மாணவர் பேரவையை விட்டு வெளியேற்றபட்டார். பின்னர் புஸ்பராசாவுடன் சேர்ந்து தமிழ் இளைஞர் பேரவையை தொடங்கி அதுவும் செயலற்று போக அதே புஸ்பராசாவுடன் இணைந்து ரெலோ(T.L.O ) தமிழீழ விடுதலை இயக்கம் என்கிற அமைப்பை தொடங்க முயற்சித்து அதுவும் பலனளிக்காமல் போக பின்னர் பிரான்ஸ் நாட்டில் வந்து குடியெறினார் பிரான்ஸ்நாட்டில் பின்னர் சபாரட்டணத்தின் தலைமையில் இயங்கிய ரெலோ( T.E.L.O ) தமிழீழ விடுதலை இயக்கம் அமைப்புடன் தொடர்புகளை எற்படுத்து கொண்டு அந்த அமைப்பிற்காக வேலைகள் செய்யது கொண்டிருந்தவர் அந்த அமைப்பும் ஈழத்தில் புலிகளால் தடை செய்ய பட்டதன் பின்னர்.
அடுத்ததாய் பிழைப்பிற்கு என்ன செய்யலாம் என யோசித்தவருக்கு பிரான்ஸ் நாட்டில் அகதிகள் விண்ணப்பத்திறகான சில நடைமுறை சிக்கல்கள் அவரிற்கு அருமையான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பிரான்ஸ் நாட்டில் ( o.f.p.r.a ) என்றழைக்கபடும் நாடற்றவர்களிற்கும் அகதிகளிற்குமான உதவி அமைப்பு. இதுவே பிரான்ஸ் நாட்டில் அகதி அந்தஸ்த்து கோருபவர்களிற்கான விண்ணப்பங்களை முதலில் பரிசீலித்து அவர்கள் அகதிகளாக ஏற்று கொள்ள பட கூடியவர்களா இல்லையா என்பதனை முடிவு செய்யும் அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் சார்பில் 90 களிற்கு முதல் தமிழ் மொழியிலான மொழிபெயர்ப்பாளர்கள் யாரும் இருக்கவில்லை எனவே பிரான்ஸ் நாட்டிற்கு வரும் தமிழர்கள் தங்கள் அகதிக்கான விண்ணப்பத்தை பிரெஞ்சு மொழியிலேயோ அல்லது ஆங்கிலத்திலேயோ தான் எழுத வேண்டிய கட்டாய நிலை . இதில் பிரெஞ்சு மொழி என்பது ஈழதமிழரிற்கு பரிச்சமில்லாத மொழி ஏன் அப்படி ஒரு மொழி இருக்கிறதா என்பது கூட பிரான்ஸ் வரும்வரை பலரிற்கு அந்த நேரங்களில் தெரிந்திருக்காத ஒரு விடயம் .
எனவே ஆங்கிலத்தில் தான் எழுத வெண்டும் ஆங்கிலத்தை எழத தெரியாத பலரும் அங்கிலம் எழுத தெரிந்தவர்களை நாட பலர் அதை உதவியாகவும் சிலர் தெழிலாகவும் செய்ய தொடங்கினார்கள். அந்த சிலரில் அங்கில அறிவுகொண்ட சபாலிங்கமும் அந்த அகதிகளிற்கான விண்ணப்படிவம் நிரப்பும் பணியை தொழிலாக செய்ய தொடங்கினார் வருவாயும் பெருகதொடங்க காலப்போக்கில் தன்னை ஒரு சட்டஆலோசகராகவே பாவனை செய்து கொள்ள தொடங்கியவர் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கபட்ட தமிழர்களிடம் தான் அவர்களிற்காய் அகதி அந்தஸ்த்து பெற்று தரமுடியும் என்றுகூறி அதிகளவு பணம் கறக்க தொடங்கினார். ஆனால் அவர் செய்தது சாதாரண முத்திரை செலவுடன்அதன் மறுவிண்ணப்பம் மட்டுமே. இப்படி அவரிடம் பணமும் கொடுத்து பயனின்றி வருடகணக்கில் அலைந்தும் முறையான எதுவித வதிவிட அனுமதி பத்திரமும் கிடைக்காத இளைஞர்கள் தங்கள் பணத்தை திருப்பி கெட்டு தெந்தரவு செய்ய தொடங்கியபோதுதான் இவரது மனித நேயமும் சன நாயகமும் புலியெதிர்ப்பும் பீறிட்டு கிழம்பியது.
தன்னை காப்பாற்றி கொள்ள அவர் வசித்து வந்த கோணெஸ்( gonesse ) என்கிற இடத்தின் காவல் நிலையத்தில் சென்று தான் ஒரு அதி தீவிர இடதுசாரியென்றும் தன்னை தாக்கவும் கொலை செய்யவும் புலிகள் அமைப்பு பலரை ஏவிவிடுவதாகவும் தனக்கு பாது காப்பு தரும்படியும். ஒரு (பெட்டிசத்தை )பதிவை போட்டார்.அதன்பின்னர்இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் யாராவது இவரிடம் போய் தொந்தரவு குடுத்தால் உடனே அருகிலிருக்கும் காவல் நிலையத்திற்கு தொலைபேசி பறக்கும்.காவல் துறையும் வந்து அந்த நபரை அள்ளிபோட்டுகொண்டு போய்விசாரிக்க அந்தநபரும் அழுதழுது உண்மையை செல்ல காவல் துறையும் சரி சரி பணம் குடுத்ததற்கான எந்தவித ஆதாரமும் உன்னிடம் இல்லாதபடியால் இனி இந்த பக்கம் வந்து தொந்தரவுசெய்ய கூடாது என எச்சரித்து அனுப்பி விடும். ஆனாலும் எவருமே இவரை தாக்க வந்ததற்கானவோ அல்லது கொலை செய்யும் நோக்கோடு சென்றதற்கான ஆதாரங்களுடனோ ஆயுதங்களுடனோ யாரும் கைது செய்ய படவேயில்லை.
இப்படி இவர் காவல் துறையை கூப்பிடுகிறார் என்று அறிந்ததும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் விசாவும் இல்லை எதுக்கு வீண்வம்பு காசுதானே போனால் போகட்டும் போடா என்று பாடியபடியே அந்தபக்கமே போகாமல் விட்டு விடவும்.சபாலிங்கமும் தனது அதிரடி ஆலோசனை அற்புதமாய் வேலை செய்கிற அற்ப மகிழ்ச்சியில் ஆட்டம் போட தொடங்கினார்.பொன்னும் பொருளும் சேர்த்தவரிற்கு இப்போ பிடித்து கொண்டது பெண்ணாசை அவரிடம் அகதி அந்தஸ்த்து கோருவதற்கான் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய உதவி கேட்டு போன பெண்ஒருவரை தனியெ அழைத்து அவரிடம் தன் காதல் விண்ணப்ப படிவத்தை நீட்டிஅதை பூர்த்தி செய்யுமாறு விண்ணப்பித்தார் அதை அந்த பெண் நிராகரிக்கவே இவரும் சற்று பலாத்காரமாக தனது கோரிக்கையை மீழ்பரிசீலனை செய்யும் படியும் இல்லாவிட்டால் பிரான்சில் அந்த பெண் வாழ்வதே பரிசோதனையாகி விடும் என்று மிரட்ட.
மிரண்டுபோன பெண்ணோ அழுதபடி அவர் அண்ணனிடம் போய் அத்தனையையும் ஒப்பிக்க அவள் அண்ணன் எமன்ஆனான். அன்னார் சபாலிங்கம் அகாலமரணமானார். இதுதான் நடந்தது. இவரது மரணம் புலத்தில் புலியெதிர்பு பேசிதிரிந்தவர்களிற்கும் வெறும் வாய்சப்பாமல் வெத்திலை துண்டு கிடைக்காதா என அலைந்த மாற்றுகருத்தாளர்களிற்கும் மசாலா பீடாவே கிடைத்ததுபோல தங்கள்விருப்பத்திற்கு பழியை புலிகள் மீது போட்டு சப்பி துப்பினார்கள்.ஆனால் அந்த கொலை வழக்கை விசாரித்த கோணேஸ் காவல் துறையொ அந்த கொலை தனிப்பட்ட விரோதம் காரணமாகவே நடந்ததாக உறுதிபட கூறிய பின்னரும் இவர்கள் கதைப்படி சபாலிங்கத்தின் கொலையை ஏதோ கொழும்பு கொச்சிக்கடை காவல் துறையினர் விசாரித்தது போலவும் லஞ்சம் வாங்கி கொண்டு கொலையாளிகளை தப்பவிட்டது போலவும் கதை அளக்கின்றனர்.
பிரன்சில் சபாலிங்கத்தை போலவே ஈழவிடுதலை போராட்டத்தை எதிர்த்து எழதியும் பேசியும் திரிந்த முக்கியமானவர்களில் உமாகாந்தன் புஸ்பராசா மற்றும் கலை செல்வன் போன்றொரும் அடங்குவர்.இங்கு இறந்து போனவர்களின் பெயர்களை மட்டும் தான் எழுதியுள்ளென் காரணம் இன்னமும் பிரான்சில் ஈழவிடுதலை போராட்டத்தை விற்று வயிறுவளர்க்கும் இன்னும் சிலர் இருக்கதான் செய்கின்றனர். ஆனாலும் காலப்போக்கில் அவர்கள் காலத்தின் தேவையறிந்து ஒதுங்கி கொள்ளலாம் அல்லது ஈழபொராட்டத்திறகான் ஆரவு நிலை எடுக்கலாம் என்கிற காரணத்தினாலேயே அவர்களின் பெயர்களை தவிர்த்து இறந்து போனவர்களின் பெயர்களை மட்டும் இங்கு குறிப்பிட்டேன்.மீண்டும் சுற்றிவந்து சுப்பரின் படலையையே தட்டுவோம். ஆம் இந்த தமிழ் இளைஞர் பேரவை பெரும் எடுப்புடன் ஆயுதபோராட்டமே தமிழ் மக்களிற்கான் திர்வு என்று தொடங்கியது அதை முதலில் பார்த்தோம் . ஆனால் அது இயங்கிய காலத்தில் ஒரு காவல் துறை வாகனத்தின் கண்ணாடியையாவது கல்லால் எறிந்து உடைத்தார்களா???என்றால் இல்லை.ஆனால் அந்த காலகட்டத்தில் பரபரப்பாய் ஒன்றை செய்தனர் அதுதான் புலோலி வங்கி கொள்ளை . புலோலி வங்கி கொள்ளை பற்றிய வெளிச்சத்திற்கு வராத சில விடயங்களுடன் அடுத்த வாரம் .................................

சிறு திருத்த குறிப்பு இந்த தொடரில் இரண்டாவது பாகத்தில் தமிழ் மாணவர் பேரவை தொடங்கிய நேரம் தமிழர் விடுதலை கூட்டணி இருந்ததாக தவறுதலாக குறிப்பிட்டு விட்டேன் அப்போது அது உருவாகியிருக்கவில்லை தமிழரசு கட்சியே பெரிய தமிழர் கட்சியாய் இருந்தது.

No Comment