Navigation


RSS : Articles / Comments


2:46 AM, Posted by sathiri, No Comment

ஈழபோராட்டத்தில் எனது (பொய்)சாட்சியம் பாகம் 3


சத்தியசீலன் மகாஉத்தமன் மற்றும் ஞானம் ஆகியோர் 1971ம் அண்ட ஆவவணி மாதமளவில் இந்தியா சென்று தமிழ் நாட்டில் சுயமரியாதை கொள்கையின் தந்தையும் திராவிடர் கழக தலைவருமான ஈ.வே.ரா. பெரியார் இந்தியாவின் விஞ்ஞானியும் அறிஞருமான ஜு.டி நாயுடு மற்றும் மா.பொ.சி ஆகியொரை சந்தித்து சிங்கள அரசின் ஏமாற்று வேலைகளை விளக்கி தங்கள் கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் என்பனவற்றை விளக்கியும் அதற்கான முன்னெடுப்புகளிற்கு அவர்களின் உதவியை வேண்டி நின்றனர்.அதற்கு அவர்களும் தங்களால் முடிந்த உதவிகள் வழங்குவதாக கூறி வாழ்த்தி வழியனுப்பி வைத்ததுடன் ஈ. வே.ரா. பெரியார் சத்திய சீலனிடம் சுருக்கமாக ஒரு கட்டுரையும் எழுதிவாங்கி தனது விடுதலை பத்திரிகையில் வெளியிட்டார்
. இந்த மாணவர் பேரவையின் வேகத்தை தடுத்து நிறுத்த உடனடியாகவே கூட்டணிதலைமை இதற்கான ஒரு மாற்று திட்டம் ஒன்றை தீட்ட வேண்டிய அவசியத்திற்கு தள்ளப்பட்டது.இளையதலைமுறையின் வேகத்தையும் ஆற்றலையும் தங்கள் பக்கம் இழுக்கவும் தங்கள் தங்கள் வீராவேச மேடை பேச்சுகளில் இவர்களால் பேச மட்டுமே முடியும் என அவர்களில் நம்பிக்கையிழந்து வேறு வழிகளில் வேறு திசைநோக்கி பயணிக்க புறப்பட்ட இளைஞர்களையும் தங்கள் பக்கம் இழுப்பதோடு அத்தோடு தமிழ் மக்களின் இனஉணர்வுகளின் எழுச்சி பலாபலன்களை ஒட்டுமொத்தமாய் தாங்களே அறுவடை செய்து அதன் விளைச்லை காட்டி சிங்களத்திடம் தங்கள் பேரங்களையும் பாராளுமன்ற கதிரைகளையும் பலமாக வைக்கலாம் என்பதே கூட்டணியின் கணக்காக இருந்தது.அதற்காக அவர்களும் ஒரு இளையவர் அமைப்பை உருவாக்க திட்டம் போட்டனர் அவர்கள் திட்டபடி அதன் அமைப்பாளர்கள் தங்கள் நூலிலேயே ஆடும்பொம்மைகளாகவும் இருக்க வேண்டும் அதன் மற்றைய உறுப்பினர்களிற்கோ பொது மக்களிற்கோ இது கூட்டணியின் கூட்டுவேலை என்று என்று தெரியவும் கூடாது .
அப்படி ஒரு தீவிரவாத போக்கை கொள்கையாக கொண்டஅமைப்பை உருவாக்கி மாணவர்கள் மத்தியிலும் இளைஞர் மத்தியிலும் வேகமாக வளர்ந்துவரும் சிங்களத்திற்கெதிரான தீவிர போக்கையெல்லாம் ஒன்று சேர்த்து இந்த அமைப்பின் மூலமே தங்களிற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என அதன் பால் நாட்டம் கொள்ள வைத்து அதனை இயக்கி கொண்டே கூட்டணிதலைவர்கள் மட்டும் தாங்கள் வன்முறையின் பால் அக்றை கொண்டவர்கள் அல்ல அகிம்சையே எங்கள் போராட்டவழி என்று சொல்லிக்கொண்டு கதர் உடுத்தி கறுப்புகொடி காட்டி கொண்டு வன்முறையின் பால் அக்கறையற்ற நாட்டமற்ற தமிழ் மக்களையும் தன்பக்கமே இழுத்துவைத்திருப்பதென ஒரேகல்லில் பல விழாங்காய் (பலமாங்காய் அடிப்பது சுலபம்) அடிக்க திட்டம் தயார்.
இப்போ அந்த விளாங்காய்களை அடிப்பதற்கான நம்பிக்கையான ஒரு கல்லை தேடினார்கள். அவர்கள் கல்லை தேடிகொண்டிருக்க எறிந்த இலக்கை அடித்துவிட்டு எசமானின் காலடிக்கே திரும்பும் பூமாராங்குகளாக தமிழரசு கட்சியின் வாலிப முண்ணனியிலிருந்து புஸ்பராசாவும். தமிழ் மாணவர் பேரவையிலிருந்து வெளியேறிய சபாலிங்கம் போன்றவர்கள் கிடைத்தார்கள். இப்போ கூட்டணியின் திட்டம் என்ன?? அதாவது ஒரு கோட்டை அழிக்காமலேயெ அதைசின்னாக்க எப்படி பக்கத்தில் ஒரு கோட்டைகீறுகின்ற வித்தை தான் இதுவும்.திட்டமும் தயார் அதை செயல்படுத்த ஆட்களும் தயார் அடுத்தது என்ன. 1973ம் ஆண்டு தைமாதம் கூட்டணி சார்பு மற்றும் எதிர்ப்பு தீவிரபேக்கின் மீது நாட்முடைய வேறு பல இளைஞர்கள் என்று பலரை ஒண்றிணைத்து யாழ் தமிழர் விடுதலை கூட்டணியினரின் காரியாலயத்தில் பெரும் எடுப்புடன் ஆர்ப்பாட்டமாய் ஒரு கூட்டம் கூட்டப்பட்டு அதற்கு தமிழ் இளைஞர் பேரவை என்று பெயரும் வைக்கப்பட்டது.அன்றும் சரி அதன் பின்னரும் சரி இந்த அமைப்பால் நடத்த பட்ட கூட்டங்களிற்கு வேண்டி நிதியுதவி மற்றும் இடவசதிகள் யாவும் கூட்டணியினராலேயெ வழங்கபட்டது.
ஆனால் மணவறையில் அமர்ந்து மணபெண்ணிற்கு தாலியும் கட்டிவிட்டு நான் மாப்பிள்ளை இல்லை என்பது போல புஸ்பராசாவே அந்த அமைப்பிற்கும் கூட்டணியினருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றே அடித்து கூறி வந்தார்.அனால் கால போக்கில் உண்மையை உணந்துகொண்ட அதன் உறுப்பினர்கள் பலரும் அந்த அமைப்பில் இருந்து வெளியெறிவிட அந்த அமைப்பு செயலிழந்து போனது.அந்த அமைப்பும் இயங்கிய காலத்தில் கறுப்புகொடி காட்டி கோசம் போட்டதோடு அதன் இயக்கமும் நின்று போனது.பின்னர் துரையப்பா கொலை நடந்தபோது சந்தேகத்தின் பெயரில் புஸ்பராசா கைதாகி சிறை சென்றுவிட சபாலிங்கத்தின் சத்தமும் காணாமல் போனது.இந்த புத்கத்தில் புஸ்பராசாவும் சரி இன்று புலத்தில் சிலர் தாங்களே சனநாயகத்தின் ஒட்டுமொத்த காவலர்கள் என்றும் மாற்று கருத்து மாணிக்கங்கள் என்றும் கூறிக்கொண்டு ஈழவிடுதலை போராட்டத்திற்கு எதிராகவும் விடுதலை புலிகளிற்கு எதிராகவும் கருத்துகளை முன்வைத்தும் செயற்பட்டு கொண்டும் இருக்கும் பலரும் இந்த சபாலிங்கம் என்கிற பெயரை அடிக்கடி உச்சரித்தபடிதான் இருக்கிறார்கள்.காரணம் காலப் போக்கில் புலம் பெயர்ந்து வந்து பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்துகொண்டிருந்த சமயம் இந்த சபாலிங்கம் கொலை செய்யப்பட்டார். யாரால்??? ஏன்??? எதற்காக ???? அடுத்த பாகத்தில் பார்ப்போம்

No Comment