Navigation


RSS : Articles / Comments


அன்று சிந்திய ரத்தம் தொடர் ...பாகங்கள் .7..8..9..10

2:10 PM, Posted by sathiri, No Comment

 அன்று சிந்திய ரத்தம் தொடர் ..பாகங்கள் .7..8..9..10
புதிய தலைமுறை வார இதழுக்காக .

.கருணாவின் பிரச்சனைகள் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க மறுபக்கம் புலிகளுக்காக வந்த இரண்டு ஆயுதக் கப்பலில் ஒன்று தாக்கியழிக்கப்பட இன்னொன்று தப்பிச் சென்றிருந்தது தப்பிச் சென்ற இரண்டாவது கப்பலும் சில மாதங்களின் பின்ன புலிகள் அவனை இலங்கையில் தேடிக்கொண்டிருக்கும்போதே இந்தியா   தற்காலிகமாக தத்தெடுத்திருந்தது.ஊட்டியில் தனியான  ஒரு பங்களாவில் தங்க வைத்து புலிகளைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொண்டதோடு புலிகளுக்கு எதிரான நவடிக்கையில் தங்கள் பக்கம் வைத்திருக்க விரும்பியிருந்தார்கள்.ஈழ விடுதலை இயக்கங்களில் ஒன்றான  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (P.L.O.T ) அமைப்பின் உட்கட்சி மோதல் மற்றும் படுகொலைகளால் அதிலிருந்து பிரிந்தவர்களில் ஒருவரான  ஞானப்பிரகாசம் ஞானசேகரன் (பரந்தன் ராஜன்) என்பவர் அந்த அமைப்பில் இருந்து பிரிந்தவர்களை வைத்து ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி  (E.N.D.L.F) என்றொரு அமைப்பை உருவாக்கியிருந்தார்.இந்த அமைப்பானது முழுக்க முழுக்க இந்திய அரசின் உதவியோடு அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இயங்கியது.இலங்கையில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த 1987 ...1990 வரையான காலத்தில் இந்திய இராணுவத்தோடு இணைந்து புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடு பட்டிருந்தனர்.பின்னர்  இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய போது அவர்களுன் E.N.D.L.F அமைப்பினரும் வெளியேறி இந்தியாவிற்கு சென்று விட்டிருந்தது மட்டுமல்லாது எவ்வித செயட்பாடுக்களுமின்றி முடங்கிப்போய் இருந்தனர்.கருணாவை வைத்து மீண்டும் அந்த அமைபிற்கு புத்துயிர் கொடுக்க விரும்பிய இந்தியா அதற்கான வேளைகளில் இறங்கியிருந்தது .கருணாவிற்கும் வேறு வழியின்றி ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைமை .இங்கு ஒரு ஆச்சரியப்படவேண்டிய விடயத்தையும் கூறவேண்டும் கருணா புலிகள் அமைப்பிலிருந்து பிரிவதற்கு சரியாக இரண்டு வருடங்களிட்கு முன்னரே  2002ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் இருந்து வெளிவரும் Frontline என்ற ஆங்கிலப் பத்திரிகையில்   விடுதலைப் புலிகள் அமைப்பில் கருணா கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவராக இருந்தும் சக்தி மிக்க தலைவராக உருவாகி வருகின்றார்.
பிரபாகரனை மிஞ்சும் தலைவராகவும் அவர் வர முடியும். ஒரு நாள் பிரபாகரன் இடத்திலேயே கருணா அமரும் நிலை வரும் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருந்தது .

அன்றைய கால கட்டத்தில் கருணா பிரபாகரன் மோதல் வருமென்று யாருமே கனவில் கூட நினைத்துப்பார்த் திருக்காத காலகட்டம் .எனவே இப்படியொரு மோதலை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை சில உழவமைப்புகள் அன்றே ஆரம்பித்து விட்டிருந்தது புலனாகிறது.கருணா E.N.D.L.F  இணைந்து புலிகளுக்கு எதிரான நவடிக்கைக்கான திட்டங்களை வகுத்து அதை நடை முறைப்படுதுவதட்காக சில  இந்தியாவில் தங்கியிருந்த E.N.D.L.F  உறுப்பினர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.ஆனால் கருணா எங்கே தெரியாமல் புலிகளின் தலைமை தலையை பிய்துக்கொண்டிருந்தபோது தான்  15.04.2005 அன்று மட்டக்களப்பு எல்லையில் காட்டுப்பகுதியில் கருணா அணியொன்று தங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அந்த இடத்தை சுற்றி வழைத்து புலிகளின் அணியொன்று திடீர் தாக்குதலை நடத்துகின்றது.அங்கிருந்த கருணா அணியினர்  ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் அவர்களது ஆயுதங்களையும் உடமைகளையும் புலிகள் கைப்பற்றியபோது அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது கொல்லப்பட்டவர்களுள் விஜயன், ரவி என்ற இருவர் இந்தியக் கடவுச் சீட்டுக்களையும், இந்திய சாரதி அனுமதிப் பத்திரங்களையும் தம்வசம் வைத்திருந்தார்கள். இவர்கள் இருவருமே இந்தியாவில் தங்கியிருந்து பயிற்சி பெற்ற ஈ.என்.டீ.எல்.எப். உறுப்பினர்கள் என்பது தெரியவந்தது அவர்களிடமிருந்து கைப்பற்றிய தொலை பேசியில் அம்மான் என்றிருந்த இலக்கத்தை அழுத்தினார்கள் மறுமுனையில். "கலோ" என்ற கருணாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உன்னை விடமாட்டோம் என்றதோடு போன் கட்டாகிவிட்டது.தான் இந்தியாவில் தங்கியிருப்பதை புலிகள் கண்டுபிடித்து விட்டார்கள் இனி இந்தியாவில் இருப்பது புத்திசாலித் தனமில்லை என நினைத்தான் .காரணம் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தைக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருந்த நாடுகளில் இந்தியாவும் முக்கியமான நாடாக இருந்தது எனவே பேச்சு வார்த்தை மேசையில் கருணாவை தங்களிடம் ஒப்படைக்கும்படி புலிகள் அழுத்தத்தை கொடுத்தால் இந்தியா சில நேரம் தன்னை ஒப்படைத்து விடலாம் என சந்தேகித்தான்.அதே நேரம் கருணா குழுவின் திறமை இன்மையாலேயே தமது நீண்டகால உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர் என்கிற குற்றச்சாட்டை E.N.D.L.F  வைக்க அவர்களோடும் முறுகல் நிலை ஆரம்பித்தது .எனவே  இந்தியாவை நம்புவதைவிட இலங்கையை நம்பலாமென முடிவெடுத்து மீண்டும் இலங்கைக்கே திம்பி விடுகிறான்.


 தப்பிச் சென்ற இரண்டாவது ஆயுதக் கப்பலும் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் வைத்து இலங்கை கடற்படையால் தாக்கி அழிக்கப்பட்டது.புலிகளும் தொடர்ந்து ஆயுதங்களை கொள்வனவு செய்துகொண்டிருந்தனர் எனவே பேச்சு வார்த்தை மேசையில் புலிகளோடு கடுமையாக நடந்து கொள்ள அமெரிக்கா முடிவெடுத்து அவர்களிடம் சில  நிபந்தனைகளை முன்வைத்தார்கள்.ஒன்று ...குழந்தைப் போராளிகளை விடுவித்து அவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் .இரண்டு.. கரும்புலிகள் அமைப்பை கலைக்க வேண்டும் .மூன்று ..வான் புலிகள் திட்டத்தை விரிவு படுத்தாது தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என மூன்று நிபந்தனைகளை வைத்து விட்டு வன்னியிலிருந்து பிரபாகரனின் பதிலுக்காக காத்திருக்கும் போது வெளிநாடுகளில் இருக்கும் புலி ஆதரவாளர்கள் சிலர் இந்திய அதிகாரிகள் சிலரோடு தனியாக ஒரு பேச்சு வார்த்தையை நடத்திக்கொண்டிருந்தார்கள் .காரணம் தென் கிழக்காசிய அரசியலில் இந்தியா தவிர்க்க முடியாத ஒரு சக்தி .இலங்கைத்தீவிலும்  இந்தியாவின் தலையீடு இன்றி அவர்களை தவிர்த்து எந்தவொரு அரசியல் நகர்வையும் மேற்கொள்ள முடியாது என்பதை திடமாக நம்பினார்கள் .தமிழ்செல்வனின் மரணத்தின் பின்னர் புலிகளின் அரசியல் துறை பொறுப்பை ஏற்றுக்கொண்ட நடேசனும் அதே கருத்தை கொண்டவராகவே இருந்ததோடு இந்தியாவோடு மீண்டும் நட்புறவை புதிப்பிக்கும் முயற்சிகளை மேட்கொண்டிருந்தார் .
மேற்குலகம்  வைத்த மூன்று கோரிக்கைகளில் குழந்தைப் போராளிகளை விடுவிப்பதாக சம்மதம் தெரிவித்திருந்தனர்.அதற்கு வேறொரு காரணமும் இருந்தது பெருமளவான குழந்தைப் போராளிகளை கருணாவே இணைத்ததாக பொதுவான குற்றச்சாட்டு இருந்தது.அவர்களை விடுவிப்பதன் மூலம்  புலிகளின் தலைமைக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை .கருணாவே குற்றவாளி என்று சர்வதேசத்திடம் நிருபித்து விடுவது என்பதுதான் நோக்கம் .அதுவும் ஒரு சம்பிரதாய நிகழ்வாக யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழு .செஞ்சிலுவைச்சங்கம் .மற்றும் உள்ளூர் வெளிநாட்டு பத்திரிகையாளர் முன்னால் முப்பது வரையான சிறுவர்களை ஒப்படைத்தனர்.ஆனால் கரும்புலிகளையோ வான் புலிகள் அமைப்பையோ கலைக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்து விட்டார்கள்.இது மேற்குலகத்திற்கு ஏமாற்றத்தையும் சினத்தையும் கொடுத்திருந்தது.ஆனாலும் புலிகள் மீண்டும் சண்டைக்கு திரும்பி விடமால் பேச்சுவார்த்தை மேசையிலேயே வைத்திருக்க பெரும்பாடு பட்டனர். அதே நேரம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய புலிகளின் ஆதரவாளர்கள் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கி அவர்களை அங்கீகரித்து ஈழப் போராட்டத்திற்க்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்திருந்தனர். .ஆனால் புலிகளால் நடத்தப்பட்ட ராஜீவ்காந்தி கொலை என்பது இந்திய தேசத்துக்கு நடந்த மிகப்பெரிய கௌரவப் பிரச்சனையாகவே அவர்கள் பார்த்தார்கள் .இந்தக்கொலையானது புலிகள் அமைபிற்கு ஒரு தற்காலிக மகிழ்ச்சியை கொடுத்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அவர்களது  ஆயுதப் போராட்ட வரலாற்றில் தூர நோக்கற்று செய்த மிகப்பெரிய முட்டாள்தனம் என்பது உண்மை .புலிகளின் மீதான தடையை நீக்கி மீண்டும் நல்லுறவை ஏற்படுத்த வேண்டுமாயின் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கியமானவராக கருதப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப் பட்டுள்ள புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டம்மானை தங்களிடம் ஒப்படைத்தால் இழுபட்டுக்கொண்டேயிருக்கும் கொலை வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதோடு உறவுகளையும் புதுப்பிக்க முடியும் என்று இந்தியத் தரப்பில் கூறப்பட்டது. பேச்சுவார்த்தை குழுவினர் இந்தியாவின் பதிலில் மகிழ்ச்சியடைந்து உடனடியாக புலிகளின் தலைமைக்கு செய்தியை தெரிவித்தார்கள் .அவர்களது கோரிக்கை சுவரில் அடித்த பந்தைப்போல் முடியாது என்கிற பதிலோடு வேகமாக வந்தது.சோர்வடைந்த பேச்சுவார்த்தை குழுவினர் அப்போது நோர்வேயில் தங்கியிருந்த தமிழ்ச்செல்வனை சந்தித்து பொட்டம்மானை சரணடைய வைப்பது பற்றி விரிவாக விளக்கினார்கள்.நாட்டுக்காக மகளுக்காக எத்தனயோ போராளிகள்  தங்கள் உயிரை கொடுத்து விட்டார்கள் .கரும்புலிகளாகவும் மாறிஇருகிறார்கள் அப்படியிருக்கும் போது அந்த மகளுக்கு ஒரு நல்லது நடக்க வேண்டுமானால் பொட்டம்மான் சரணடைவதில் தப்பில்லை.இந்தியாவும் பொட்டம்மானை உடனடியாக தூக்கில் போட்டுவிடப் போவதில்லை அவருக்காக வாதாட பெரிய லாயர்களை நாங்களே ஏற்பட்டு செய்கிறோம் என்று சொல்லி முடிக்கவும் அனைவரையும் பார்த்த தமிழ்ச்செல்வன் உங்களிடம் வேறு எதாவது ஆலோசனைகளும் உள்ளதா என்று நக்கல் சிரிப்போடு கேட்டார் .தாங்கள் பேசியது எதனையும் தமிழ்செல்வனும் காதில் வாங்கவில்லை என்று புரிந்து கொண்டவர்கள் தயங்கியபடியே .இன்னொரு ஆலோசனையையும் சொன்னார்கள்..புலிகளின் தலைமை மீது ஏகப்பட்ட வழக்குகளும், குற்றச்சாட்டுகளும், நம்பிக்கையீனங்களும் சர்வதேச அளவில் இருப்பதால் மகளுக்கு நல்லதொரு தீர்வு எட்டும்வரை   தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே முகம் கடுமையாக மாறிய தமிழ்ச்செல்வன்  ..தமிழீழம் எப்படி எடுப்பது என்று எங்களுக்கு தெரியும் நீங்கள் பொத்திக்கொண்டு போகலாம் .என்றதும் தலையை தொங்கப்போட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறியவர்கள் அத்தோடு தங்கள் நல்லெண்ண நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திக் கொண்டார்கள் ..

தமிழ் செல்வன் புலிகளின் பேச்சுவார்த்தை குழுவுக்கு தலைமை தாங்கத் தொடங்கிய பின்னர் பேச்சுக்கள் மந்தமடையத் தொடங்கியிருந்தது மட்டுமல்லாமல்  பேச்சு வார்த்தை நிகழ்வுகளுக்கு ஒப்புக்கு சப்பாணி என்கிறதைப் போலவே எந்த ஆர்வமும் இல்லாமல் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் எப்படியாவது பேச்சுக்களை முறித்து மீண்டும் சண்டையை தொடங்காவிட்டால் புலிகள் அமைப்பு மேலும் பிளவுகளை சந்தித்து பலவீனம் அடைத்து விடும் என்று தலைமை நினைத்தது . எல்லா நாடுகளிலும் நடந்த பேச்சு வார்த்தைகளின் போதும் உள்ளே என்ன விடயங்கள் பேசப்பட்டது.என்ன முடிவுகள் எடுக்கப் பட்டது என்று எதுவுமே வெளியே சொல்லப் படவில்லை.உள்ளே என்ன பேசினார்கள் என்றும் மக்களுக்கு தெரியாது .ஒவ்வொரு பேச்சு வார்த்தை முடிவின் பின்னரும்  இந்த சந்திப்பு எமக்கு பிரயோசனமாக  இருந்தது .நாங்கள் சமாதானத்தில் உறுதியாக இருக்கின்றோம் என்று பத்திரிகையாளர்களிடம் தமிழ் செல்வன் தெரிவிப்பார் .அதே நாள் இரவு தமிழர்கள் மத்தியில் நடந்த கூட்டத்தில் உரையாற்றும்போது எங்களிற்கு சமாதானத்தில் நம்பிக்கையில்லை  விரைவில் யுத்தம் தொடங்கும் அதுதான் இறுதியுத்தமாக இருக்கும் எனவே இறுதி யுத்தத்திற்கு பெருமளவான நிதியினை பங்களிப்பு செய்யவேண்டும் எனகேட்டுக்கொள்வார் .வெள்ளைக் காரனிற்கு தமிழ் புரியாது என நினைத்து தமிழ்ச்செல்வன்  பேசியிருக்கலாம் ஆனால் இதனை வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகள் உடனடியாகவே பதிவு செய்து மொழிபெயர்ப்பும் செய்து பேச்சு வார்த்தைக்கு அனுசரணை வழங்கும் நாடுகள்  அனைத்திற்கும் அனுப்பிக் கொண்டிருந்தனர் .
அது மட்டுமல்லாது ஆயுதக் கொள்வனவுகளையும் தொடர்ந்துகொண்டேயிருந்தார்கள்.அவர்கள் கொள்வனவு செய்த ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஒன்பது கப்பல்கள் இரண்டு சரக்கு கப்பல்கள் என பதினோரு  கப்பல்கள் தொடர்ச்சியாக  ஒன்றுவிடாது இலங்கை அரசால் தாக்கி மூள்கடிக்கப் பட்டிருந்தது..இதுவரை காலமும் உலக நாடுகளுக்கும் இலங்கை அரசுக்கும் கடலில் தண்ணி காட்டிவிட்டு விட்டு பத்திரமாக கனரக ஆயுதங்களையும் ஏவு கணைகளையும்  வன்னிக்கு கொண்டு போய் சேர்த்தவர்களுக்கு என்ன நடந்தது ..இப்போது ஒரு துப்பாக்கியைகூட கொண்டுபோய் சேர்க்க முடியாது அனைத்தும் அடிபட்டுப்போகும் மர்மம் என்ன ..எப்படி  ...எங்கே நடந்தது என பார்த்துவிடலாம் ..
2001 ஆண்டு புலிகள் அமைப்பு பெற்ற பெரு வெற்றியை அடுத்து வன்னி கிளிநொச்சியை தலைநகராக வைத்து நிழல் அரசொன்றை நிறுவியதோடு காவல்துறை, நீதிமன்றம், வாங்கி என சிவில் நிருவாகத் துறைகளை விரிவாக்கம் செய்தவேளை அவர்களின் பிரதான கட்டமைப்புகளிலும் மாற்றங்களை கொண்டு வந்தனர் .அந்த மாற்றமானது இயக்கத்துக்குள் ஒவ்வொரு பிரிவும் அதன் பொறுப்பாளர்களால் தனிப் பெரும் சக்திகளாக உருப்பெறத் தொடங்கியிருந்தது ..அப்படி உருப்பெற்றவைகளுள் பொட்டம்மானின் புலனாய்வு பிரிவு .தமிழேந்தியின் நிதிப்பிரிவு .சூசையின் கடற்புலிகள்அமைப்பு  .தமிழ்செல்வனின் அரசியல் பிரிவு .கருணா கிழக்கு மாகாணத் தளபதி .இவைகளோடு மிக மிக முக்கியமான, வானளாவிய அதிகாரங்களைக் கொண்ட ,ஒருநாளில் மட்டும் பல மில்லியன் டாலர் பணம் புரளும் மிக பணக்கார அமைப்பான அனைத்துலகச் செயலகம் என்கிற அமைப்பும் ஆகும் . இந்த அனைத்துலகச் செயலகத்தின் கீழ்தான் ஆயுத பேரங்கள் ,வாங்கிய ஆயுதங்களை  பத்திரமாக வன்னிக்கு கொண்டுபோய் சேர்த்தல் , போதைப்பொருள் கடத்தல்கள்,புலம்பெயர் தமிழர்களிடம் நிதி வசூலித்தல்,உலகெங்கும் பினாமிப் பெயர்களின் இயங்கும் வர்த்தக நிறுவனங்கள் ,கோவில்கள் ,தமிழ் பாடசாலைகள் ,என அனைத்துமே இதற்குள் அடங்குவதால்தான் அதற்கு அனைத்துலகச் செயலகம் என்று பெயர் .இதற்கு லோரன்ஸ் திலகர் என்பவரே பொறுப்பாளராக  பாரிஸ் நகரத்தில் இருந்து இயங்கிக்கொண்டிருந்தார்.பாரிஸில் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தங்கள் உறுப்பினர் இருவரை  சுட்டுக்கொலை செய்திருந்தனர்.அந்தக் கொலையில் ஏற்பட்ட சிறு சொதப்பலால் லோரன்ஸ் திலகர் வன்னிக்கு அழைக்கப் பட்டு அவரது பதவியைப் பறித்து அவருக்கு தண்டனையும் தலைமையால் கொடுக்கப்பட்டது .அதற்குப் பின்னர் தாய்லாந்தில் இருந்தபடி ஆயுத பேரம்  மற்றும் வழங்கல் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த கே.பி . என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் பொறுப்பில் அனைத்துலகச் செயலகம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.2001 ம் ஆண்டு நடந்த நிருவாக மாற்றங்களின்போது கே. பி யின் பொறுப்பிலிருந்த அனைத்துலகச் செயலகப் பொறுப்பு பறிக்கப்பட்டு காஸ்ட்ரோ என்பவரிடம் ஒப்படைக்கப் பட்டதோடு கே .பி யின் நிருவாகம் கலைக்கப்பட்டது அவரும் அவருக்கு கீழ் இயங்கியவர்களும் இயக்கத்தை விட்டு விலகி தங்கள் தனிப்பட்ட வாழ்கையில் ஈடுபடலாம் என தலைமை அறிவித்து விட்டிருந்தது. இந்த மாற்றங்களுக்கான கரணம் என்னவெனில்  வெளிநாடுகளில் வணிகம்,  கடத்தல்கள்  ,மற்றும்தமிழர்களிடம் சேகரிக்கப்படும் நிதி என்பனவற்றுக்கு  சரியாக கணக்கு காட்டாமல் ஆயுதங்களை வாங்கி அனுப்பி வைப்பதோடு நிறுத்தி விடுகிறார்கள் . இலங்கை வான்படையினரின் சக்திவாய்ந்த இஸ்ரேலிய தயாரிப்பான ஒலி வேக IAI Kfir ரக குண்டு வீச்சு விமானங்களை தாக்கியழிக்கும் வல்லமை கொண்ட grouse ரக ஏவுகணைகளை கொள்வனவு செய்ய நீண்ட காலம் முயற்சி செய்தும் அதனை வாங்க முடியாது போனதும் ஒரு குற்றச் சாட்டாக வைக்கப் பட்டது .
கே.பி கொம்பனியில் பெரும்பாலும்   கப்பல் மாலுமிகள் அதன் பணியாளர்கள் எல்லாருமே புலிகள்  அமைப்பின் உறுப்பினர்கள் அல்ல  சம்பளத்திற்கு வேலை செய்த சாதாரணமானவர்களே அவர்களை இயக்க விதிகளால் கட்டுப்படுத்த முடியாது . அதே நேரம் புலிகள் அமைப்பானது போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபடுவதாக சர்வதேச போதைப்பொருள் தடுப்பு பிரிவும் உலக நாடுகளும்  தொடர்து குற்றம் சாட்டிக்கொண்டே இருந்தார்கள் ஆனால் கடத்தல் வலையமைப்பை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தனர்.இத்தகைய குற்றச் சாட்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே கே .பி கொம்பனியை நிறுத்துவதாக தலைமை காரணம் சொல்லிக்கொண்டது .

புலிகள் அமைப்பானது தங்களுக்கு தாங்களே வைத்த முதலாவது ஆப்பு ராஜீவ் காந்தி கொலை என்று எடுத்துக்கொண்டால் அனைத்துலக செயலக கட்டமைப்பு மாற்றத்தை இரண்டாவது ஆப்பு என்று எடுத்துக் கொள்ளலாம் ...அனைத்துலக செயலகப் பொறுப்பு கொடுக்கப்பட்ட காஸ்ட்ரோ ஒரு சண்டையில் இரண்டு கால்களும் தொடைக்கு மேலே இழந்தவர். சிகிச்சைக்காக படகில் ஒரேயொரு தடவை தமிழ்நாட்டுக்கு சென்று வந்ததுதான் அவரது வெளிநாட்டுப்பயணம்.மற்றும்படி உலகநாடுகளை வரை படத்தில் மட்டுமே பார்த்து அறிந்திருந்தது மட்டுமல்லாது பெரும்பாலும் படுக்கையிலேயே வாழ்நாளை கழித்துக்கொண்டு இருப்பவரிடம் இருபத்து நான்கு மணி நேரத்தில் இருபது மணி நேரங்களாவது விழித்திருந்து ஓடியாடி வேலைகள் செய்யும் மிகப் பொறுப்பான பதவியை எப்படி பிரபாகரன் அவரிடம் ஒப்படைத்தார் என்பது இன்றுவரை விடைகிடைக்காத மில்லியன் சந்தேகக்களை அடக்கும் கேள்வி .
புதிதாக பொறுப்பெடுத்துக் கொண்ட காஸ்ட்ரோ தனது அமைப்புக்கும் புது இரத்தம் பாய்ச்சப் போவதாக சொல்லிக் கொண்டு   புலிகள் அமைப்பால் உயர் கல்வி கற்பதற்காக வெளி நாடுகளுக்கு அனுப்பப் பட்டிருந்த இளையோர் சிலரிடம் பொறுப்புகளை பிரித்துக் கொடுத்தார்.அப்படி அவர் நியமித்தவர்களில் அனைத்துலக செயலகத்தை வெளியில் இருந்து இயக்க நெடியவன் என்பவரை நோர்வே நாட்டுக்கும் அவருக்கு உதவியாக நிதி விடயங்களை கவனிக்க வாகீசன் என்பவரை  ஜெர்மனிக்கும் .அனுப்பியவர் ஆயுத பேரங்கள் மற்றும் புலிகளின் வணிக கப்பல்களை கவனிக்க ஸ்டீபன் .என்பவரை நியமிகிறார். இவர்களில் புதிதாக பொறுப்பெடுத்த ஸ்டீபன் உலகெங்கும் கள்ளச் சந்தைகளில் ஆயுத பேரங்களை நடத்துவதற்காக பல புதியவர்களை நியமித்தவர் வன்னிக்கு சென்று தலைவரிடம் நேரடியாக ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு வேலைகளை தொடங்க நினைத்து வன்னி சென்றவர் பிரபாகரனை சந்தித்து விட்டு அங்கிருந்து சிங்கப்பூர் வழியாக இந்தோனேசியா சென்றதும் இந்தோனேசிய விமான நிலையத்தில் தற்செயலாக ஒரு அதிகாரி சந்தேகத்தில் ஸ்டீபனை விசாரிக்கிறார். ஸ்டீபனின் பதில்களில் மேலும் சந்தேகம் வரவே அவர் கையோடு கொண்டு சென்ற இரண்டு மடிக்கணணி களையும் பரிசோதனை செய்யத் தொடங்கியவருக்கு தலை சுற்றத் தொடங்குகிறது .
நீண்ட காலமாகவே இந்தோனேசிய தீவுகள் புலிகளின் ஆயுதக்கடதல்களில் தளமாக இயங்கிவருவதோடு சில கப்பல்களும் அங்கு  பதிவு செய்யப் பட்டிருந்ததை அந்த நாட்டு காவல்துறையினர் அறிந்திருந்தனர் .எனவே ஸ்டீபனும் புலிகள் அமைப்பை சேர்ந்தவனாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அவரை தடுத்து வைத்தபடி சர்வதேசப் பொலிசாரின் உதவியை நாடியிருந்தனர் .நீண்டகாலமாகவே புலிகள் அமைப்பின் கடத்தல் நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டிருந்த அமெரிக்க சி ஐ ஏ  அதிகாரிகள் சிலர் இந்தக் கைது விபரம் அறிந்ததும் இந்தோனோசியாவிற்கு விரைந்தவர்கள் ஸ்டீபனை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து அவர் கொண்டு சென்ற மடிக்கணணினிகளை ஆராய்ந்த போது அதிச்சி கலந்த மகிழ்ச்சி அவர்களுக்கு ..தோண்டத்தோண்ட தகவல்களை அள்ளிக் கொடுக்கும் சுரங்கமாக  ஆயுத பேரங்கள், தேவையான ஆயுதங்களின் பட்டியல்கள் ,அதனுடன் தொடர்புடையவர்கள் ,பண கொடுக்கல் வாங்கல்கள் ,கப்பல்களின் விபரங்கள் என இந்தனை காலங்களாக அவர்கள் தேடியலைந்த அத்தனை விபரங்களும் அதில் அடங்கியிருந்தது .ஆனாலும் பல விடயங்கள் சங்கேத மொழியில் எழுதப் பட்டிருந்ததால் தகவல்களை முழுமையாக பெற முடியாமல் இருக்கவே  என்ன செய்யலாமென யோசிதவர்கள்  புலிகள் அமைப்பில்  இருந்து வெளியேறி வெளிநாடுகளில் வாழும் யாராவது ஒருவரின் உதவியை பெறுவது என முடிவெடுத்தார்கள் .உடனடியாக பல நாடுகளின் உதவியும் கோரப்பட்டபோது  புலிகளின் தொலைத்தொடர்பு பிரிவில் நீண்டகாலம் பணியாற்றிவிட்டு   தலைமையோடு முரண்பட்டு அங்கிருந்து வெளியேறி சுவிஸ் நாட்டில் அகதியாக வாழ்ந்து கொண்டிருந்த ஒருவரின் விபரம் கிடைக்கவே சுவிஸ் நாட்டு காவல்துறையின் உதவியோடு அவர் இந்தோனோசி யாவிற்கு கொண்டு செல்லப்பட்டார்.அனைத்து சங்கேத மொழிகளும் மொழிபெயர்க்கப் பட்டது.

 உலகம் முழுதும் புலிகளுக்காக ஆயுத பேரத்தில் தொடர்புடைய அனைவருடைய விபரங்களையும்  அவர்கள் வாங்க இருக்கும் ஆயுதங்களின் விபரங்களையும் சேகரித்தவர்கள் உடனடியாக யாரையும் கைது செய்யவேண்டாம் என முடிவெடுத்தார்கள்.காரணம் இவர்களை கைது செய்தால் புலிகள் அமைப்பு உடனடியாக உசாரடைந்து வேறு புதியவர்களை நியமித்து தங்கள் வேலைகளை தங்குதடையின்றி செய்துகொண்டே இருப்பார்கள் .எனவே அவர்களது சர்வதேச கடத்தல் வலையமைப்பை மீண்டும் கட்டியமைக்க முடியாத விதத்தில் அதனை முற்றாக அழித்து விடுவது தான் அவர்களது நோக்கம் .அதற்கான திட்டத்தை வகுத்தார்கள் .ஆயுத பேர வலையமைப்பில் இயங்கியவர்களில் அமேரிக்கா .கனடா நாடுகளில் வசிப்பவர்களே அதிகமாக இருந்ததால் அமெரிக்காவின் எப்  .பி. ஐ. மற்றும் கனடாவின் சி .எஸ்.ஐ .எஸ்  அதிகாரிகள் இணைத்து புலிகளின் சர்வதேச ஆயுதக் கடத்தல் வலையமைப்பை அழித் தொழிக்கும் திட்டத்தை வகுத்தவர்கள்.தங்களுக்கு உதவியாக ஐரோப்பிய காவல்துறையினரின் உதவியையும் நாடியிருந்தார்கள் . அதே நேரம் ஸ்டீபன் இந்தோனேசியாவில் கைதாகி அமெரிக்க அதிகாரி களிடம்  கையளிக்கப் பட்ட விடயம் புகளின் தலைமைக்கு தெரிந்திருக்கவில்லை.அப்படியொரு சம்பவமே நடக்காத மாதிரி  ஸ்டீபனை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்து இயக்கியபடியே அவருக்கு அடுத்த கட்டத்தில் இயங்கிய 1)சதாஜன் சரசந்திரன் 2) சகிலால் சபாரத்தினம் 3)  திருத்தணிகன் தணிகாசலம் 4) நடராஜா யோகராஜா 5) முருகேசு விநாயகமூர்த்தி 6) விஜய்சாந்தர் பத்மநாதன் .7) நாச்சிமுத்து சோக்கிடடீஸ் ஆகிய ஏழு பேரும்  சி.பி.ஐ யின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர் .இவர்கள் வாங்கிய ஆயுதங்கள் கப்பல்களில் ஏற்றப் பட்டு அவை சர்வதேச கடலை விட்டு முல்லைத்தீவு கடலுக்குள் நுழையும் போது இலங்கை அரசுக்கு கச்சிதமான தகவல்கள் வழங்கப்பட்டது.இலங்கை கடற்படையும் வான்படையும் இணைந்து புலிகளின் ஆயுதக் கப்பல்களை துல்லியமாக தாக்கியழித்துக் கொண்டிருந்தார்கள்.
அத்தனை ஆயுதக்கப்பல்கள் அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கும்போதும் ஸ்டீபன் கைதான விடயம் புலிகளின் தலைமைக்கு தெரிந்து விடாதபடி இந்த கூட்டு நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய எப் .பி.ஐ அதிகாரிகள் பார்த்துக்கொண்டார்கள்.புலிகளுக்கும் சந்தேகம் வரவில்லை.அப்போதுதான் புலிகள் தங்கள் நீண்ட நாள் முயற்சியான குருஸ் ரக ஏவுகணைகளை வாங்கும் முயற்சியில் இறங்கியிருந்தார்கள்.அதற்கிடையில் புலிகளின் ஒன்பது ஆயுதக் கப்பல்கள் இரண்டு சரக்கு கப்பல்கள் என பதினோரு கப்பல்கள் மூழ்கடிக்கப் பட்டிருந்தது இதற்கு மேலும் தொடர்ந்தால் புலிகள் வேறு வழிகளில் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள் எனவே  இத்தோடு அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவரலாம் என நினைத்த அதிகாரிகள்  ஏவுகணை வாங்க முகர்வர்களை தேடிக்கொண்டிருந்த வர்களிடம் தங்களை ஆயுதத் தரகர்கள் என்று சொல்லிக்கொண்டு அறிமுகமாகிறார்கள்.
ஏவுகணை வாங்கும் திட்டத்துக்கு டீல் போட லண்டனில் வாசித்த முருகேசு விநாயகமூர்த்தி என்பவரை வன்னியில் இருந்த காஸ்ட்ரோ நியமிக்கிறார்.முருகேசு விநாயகமூர்த்தி ஏற்கனவே எப்  பி ஐ யின் கண்காணிப்பிலேயே இருந்தபடியால் ஆயுத தரகர்கள் என்று சொல்லிக்கொண்டு லண்டனில்  அவரை சந்திப்பதில்  எப் . பி .ஐ யினருக்கு எவ்வித சிரமும் இருந்திருக்கவில்லை.முருகேசு விநாயகமூர்த்தி ஒரு வைத்தியர் இவருக்கு வியாதிகள் பற்றி தெரியுமே தவிர விண்ணில் சென்று தாக்கும் ஏவுகணைகள் பற்றிய விபரங்கள் எதுவும் அறியாதவர்.எதோ கோயம்பேடு மார்க்கட்டில் கத்தரிக்காய் வாங்குவது போலவே ஏவுகணைகளை வாங்கிவிடலாம் என்பதுபோலவே நினைத்து ஆயுதத் தரகர்கள் போல வந்திருந்த இரண்டு எப்  பி ஐ அதிகாரிகளிடமும்  ஏவுகணைகள் ,வான் எதிர்ப்பு துப்பாக்கிகள் என்பவற்றின் பட்டியல்களை கொடுத்துவிட்டு எங்கே எப்படி பெறலாம்.பணத்தை எப்படி கை மாற்றுவது என்று கேட்கிறார். அடுத்த சந்திப்பில் சில ஏவுகணை மாடல்களை நேரடியாகவே காட்டுகிறோம் அவை இயங்கும் திறன் இந்த கட்லோக்கில் உள்ளது படித்துப்பாருங்கள். ஏவுகணை மாடலை நாங்கள் காட்டும் போது பாதிப்பணம் நாங்கள் சொல்லும் அக்கவுண்டுகளில் செலுத்திவிட வேண்டும் ஏவு கணைகள் உங்கள் கைகளுக்கு வந்ததும் மீதிப்பணத்தை செலுத்தி விடுங்கள் மீண்டும் சந்திப்போம் என விடை பெற்றவர்களிடம் ..அடுத்த  சந்திப்பு எங்கே என்றார் .அடுத்த சந்திப்பு அமெரிக்காவில் டெக்ஸ்சாஸ் மானிலத்தில் நாங்களே உங்களை தொடர்பு கொள்கிறோம் என்று விட்டு  முகவர்கள் விடை பெற்றார்கள்.
அடுத்த சந்திப்புக்கான அழைப்பு வந்தது முருகேசு விநாயகமூர்த்தி அமெரிக்காவுக்கு பறந்தார் .டேக்சாஸ் மாநிலத்தில் ஒரு பண்ணை வீட்டில் சந்திப்பு .அதே இரண்டு   பாகங்களாக பிரித்து எடுத்து வரப்பட்ட ஏவுகணை ஒன்றின் மாடலை பொருத்தி அவருக்கு  முன்னால் வைத்தார்கள் முகவர்கள் .விநாயகமூர்த்தியால் சந்தோசத்தை அடக்க முடியவில்லை ஒரு குழந்தையைப்போல் துள்ளிக்குதித்தவர் "தொட்டுப் பார்க்கலாமா" என்றதும்  "ம் ..தாராளமாக "  என்றார்கள் .ஆசை தீர தொட்டுத் தடவிப் பார்த்தவர் ஏவுகணை கிடைத்த மகிழ்ச்சியை உடனே வன்னிக்கு சொல்லிவிட நினைத்து கைத் தொலை பேசியை எடுத்தவருக்கு  "மிஸ்டர்  இங்கிருந்து எந்த தொலைபேசி அழைப்பும் வேண்டாம் உங்கள் தங்குமிடம் போனதும் தாரளமாக பண்ணிக்கொள்ளுங்கள் இப்போ பேரத்தை முடித்து விடலாம் என்றார்கள்" .அவர்களாலேயே உருவாக்கப்பட்ட போலியான வங்கிக் கணக்குகளை கொடுத்து அதில் பாதிப் பணத்தை வைப்பிலிடும் படியும் ஏவுகணைகள் புலிகளின் கப்பலில் ஏற்றப் பட்டதும் மிகுதிப் பணத்தை செலுத்தி விடும்படியும் சொல்லி விடுகிறார்கள் .அபோதுதான் விநாயகமூர்த்திக்கு ஒரு விடயம் நினைவுக்கு வந்தது புலிகள் அமைப்பு இதுவரை SAM  ரக ஏவுகணைகளையே பயன்படுதியிருந்தார்கள். அதனை எவுவதட்காகவே சிலர் பயிற்ருவிக்கப் பட்டிருந்தனர்.ஏவுகணைகள் மிகப் பெறுமதியானவை  என்பதால் ஒன்றைக் கூட வீணடிக்க முடியாது. எனவே அவற்றை சரியாகப் பயிற்ச்சி எடுத்தவர்களால் இயக்கப் படவேண்டும் .எனவே குருஸ் ரக ஏவுகணையை இயக்க  உங்களில் ஒருவர் வன்னிக்கு சென்று சிலருக்கு பயிற்ச்சியும் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.சில நிமிடங்கள் யோசித்த முகவர்கள் பிரச்சனையில்லை ஒருவரை அனுப்பி வைக்கிறோம் ஆனால் பத்திரமாக அவரை வன்னிக்கு அழைத்துச்சென்று மீண்டும் இங்கு கொண்டுவந்து விடவேண்டும் என்றதும் .அதெல்லாம் பிரச்சனையில்லை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று விடை பெற்றவர்  தங்கும் விடுதிக்கு வந்ததுமே முதல் வேலையாக வன்னிக்கு காஸ்ட்ரோவுக்கு போனடித்து ஏவுகணை வாங்கிவிட்ட செய்தியை சொல்லிவிட்டு விரைவில் வன்னிக்கு வருகிறேன் தலைவரை நேரில் சந்தித்து ஒரு படம் எடுக்க வேண்டும் அதற்கான ஒழுங்குகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கும் போதே அறைக்கதவு தட்டப்பட தொலைபேசியை நிறுத்தி விட்டு கதவைத் திறந்தார்.
சி.பி.ஐ  என அடையாள அட்டையை தூக்கி காட்டிய சிலர் அவரை இழுத்து விலங்கை மாட்டி அள்ளிப் போட்டுக்கொண்டு போய் ஒருவருக்கு முன்னால் நிறுத்தினார்கள்.அவர் வேறு யாருமல்ல.. ஆயுத முகவர் போல பேரம் பேசிய அதே நபர் தான் .இப்போதான் விநாயகமூர்த்திக்கு விடயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரியத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து அமேரிக்கா,கனடா, ஐரோப்பா என எங்கும் கண்காணிப்பிலிருந்த முப்பதுக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப் படுகிறார்கள்.அது மட்டுமல்லாது பல நாடுகளிலும் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பல கப்பல்களும் பறிமுதல் செய்யப்படுகின்றது .சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவி, சர்வதேச காவல்துறையினருக்கு தண்ணி காட்டி, உளவுத்துறையினருக்கெல்லாம் உச்சி விளையாடிய புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பானது   அமேரிக்கா தலைமையில்  2006 ம் ஆண்டு முற்று முழுதாக சிதைக்கப் பட்டு முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது .அதன் பின்னர் வெளியே இருந்து ஒரு குண்டூசி கூட புலிகளுக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை ..
வெளியே சர்வதேச நிலைமைகள் இப்படி இருக்கும்போது உள்ளே வன்னியிலும் புலிகளின் இராணுவக் கட்டமைப்பை உடைக்கும் வேலைகளையும் மேற்குலகம் செய்யத் தொடக்கி விட்டிருந்தது.அது எப்படியென்றால்  யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்து பேச்சு வார்த்தைகள் தொடங்கியதுமே மக்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லிக் கொண்டு சில தொண்டு நிறுவனங்கள் (N.G.O) வன்னிக்குள்ளே காலடி எடுத்து வைத்தனர் .இப்போவெல்லாம் என் ஜி ஓக்கள் என்றாலே ஒரு நாட்டின் உளவு நிறுவனத்தின் முகவர்கள் என்கிற நிலைமையாகி விட்டது .காரணம் உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை இந்த என் ஜி ஓக்களின் ஊளியர்களாகவே அனுப்பி வைகிறார்கள்.அப்படி பலர் வன்னிக்குள் நுழைந்ததும் மக்களுக்கு உதவியதை விட புலிகளின் தளபதிகள் முக்கிய உறுபினர்களை குறிவைத்து உதவத் தொடங்கினார்கள்.சுனாமி தாக்கத்தின் பின்னர்  உலகத்திலுள்ள அனைத்து என் ஜி ஓக்களும் வன்னிக்கு படையெடுத்தனர் .
. இவர்கள் சுனாமியால் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட  மக்களிற்கு  வெறும் தரப்பாள்களும் பிளாஸ்ரின் கோப்பைகள்  உணவுகள்.படுக்க பாய்களை மட்டும் கொடுத்துக்கொண்டு புலிகளின் தளபதிகள் பொறுப்பாளர்களிற்கு  கணணிகள் மடிக்கணணிகள்.கைத்தொலைபேசி அவர்கள் வீடுகளிற்கு  மின்சாரம் பெற்றுக்கொள்ள ஜெனரேர்ரர்கள். அல்லது இயற்கையில் சூரிய ஒளியில் மின்சாரம் பெறும் சோலார்கள் என சகல வசதிகளிற்கும் அவர்களை பழக்கப் படுத்திக்கொண்டிருந்தார்கள்.காரணம் இன்னொரு சண்டை தொடங்கும் போது புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள் இந்த வசதி வாய்ப்புக்களை துறந்து மீண்டும் கெரில்லாக்களாக காடுகளிற்குள் இறங்கி போராப் போய் விடக்கூடாது என்பதே இவர்களது நோக்கமாக இருந்தது. அதே நேரம் சமாதான காலத்தில்புலிகள் அமைப்பில் இணைக்கப் பட்ட வயதில் குறைந்த போராளிகள் புலிகள் இயக்க பொறுப்பாளர்களின் வீடுகளில் வேலைக்காக அமர்த்தப் பட்டிருந்தனர்.அவர்களது வேலைகள் புலிகள் தளபதிகளின் பிள்ளைகளை பராமரித்தல் சமையல் செய்தல் அவர்களது துணிகளை துவைத்தல் என  சம்பளமில்லாத தொழிலாளிகளாக புதிய போராளிகள் இருந்தார்கள். குழந்தைப் போராளிகளைப் பற்றி பக்கம் பக்கமாக அறிக்கை விட்ட மனிதவுரிமை அமைப்புக்களோ  உலக நாடுகளோ இந்த குழந்தை போராளிகள்  தளபதிகளின் வீடுகளில் வேலைக்கு அமர்த்தப் பட்டிருப்பவர்களைப் பற்றி வாயே திறக்கவில்லை காரணம்  அது அவர்களிற்கு தேவையானதாக இருந்தது. அதிகாரங்களிற்கு எதிராகப் போராடப் புறப்பட்ட ஒரு இயக்கம்  அதே அமைப்பில் போராட வந்த போராளிகளை வீட்டு வேலைகளிற்காக அமர்த்தி அடிமைப் படுத்தத் தொடங்கியதை என்னவென்று சொல்ல?? ...இப்படி வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த போராளிகள் பற்றி ஒரு உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர்  ஒரு தளபதியிடம் கேட்டபோது   இதுவும் போராட்டத்தின் ஒரு வடிவம்தான் என நகைச்வையாக பதில் சொல்லி நழுவிக்கொண்டார் .

இப்படி எல்லா தளபதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக சுக போக வாழ்க்கைக்கு பழக்கப் படுத்திக்கொண்டிருந்தபோது பால்ரச் மட்டும் அதற்கு விதி விலக்காக இருந்தார் .இவர் பெரும்பாலும் போராளிகளுடன் முகாமிலேயே தான் தங்குவார்.தனது உடல் சுகபோக வாழ்க்கைக்கு பழக்கப் பட்டு விடக்கூடாது என்பதற்காக எப்போதும்போல மரத்தாலான வாங்கு ஒன்றிலேயே துண்டை விரித்துப்போட்டு படுத்துக் கொள்வார்.ஆனாலும் அவருக்கு விதி வேறொரு வடிவத்தில் விளையாடியது.இருதய நோயாளியாகி 2003 ம் ஆண்டு சிங்கப்பூரிற்கு அனுப்பப் பட்டு அங்கு அமெரிக்காவில் இருந்து வந்த வைத்தியர்களால் சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டிருந்தார். ஆனால் புலிகள் அமைப்பின் பழைய சர்வதேச வலை கட்டமைப்பு கலைக்கப் பட்ட பின்னர் புதிய கட்டமைப்பினரால்  இவரிற்கான சிகிச்சை ஏற்படு செய்யப் பட்டு சிங்கப்பூரிற்கு பால்ராச் அனுப்பப் படும்போதே  பழைய கட்டமைப்பினரால்  ஒரு எச்சரிக்கை கொடுக்கப் பட்டிருந்தது அது என்னவெனில்  பால்ராச் என்கிற மனிதனை பற்றிய பெரும் வியப்பையும் அவரது தாக்குதல் வியூகங்களையும்  உலக இராணுவ வல்லுனர்களே  அதிசயத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் போது அவரிற்கு வெளிநாடு ஒன்றில் சிகிச்சை கொடுத்தால் புலிகள் அமைப்பை  பலவீனப் படுத்த நினைக்கும் சர்வதேசம் நிச்சயமாக தனது புலனாய்வு பிரிவை பயன் படுத்தி  பால்ராச்சை  கொன்றுவிடுவார்கள். அது  சிகிச்சையின் போதாக இல்லாது இருக்கும்  ஆனால் சிகிச்சையின் போது மிக மெல்ல கொல்லும் விசத்தை அவரது உடலில் ஏற்றி விட சந்தர்ப்பம் உள்ளது எனவே அவரிற்கு உள்ளுரிலேயே சிறந்த வைத்தியர்களை வைத்து சிகிச்சை செய்யவும் என அறிவுறித்தியிருந்ததோடு அதற்கு உலக நாடுகளின் போராளிகள் சிலர் வெளி நாடுகளில் சிகிச்சை பெற்றபின்னர் இறந்த உதாரணங்களும் எடுத்து சொல்லப் பட்டிருந்தது. ஆனால் நீங்கள் மட்டும் அன்ரன் பாலசிங்கத்தை வெளியில் எடுத்து சிகப்பூரில் சிகிச்சை செய்யலாம் எங்களால் முடியாதா என்கிற எகத்தளத்தில் பதில் வந்திருந்தது  அதே நேரம் பால்ராச்சும்  சிகிச்சை முடிந்த பின்னர் வன்னி சென்றதும் இறந்துபோய்விட்டிருந்தார். இது இயக்கத்திற்கு மாபெரும் இழப்பு என்பது மறுக்க முடியாதது. பால்ராச்சின் இறப்பு என்பது இலங்கையரசிற்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருந்தது
அது மட்டுமல்லாது சமாதானகாலத்தில்  பெருமளவான புலம் பெயர் தமிழர்களும் வன்னிக்கு படையெடுக்கத் தொடங்கியிருந்ததோடு புலிகள் அமைப்பின் பொறுப்பளர்களிற்கு  விலையுயர்ந்த  கைக் கடிகாரங்கள் மடிக்கணணிகளை பரிசாகக் கொடுத்து அவர்களோடு நின்று படம் எடுத்துக் கொண்டுவந்து  அதனை பெரிதாக்கி தங்கள் வீட்டு வரவேற்பறைகளில் வைத்து மகிழ்ந்திருந்தது மட்டுமல்லாமல் பிரபாகரனோடு நின்று படம் எடுப்பதற்காக  பெரும் கூட்டமே அலைந்தனர்.அதற்காக  வெளிநாடுகளில் உள்ள அனைத்துலக செயலக பொறுப்பாளர்களிடம் பணம் கொடுத்தும் சிபாரிசுகளை பெற்றுக் கொண்டும் வன்னிக்கு போயிருந்தார்கள். ஊரில் இயக்கத்திற்கு  ஆதரவகாவும்  போராளிகளையும் ஆதரித்தது மட்டுமல்லாமல் தங்கள் பிள்ளைகளை போராட்டத்தில் மாவீரராக பறிகொடுத்த பெற்றோர்களே  பிரபாகரனை நேரில் பார்க்கவோ படம் எடுக்கவோ முடிந்திராத நிலையில் பிரச்சனை என்றதுமே வெளிநாட்டிற்கு ஓடிவந்து விட்டு  ஊரைப் பற்றியோ போராட்டத்தைப் பற்றியோ எந்தக் கவலையும் இல்லாமல் தன்னுடைய சுய தேடல்களில் இறங்கியிருந்த ஒருவர் சமாதான காலத்தில் வன்னிக்குப் போய் கொஞ்சம் பணத்தைக் கொடுத்துவிட்டு பிரபாகரனிற்கு பக்கத்தில் நின்று படமெடுக்கலாமென்கிற நிலைமை உருவாகியிருந்தது. இப்படி பிரபாகரனுக்குப் பக்கத்தில் நின்று படம் எடுத்த ஒரேயொரு தகுதியை மட்டுமே வைத்துக்கொண்டு சீமான் தமிழ் நாட்டில் ஒரு அரசியல் கட்சியே தொடக்கி நடத்திக்கொண்டிருக்கிறார் . இதனை பார்க்கும்போது  இங்கு வெளிநாடுகளில் நத்தார் காலங்களில்  ஒருவர்  மக்கள் கூடும் இடங்களில் நத்தார் தாத்தா வேடம் போட்டிருப்பார் அவரிற்கு பக்கத்தில் நின்று படமெடுப்பதற்கு  குழந்தைகள் விரும்புவார்கள்  எனவே  அவரிற்கு கொஞ்சம் பணத்தை கொடுத்து விட்டு தங்கள் குழந்தைகளை நத்தார் தாத்தாவேடம் போட்டவரிற்கு பக்கத்தில் தங்கள் குழந்தைகளை  நிறுத்தி படமெடுத்துபோவார்கள்.இதைப்போல தலைவர் பிரபாகரனும் வெளிநாடுகளில் இருந்து போனவர்கள் பக்கத்தில் நின்று படம் எடுக்கும் நத்தார் தாத்தாவைப்போல மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுருந்தார். ஆனாலும் யுத்தத்தை எப்படியாவது தொடக்கி விடுவது என்கிற முனைப்போடு இருந்தார் .

கருணாவின் பிளவு அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தின் பெரும்பகுதி கையை விட்டுப்போன நிலைமை .கருணா விடயத்தை சரியாக கையாளவில்லை என்று பல தளபதிகள் குறிப்பாக கிழக்கு மாகாண தளபதிகள் தலைமையில் அதிருப்தியில் இருந்தார்கள் .தொடர்ச்சியாக ஆயுதக்கப்பல்களும் மூள்கட்டிகப் பட்டுக்கொண்டிருந்தது.மேற்குலக நாடுகளின் நெருக்குதல்கள் இயக்கத்தின் மீதான தடைகள் என இயக்கம் மிக நெருக்கடியான கட்டத்துக்குள் சென்று கொண்டிருப்பதை பிரபாகரன் உணர்ந்தார்.இவை எல்லாவற்றுக்கும் பின்னல் முக்கியமான இரண்டு நபரின் மூளைகள் இயங்கிக்கொண்டிருந்தது அவர்களின் இயக்கத்தை எப்படியாவது நிறுத்திவிட முடிவெடுத்தார்.முதலாவது மூளை அப்போதைய சந்திரிக்கா அரசில் வெளிநாட்டமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிர்காமர். இவர் ஒரு தமிழர் என்பதால் துரோகியாகவே கருதப்பட்டவர் 2005 ஆண்டு நவெம்பர் மாதம் 13 ம் திகதி அவரது வீட்டு நீச்சல் குளத்தில் சினைப்பர் தாக்குதல் மூலம் கொல்லப் பட்டார் .இரண்டாவது மூளை அன்றும் இன்றும் இலங்கை அரசின் பிரதமராக இருக்கும் ரணில் விக்கிரம சிங்கே ஆவார் .ரணில் விக்கிரம சிங்கேயை போட்டுத் தள்ளுவது சுலபமாக இருந்தாலும் அதன் பின் விளைவுகள் மிக மோசமாதாய் இருக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும்.காரணம் யுத்த நிறுத்தத்தை அறிவித்து பேச்சு வார்த்தைக்கு தயார் என புலிகள் பல தடவை அறிவித்த போதும் அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா அதனை நிராகரித்திருந்தார் .ஆனால் 2001ம் ஆண்டு நடந்த தேர்தல் மூலம் பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்காவே நோர்வேயின் அனுசரணையுடன் தொடங்கப்பட்ட பேச்சு வார்த்தைக்கு சம்மதம் தெரிவித்து  பிரபாகரனோடு ஒப்பத்தில் கையெழுத்திட்டவர் . ஆகவே அவரை போட்டுதள்லாமல் சமாதனப் பேச்சுவார்த்தையில் இருந்து எப்படி அப்புறப் படுத்துவது என யோசித்துக் கொண்டிருந்த பிரபாகரனுக்கு 2005 ல் நடக்கவிருந்த சனாதிபதிக்கான பொதுத் தேர்தல் கைகொடுத்தது.அந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் மகிந்தராஜபக்சவும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணில் விக்கிரமசிங்கவும் வேட்பாளர்களாக களத்தில் இறங்கினார்கள்.இலங்கையில் ஆயுதப் போராட்டம் தொடங்கிய பின்னர் புலிகள் அமைப்பின் அணுகுமுறைகள், நடவடிக்கைகள் ,அதன் சரி பிழைகளுக்கப்பால் இலங்கையானாலும் தமிழ் நாடானாலும் சரி தேர்தல் வெற்றி தோல்விகளில் அவர்களின் பங்கு அல்லது அவர்களின் தாக்கம் இன்றி எந்தத் தேர்தலும் நடைபெற்றிருக்கவில்லை என்பது மட்டுமல்லாமல் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் சக்தியாகவும் இருந்திருகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
அதேபோல 2005 ம் ஆண்டு தேர்தலில் மகிந்தவுக்கு சிங்களவர்களின் பெரும்பான்மையான ஆதரவு இருந்தாலும் ரணில்விக்கிரமசிங்க  பெரும்பான்மையான தமிழர்களின் வாக்குகளால் வெற்றி பெறும் வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தது.அதற்க்கு காரணமும் இருந்தது .நீண்ட கால யுத்தத்தால் தமிழர்கள் களைத்துப்போயிருந்தனர் எனவே ரணிலை வெற்றி பெற வைப்பதன் மூலம் சமாதானம் நீடிக்கும் என நம்பினார்கள் .சந்திரிக்கா குமாரதுங்கா சமாதானக் கதவுகள் திறந்துள்ளது என சொல்லிக் கொண்டு தேர்தலில் குதித்த போதும் பெரும்பாலான தமிழர்களின் வாக்குகலாலேயே வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத் தக்கது.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்ட மகிந்தராஜபக்ச தனது வெற்றியை நிர்ணயம் செய்து விடுவதட்காக புலிகளின் உதவியை நாடினார்கள்.அதற்காகவே சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்த புலிகளுக்கோ எப்போதும்போல அதிஷ்ட்ரக் காற்று தங்கள் பக்கம் வீசுவதாக நினைத்து மகிழ்ந்தார்கள் .ஆனால் அதுதான் அவர்கள் எதிர் கொள்ளப்போகும் சூறாவளி என்று அப்போது நினைத்துப்பார்த்திருந்திருக்க மாட்டார்கள்.

அன்று சிந்திய ரத்தம் தொடர் 6

12:34 PM, Posted by sathiri, No Comment

அன்று சிந்திய ரத்தம் தொடர் 6
புதிய தலைமுறை வார இதழுக்காக ..

கருணா அணி எங்கே பலவீனமாக இருக்கிறது என்று ஆராய்ந்தார் வளைந்து நெளிந்து வரும் வெருகல் ஆற்றின் மறுபக்கம் கதிரவெளி என்கிற பகுதியில் இலங்கை இராணுவ முகாம் ஒன்று அமைந்திருந்தது பிரதான வீதியும் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தது ஆற்றுக்கு மறு பக்கம் நிற்கும் புலிகள் அந்தப்பகுதியால் உள்ளே நுழைய இலங்கை இராணுவம் அனுமதிக்காது என்கிற நம்பிக்கையில் அந்தப் பகுதியில் கருணா தனது படைகளை நிறுத்தி வைத்திருக்கவில்லை என்று தெரிந்தது.அப்போ நோர்வேயின் அனுசரணையோடு பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்ததால் யுத்த நிறுத்தம் அமுலில் இருந்ததால் உடனடியாக பிரபாகரனுக்கு ஒரு திட்டம் உதித்தது .புலிகள் படையணி இராணுவ முகாம் அமைந்திருக்கும் கதிரவெளிப் பகுதி ஊடாக ஆற்றை கடக்கவும் பிரதான வீதியால் வேகமாக முன்னேற இலங்கை அரசு உதவவேண்டும் என்கிற கோரிக்கையை நோர்வே ஊடாக இலங்கை அரசிடம் வைத்தார்..இலங்கை அரசின் அதிபராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்கா அம்மையாருக்கு பழம் நழுவி பாலில் விழுந்து அதுவே மீண்டும் நழுவி வாயில் விழுந்தது போன்ற மகிழ்ச்சி. 1999 ஒக்டோபர் மாதம் புலிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலில் இழந்துபோன தனது வலக் கண்ணை ஒருதடவை தடவிப் பார்த்தபடியே ஒரு புன் சிரிப்போடு அதற்கான அனுமதியை வழங்கிய நேரம் அதற்கு கைமாறாக புலிகளின் தலைமையிடம் இன்னொரு கோரிக்கையை வைத்தார்.வன்னியில் பெரும் இழப்பை சந்தித்து பெற்ற பெரும் அவமானத்தை ஒரு இழப்பும் இன்றி கிழக்கில் துடைத்து விடுவதென முடிவெடுத்தவர் புலிகள் கருணா தரப்பை ஒடுக்கியதும் மட்டக்களப்பின் முக்கிய பகுதிகள் அனைத்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் அதற்கு புலிகள் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்கிற கிடுக்குப்பிடி கோரிக்கையை வைத்தார் .

எனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனப்பிழை வரவேண்டும் என்பதுபோல என்ன விலை கொடுத்தேனும் கருணாவை ஒழித்து விடுவது என்று கங்கணம் கட்டி நின்ற பிரபாகரன் சந்திரிக்காவின் கோரிக்கைக்கு ஒத்துக்கொண்டார்.இரவோடு இரவாக புலிகள் சிறிய படகுகளில் வெருகல் ஆற்றை கடந்து பிரதான வீதியால் முன்னேறி கதிரவெளிப் பகுதியில் கருணா தரப்பு எதிர்பாரத விதமாக பின்புறமிருந்து அதிரடியாக தாக்குதலை தொடங்கினார்கள் .எதிர்பாரத இந்த தாக்குதலில் கருணா தரப்பு நிலை குலைந்து போக பெண்கள் படையணி தளபதிகளான ராசாத்தி .சுதா .நிசா .ஆகியோரோடு ஆண்கள் பிரிவு ஜிம்கலிதாத்தா .ரெஜி .றொபேட் .திருமால் ஆகிய தளபதிகளும் நுற்றுக்கு மேற்பட்ட போராளிகளும் கொல்லப் பட பலர் இதுவரை காலமும்ஒரே பாசறையில் ஒன்றாக உணவுண்டு ஒன்றாக உறங்கி பொது எதிரிக்கு எதிராக பல வெற்றிகளை குவித்த சக போராளிகளை நோக்கி தங்கள் துப்பாக்கிகளை நீட்ட முடியாமல் மௌனமாக சரணடைய கருணா மட்டும் தனது சிறப்பு படையணியை சேர்ந்த இரண்டாயிரம் பேரை இலங்கை இராணுவத்தோடு இணைத்து விட்டு மிகுதி படையணியை கலைந்து போகும்படி கட்டளையிட்ட பின்னர் பன்னிரண்டு பேருடன் இலங்கை அமைச்சரான அலி சாகிர் மௌலானா என்பவரின் உதவியோடு தப்பிச் சென்றார் .அதே நேரம் கருணாவை அழிப்பதற்காக உள்ளே நுழைந்த புலிகள் மீண்டும் அதே பாதையால் வெளியேற முடியாதவாறு இலங்கை இராணுவம் பாதையை அடைத்து விட்டிருந்தது மட்டுமல்லாமல் சிதறி ஓடிய கருணா குழுவினருக்கு ஆதரவு கொடுத்து புலிகள் மீது தாக்குதல்களை நடத்தி மட்டக்கிளப்பு மாவட்டத்தை முழுவதுமாக தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .

எது எப்படியோ இலங்கை அரசும் மேற்குலகமும் புலிகளில் கருணா பிரிவை ஊக்குவித்து மோதவைத்தன் மூலம் அவர்களின் அறுபது வீத பலத்தை இழக்க வைத்து அவர்களது பேரம் பேசும் சக்தியையும் இழக்க வைத்து நோகாமல் நொங்கு குடித்து விட்டார்கள் .பாராளுமன்ற உறுப்பினரான அலி சாகிர் மௌலானா உதவியோடு தப்பிச் சென்ற கருணா ..மின்னேரியா இராணுவ முகாமில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட .கருணாவுக்கு உதவியதற்காக புலிகள் தன்னை குறிவைக்கலாம் எனப்பயந்த அலி சாகிர் மௌலானா உடனடியாக அமேரிக்கா சென்று தங்கிவிட்டார் .காற்றுப் புகாத இடங்களுக்குள்ளும் புலிகள் புகுந்து விடுவார்கள் என்பதால் கருணா இராணுவ முகாமிற்குள் தங்கியிருப்பதும் தனக்கு பாதுகாப்பில்லை என்பதை உணர்ந்தான்.காரணம் இலங்கை இராணுவ உயர் அதிகளிகள் வரை பலரும் பணத்துக்காக புலிகளுக்கு தகவல் கொடுப்பவர்களாக இருந்தனர்.தகல்வல்களின் பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்கு புலிகள் பணத்தை வாரி இறைத்தனர் .புலிகளின் துல்லியமான தகவல் பெறும் விடயத்திற்கு ஒரு உதாரணத்தை சொல்லலாம். மகிந்த அரசோடு புலிகளுக்கு யுத்தம் தொடங்கியபோது அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச வடக்கில் உள்ள இராணுவ அதிகாரிகளோடு ஆலோசனை நடத்துவதற்காக பலாலி கூட்டுப்படை விமான நிலையத்திற்கு சென்றிருந்தார் இந்தப் பயணம் மிக இரகசியமாக சில உயர் இராணுவ அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்திருந்தது.கோத்தபாய ராஜபக்ச சென்ற விமானம் பலாலியில் தரையிறங்கிக் கொண்டிருக்கும் போது புலிகள் வன்னியில் இருந்து ஏவிய எறிகணைகள் விமான ஓடு பாதையில் விழுந்து வெடிக்கத் தொடங்கியிருந்தது.

அதிஸ்ட வசமாக உயிர்தப்பிய கோத்தபாய கொழும்பு வந்ததும் யார் அந்த கறுப்பாடு என்று அனைத்து அதிகாரிகளையும் திட்டியதோடு சில அதிகாரிகளை மாற்றமும் செய்திருந்தார்.
ஆகவே தன்னைப் பற்றிய தகவல்களும் புலிகளுக்கு போய் விடலாம் எனவே நாட்டை விட்டு வெளியேறுவதே புத்திசாலித் தனம் என நினைத்திருந்தான்.அன்றைய கால கட்டத்தில் தான் மலேசியா கோலாலம் பூரில் இலங்கை வாலிபர் ஒருவருக்கு கத்திக்குத்து. ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதி என்றொரு சிறிய பெட்டிச் செய்தி மலேசிய பத்திரிகைகளிலும் சில இணைய ஊடகங்களிலும் வெளி வந்திருந்தது.குத்தப்பட்ட அந்த வாலிபர் யார் ? குத்தியது யார் ? ஏன் குத்தினார்கள் என்கிற மேலதிக தகவல் எதுவும் இன்றி அந்த செய்தியானது அப்படியே அமுங்கிப் போய் விட்டிருந்தது.அமுங்கிப்போன அந்த செய்தியை இப்போ மீளவும் கொஞ்சம் மேலிழுத்து பார்ப்போம் .
புலிகள் கருணா பிளவு ஆரம்பிக்கும் போதே கருணா தனது மனைவி பிள்ளைகளை பத்திரமாக மலேசியாவிற்கு அனுப்பி விட்டிருந்தான். அவர்கள் மலேசியாவில் 80 களில் இலங்கை முன்னாள் அமைச்சராகவும் இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகராகவும் இருந்த ராஜதுரை என்பவரின் உதவியோடு தங்க வைக்கப் பட்டிருந்தனர்.ராஜதுரை கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்பதோடு கிழக்கு பிரதேசவாதம் பேசும் ஒருவராகவும் இருந்தவர் இலங்கையில் ஆயுதப் போராட்டம் தொடங்கியதும் மலேசியவிலேயா தங்கிவிட்டிருந்தார் .இவரின் உதவியோடு மலேசியாவில் தங்கியிருந்த கருணா குடும்பத்தினரின் பாது காப்புக்காக தனக்கு நம்பிக்கையான ஒருவனையும் கருணா நியமித்திருந்தான்.
கருணாவை எப்படியாவது போட்டுத் தள்ளிவிட வேண்டும் என்கிற வெறியோடு கிழக்கில் தேடுதல் நடத்திக்கொண்டிருந்த புலிகளின் புலனாய்வு குழுவினர் கருணா நாட்டை விட்டு வெளியேறி விட்டான் என்பதை அறிந்ததும் பொட்டம்மானுக்கு தகவலை அனுப்பி வைத்தனர் .

அவன் தனது குடும்பத்தினரிடம் மலேசியா சென்றிருக்கலாம் என முடிவெடுத்த பொட்டம்மான் கருணாவை கண்ட இடத்தில் போட்டு விடும்படி கட்டளையோடு உடனடியாகவே ஒருவனை மலேசியா அனுப்பி வைக்கிறார்.
பொட்டம்மான் அனுப்பிய ஆள் மலேசியா சென்றதுமே அங்குள்ள புலிகள் அமைப்பு ஆதரவாளர்களின் உதவியோடு கருணா குடும்பத்தினரின் இருப்பிடத்தை இலகுவாக கண்டு பிடித்து விட்டாலும் கருணா அங்கு இருக்கிறானா என்பதை கண்டு பிடிக்க முடியாமல் அவர்கள் பகுதியை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருந்தான். தங்களை யாரோ கண்காணிப்பதாக கருணாவின் குடும்பத்திற்கு பாது காப்பாக நியமிக்கப் பட்டவனுக்கு ஒரு சந்தேகம் வரத் தொடங்கியது . ஒரு நாள் திடீரென பொட்டம்மானின் ஆளை வழி மறித்து அவனிடம் நீயார் என்று கேட்டதும் அவன் தயாராய் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்று விட்டான்.இந்தச் சம்பவம் தான் சிறு செய்தியாக வந்திருந்தது .தங்கள் உதவியாளருக்கு கத்திக்குத்து விழுந்துவிட்டது என்றதுமே புலிகள் தங்களை நெருங்கி விட்டார்கள் என்று அறிந்த கருணா குடும்பத்தினர் உடனடியாக அங்கிருந்து கிளம்பி லண்டன் சென்று விட்டனர்.
இத்தனையும் நடந்து கொண்டிருக்கும்போது கருணா குளு குளு ஊட்டியில் ஒரு பங்களாவில் சூடான தேநீரை உறிஞ்சிய படி செய்திகளை கேட்டுக் கொண்டிருந்தான்.

அன்று சிந்திய ரத்தம் தொடர் 5

12:29 PM, Posted by sathiri, No Comment


அன்று சிந்திய ரத்தம் தொடர் 5
புதிய தலைமுறை வார இதழுக்காக ..

பல மணிநேரம் இருவருக்கும் நடந்த சந்திப்பில் குழப்பத்திலிருந்த கருணாவை மேலும் குழப்பி கிழக்கின் தலைவன் நீதான் என அவன் மனதில் பதியவைக்க பலமணிநேரம் எடுத்தது.இயற்கை வளங்களை வாரி வழங்கும் கிழக்கு .ஆறாயிரம் பேர்கொண்ட படையணி .பல களம் கண்ட தளபதிகள் .அற்புதமான ஆலோசனைகளை அள்ளி வழங்க நான் ..அத்தனையையும் கொண்டுள்ள அஞ்சா நெஞ்சன் நீ ..இத்தனையும் இருந்தும் எட்டி உதைக்கும் வன்னியை இன்னும் கட்டியளுவது ஏன் ??விட்டு விடு ..விடுதலைப்புலிகள் அமைப்பை இரண்டாக வெட்டிவிடு ..என்று சொல்லிவிட்டு கருணாவை உற்றுப்பர்தான் .பாதி கரைந்ததுபோல இருந்தது .நேரத்தை பார்த்தான் நள்ளிரவை தாண்டிக் கொண்டிருந்தது விடிவதற்குள் மீதியையும் கரைத்து விடலாமென்கிற நம்பிக்கை பிறந்திருந்தது.தொலை பேசியில் சிலரை அவசரமாக வரும்படி அழைத்தான் அனைவரும் பிரதேசவா திகளான கிழக்கின் கல்விமான்கள்.அங்கு வந்தவர்கள் வடக்கு வாழ்கிறது ..கிழக்கு தேய்கிறது என்று வகுப்பெடுத்தார்கள் பொழுது புலரத் தொடங்கியிருந்தது .

எல்லாவற்றையும் பொறுமையாய் கேட்டுக்கொண்டிருந்த கருணா நீண்டதொரு பெரு மூசோடு " பிரிந்து விட்டேன் பிரபாகரன் எனக்கு தலைவரல்ல. எனக்கு நானே தலைவன்.இனி எனது அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் அல்ல தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்" சொல்லி முடித்ததும் சுற்றியிருந்தவர்கள் கைதட்டினர்.சிவராம் எழுந்து கருணாவை கட்டிப் பிடித்து "கிழக்கு விடிந்து விட்டது" என்றபடி வாழ்த்து சொல்லியவன் ..இந்தச் செய்தியை உலகம் முழுதும் அறியச் செய்ய வேண்டும் என்றபடி அவசரமாக சில வெளிநாட்டு ஊடகங்களுக்கும் உள்ளூர் ஆங்கில ஊடகங்களுக்கும் அறிவித்தான்.அடுத்த நாள் கருணா முன்னால் குவிந்திருந்த பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு தலைமையை குற்றம் சாட்டி பேட்டி கொடுத்தவன் தனியாக இயங்கப் போவதாக அறிவித்தான்.
சிங்களவர்களுக்குஆச்சரியம்.புலிகளைநேசித்தவர்களுக்குசோகம் .இலங்கையரசுக்கு சுகம் .பொதுவனவர்களுக்கு குழப்பம் .வன்னித் தலைமையோ வழமை போல் மௌனம் ..அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறியது.வன்னித் தலைமைக்கு எதிராக கிழக்கில் ஊர்வலம் ..உண்ணாவிரதம் .பிரபாகரனின் கொடும்பாவி எரிப்புஎன்று நடந்து கொண்டிருக்கும் போது .இன்னொரு பக்கம் தமிழர்களின் உண்மையான நலன் விரும்பிகள் சிலர் அதிர்ச்சியடைந்து இது தமிழனின் சாபக்கேடு ..பெரும் அழிவு வரபோகின்றது அதை எப்படியாவது தடுத்து நிறுத்த நினைத்து பேச்சு வார்த்தைக்கு முயன்றனர் .இரு தரப்பும் இவர்களுக்கான கதவை அடைத்தது ..வடக்கில் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது போலவே கிழக்கில் வாழ்த்த வடக்கு மக்கள் கருணாவால் வெளியேற்றப் பட்டு அவர்கள் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன .கருணாவை நீக்கியதாக புலிகள் அறிவித்தனர்.கருணாவிடம் இருந்த சிலர் வன்னிக்கு தப்பிச் சென்றனர் .சிவராம் கருணாக்கு சார்பாக அறிக்கைகள் விட்டு ஆலோசனைகளும் வழங்கிக் கொண்டிருந்த வேலை வன்னிக்கு வருமாறு புலிகளின் தலைமை அழைத்திருந்தது.

தன்னை எதுவும் செய்து விடமாட்டார்கள் என்கிற தைரியத்தில் தயங்காமல் போனான்.தலைவரை சந்திக்கப் போனவனை சந்தித்தது தலைவரல்ல பொட்டம்மான் .உருவிய பொட்டம்மானின் துப்பாக்கி அவன் தலையை அழுத்தியது .தலையில் துப்பாக்கியை அழுத்தி நிற்பவன் அதன் விசையை அழுத்தும் அந்த ஒரு செக்கன் இடைவெளிக்குள் கதைத்தே கரைத்து விடும் திறமை சிவராமுக்கு உண்டு .பொட்டம்மானோடும் கதைத்தான். அவரை கரைத்தான். துப்பாக்கியை விலக்கிய பொட்டம்மான் தான் சொல்வதை எழுதச் சொல்ல கருணாவின் செயல்களை கண்டித்து அவனுக்கு எதிரான அறிக்கை அடுத்தநாள் பத்திரிகைகளில் சிவராமின் பெயரில் வெளியாகியிருந்தது .
அடுத்தடுத்த நாட்களில் கிழக்கில் புலிகளின் படையணி புகுந்து கொள்ள தன் படையணியை கலைத்து விட்டு தப்பியோடிய கருணாதெற்கில் ஒரு இலங்கை இராணுவ முகாமில் தஞ்சமடைதான்.வன்னியிலிருந்து கொழும்பு வந்த சிவராம் பீரங்கியாய் நம்பிய கருணா புஸ்வானமாய் போனதால் மீண்டும் புலிகளோடு ஒட்டிக்கொள்ள கருணாவோடு தப்பியோடிய பலர் தெற்கில் புலிகளின் புலனாய்வு பிரிவால் தேடி தேடிக் கொல்லப் பட்டனர்.
கருணாவையும் கொலைவெறியோடு தேடித் திரிந்தனர்.இவையெல்லாம் சிவராமின் திருவிளையாடல். காட்டிக் கொடுப்பது அவன்தான் என இன்னொரு தரப்பு கோபம் கொண்டது.சிவராமுக்கான நாளும் குறிக்கப் பட்டது.அதே நேரம் யாரோ ஒரு ஆயுதக் குழுவால் தான் கொல்லப் படலாம் என்பதும் சிவராமுக்கு தெரிந்திருந்தது ஆனால் அது இப்போதைக்கு இல்லை தனது சேவை எல்லோருக்குமே தேவை என்று தனது நண்பர்களிடம் சொல்லவும் தவறவில்லை.தானே அதி புத்திசாலி.சாகசக்காரன்.வீராதி வீரன்.அகாய சூரன் .என்று மற்றவர்களிடம் பெருமை பேசுவது அவனுக்கு பிடிக்கும்.ஆனாலும் ஆபத்து தன்னை நெருங்கி வருவதை உணர்திருந்ததால் அதிகமாகவே குடிக்கத் தொடங்கியிருந்தான்.அப்படி நிறையக் குடித்து விட்டு  ஒரு நள்ளிரவு வீடிற்கு சென்று கொண்டிருக்கும்போது   இலங்கை அரச புலனாய்வு பிரிவினரோடு சேர்ந்த P.L.O.T அமைபினரும் ஒரு வெள்ளை வேனில் அள்ளிப் போட்டு போனார்கள் .

விடுதலைப் புலிகள் ..கருணா குழு ..P.L.O.T ..இலங்கை அரசு என்று அனைவருக்கும் தண்ணி காட்டியபடி தனது ஆய்வுக் கட்டுரைகளால் அனைவரையும் கவர்ந்த சாகசக் காரன் தராகி சிவராம் அடுத்தநாள் அதிகாலை கொழும்பு வீதியோரத்தில் அனைத்தைப் பிணமாக கிடந்தான்.
இப்போ கருணா எங்கே ??
கருணாவை தேட முன்பு வன்னியிலிருந்து புலிகள் எப்படி கருணா அணியை தோற்கடித்தனர் என்று சற்று பார்த்து விடலாம் ..03.03.2004ஆம் திகதி விடுதலைப்புலிகளுடன் இருந்து பிரிந்து செல்வதாக அறிவதைத் தொடர்ந்து, வெருகல் என்று கூறப்படுகின்ற வாகரை பிரதேசத்தின் வடக்கு எல்லை மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்காக அமைந்துள்ள வெருகல் ஆறு மட்டக்களப்பு மாவட்டத்தையும் திருகோணமலை மாவட்டத்தையும் பிரிக்கின்ற ஒரு எல்லையாக இருந்து வந்தது. கருணாவிற்கு ஆதரவான போராளிகள் லெப்டினன் கேணல்.ரெஜி (கருணாவின் மூத்த சகோதரன்) தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் .போராளிகள் வெருகலாற்றுக்கு வடக்காக திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி சொர்ணம் தலைமையிலான சார்ள்ஸ் அன்ரனி படையைச் சேர்ந்த நிலைகொண்டிருந்தனர்.அதே நேரம் கருணா பிரிந்த பின்னர் அவரின் அணியிலிருந்து பிரிந்து வன்னிக்குள் சென்ற கேணல் ரமேஷ் கேணல் பிரபா ஆகியோரோடு 600 க்கும் மேற்பட்ட ஜெயந்தன் படையணியும் தளபதி பானு தலைமையில் தயாராக நின்றிருந்தார்கள் .எந்த நேரமும் இரு தரப்பிற்கும் யுத்தம் வெடிக்கலாம் என்கிற நிலைமை கருணா அணியில் இருக்கும் போராளிகள் நிறைய யுத்த அனுபவங்கள் கொண்ட மூர்க்கமான போராளிகள் எனவே அவர்களுடன் நேரடியாக மோதினால் பலத்த இழப்பு ஏற்படுவதோடு சிலநேரத்தில் தோற்றும் போகலாம் எனவே தந்திரமாக கருணா அணியை தோற்கடிக்க முடிவெடுத்தார் பிரபாகரன் .
J’aimeCommenterPartager

அன்று சிந்திய ரத்தம் ..தொடர் 4..

12:19 PM, Posted by sathiri, No Comment

அன்று சிந்திய ரத்தம் ..தொடர் 4
புதிய தலைமுறை வார இதழுக்காக ..
இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் நடத்திக்கொண்டிருந்தார்.ஏனென்றால் அவரது திட்டப்படி யாரும் எதிர்பார்க்காது வடக்கிலும் கிழக்கிலும் கடத்கரையோரமாக உள்ள இராணுவ கடற்படை முகாம்களை முதலில் கடல்புலிகளை கொண்டு கடல்வழியாக தாக்குவதோடு இறுதிப் போரை தொடக்குவது இதுதான் திட்டம்.பேச்சு வார்த்தை தொடங்கியபோதே கடற்புலிகளை பலப் படுத்த அதற்கென தனியாக வெளி நாடுகளில் நிதி சேகரித்து நோர்வே மற்றும் சுவீடன் நாடுகளில் தங்களால் அனுப்பி கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தை படித்தவர்களைக் கொண்டு முல்லைத்தீவு கடற்பகுதியில் ஒரு தொழிற்சாலையை உருவாக்கியவர்கள் சிறிய அதிவேக தாக்குதல் படகுகள்.வெடிமருந்துகளை நிரப்பி இலகுவாக தாக்குதல் நடத்தும் கரும்புலித்தாக்குதல் படகுகள் மற்றும் நீர்முழ்கி கப்பல்கள் என கட்டியதோடு கடல்புலிகளுக்கும் கடினமான பயிற்ச்சிகள் வழங்கப் பட்டுக் கொண்டிருந்தது .
அதேநேரம் இந்த தாக்குதலுக்காகவே வெளிநாடொன்றில் வாங்கப்பட்ட விசேடமான ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு அவர்கது இரண்டு கப்பலும் முல்லைத்தீவுக் கடலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது .

கப்பல் ஆயதங்கள் வந்திறங்கியதும் சண்டை தொடங்கிவிடும் எனவே ஆயுதக் கப்பல்களின் வருகைக்காக கடற்புலிகள் காத்திருந்தார்கள் அந்தக் கப்பலோடு தொலைதொடர்பில் இருந்த நபருக்கு திடிரென தொடர்புகள் விட்டுப் போனது.ஆயுதக் கப்பல்களிட்கு என்ன நடந்தது ..
சர்வதேசக் கடலில் திடிரென தோன்றிய இரண்டு யுத்த விமானங்கள் ஆயுதங்களை ஏற்றியபடி முல்லைத்தீவுக் கடலில் நுழைந்து கொண்டிருந்த இரண்டு கப்பல்கள் மீதும் குண்டுகளைப் பொழிந்தன ஒரு கப்பல் உடனே வெடித்துச் சிதறிவிட இரண்டாவது கப்பல் தாக்குதலில் இருந்து தப்பி மீண்டும் சர்வதேசக் கடலுக்குள் சென்று மறைந்து விட்டது
..கப்பலில் ஆயுதங்கள் வந்த விடயம் எப்படி இலங்கை அரசுக்கு தெரிய வந்தது யார் தகவல் கொடுத்தது..தாக்குதலை நடத்தியது இலங்கை விமானப்படையா ...இந்தியாவா ...இப்படி பல கேள்விகளோடு புலிகளின் தலைமை தலையை சொறிந்து யோசித்துக்கொண்டிருக்கும் போதே பேச்சு வார்த்தைக்கு தலைமை தங்கிக் கொண்டிருந்த அன்டன் பாலசிங்கத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அழைத்தவர் ஒரு அமெரிக்க அதிகாரி போனை காதில் வைத்த அன்டன் பலசிங்கத்திடம் " சமாதன காலத்தில் எதற்காக ஆயுதம் வாங்குகிறீர்கள் ..உங்கள் போக்கு எங்களுக்கு நம்ம்பிக்கை கொடுக்கவில்லை.சமாதானத்தில் உண்மையோடும் நேர்மையோடும் இருங்கள்.அதை குழப்பி சண்டையை தொடங்கினால் அதுக்கான விளைவுகள் மோசமானதாக இருப்பதோடு அதன் முழுப் பொறுப்பளிகளும் நீங்களே" ..என்று கடுமையான குரலில் சொல்லி விட்டு பதில் எதையும் எதிர் பாராமல் போனை வைத்து விட்டார் .

தாய் லாந்தில் தங்கியிருந்த அன்டன் பலசிங்கத்திற்கு எதுவுமே புரியவில்லை பிரபாகரனுடன் தொடர்பை ஏற்படுத்திய போதுதான் விபரங்கள் புரிந்தது.எந்த தாக்குதலையும் இப்போ செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டார் .
ஆயுதங்கள் வராமல் போனதாலும் அமெரிக்காவின் அழுத்தத் தாலும் அப்போதைக்கு தாக்குதல் எதுவும் நடத்தாமல் பிற்போடப்பட்டது .ஆனால் ஆயுதக் கப்பல் வருகிற தகவல் யார் கொடுத்தது எப்படி பெற்றார்கள் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்கிற விபரங்களை பின்னர் பார்ப்போம் .அதற்கிடையில் மெல்லப் புகைந்து கொண்டிருந்த கருணா விவகாரம் பெரிதாக வெடித்து விட்டிருந்தது.கொஞ்சம் முரண்டு பிடித்துக் கொண்டிருந்த கருணாவை சாந்தப் படுத்துவதற்காக பேச்சு வார்த்தை குழுவில் கருணாவையும் பிரபாகரன் அனுப்பி வைத்திருந்தார்.அப்போ தாய்லாந்தில் நடந்த பேச்சு வார்த்தையின் போது சர்வதேச நாடுகள் புலிகளின் பிரதிநிதிகளிடம் தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு கோரிக்கையையும் நாங்கள் பரிசீலிக்கத் தயார் என்று சொன்னதும் அன்டன் பாலசிங்கம் அவர்கள் சிறிது யோசித்து விட்டு நாங்கள் சமஸ்டி முறையிலான தீர்வுக்கு உடன்படுகிறோம் ஆனால் அதுக்கான சம்மதத்தினை தலைமையிடம் ஆலோசித்து சொல்வதாக சொன்னதும் உடனே குறிக்கிட்ட கருணா .நாங்கள் பேச்சுவார்த்தை மேசையில் முடிவெடுக்கும் அதிகாரத்தோடுதான் இங்கு வந்திருக்கிறோம்.
தலைமை அதுக்கான அதிகாரத்தை தந்திருக்கிறது சமஸ்டி முறையிலான தீர்வை பரிசீலிக்கிறோம் என்று கையெழுத்துப் போடுங்கள் என்று அன்டன் பாலசிங்கத்தை ஊக்குவித்து கையெழுத்து போட வைத்துவிட்டார் .

தான் என்ன செய்தாலும் சொன்னாலும் பிரபாகரன் மறு பேச்சு பேசாமல் ஒத்துக் கொள்வார் என்கிற அதீத நம்பிக்கையில் கருணா அப்படி செய்து விட்டார் .ஆனால் அந்த சுற்று பேச்சு வார்த்தை முடிந்ததுமே வன்னிக்கு சென்ற கருணாவிற்கும் அன்டன் பாலசிங்கத்திற்கும் யாரைக்கேட்டு தமிழீழக் கோரிக்கையை கை விட்டு விட்டு சமஸ்டிக்கு கையெழுத்துப் போட்டீர்கள் என்று பிரபாகரன் கோபமாக திட்டித் தீர்த்தது மட்டுமல்லாது பேச்சு வரத்தைக் குழுவிலிருந்து அன்டன் பாலசிங்கமும் கருணாவும் அடுத்தடுத்த பேச்சு வார்த்தை நிகழ்வுகளில் இருந்து வெளியேற்றப் பட்டனர்.பேச்சு வார்த்தை குழுவுக்கு தமிழ்ச்செல்வன் பொறுப்பாக போடப்பட்டார் . அதுவரை பிரபாகரனின் வலது கரமாக எல்லைகளற்ற அதிகாரத்தோடு வலம் வந்த கருணா மீது பெறாமை கொண்டிருந்த புலிகளின் உயர்மட்ட தளபதிகள் பலர் கருணாவே சதிசெய்து கையெழுத்து போட வைத்து விட்டதாகவும் அதனால் தலைமைக்கு துரோகம் செய்துவிட்டதாக பகிரங்கமாக குற்ற சாட்டுகளை வைத்ததும் கருணாவை வெறுப்பேத்தி விட்டிருந்தது .
.அன்டன் பாலசிங்கம் வேதனையோடு லண்டன் சென்றுவிட பெரும் சீற்றத்தோடு கருணா மட்டக்கிளபிற்கு திரும்பியிருந்தான்.பல தளபதிகள் முன்னிலையில் பிரபாகரன் திட்டியது பெரும் அவமானமாக கருதியவன் அடுத்தது என்ன செய்யலாம் என்று தவித்துக்கொண்டிருக்கும் போதே அடுத்து நடக்கப் போகும் விபரீதக் காட்சிகளையும் இரத்தக் களரிகளையும் அரங்கேற்றப் போகும் சகுனி கருணாவை சந்திக்கிறான் ..

யார் அந்த சகுனி ...கருணாவின் பிளவையும் புலிகளின் அழிவையும் யார் எழுதினாலும் அதில் தராகி சிவராம் என்கிற பெயரை தவிர்த்து விட்டு எழுத முடியாது.இங்கு நான் அவரை சகுனி என்கிற அடைமொழியோடு அழைத்தாலும் .சிறந்த பத்திரிகையாளர் .இராணுவ ஆய்வாளர் .பத்தி எழுத்தாளர் .புத்திஜீவி .மேற்குலக இந்திய மற்றும் இலங்கை அரச மட்டத்திலும் உளவமைப் புகளோடும் தொடர்புகளை கொண்டவர் .இறுதியாய் கொல்லப் பட்ட பின்னர் மாமனிதர் .இப்படி பல முகங்கள் அவருக்குண்டு அதே நேரம் ஈழத்தில் தோன்றிய முக்கிய ஆயுதப் போராட்ட குழுக்களான P.L.O.T தமிழீழ மக்கள் விடுதலை கழகம் .L.T.T.E.விடுதலைப் புலிகள் இரண்டையுமே அதன் போராட்டப் பாதையிலிருந்தும் விலகவைத்து அழித்தொழித்து முடித்ததில் தராகி சிவராமின் பங்கு முக்கியமானது.
எனவே சிவராம் என்கிற மனிதரைப் பற்றி சுருக்கமாக பார்த்துவிட்டு அடுத்து நகரலாம்.கிழக்கு மாகாணத்தின் மட்டக்கிளப்பு நகரில் பெரும் வசதி படைத்த குடும்பப் பின்னணியை கொண்டவர். தர்மரத்தினம் சிவராம் என்பதுதான் இவரது பெயர் .பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தவர் 83 ம் ஆண்டு இலங்கையில் நடந்த யூலை கலவரத்தின் பின்னர் படிப்பை நிறுத்திவிட்டு P.L.O.T அமைப்பில் இணைத்து கொண்டார்.அவரது புத்திசாலித் தனம் ஆங்கிலப் புலமை என்பன P.L.O.T தலைவர் உமா மகேஸ்வரனை கவர்ந்து கொள்ளவே தலைமையோடு நெருக்கமானார் .பின்னர் அந்த அமைப்பிற்குள் ஏற்பட்ட குழப்பங்கள் அதனால் நடந்த உட்படுகொலைகள் அனைத்திற்கும் தலைமைக்கு உறுதுணையாய் நின்றதோடு பல படுகொலைகளை அவரே செய்தார் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது .புலிகளின் பல தாக்குதல்களில் உயிர் தப்பியவர் பின்னர் புலிகள் அமைப்பிற்கு சார்பு நிலையெடுத்து வேலைகள் செய்யத் தொடங்கியது மட்டுமல்லாமல் புலிகளுக்கு சார்பான அரசியல் இராணுவக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதியதோடு புலிகளின் தலைமையோடும் தொடர்புகளை கொண்ட ஒரவராகராகவும் .அதே நேரம் இயல்பாகவே கிழக்கு மாகாணத்தின் மேல் அவர் கொண்ட பற்றால் கிழக்கு பிரதேச வாதி யாகவும் மாறியிருந்ததோடு மட்டுமல்லாமல் அதனை அவர் பகிரங்கமாக எழுதவும் பேசவும் தயங்கியதில்லை .

பேச்சுவார்த்தை மேசையிலிருந்து அன்டன் பாலசிங்கம் புலிகளால் அகற்றப்பட்ட பின்னர் அந்த இடம் தங்களுக்கு கிடைக்குமென நம்பிக்கையோடு இருந்த ஒரு சிலரில் சிவராமும் ஒருவர்.அந்த இடம் தமிழ்செல்வனுக்கு போய் விடவே தமிழ்ச்செல்வன் வகித்த அரசியல் பொறுப்பாவது கிடைக்குமென எதிர்பார்த்தார் அதுவும் கிடைக்கவில்லை.சிவராம் விடயத்தில் புலிகளின் தலைமை தங்கள் தேவைகளுக்கு பாவிப்பதற்காக நம்ப நடந்ததே தவிர நம்பி நடக்கவில்லை .இதனால் லேசான வருத்தத்தில் இருந்தவருக்கு கருணாவின் விவகாரம் காதில் தேனாய் வந்து பாயவே உள்ளுக்குள் உறங்கிக்கொண்டிருந்த கிழக்கு பிரதேச வாதம் உறுமத் தொடங்க வன்னியோடு கருணாவை பிரித்தெடுத்து .மீன்பாடும் தேன்நாடு என பெயரெடுத்த மட்டக்கிளப்பை தனிநாடக்கி. கருணாவை தலைவனாக்கி தானே அதற்கு அரசியல் ஆலோசகர் என்கிற திட்டங்களோடு கருணாவை சந்தித்தான் ..

அன்று சிந்திய ரத்தம் தொடர் ..பாகம் 3

12:08 PM, Posted by sathiri, No Comment

புதிய தலைமுறை வார இதழில்
அன்று சிந்திய ரத்தம் தொடர் ..பாகம் 3
வன்னியோடு தரைவளிப்பாதையால் கிழக்கை இணைத்து வெற்றிக்கொடியோடு திரும்புவோம் என்கிற பெரும் கனவுகளோடும் பத்தாயிரம் போராளிகளோடும் உற்சாகமாக மட்டக்கிளப்பிலிருந்து கடினமான காட்டுப் பாதையால் வன்னிக்குள் நுழைந்த கருணா அங்கு பெரும் வெற்றிகளை குவித்து விட்டு தன்னுடைய 2000 பேர் கொண்ட ஜெயந்தன் படையணி யையும் வன்னியில் விட்டு விட்டு மீதமாக உயிரோடிருந்த வெறும் 600 பேரோடு மீண்டும் அதே காட்டுப் பாதையால் மனதில் ஒரு வெறுமையோடு கிழக்கிற்கு திரும்பிக்கொண்டிருந்தான் .அது மட்டுமல்ல மீண்டும் பத்தாயிரம் பேரை கொண்டுவா என்கிற தலைவனின் கட்டளை காதில் மீண்டும் மீண்டும் ஒலிக்க தொடங்குகிறது ..இந்தக்கட்டளை தனக்கு கிடைக்கும் என்று தெரிந்துதான் முதலில் தலைவர் அனைவரையும் அழைத்து ஆட்சேர்ப்பு பற்றி கூறும்போது அவன் மட்டும் குனிந்து நிலத்தில் விரிக்கப்பட்டிருந்த வரைபடத்தை பார்த்துக்கொண்டிருந்தான்.விரக்திக்கு தள்ளப் பட்டவனின் மனது முடியாது என்று முடிவெடுக்கத் தொடங்குகிறது..
மட்டக்கிளப்பிற்கு திரும்பிய கருணா ஆட்சேர்ப்பில் ஆர்வம் கட்டவில்லை ஏனெனில் அங்கு பதினைந்து வயதுக்கு மேல் அனேகமாக எல்லாரையுமே தேடித் தேடி பிடித்து பயிற்ச்சி கொடுத்து வன்னிக்கு அனுப்பியாகிவிட்டது இன்னும் சில வருடங்கள் போனால்தான் சிறுவர்களை வளரவிட்டு பிடிக்கலாம்.அதவிட சிறுவர்களை படையில் இணைத்த தற்காக சர்வதேச மன்னிப்புச்சபை .சிறுவர் பாதுகாப்பு சபை ..ஐ நா சபை என்று உலகில் உள்ள அணைத்து சபைகளும் கருணாமீது காட்டமான அறிக்கைப் போர் தொடுதுக்கொண்டிருந்தர்கள்.இப்போ பேச்சுவார்த்தை தொடங்கி வெளிநாடுகள் வேறு கண்காணிக்கத் தொடங்கி விட்டதால் கையை சும்மா வைத்துக்கொண்டு நடப்பதை கவனிப்பதே நல்லது என்று முடிவெடுத்திருந்தான்.அதே நேரம் அமேரிக்கா தலைமையில் ஐரோப்பிய நாடுகள் சிலவும் இணைந்து இலங்கையரசோடும் புலிகளோடும் பேசப்படவேண்டிய விடயங்களின் திட்ட வரைபை உருவாக்கியிருந்தார்கள்.

பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட்டால்
இலங்கைத் தீவின் முன்னேற்றத்திற்கு உதவுவதாக இந்தியா உட்பட உலகின் முக்கியமான 33 நாடுகள் ஆதரவளிப்பதாக கையொப்பம் இருகிறார்கள். புலிகள் இலங்கையரசு பேச்சு வார்த்தைகள் தொடங்கும்போதே இந்த நாடுகள் அமெரிக்கா தலைமையில் இரண்டு திட்டத்தில் உறுதியாக இருந்தார்கள். முதலாவது திட்டம் இலங்கை பிரச்சனையை மேசை பேச்சுவார்தைகள் மூலம் புலிகளின் கைகளில் உள்ள ஆயுதங்களை களைந்து அவர்களை சனநாயக அரசியலில் ஈடுபடுத்தி இலங்கையரசிற்கும் அழுத்தங்களை கொடுத்து இறங்கிவரச் செய்து சுமுகமாக தீர்த்து வைத்தல். இரண்டாவது திட்டம் பேச்சுவார்த்தையை வழைமைபோல புலிகள் குழப்பியடித்தால் என்ன விலை கொடுத்தேனும் அனைத்து நாடுகளும் இணைந்து முழுமையாக அவர்களின் ஆயுதங்களை களைந்தெடுத்து பலவீனமாக்கி அழித்தொழித்து விட்ட பின்னர் பிரச்சனையை தீர்த்தல்.இந்த இரண்டு வரைபுகளையும் திட்மிட்டு விட்டே பேச்சுவார்த்தைகளிற்கு அனுசரணை வழங்கத் தொடங்கியிருந்தார்கள்.
நோர்வே தலைமையில் பேச்சு வார்த்தைகள் தொடங்கி விட்டிருந்த அதே வேளை புலிகள் அமைப்பில் கருணாவுக்கும் நிதிப் பொறுப்பாளர் தழிழேந்தியுடனும் பிரச்னை தொடங்கி விட்டிருந்தது .

காரணம் கருணா அவரிடம் வைத்த கோரிக்கைதான் அது என்னவெனில் யாழ்ப்பாணத்தில் வன்னியில் உள்ளது போன்று கிழக்கில் ஒரு மாவீரர் துயிலும் இல்லம் அமைக்க பணம் வேண்டும் என்பதே....புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தில் முதலாவது பிரமாண்டமான மாவீரர் துயிலும் இல்லத்தை கட்டியிருந்தார்கள் அவர்கள் யாழை விட்டு வெளியெறிய பின்னர் அது இலங்கை படையினரால் இடித்து அழிக்கப்பட்டிருந்தது சமாதான காலத்தில் அந்த மாவீர் துயிலும் இல்லத்தை புலிகள் மீளவும் நவீன முறையுடன் சிறப்பாக பளிங்கு கற்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரித்து பிரமாண்டமக கட்டியிருந்தார்கள். அதே பேல வன்னியிலும் மாவீரர் துயிலும் இல்லங்கள் கட்டப் பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் கிழக்கில் அப்படியொரு மாவீரர் துயிலும் இல்லம் இருக்கவில்லை கிழக்கில் மாவீரர் துயிலும் இல்லங்கள் மாவீரர்கள் விதைக்கப்பட்டு அந்த இடத்தில் மண் குவியலின் மீது நடப்பட்ட தடியில் ஒரு பலகையில் அல்லது கடதாசி மட்டடையில் மாவீரரின் பெயர் எழுதப் பட்டிருக்கும். ஒரே இயக்கத்தில் ஒரேகொள்கைக்காக உயிரை விட்ட போரளி ஒருவனிற்கு பளிங்குக் கல்லறை.. இன்னொருவனிற்கு வெறும் மண்குவியல்.
இங்கு பணம்தான் தீர்மானித்தது.இதனை புலிகளின் பிரச்சார வீடியோ பத்திரிகையான ஒளி வீச்சு வீடியோவை போட்டு பார்த்தாலே தெரியும். எனவே கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை போல கிழக்கிலும் ஒன்றை நிருமானிக்க நினைத்து கருணா புலிகளின் நிதி பொறுப்பாளரிடம் நிதி ஒதுக்கும்படி கேட்டிருந்தபோது அதனை மறுத்த நிதி பொறுப்பாளர் கிழக்கில் வர்த்தகர்களிடம் நிதி சேகரித்து கருணாவே செய்யட்டும் என சொல்லி விடுகிறார்.

கிழக்கில் எண்பது வீதம் வர்த்தகர்கள் முஸ்லிம்கள்தான் சண்டைக் காலத்தில் அவர்களிடம் பணம் கேட்டால் பயத்திலாவது கொடுத்து விடுவார்கள் ஆனால் சமாதானக் காலத்தில் யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவும் இருக்கின்றபோது பணம் கேட்டால் நேரடியாக வியாபாரிகள் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் கருணாமீதுதான் புகார் கொடுப்பார்கள் எனவே வன்னியிலிருந்துதான் நிதி வேண்டும் என கேட்டதும் ..கிழக்கு மாகாண நிதி விபரங்களை கருணாவின் மனைவியே கையாழ்கிறார் சரியாக கணக்கு காட்டப்படுவதில்லையென்கிற குற்றச்சாட்டை தமிழேந்தி வைக்கிறார்.இங்கு தமிழேந்தி கருணா உரசல் ஆரம்பிக்கின்றது.
இரண்டாவது பொட்டம்மனுடன் ஏற்கனவே இருந்த சிறிய உரசல் வலுக்கிறது அது என்னவெனில் 96 ம் ஆண்டில் இருந்தே புலிகளின் புலனாய்வு பிரிவு பொட்டம்மானிற்கும் கருணாவிற்கும் உரசல்கள் ஆரம்பிக்கத் தொடங்கியிருந்தது. புலிகளின் புலனாய்வு பொறுப்பாளராக பொட்டம்மான் இருந்தாலும் வடக்கிற்கு வெளியே கிழக்கிலாகட்டும் தெற்கிலாகட்டும் நடத்தப்பட்ட அனைத்து தாக்குதல்களையும் பெரும்பாலும் ஒருங்கிணைத்து வழி நடத்தியவர்கள் மட்டுமல்லாது தாக்குதல் நடத்திய தற்கொலை போராளிகளும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். அதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு முதலாவது தெற்கில் நடந்த தாக்குதல்கள் அனைத்திற்குமே அதற்கான வழங்கல்கள் கிழக்கு மட்டக்கிளப்பில் இருந்து கண்டிக்கு கொண்டு போய் அங்கிருந்து கொழும்பிற்குள் கொண்டுபோய் சேர்ப்பார்கள் அது மட்டுமல்லாது தாக்குதல் போராளிகளின் பாதையும் அதுதான் இரண்டாவது கிழக்கு மகாணத்தை சேர்ந்தவர்கள் தான் சிங்களத்தை சரளமாக கதைக்கத் தெரிந்தவர்களாக இருந்தார்கள்.

தெற்கில் தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப் பட்ட அனைவருமே முஸ்லிம்களின் அடையாள அட்டையுடனும் அவர்கள் அடையாளங்களுடனுமே அனுப்பப் பட்டிருந்தார்கள் முஸ்லிம்கள்போல வட்டார வழக்கில் இயற்கையாக தமிழை பேசவும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களாலேயே முடியும் என்பதும் முக்கிய காரணம். எனவேதான் வடக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நடந்த அனைத்து தாக்குதல்களினதும் வலைப்பின்னல் தொர்புகள் வழிநடத்தல்கள் அனைத்துமே கருணாவின் பங்கு முக்கியமானதாக இருந்தது. பிரபாகரன் கோடு போட்டால் கருணா றோட்டு போடுபவராக இருந்து பிரபாகரனிடம் நல்லபெயர் வாங்கியவர் அதனால் தெற்கில் நடந்த தாக்குதல்கள் அனைத்திலும் கருணாவின் பங்கு பெரியதாகவே இருந்தது. இது பொட்டம்மானிற்கு கொஞ்சம் இடைஞ்சலாகவே இருந்தது எனவே கருணா தமிழேந்தி பிரச்னை தொடங்கியதும் கருணாவை கண்காணிக்க தனியாக சில புலனாய்வு போராளிகளை அவரின் அணியில் சேர்த்திருந்தார்.இதனை கண்டு பிடித்த கருணா பொட்டம்மானின் உளவாளிகள் இருவரை கொலை செய்து விடுகிறார் .ஒரு கட்டத்தில் பொட்டம்மானே தனது சிறிய அணியொன்றோடு மட்டக்கிளப்பிற்கு நேரடியாகப்போய் கருணாவை கைது செய்யும் முயற்சியையும் மேற்கொண்டிருந்தார் ஆனால் பொட்டம்மான் அங்கு போனதுமே கருணா பாதுகாப்பு என்கிற போர்வையில் பொட்டம்மானை சுற்றி தனது ஆட்களை பாதுகாப்பாக போட்டு அவரை ஒரு கைதியாக்கி வரவேற்று வழியனுப்பி வைத்திருந்தார்.பொட்டம்மானின் இந்த செயல் கருணாவை மேலும் எரிசலூட்டி யிருந்தது .

இவையெல்லாம் பிரபாகரன் காதுக்கு போய்க்கொண்டிருந்தது.சண்டை இல்லாமல் சும்மா இருந்தாலே இது போன்ற பிரச்சனைகள் தான் வரும் எனவே விரைவில் இந்த உள்வீட்டு பிரச்சனைகளுக்கெல்லாம் முடிவு கட்டுவதோடு இறுதி யுத்தத்தினையும் தொடங்கி விடுவதென முடிவெடுத்திருந்தார்பிரபாகரன் ... தொடரும்

.. அன்று சிந்திய ரத்தம் தொடர் ...2

12:25 PM, Posted by sathiri, No Comment

புதிய தலைமுறை வார இதழில்
அன்று சிந்திய ரத்தம் தொடர் ...2

கிழக்கு நோக்கிய படையெடுப்பை கைவிட்டு வடக்கு நோக்கி படையெடுக்கும் முடிவை தனது கிழக்கு தளபதிகள் பலர் விரும்பவில்லைஎன்பதை அவர்களது முகத்தைப் பார்த்தே கணித்துக்கொண்ட பிரபாகரன் விருப்பமில்லாதவர்களை சமர்க்களம் அனுப்பினால் வெற்றிச் செய்திகள் வராது என்பதால்அவர்கள் தங்கள் இடங்களுக்கு திரும்பி காவலரண்களை பலப்படுத்தி இராணுவம் முன்னேறது தடுத்தாலே போதும் தேவை ஏற்பட்டால் அழைக்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டு வடக்கு நோக்கிய படையெடுப்புக்கு ஆதரவு தெரிவித்த தளபதிகளான தீபன் மற்றும் துர்க்காவின் தலைமையில் அடுத்த கட்ட நவடிக்கைக்கு தயாரானார் .

ஆட்பற்றாக்குறை காரணமாக யாழ்ப்பாணம் நோக்கிய படையெடுப்புக்கு ஆண்களைவிட பெருமளவு பெண்போராளிகளே களமிறக்கப்பட்டிருந்தனர்.
ஈழப் போர் நான்கு எனப் பெயரிடப்பட்டு அவசர அவசமாக இரண்டு முனைகள் ஊடாக புலிகளின் படையணிகள் இறக்கப் பட்டன .யாழ் கண்டி வீதி ஊடாக முன்னேறியிருந்த புலிகள் அணியினர் சாவகச்சேரி நகரை தாண்டி கோப்பாய் பாலத்தையும் தாண்டி செம்மணி பகுதிவரை முன்னேறியிருந்தார்கள். அதே நேரம் யாழ் வடமராச்சி பக்கமாக முன்னேறிய புலிகளின் படையணி நாகர் கேயில் பகுதியில் பலமாக அமைக்கப்பட்டிருந்த இலங்கை இராணுவத்தின் சில காவலரண்களை மட்டுமே அழிக்க முடிந்ததோடு முன்னேற முடியாது சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள்.இதற்கிடையில் யாழ் குடாவில் இருந்த இராணுவத்தினர் புலிகள் யாழையும் பிடித்து விடுவார்கள் என்கிற பயத்திலேயே இருந்தார்கள் .அதே நேரம் இலங்கை இராணுவத்தினர் ஒரு துப்பாக்கி ரவையை கூட எடுத்துச் சொல்ல அனுமதிக்க முடியாது சரணடைபவர்கள் பாதுகாப்பாக அவர்கள் வீடுகளிற்கு திரும்ப புலிகள் உதவுவார்கள் என்கிற் செய்தியும் பிரபாகரனை மேற்கோள் காட்டி உள்ளூர் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.யாழ் குடாவில் இருந்த சுமார் 50 ஆயிரம் வரையான படையினர் புலிகளிடம் சரணடைந்து தலை குனிந்து ஏ9 பாதை வழியாக வெளியேறி வருவதை கொழும்பில் இருந்த தளபதிகளும் அரசாங்கமும் விரும்பியிருக்கவில்லை.

அப்படியொரு நிலை வந்தால் யாழில் உள்ள படையினரை பத்திரமாக கடல்வழியாக வெளியேற்ற இந்தியாவின் உதவியினை நாடியிருந்தார்கள். இந்தியாவில் ஆட்சியிலிருந்த பாரதிய ஜனதா கூட்டணி அரசு அதற்கான ஏற்பாடுகள் செய்து இலங்கை படையினரை கப்பல் மூலம் வெளியேற்றி கேரளா பகுதிக்கு கொண்டு சென்று தங்க வைக் முடியும் என்கிற செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தநேரத்தில்தான். புலிகள் நாகர் கோயில் பக்கமாக உள்ள இலங்கை இராணுவத்தின் காவலரண்களை தாண்டி முன்னேற முடியாது நிற்பதையும் செம்மணிவரை முன்னேறியிருந்த புலிகளின் மற்றைய அணி மீண்டும் கோப்பாய் வெளியை தாண்டி சாவகச்சேரிக்கு பின் தள்ளப் பட்டிருப்பதையும் இலங்கை இராணுவ தலைமை அவதானித்து.அரச அதிபர் சந்திரிக்கா கதிரையில் நிமிர்ந்து உட்கார்ந்தார். அவர் முன்னால் நெளிந்து வளைந்து கொண்டிருந்த முப்படைத் தளபதிகளும் விறைப்பாய் மிடுக்கோடு நின்றார்கள்.அவர்களுக்கு புதியதொரு நம்பிக்கை பிறந்தது.
அதே நேரம் திடீரென புலிகளும் 24.12.2000 ம் ஆண்டு ஒரு தலைப் பட்சமாக யுத்த நிறுத்தம் ஒன்றினை அறிவித்தார்கள். புலிகள் யாழை கைப்பற்றுவதற்கான தங்கள் முழுப் பலத்தையையும் பிரயோகித்து பார்த்ததோடு யுத்தத்தால் களைத்துப் போயிருக்கிறார்கள் என்பதை இலங்கையரசு உணர்ந்தது .அவசரமாக திட்டங்கள் தீட்டப்பட்டது கழற்றிஎடுத்த கனரக பீரங்கிகள் எல்லாம் மீண்டும் பொருத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஆயுதங்கள் குவிக்கப் பட்டது .

 தங்கள் முழு பலத்தையும் வளத்தையும் ஒன்று திரட்டி 25.04.2001 அன்று அதிகாலை `ஹீனிகல(தீச்சுவாலை)என்கிற நடவடிக்கையை இலங்கை ராணுவம் ஆரம்பித்தார்கள் புலிகள் பின் தள்ளப் பட்டால் தொடர்ந்து சண்டையிட்டு இழந்த ஆனையிறவையும் மீட்டுவிடுவது இலங்கையரசின் திட்டமாக இருந்தது.மூன்று நாட்கள் நடந்த மோசமான தொடர் சண்டையில் புலிகளின் தரப்பில் சுமார் 350 பேர்வரை கொல்லப் பட்டும் ஏராளமானவார்கள் காயமடைந்து போகவும் மீண்டும் அவர்கள் சில கிலோமீற்றர்கள் முகமாலை வரை பின்னிற்கு தள்ளப்பட்டு அங்கு தங்கள் காவல்நிலைகளை புலிகள் பலப்படுத்தியிருந்தார்கள்.இலங்கையரசு நினைத்ததைப்போல ஆனையிறவை மீண்டும் கைப்பற்ற முடிந்திருக்காவிட்டாலும் யாழ்ப்பாணத்தினை தக்கவைத்ததில் நிம்மதியடைந்திருந்தனர்.அதே நேரம் இலங்கை இராணுவமும் களைத்துப் போயிருந்ததால் ஒரு யுத்த நிறுத்தத் திற்க்கு உடன்பட்டனர் .

பிரபாகரனின் திட்டத்தின் படி யாழ் நோக்கியா படையெடுப்பு தோல்வியில் முடிந்து போக கிடைத்த அவகாசத்தில் அவசரமாக அடுத்த திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கினார்கள் .அடுத்த திட்டம் என்னவெனில் ஆட்பற்றாக்குறையை போக்குவதற்கு தங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த அனைவரிற்கும் ஆயுதப்பயிற்சி கொடுப்பது .அதாவது கட்டாய ஆட்சேர்ப்பு நடத்துவது.வீட்டுக்கு ஒருவர் கட்டாயம் புலிகளில் இனைய வேண்டும் என்கிற பிரசாரத்தை அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கடுமையாக்கினார் .எப்படியும் பத்தாயிரம் பேரையாவது இணைப்பது என்பது அவரது இலக்கு .அதற்கு உறுதுணையாக அரசியல் மகளிர் துறைப்பொறுப்பாளர் தமிழினியும் வேகமாக இயங்கினார் .பதினைந்து வயதிற்க்கு மேற்பட்டவர்கள் அனைவரும் அழைக்கப் பட்டனர் மறுத்தவர்கள் பலவந்தமாக பிடித்துச் செல்லப் பட்டனர் .திருமணமானவர்களை புலிகள் படையில் சேர்க்காது விட்டிருந்ததால் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பதினெட்டு வயதிற்கு முன்னர் பால்ய திருமணங்களை நடத்த தொடங்கியிருந்தனர்.அதனால் புலிகள் புதிதாக திருமனமானவர்களையும் தேடித் தேடிப்பிடித்து பயிற்ச்சி முகாமுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்

.இந்தக் கால கட்டத்தில் தான் உலக ஒழுங்கையே மாற்றியமைத்த அமெரிக்கா இரட்டைக் கோபுரத் தாக்குதல் 11.09.2001 நடந்தேறுகின்றது. இதனையடுத்து உலகப் பந்தில் ஒரு அரசு தவிர்ந்த அனைத்து போராட்ட ஆயுதக்குழுக்களுமே பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்து அந்த அமைப்புக்களை பட்டியலிட்டு தடையும் செய்தது அவர்கள் தயாரித்த பட்டியலில் புலிகளின் பெயரையும் இணைத்து விட்டிருந்தார்கள்.இந்தப் பட்டியலை ஜரோப்பிய ஒன்றிமும் நடைமுறைப்படுத்தியிருந்தது. இதனையடுத்து புலிகள் பேச்சுவார்த்தைக்கு தயார் என மீண்டும் அறிவிக்கவே நோர்வே சமாதான பேச்சு வார்த்தைகளிற்கு உதவுவதாக அறிவித்திருந்தாலும். அன்றைய சந்திரிக்கா அரசு அதனை இழுத்தடித்துக்கொண்டிருந்த நேரம் 2001ம் ஆண்டு வருட இறுதியில் நடந்த பொதுத் தேர்தலில் ரணில் வெற்றிபெற்று பிரதமரானதைத் தொடர்ந்து ரணிலும் பிரபாகரனும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.ரணில் ஏற்கனவே மேற்குலகத்திற்கு சார்பானவர் என்பதால் மேற்குலக நாடுகளும் இலங்கை பிரச்சனையை தீர்த்துவிடலாம் என்கிற நம்பிக்கை இருந்தாலும் ஏற்கனவே நடந்த பேச்சு வார்த்தைகளை புலிகளே குழப்பிருந்ததால் அவர்கள் இந்தத் தடைவையும் பேச்சுவார்தைகளை குழப்பாமல் கவனிக்கவும் பேச்சுவார்த்தையை குழப்ப இரு தரப்புமே முயற்சிக்கலாமென்பதால் நோர்வே .சவீடன்.பின்லாந்து.டென்மார்க்.ஜஸ்லாந்து அகிய நாட்டு உறுப்பினர்கள் அடங்கிய யுத்தநிறுத்த கண்காணிப்பு குழு ஒன்றையும் அமைத்தார்கள்.

இலங்கையில் மீண்டுமொரு சமாதான காலம் துப்பாக்கி சத்தம் இல்லாதுபோய் புலிகளும் ஆயுதமின்றி அரசியல் பிரிவினர் யாழ்பாணத்திற்குள் பிரவேசித்திருந்தார்கள்.அதே நேரம் புலிகளின் புலனாய்வு பிஸ்ரல் குழுவினரும் யாழிற்குள் நுளைந்து இராணுவத்துடன் இணைந்து இயங்கியவர்களை போட்டுத்தள்ளத் தொடங்கியிருந்தார்கள் இவை யுத்தமீறல்களாக பதிவாகிக் கொண்டிருந்தது.பேச்சு வார்த்தைகளுக்கான ஏற்பாடுகளையும் வரைபுகளையும் மேற்குலகம் ஏற்பாடு செய்துகொண்டிருந்தது .
.அப்போது தான் கருணாவை மட்டும் தனியாக சந்திக்கும்படி பிரபாகரனிடமிருந்து அழைப்பு கிடைக்கிறது .இது கருணாவும் எதிர்பார்த்த அழைப்புத்தான் .பிரபாகரன் முன்னால் போய் நின்ற கருணாவிடம் கிழக்கு மாகாணம் நோக்கிய படையெடுப்பு ஆலோசனையை கேட்காமல் வடக்கு நோக்கி நகர்ந்தது தவறுதான். பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டது.இந்த பேச்சு வார்த்தையில் வழக்கம் போலவே எனக்கு நம்பிக்கையில்லை இந்தக் காலத்தை நாம் பயன்படுத்தி மீண்டும் எம்மை பலப் படுத்தவேண்டும்.அடுத்ததாக ஒரு புதிய தாக்குதல் திட்டம் என்னிடம் உள்ளது.

அதுதான் எமது இறுதித் தாக்குதலாக இருக்கும் .அதோடு வடக்கு கிழக்கு முழுவதும் எமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் தமிழீழப் பிரகடனம் செய்து விடலாம் அதன்பின்னர் சர்வதேசம் எம்மை அங்கீகரிப்பதை தவிர வேறு வழி இல்லை அவகளுக்குஓயாத அலைகள் மூன்றிட்கு நீகொடுததைப் போலவே இந்த இறுதி தாக்குதல் திட்டத்திற்கு மீண்டும் உன்னுடைய பெரும் ஆதரவும் உதவியும் தேவை என்று சொல்லி நிறுத்தி கருணாவை பார்த்தார்.
எப்போதுமே பிரபாகனுக்கு என்ன தேவை என்பதை அவர் கேட்பதற்க்கு முன்னரே உணர்த்து கொள்ளும் கருணாவிற்கு இந்தத் தடவையும் என்ன கேட்கப் போகிறார் என்பது புரிந்திருந்தது ஆனாலும் வழமைக்கு மாறாக புரியாதது போலவே மௌனமாக நிற்கவே கருணாவின் மௌனத்தை தெரிந்து கொண்ட பிரபாகரன் தன் குரலை உயர்த்தி "இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து பயிற்ச்சி கொடுத்து மீண்டும் வன்னிக்குள் அழைத்து வா .அதே நேரம் இங்குள்ள கிழக்கு மாகாணப் போராளிகளுக்கு நான் ஒரு கூட்டம் வைக்க வேண்டும் அதற்கான ஏற்பாட்டையும் செய்து முடி .நீ போகலாம் "...என்று கட்டளையிட்டார் .
கருணாவும் தலையாட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிப் போய் தலைவர் சொன்னது போல ஒரு கூட்டத்தை ஒழுங்கு பண்ணினான்.அங்கு பேசிய தலைவர் "விரைவில் மீண்டும் யுத்தம் தொடங்கும்.பேச்சுவார்த்தை என்பது வெறும் கண்துடைப்புத்தான் எனவே இறுதி யுத்ததிற்கு தயாராக இருங்கள் அதே நேரம் புதியவர்களை இணைக்க கருணா அம்மானுக்கு உறுதுணையாக இருங்கள் .மீண்டும் அடுத்த யுத்தகளத்தில் சந்திப்போம் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் " என்று பேசி முடித்தார் .ஓயாத அலை மூன்று வெற்றிக்குப் பின்னர் தலைவர் போராளிகளிடம் நேரடியாகப் பேசிய முதல் கூட்டம் அதுதான்.இங்கு தலைவர் பேசியதை கருணாவின் உதவியாளர் ஒருவர் வீடியோ பதிவு செய்துகொண்டிருந்தார் அந்த வீடியோ பதிவும் பின்னர் பேச்சு வார்த்தை மேசையில் புலிகளுக்கு நெருக்கடியை கொடுத்தது.

அன்று சிந்திய ரத்தம் ..

12:58 PM, Posted by sathiri, No Comment

புதிய தலைமுறை வார இதழில் ..புதிய தொடர்
அன்று சிந்திய ரத்தம் ...
30ம் திகதி ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு
புதுக்குடியிருப்பு பகுதியில் அமைத்திருந்த புலிகளின் இரகசிய முகாம் ஒன்றில் நிலத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த பாரிய இலங்கையின் வரை படத்தில் தமிழீழப் பகுதிகள் சிகப்பு வர்ணத்தால் துல்லியமாக எல்லைக்கோடு பிரிக்கப் பட்டிருந்தது.வரைபடத்தின் சிங்களப் பகுதிகள் மீது வரிப்புலிச் சீருடையில் கைகளை கட்டியபடி கம்பீரமாக புன்னகைத்தபடி பிரபாகரன் நின்றிருக்க அவர் அருகே அதே சீருடையில் பொட்டம்மான் .தனித் தனியாகவும் ஒரே நேரத்திலும் பல அலைவரிசைகளில் பேசக் கூடிய அங்கிருந்த அதி சக்தி வாய்ந்த வோக்கி டாக்கியில் சங்கேத மொழியில் இடை விடாது தொடர்ந்து வரும் செய்திகளை தொகுத்து அதனை இயக்குபவர் சொல்லிக்கொண்டிருக்க பிரபாகரனின் மெய்ப்பாது காவலர் ஒருவர் உடனுக்குடன் அவரது காலடியில் கிடக்கும் வரை படத்தில்புலிகள் முன்னேறும் இடங்களை அம்புக்குறிகள் இட்டபடி விளக்கிக்கொண்டிருந்தார்.
மார்ச் மாதம் 26 ந் திகதி ஈழத்தின் குடாரப்பு பகுதியில் கடற்புலிகளால் தரையிறக்கப் பட்ட 1200 போராளிகளோடு பால்ராஜ் தலைமையில் தொடங்கப் பட்டதுதான் புலிகளின் ஓயாத அலைகள் 3 தாக்குதல் நடவடிக்கை.உள்ளே சுமார் பத்தாயிரம் ஸ்ரீலங்கா இராணுவத்தையும் வெளியே தொடர்ச்சியாக 55 ஆயிரம் ஸ்ரீலங்கா இராணுவத்தையும் கொண்டிருந்த ஆனையிறவுபடைத்தளம் 35 நாட்கள் தொடர்ச்சியான முற்றுகை தாக்குதலாலும் முற்றுகைக்குள் இருந்த இராணுவத்தினருக்கு உதவிக்கு வந்த படைகளின் மீது நடத்திய ஊடறுப்பு தாக்குதலாலும் ஆனையிறவு படைத்தளம் புலிகளால் கைப்பற்றப் பட்ட பின்னர் உற்சாகத்தோடு நிலப்பரப்புகளை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தபடி நான்கு பக்கமும் தமிழீழத்தின் எல்லைகளை நோக்கி தொடர்ந்து முன்னேறும் செய்திகள் தான் இப்போது வந்து கொண்டிருக்கின்றது .
இடையே கொசுறுத் தகவலாக சிறிலங்காவின் 53ஆம் படையணியின் தளபதியாக விளங்கிய காமினி ஹெட்டியாராச்சி பதவியிலிருந்து விலக்கப்பட்ட செய்தியும் வந்து சேர்க்கிறது .பால்ராஜ்சின் அதிரடி திட்டங்களும்.கருணாவின் துல்லியமான ஊடறுப்பு தாக்குதல்களையும் எதிர் கொள்ள முடியாமல் சிங்களப் படைகள் ஆயுதங்களை எறிந்துவிட்டு ஓட்டம் பிடிக்கத் தொடங்குகிறார்கள் .பலர் தங்கள் இராணுவ சீருடைகளை கழற்றி எறிந்து விட்டு மக்களின் வீடுகளுக்குள் புகுந்து கையில் கிடைத்ததை அணிந்து கொண்டும் சிலர் யட்டியோடு ஓடிய சம்பவங்களும் நடந்தது .புலிகளின் படையணிகள் நான்குபுறமும் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தனர் .இவர்களின் வெற்றிகளை ஒரு கிரிக்கெட் கமேன்றியைப்போல செய்திகளில் கேட்டுக் கொண்டிருந்த வெளிநாட்டுத் தமிழர்கள் கைதட்டி விசிலடித்தும் கேக் வெட்டி பட்டாசு கொளுத்தியும் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.புலிகளின் நிலப்பரப்பு விரிந்துகொண்டிருந்தது.புலிகள் யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றி விடலாம் என்கிற பயம் இலங்கை அரசுக்கு வந்திருந்தது அதனால் யாழ்ப்பாணத்தில் இருந்த பலாலிப் படைத்தளத்தில் இருந்த கன ரக ஆயுதங்கள் பீரங்கிகள் அனைத்தையும் கழற்றி கரை நகர் படைத்தளத்துக்கு மாற்றியிருந்தனர் .

அப்படி புலிகள் யாழ்பானத்தை கைப்பற்றினால் அங்கிருந்த 50 ஆயிரம் படையினரையும் இந்தியா பத்திரமாக மீட்டெடுத்து கேரளா பகுதிக்கு கொண்டு செல்வதென பேச்சு வார்த்தைகளும் இலங்கை இந்திய அரசுகளிடையே நடந்து கொண்டிருந்தது..வரை படத்தில் அம்புக்குறிகளால் புலிகள் முன்னேறிக் கொண்டிருக்கும் இடங்களை கவனித்த பிரபாகரன் . கிழக்கே ஒரு இடத்தில் தமிழீழ எல்லைக்கோட்டையும் தாண்டி அந்த அம்புக்குறிகள் நீண்டுகொண்டே போய்க்கொண்டிருந்தது .அந்தப்பகுதியில் கேணல் சங்கரின் தலைமையிலான சிறிய படையணி ஒன்று பதவியா பகுதியில் தமிழர் பிரதேசங்களையும் தாண்டி சிங்களப் பகுதிக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள் .அந்தப்பகுதி ஸ்ரீலங்கா படையினர் காவல்துறையினர் மட்டுமல்லாது பொது மக்களும் இடங்களை விட்டு ஓடத் தொடங்கியிருந்தனர் .சங்கரின் அணியில் உண்மையில் 50 க்கும் குறைவானவர்களே இருந்தனர்.ஆனாலும் புலிகளின் பெரும் படையணி ஒன்று வருவதாக நினைத்தே அனைவரும் ஓடிக் கொண்டிருந்தனர் .அதை கவனித்த பிரபாகரன் அவசரமாக வாக்கி டோக்கியை எடுத்து தனது தளபதிகள் அனைவரையும் ஒரே அலை வரிசைக்கு வரச்சொன்னவர் உடனடியாக முன்னேறுவதை நிறுத்தி கைப்பற்றிய இடங்களில் பாதுகாப்பை பலப் படுத்திவிட்டு அனை வரையும் தன்னிடம் வருமாறு கட்டையிட்டர் .
எதற்கு முன்னேற்றத்தை நிறுத்தச் சொன்னார் என்று அருகில் நின்றிருந்த பொட்டம்மானுக்கு மட்டுமல்ல களத்தில் உற்சாகமா முன்னேறிக் கொண்டிருந்த தளபதிகளுக்கும் புரியவில்லை.ஆனால் கட்டளைக்கேட்ப அனைவரும் அவசரமாக வன்னிக்கு பிரபாகரனின் இருப்பிடத்திற்கு திரும்பினார்கள் .அப்போதுதான் யுத்த களத்தில் ஒரு மாற்றம் வந்தது .
கூடியிருந்த தளபதிகளிடம் முன்னேற்றத்தை உடனடியாக நிறுத்தச் சொன்ன காரணத்தை விளக்கினார் .இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக நடந்த யுத்தத்தில் பெருமளவான போராளிகளை இழந்தும் காயமடைந்து சண்டையில் இருந்து அகற்றப்பட்டும் விட்ட நிலையில் .

நாங்கள் பெருமளவு நிலத்தை பிடித்துவிட்டோம் அதனை பாதுகாக்க போதுமான ஆட்பலம் எம்மிடம் இல்லை .ஓடிக்கொண்டிருக்கும் எதிரிக்கு எமது பலவீனம் தெரிந்துவிட்டால் நாங்கள் பிடித்த இடங்களை மீண்டும் இழக்க வேண்டி வரும் எனவே உடனடியாக எமது ஆட்பலத்தை கூட்ட வேண்டும் அடுத்தது முக்கியமான குறித்த இலக்கை மட்டும் நோக்கி முன்னேற வேண்டும்.இதுதான் அடுத்த திட்டம் .எனவே அவசரமாக புதிய ஆட்களை சேர்க்க வேண்டியது ஒவ்வொரு மாவட்ட தளபதிகளின் பொறுப்பு என்றுவிட்டு அனைவரையும் பார்த்தார் .தமிழ் செல்வன் வழமைபோல சிரித்தார் .மற்றவர்கள் ஒருவரையொருவர் பார்க்க கருணா மட்டும் குனிந்து நிலத்தில் விரிக்கப்பட்டிருந்த வரைபடத்தை பார்த்துக்கொண்டிருந்தான் .(அதற்கான காரணத்தை பின்னர் சொல்கிறேன் ..)

அடுத்ததாக எமது முக்கிய இலக்காக எதை நோக்கி நகரவேண்டும் என்கிற பிரபாகரனின் கேள்விக்கு அப்பொழுது சாள்ஸ் அன்ரனி சிறப்பு படைப் பிரிவுத் தளபதி பால்ராச் ஒரு யோசனையை முன்வைத்தார் யாழ் குடா நாட்டு காவலரண்களை பலப் படுத்தி விட்டு அனைத்து வளங்களையும் பாவித்து கிழக்கு பக்கமாக முன்னேறியிருக்கும் படையணியுடன் இணைந்து திருகோணமலை மாவட்டத்தை நோக்கி ஓயாத அலை நான்கு திட்டத்தை தொடக்கி முன்றேலாம் ஓடிக்கொண்டிருக்கும் படையினர் தொர்ந்து ஓடிக்கொண்டேயிருப்பார்கள். திருமலையில் அமைந்திருக்கும் கடற்படைத்தளம்தான் பலமானது அதனை கடல்வழியாக கடற்புலிகளும் தாக்கத் தொடங்கும் போது தரைவழியாக முன்னேறும் புலிகளும் தாக்கினால் அவர்களும் நிலை குலைந்து விடுவார்கள் திருகோணமலையை கட்டுப் பாட்டில் கொண்டுவந்தால் ஏற்கனவே கட்டுப் பாட்டில் இருக்கும் மட்டு அம்பாறை மாவட்டத்தில் இருந்தும் ராம் தலைமையில் ஒரு படையணி தாக்குதலை நடத்தியபடி முன்னேறி வரும் இரண்டு புலிகளின் அணியினரும் திருகோண மலையில் சந்தித்து வட தென் தமிழீழத்திற்கான நேரடி தரைவளித் தொர்பை ஏற்படுத்தி விடுவதோடு இதன் மூலம் தமிழீழத்தின் 70 வீதம் தரை மற்றும் கடற் பகுதி எமது கைளிற்கு வந்துவிடும்.அதற்கு பின்னர் யாழ் குடாவில் உள்ள படையினரிற்கான ஆயுத உணவு வழங்கல்கள் கடல் மூலம் நடாத்துவது இலங்கையரசிற்கு சிரமானது எனவே ஆகாய மார்க்கமாக நடக்கும் வழங்கலை சீர் குலைத்தாலே இலகுவாக யாழும் விழுந்துவிடும் என்று தனது திட்டத்தை வைத்தார்.

இவரது இந்தத் திட்டத்திற்கு சொர்ணம் ஆவலோடு தனது ஆதரவை தெரிவித்திருந்தார் காரணம் அவரது சொந்த மாவட்டமான திருகோணமலையை கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவருவது அவரது நீண்டநாள் கனவாக இருந்தது. அதே நேரம் பால்ராச்சின் யோசனைக்கு கருணா .பானு.பதுமன். சொர்ணம்.ஜெயம்.என முக்கிய தளபதிகளோடு பொரும்பாலானவர்கள் ஆதரித்தார்கள். ஆனால் குறுக்கிட்ட தமிழ்ச்செல்வன் கிழக்கை முழுவதுமாக கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தால் மக்களற்ற பெருமளவான காடுகளும் வயல்களும் கொண்ட வெறும் நிலம் மட்டுமே கட்டுப் பாட்டில் வரும். அதே நேரம் கிழக்கு மாகணத்தை முழுவதுமாக கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தாலும் அங்குள்ள மக்களின் நிதி நிலைமை யாழ்ப்பாணத்தோடு ஒப்பிடும் படியானதாக இல்லை கிழக்கை சேர்ந்தவர்களும் வெளிநாடுகளில் அதிகம் இல்லை எனவே இயக்கத்திற்கான நிதிவளத்தை பெருமளவாக அவர்களிடமிருந்து பெற முடியாது. யாழ்ப்பாணத்தை புலிகள் இழந்தபின்னர் சோர்வடைந்திருந்த புலம்பெயர் யாழ்ப்பாண சமூகம் மாங்குளம் ஆனையிறவு வெற்றியின் பின்னர்தான் பெருமளவான நிதி உதவியினை செய்திருக்கிறார்கள்.

எனவே யாழ்ப்பாணத்தை பிடிப்பதன் மூலமே பெருமளவு நிதியினை யாழிலும் வெளிநாட்டிலும் பெறமுடியும் அதுவே இயக்கதின் வளர்ச்சிக்கு உதவும் என தமிழ்ச்செல்வன் இலாப நட்ட கணக்கு போட்டு காண்பித்தார். இதற்கு புலிகளின் நிதிப் பொறுப்பாளர் தமிழேந்தி(றஞ்சித்) அனைத்துலக பொறுப்பாளர் கஸ்ரோ தளபதி தீபன் தளபதி துர்க்கா ஆகியோர் ஆதரவு தெரிவிக்க மற்றைய தளபதிகள் தலைவர் எது சொன்னாலும் சரி என்கிற நிலையை எடுத்திருந்தனர். யாழை நோக்கி படையெடுத்தால் முன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் புலிகளாலும் சூழப்பட்டிருக்கும் படையினரிற்கு ஓடுவதற்கு இடமில்லை அவர்களிற்கு புலிகளை எதிர்த்து போரிட்டு வெல்லவேண்டும் என்பதற்குமப்பால் வாழ்வா சாவா என்கிற போராகிவிடும் எனவே முடிந்தவரை சண்டையிடவே விரும்புவார்கள் என்கிற வாதத்தை பால்ராச் அணியினர் வைத்தார்கள்.ஆனையிறவு தாக்குதல்களின் போது யாழ்ப்பாணத்திற்கும் படையினர் தப்பிச் சென்றிருந்தனர் எனவே அவர்களும் புலிகளின் பலத்தைப் பற்றி மற்றைய படையினர்களிற்கு சொல்லியிருப்பார்கள் எனவே யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவத்தினரும் உள ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பர்கள் நாங்கள் முன்னேறியபடியே இராணுவத்தை சரணடையச் சொல்லி அறிவித்தல்களை கொடுப்போம் ஒரு கட்டத்தில் இராணுவத்தினர் சரணடைய முடிவெடுத்ததும் அவர்கள் ஆயுதங்களை போட்டு விட்டு புலிகளின் கடும் பாதுகாப்புடன் ஏ 9 பாதை வழியாக வவுனியாவரை போய் சேருவதற்கு வழிவகை செய்யலாம் என்பது தமிழ்ச்செல்வன் தரப்பு வாதமாக இருந்தது.இறுதியில் வழைமை போல தமிழ்ச் செல்வன் சொன்னதே பிரபாகரனிடம் எடுபட்டது. இதனால் கிழக்கு மாகாணத் தளபதிகளும் போரளிகளும் மனச்சோர்வடைந்திருந்தனர்.
J’aimeCommenter

ஆயுத எழுத்து நாவல் .ஒரு பார்வை ...ஆஸ்திரேலியாவில் இருந்து முருக பூபதி அவர்கள் ...

11:26 PM, Posted by sathiri, No Comment


சாத்திரியின் ஆயுத எழுத்து

படித்தோம் சொல்கிறோம்
po முருகபூபதி
தாயும் இன்றி தந்தையும் இன்றி தான் ஒரு இஸ்லாமியன் என்ற பிரக்ஞையே இல்லாமல் குழந்தைப்பருவத்தில் இவர்களுடன் இணைந்துகொண்டு இயக்க முகாமில் தேநீர் தயாரித்துதரும் கிச்சான் என்ற சிறுவனுக்கும் ஜீகாத்துக்கும் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தில் கரிகாலன் என்பவர் அவனைக்கொண்டே கிடங்கு வெட்டச்செய்து அவனது தலையில் போடச்சொல்லி உத்தரவு பிறப்பிக்கிறார்.
கிச்சானின் மரணவாக்குமூலம் இவ்வாறு பதிவாகிறது:
” அண்ணே… எனக்கு அப்பா யாரெண்டே தெரியாது. அம்மாவும் துரத்திவிட்டா. பிறகு எங்கேயெல்லாமோ அலைஞ்சு திரிஞ்சன். ஆனா, நான் இஞ்சை வந்தாப்பிறகு உங்களைத்தான் ஒரு சகோதரமா நினைச்சுப் பழகியிருக்கிறன். சரியான தாகமா இருக்கு. கடைசியா உங்கடை கையால கொஞ்சம் தண்ணி தாங்கண்ணே. அண்ணே நான் இங்கே வந்தபிறகு தொழுறதைக்கூட கைவிட்டிட்டன். நான் ஒரு முஸ்லிம் எண்டதைக்கூட மறந்தே போயிற்றுது. அதாலைதான் இது அல்லாஹ் தந்த தண்டனையா இருக்கும். நான் தொழுகை நடத்துறன். அண்ணே நீங்கள் போய் கரிகாலன் அண்ணையை கூட்டிவாங்க.”(பக்கம் 321)
சாத்திரியின் ஆயுத எழுத்து நாவலின் பெயரைப்பார்த்ததும் எனக்கு மாதவன், – இயக்குநர் பாரதிராஜா நடித்து மணிரத்தினம் இயக்கிய ஆயுதஎழுத்து திரைப்படமும் அதன் பெயரளவில் நினைவுக்கு வந்தது.
வடக்கில் இந்தியத் திரைப்படங்களை புலிகள் தடைசெய்திருந்த காலப்பகுதியில் – தமிழர் கலாச்சாரத்திற்கு அந்தப்படங்கள் ஊறுவிளைவிக்கின்றன என்றே அவர்களின் தலைவர் நியாயம் சொன்னார்.ஆனால், அவர் பாதுகாப்பாக பங்கருக்குள் இருந்து ஆயுத எழுத்து திரைப்படம் பார்த்துவிட்டு, தன்னைப்பார்க்க வந்திருந்த முள்ளுமலரும் மகேந்திரனிடம், ” பாரதிராஜா அந்தப்படத்தில் நடித்திருப்பது அநாவசியமானது ” என்றும் விமர்சனம் சொல்லிவிட்டு மகேந்திரனுக்கு பல திரைப்படங்களின் சி.டி.க்களையும் அன்பளிப்பாக கொடுத்தனுப்பினார்.
தற்பொழுது பிரான்ஸில் புகலிடம்பெற்று வதியும் முன்னாள் விடுதலைப்புலிப்போராளி
சாத்திரியின் ஆயுத எழுத்து நாவலை அவுஸ்திரேலியாவில் வதியும் இலக்கிய நண்பர் டொக்டர் நடேசனிடம் பெற்று படித்தேன்.
யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்த கௌரிபால் சிறி என்ற சாத்திரி, 1984 இல் தமது பாடசாலைப் பருவத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் இணைந்துகொண்டவர் என்பது தெரிகிறது. 2001 ஆம் ஆண்டு அந்த அமைப்பின் பல பிரிவுகளிலும் உள்நாட்டு வெளிநாட்டு கட்டமைப்புகளிலும் பணியாற்றியிருப்பவர். அவர் பெற்ற அனுபவம், அவரது ஆயுத எழுத்தாக எமது முன்னால், 386 பக்கங்களில் விரிந்திருக்கிறது.
” படியுங்கோடா…படியுங்கோடா ” என்ற பல்லவிதான் அங்கு ஒவ்வொரு வீடுகளிலும் பேசுபொருளாகவும் நீடித்தது. இளைஞர்கள் மட்டுமன்றி இளம் யுவதிகளும் கல்விக்கு முழுக்குப்போட்டுவிட்டு சயனைட்டும் அணிந்து ஆயுதமும் ஏந்தத்தொடங்கியதும் அந்த அப்பாவி பெற்றோர்களின் கனவுகள் யாவும் குலைந்துபோனது. புலிகளின் தாகம்; தமிழீழ தாயகம் என்று இளம்தலைமுறை பாடத்தொடங்கியதும் அந்தப்பெற்றோர் கையாலாகாதவர்களானார்கள்.
இலங்கையின் தமிழ்ப்பிரதேசங்களில் ஆயுதம் ஏந்திய இயக்கங்கள் அறிமுகமானபொழுது கல்வியையே மூலதனமாக வாழ்ந்த தமிழ்ச்சமூகத்தின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இந்த மறைந்திருந்து தாக்கிவிட்டு ஓடும் தந்திரோபாயமான போராட்டத்திலிருந்து தப்பவைப்பதற்கே பெரிதும் முயன்றனர்.
இந்த நாவலில் வரும் அவன் என்ற பாத்திரத்துக்கு பெயர் இல்லை. கிட்டு, மாத்தையா, பொட்டு அம்மான், கரிகாலன், ஸ்ரீசபாரத்தினம், லோரன்ஸ் திலகர், யோகி, இப்படி எல்லோரும் தமிழ் உலகம் அறிந்த பெயருடன் வருகிறார்கள். ஆனால் இந்நாவலின் நாயகன் பெயர் அவன். இந்த அவனில் பலர் இருக்கலாம். ஏன் நீங்களாகவும் இருக்கலாம் … என்று ஒவ்வொரு ஈழத்தமிழ் இளைஞனின் தலையிலும் அனைத்தையும் வைக்கிறார் சாத்திரி.
விடுதலைக்காக என்னவோ எல்லாம் செய்துவிட்டு, எத்தனையோ சகோதரப்படுகொலைகளையும் அழிவுகளையும் சந்தித்துவிட்டு தமிழ் ஈழத்தின் பெயரால் எத்தனையோ பாதகங்களையும் குற்றங்களையும் புரிந்துவிட்டு விபசாரிகளின் அரவணைப்பில் எல்லாம் சுகித்துவிட்டு, இறுதியில் தலைவர் போர் நிறுத்தத்திற்கு தயாராகிவிட்டார், சிறிதுகாலத்துக்கு எல்லாவற்றையும் நிறுத்துமாறு சொல்லிவிட்டார், முதலான பணிப்புரைகள் வந்த பின்னர்தான் இந்நாவலின் நாயகன் அவனுக்கு, தனது வாழ்வாதாரம் எதிர்காலம் பற்றிய சிந்தனை வருகிறது.
உணவு விடுதியில் எச்சில்கோப்பை கழுவும் பொழுதான் சுடலைஞானம் பிறக்கிறது.
” ஊர் சுத்தாமல் படியடா படியடா ” என்று அவனது அப்பா திட்டிய திட்டுக்கள் திரும்பத்திரும்ப அவன் நினைவுக்கு வந்துகொண்டிருந்தன.
மது, புகைத்தல், உடலுக்கு தீங்குவிளைவிக்கும் போதைவஸ்து முதலானவற்றை அடியோடு வெறுத்தவர்தான் அவனுக்கும் அவனைப்போன்ற பல்லாயிரம் இளைஞர் யுவதிகளுக்கும் ஆதர்சமாக விளங்கிய தலைவர். ஆனால் அவர் அரசியல் ஆதாயம் கருதியோ தந்திரோபாயமாகவோ போர்நிறுத்தத்திற்கு உத்தரவிட்டதும் அவர் தவிர்க்கச்சொன்னவற்றை நாடி ஓடி இறுதியில் மதுவெறியிலேயே அவன் காரை செலுத்திச்சென்று பள்ளத்தில் வீழந்து மடிவதுடன் நாவல் முடிகிறது.
தலைவரின் கொள்கைகள் கோட்பாடுகள் ஈழத்தமிழனுக்கு மட்டுதான் விதிக்கப்பட்டிருந்ததா…? ஈழப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவும் நிதி சேகரிக்கவும் புகலிட நாடுகளில் தஞ்சமடைந்த இளைஞர்களுக்கு விதிக்கப்படவில்லையா?
ஒரு தடவை விமானத்தில் பறந்துகொண்டிருந்தபொழுது விமானப்பணிப்பெண் அருந்தத்தந்த பியரின் பெயர் டைகர். புலியின் பெயரிலும் பியர் இருப்பது எனக்கு அன்றுதான் தெரியும். சாத்திரி எழுதியிருக்கும் ஆயுதஎழுத்து நாவலின் இறுதியிலும் மலிவுவிலையில் விற்கப்படும் சோழன் பியர்வருகிறது. என்ன ஒற்றுமை. சோழமன்னனின் புலிக்கொடியுடன் இரண்டு பியர்களையும் ஒப்பிட்டுப்பார்க்க மனம் கூசியது.
நடந்து முடிந்த இலங்கைப் பாராளுமன்றத்தேர்தலில் ஒரு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேட்பாளரை எப்படியாவது அதிகூடிய விருப்பு வாக்குகளினால் வெல்லவைக்கவேண்டும் என்பதற்காக பெரும்பிரயத்தனப்பட்டு, ” சோழன் பரம்பரையே எழுந்து வாடா” என்ற பாடலையும் அவருக்கு சார்பான இணையத்தளம் ஒன்று அடிக்கடி ஒலிபரப்பியது.
கல்தோன்றி மண் தோன்றாக்காலத்து முன் தோன்றிய தமிழன் பரம்பரையில் சோழமன்னனும் இடையில் புகுந்துகொண்டான். இந்தப்பரம்பரையின் சரித்திரம் தெரியாத யாரோ ஒரு மதுப்பிரியன் டைகர் பியரும் – சோழன் பியரும் கண்டுபிடித்துவிட்டான்.
இன்று யாழ்ப்பாணம்தான் சாராய விற்பனையில் இலங்கை அரசுக்கு வரிவழங்குவதில் முன்னிலை வகிப்பதாக நல்லாட்சிக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பினாலும் ஆதரவு வழங்கப்பட்ட புதிய ஜனாதிபதியின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உருவாக்கியவரும் இந்நாவலின் நாயகனின் தலைவர்தான். ஈழம் கேட்ட தலைவரின் வழித்தோன்றல்கள் தற்பொழுது பாராளுமன்றில் நியமன அங்கத்தவர் பதவிகேட்டதிலும் வடமாகண முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்பதிலும் போராடிக்கொண்டிருக்கிறது.
இந்நாவலின் ஆசிரியர் அவன் என்ற பாத்திரம் ஊடாக தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்துகொண்டு புலிகள் இயக்கத்தையும் அதன் போராளித்தலைவர்களையும் தமிழ் ஈழ ஆதரவாளர்களையும் பிற ஆயுதம் ஏந்திய இயக்கங்களையும் அரசியல் தலைவர்களையும் உள்நாட்டு வெளிநாட்டு அரசுகளையும், உளவுத்துறைகளையும் விமர்சித்துக்கொண்டு ஒரு கதைசொல்லியாக இந்நாவலை நகர்த்திச்செல்கிறார்.
அவரது உதாரணங்கள் சில: நட்சத்திர நாடு – அமெரிக்கா, நட்சத்திர நாய்கள் அமெரிக்கா சி.ஐ.ஏ உளவமைப்பு, மற்றும் அவர்களுக்காகப் பணத்துக்கு வேலை செய்பவர்கள். உடைந்த நாடு: ரஷ்யா.
இளைஞர்களை உணர்ச்சியினால் உசுப்பேற்றிய தமிழ்த்தலைவர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. அவர்களில் சிலர் தம்மால் உசுப்பேற்றியவர்களினாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்கள். ஆயுதமுனையில் எச்சரிக்கப்பட்டார்கள். ஒரே கொள்கையுடன் உருவான இயக்கங்கள் அனைத்தும் ஆயுதம்தான் ஏந்தின. முடிந்தவரையில் சகோதரப்படுகொலைகளை நடத்திவிட்டு, இறுதியில் தம்மால் ஆயுதம் களையப்பட்ட புளட், டெலோ, ஈ.பி.ஆர். எல்.எஃப் இயக்கங்களை தேர்தலுக்காக ஒரு கூட்டமைப்பாக இணைத்த தலைவர், தாமும் தமது இயக்கமும் மட்டுமே ஆயுதங்களையும் சயனைட்டுகளையும் நம்பியிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்.
இவர்கள் அனைவரும் இந்நாவலில் இடம்பெறும் சம்பவங்களில் காட்சிப்படுத்தப்படுகிறார்கள்.
இந்த நாவலின் தொனிப்பொருள் சுயவிமர்சனம்தான். அதிலிருந்துதான் உண்மைகளை வாசகர்கள் தேட வேண்டும். தேடுதலுடன் நின்றுவிடாமல் செய்த பாவங்களுக்கு விமோசனமும் தேட வேண்டும். அவ்வாறு பாவசங்கீர்த்தனம் செய்தால் அதுவே இந்நாவலின் வெற்றி.
இல்லையேல் பத்தோடு பதினொன்றாக ஈழப்போராட்ட நாவல்களில் சாத்திரியின் ஆயுதஎழுத்தும் ஒன்று என்ற வரிசைக்குள் வந்துவிடும்.
அல்சர் நோய் உடலில் எந்தப்பாகத்தில் வரும் என்பதும் தெரியாத அப்பாவியாகவும் இளம்குறுத்துக்கள் இந்த இயக்கங்களில் இணைந்திருக்கிறார்கள் என்ற செய்தியும் சொல்லப்படுகிறது.
1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி புதன்கிழமை யாழ்குடாநாட்டில் காலம்காலமாக வாழ்ந்த முஸ்லிம்மக்களின் வாழ்வின் மறக்கமுடியாத நாள். அவர்களின் வெளியேற்றம் குறித்தே நாவலின் 36, 37, 38, 39 ஆவது அத்தியாயங்கள் பேசுகின்றன.
சிங்கள அப்பாவுக்கும் தமிழ் அம்மாவுக்கும் பிறந்த ரெஜினா என்ற இளம் யுவதி எப்படி கரும்புலியாகி ஒரு முக்கிய சிங்கள அரசியல் தலைவருடன் சிதறிப்போனாள், அரசின் புலனாய்வுப்பிரிவு சித்திரவதைக்கூடத்தில் முன்னாள் ஈ.பி.ஆர். எல்.எஃப் இயக்கத்தில் இணைந்திருந்த ராணி என்ற பெண்ணை அவன் சந்திக்கிறான். அவள் அவனை பாலியல்ரீதியில் துன்புறுத்தி உண்மையை வரவழைக்கப்பார்க்கிறாள்.
அவள் எவ்வாறு ஒரு விடுதலை இயக்கத்திலிருந்து போராடப்புறப்பட்டு புலிகளில் இருந்த ஒரு சொந்தக்காரப்பெடியனால் காட்டிக்கொடுக்கப்பட்டு அவளது காதல் கணவன் (அவனும் அந்த இயக்கத்தில் இருந்தவன்) சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவதற்காக இவளும் அரசின் புலனாய்வுப்பிரிவில் இணைந்து தன் கணவனைக்காட்டிக்கொடுத்தவனை பழி தீர்த்துவிட்டு ஒரு பெண் கரும்புலிக்கு உதவிய சந்தேகத்தின்பேரில் பிடிக்கப்பட்ட அவனை சித்திரவதை முகாமில் விதையை நசுக்கி வதைக்கிறாள்.
ஈழ விடுதலைக்காக புறப்பட்டு பணத்துக்காக காதலர்களை பிரிக்கும் பரிசுகெட்ட வேலைகளிலும் ஒவ்வொருவர் தனிப்பட்ட வாழ்விலும் மூக்கை நுழைத்து அவர்களின் வாழ்வை சீரழித்த கதைகளையும் இந்நாவல் சித்திரிக்கிறது.
இந்நாவல் இவ்வாறு தனிநபர், சமூகம், விடுதலை இயக்கம் பற்றியெல்லாம் விமர்சிக்கிறது. அதனால்தானோ இதன் வெளியீட்டு அரங்கு சென்னையில் நடந்தபொழுது அதனை கண்டுகொள்ளாமல் பலர் கள்ளமௌனம் அனுட்டித்தனர்.
ஒரு காலகட்டத்தில் ஈழ விடுதலை இயக்கத்தில் தன்னைப்பினைத்துக்கொண்ட சாத்திரி காலம் கடந்து ஆழமாக சிந்தித்ததன் பெறுபேறுதான் ஆயுதஎழுத்து. அதனை அவர் நாவல் வடிவில் இலக்கிய உலகிற்கு வரவாக்கியுள்ளார்.
அதன்மூலம் அவர் பாவசங்கீர்த்தனமும் செய்துகொண்டார். மற்றவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்….? என்ற வினாவையும் இந்நாவல் செய்தியாக்கியுள்ளது.
—0—