Navigation


RSS : Articles / Comments


நிழலாடும் நினைவுகள். (மேஜர் டொச்சன்)

2:18 PM, Posted by sathiri, No Comment

சாத்திரி ஒரு பேப்பரிற்காக
மேஜர்..டொச்சன்.(கந்தசாமி.ஜெயக்குமார்)பிறப்பு.21.06.1966...வீரச்சாவு.24.11.1992
..............................................................
   டொச்சன் காலை எழுந்து துலாவில்  தண்ணீர்  இழுத்து இறைக்க அவனது அம்மம்மா  வழிந்தோடி வந்த தண்ணீரை தோட்டத்தின்  வாழைப்பாத்திகளிற்கு மாற்றி விட்டுக்கொண்டிருந்தார்.ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் மணி சத்தம் கேட்டதும்   அவசர அவசரமாக உணவை வாயில் அடைந்து விட்டு  நேரமாச்சு  அம்மம்மா நான் போறன் என்றபடி பாடசாலைக்கு   புத்தகப் பையை  தூக்கிக் கொண்டு  வெகு வேகமாக வசாவிளான் மத்திய மகா வித்தியலத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போய்க்கொண்டிருந்தவனிற்கு  வடக்கு புன்னாலைக்கட்டுவன் சந்தி இலுப்பைபை மரத்தை தாண்டும் போது ஒரு முனகல் சத்தம் கேட்கவே  போன வேகத்தில் அப்படியே பின் பக்கமாக நடந்து வந்து பார்த்தான்  குப்பிளான்  ஏழாலை என்று  மூன்று மொழிகளிலும் எழுதப் பட்டு  அம்புக்குறியிட்ட  பெயர் கல்லிற்கு  பின்னால்  உரப்பை ஒன்றிலிருந்து அந்த முனகல் வந்து கொண்டிருந்தது.

கட்டியிருந்த உரப்பையை அவிழ்த்தான்  பிறந்து சில நாட்களேயான குட்டி நாயொன்று முனகியபடி வெளியே வந்தது .  யாரோ தங்கள் வீட்டு நாய் போட்ட குட்டியை கொண்டு வந்து அங்கு வீசி விட்டுப் போயிருக்கிறார்கள் என்பது மட்டும் அவனிற்கு புரிந்தது பாடசாலைக்கு வேறு நேரமாகிக் கொண்டிருந்தது. என்ன செய்யலாம்  யோசித்தான்  சந்தியில் கடை வைத்திருந்த சாமியரிடம் போய் ."சாமியண்ணை  இது றோட்டிலை கிடந்த குட்டி பாவமா கிடக்கு உங்களுக்கு வேணுமோ " என்றான் போடா என்னட்டை இரண்டு நாய் நிக்குது  அதுவும் அல்சேசன் உதை யாருக்கு வேணும் பேசாமல் றோட்டிலை போட்டிட்டு  பள்ளிக் கூடத்து ஓடடா என்றார் சாமியார்.ஆனாலும் அவனிற்கு மனம் கேட்கவில்லை  " சரி சாமியார்  உங்கடை கிணத்தடியிலை போய கொஞ்சம் தண்ணி குடுக்கிறன் என்றவன் அவரது வீட்டு கிணற்றடிக்கு போய் வாளித் தண்ணீரை  உள்ளங்கையில் அள்ளி  முன் நான்கு விரல்களையும் ஒன்றாக்கி குவித்து நாய்க்குட்டியின் வாயில் பல தடைவை பருக்கிவிட்டு  வீதி ஓரத்தில் கொண்டு வந்து வைத்து விட்டு மீண்டும் பாடசாலையை  நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான்.  நாய்க்குட்டி அவன் பின்னால் ஓடத் தொடங்கியிருந்தது சிறிது தூரம் போய் திரும்பிப் பார்த்து நாய்க்குட்டி தன் பின்னால் வருவதை கவனித்தவன் ....சூ..சூ..போ என்று விரட்டிப்பார்த்தான் அவன் விரட்டும்போது பேசாமல் நின்று விட்டு  அவன் நடக்கத் தொடங்கியதும் அவன் பின்னாலேயே  அது ஓடிக்கொண்டிருந்தது. பாடசாலை வாசல் வரை போனவன்  பின்னாலேயே வந்த நாய்க்குட்டியை தூக்கி புத்தகப்பைக்குள் வைத்துக் கொண்டு வகுப்பிற்குள் நுளைந்து விட்டிருந்தான்.
அன்றைக்கென்று அவனிற்கு  சோதனைக் காலம் பத்தாம் வகுப்பின் முதலாவது பாடம் ஆங்கிலம்.பாடம் நடத்துபவர் ஒட்டகப்புலத்து ஜோசப் ரீச்சர். அவரிற்கு பாடசாலையின் அதிபரே கொஞ்சம் பயப்படுவார் மற்றைய ஆசிரியர்கள்  மாணவர்கள் பற்றி சொல்லவே தேவையில்லை அவரிற்கு  பயம் அவ்வளவு கண்டிப்பானவர்.

வகுப்பில் நுளைந்து  பாடம் நடத்தத்  தொடங்கியிருந்தபோது  முனகல் சத்தம் கேட்கவே பாடத்தை நிறுத்தி விட்டு யாரது சத்தம் போட்டது என்றார்.டொச்சனிற்கு பக்கத்தில் இருந்த இருவர் டொச்சனை திரும்பிப் பார்க்க  ஜேசப்ரீச்சர் டொச்சனைப் பார்த்து "ஜெயா எழும்பி வா "என்றதும் நெளிந்தபடி எழும்பி நின்றவனிடம் வேகமாக போய்கோபத்தோடு நீயா சத்தம் போட்டனி என்றவும் அவனது புத்தகப் பையிலிருந்து தலையை நீட்டிய  நாய்க்குட்டி மிரட்சியோடு முனகியது.பாவம்  ரீச்சர் றோட்டிலை நிண்டது  பின்னாலையே வந்தது  அதுதான் கொண்டந்திட்டன் என்று தயங்கியபடியே சொல்ல. சரி  வகுப்புக்கையெல்லாம் கொண்டு வரக்கூடாது கொண்டுபோய் வீட்டிலை விட்டுட்டு வா .என்று ஜேசப் ரீச்சர் அவனை அனுப்பி விட்டிருந்தார்.
அதற்கு பிறகு பாடசாலைக்கு போகும் நேரத்தில் மட்டும் நாயை வீட்டில் கட்டிப் போடுபவன் பாடசாலையால் வந்ததுமே அதனை அவிழ்த்து விட்டு அதனேடேயே திரிவான்.அந்த நாயும் அவனை விட்டுப் பிரியாமல் அவன் பின்னலேயே எப்போதும் திரிவதால் டொச்சன் என்கிற பெயரோடு நாய்க்குட்டியும்  ஒட்டிக் கொள்ள  ஊரில் அவனது பெயர் நாய்க்குட்டி டொச்சனாகியது.

இப்படி தன்னுடைய நாய்க்குட்டியோடு ஒருநாள்  மாலை சந்திக் கடைக்குபோய் சாமான் வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருக்கும்போது  பலாலியில் இருந்த ரோந்து வந்த ராணுவத்தினர் வடக்குப் புன்னாலைக் கட்டுவன் சந்தியில் நின்றவர்களையெல்லாம் சோதனை செய்து விட்டு அவர்களை வீதியில் முழங்காலில் இருந்தியிருந்தார்கள். டொச்சனும் அதற்குள் அகப்பட்டுவிட கைகளை பிடரிப் பக்கமாக  வைத்தபடி  முழங்காலில் இருத்தப் பட்டான். நாய் இராணுவத்தினரை பார்த்து குலைக்கவே ஒரு ஆமிக்காரனின்  துப்பாக்கிமட்டையால் நாயை ஓங்கி அடிக்கவே அடிவாங்கியடி முனகிக் கொண்டு ஓடிய நாய் சிறிது தூரத்தில் நின்று திரும்பவும் குலைத்துக்கொண்டிருக்க  அதனை நோக்கி நடந்த ஆமிக்காரனிடம் வேண்டாம் சேர் பாவம் குட்டிநாய் அடிக்கவேண்டாம் என்று டொச்சன் மன்றாட அவன் ஒரு கல்லை எடுத்து நாயை நோக்கி எறிந்துவிட்டு போய்விட்டான்.

வீட்டிற்கு போன டொச்சன் நாயை எடுத்து தடவியபடியே பக்கத்தில் வைத்துக்கொண்டு படுத்திருந்தவன்.குட்டி நாயை இப்பிடி அடிப்பாங்களா என்று  அதனை அடித்த ஆமிக்காரனை  நினைக்க கோவமாக வந்து கொண்டிருந்தது.இவங்களிற்கு ஏதாவது செய்யவேணும் என யோசித்தபடியே படுத்திருந்தவன் மறுநாள் ஈவினை பகுதியில் இருந்த புலிகளின் இரகசிய முகாமிற்கு போய்  அக்காச்சியை சந்தித்து இயக்கத்தில் சேரப் போவதாக தனது விருப்பத்தை சொல்லியிருந்தான்.முதல்நாள் அடி வாங்கிய அவனது நாயும் தாண்டித் தாண்டிப் அவனிற்கு பின்னாலேயே போயிருந்தது. நாயையும் அவனையும் மாறி மாறிப் பார்த்த அக்காச்சி நாங்கள் நாயை எல்லாம் இயக்கத்துக்கு எடுக்கிறேல்லை என்றதும் அதனை கொண்டு வந்து வீட்டில் கட்டிவைத்து விட்டு டொச்சன் இயக்கத்திற்கு போயிருந்தான்.
                                                                  000000000000

பயிற்சியை முடித்தக்கொண்ட  டொச்சன்  புலிகள் அமைப்பு பலாலி இராணுவத்தை தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருபப்தையறிந்து  தன்னை  பலாலிப் பகுதிக்கு  அனுப்பி வைக்குமாறு  அன்றைய பொறுப்பாளர் கிட்டுவிடம் அனுமதி பெற்று வந்திருந்தவன் அவனது முதலாவது சண்டையே  அவன் கல்விகற்ற வசாவிளான் மகா வித்தியாலயத்தை  பலாலி இராணும் கைப்பற்ற எடுத்த முயற்சியை  முறியடித்த சண்டையாக அமைந்திருந்தது.இராணுவத்தை மீண்டும் பலாலி முகாமிற்குள் துரத்திய பின்னர்  வசாவிளான் சந்தியில் துப்பாக்கியோடு நின்றிருந்த டொச்சனை பார்த்த ஜேசப் ரீச்சர் டேய் my student  god bless you என்று பெருமையாக சொல்லிககொண்டு போயிருந்தார்.பலாலி இராணுவ முகாமைச் சுற்றி நடந்த அனைத்துச் சண்டைகளிலும் டொச்சனின் பங்கு முக்கியமானதாக இருந்தது மட்டுமல்லாமல் யாழ்  தொலைத்தொடர்பு முகாம் மீதான தாக்குதல்  மயிலியதனை முகாம் மீதான தாக்குதல் என்பவற்றோடு முக்கியமானதொரு விடயம் புலிகள் அமைப்பானது ரெலோ அமைப்பின் மீது தாக்குதலைத் தொடங்கிய பின்னர்  தலைமறைவாகிவிட்டிருந்த  அதன் தலைவர் சிறீசபாரத்தினத்தை யாழ் குடா முழுவதும் சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்த சயமயத்தில் கோண்டாவில் பகுதியில் அன்னக்கை ஒழுங்கையில் இளையப்பா என்பவரின் தோட்டத்தில் மறைந்திருந்த சிறீ சபாரத்தினத்தை  டொச்சனே  முதலில் அடையாளம் கண்டு  அவர் ஓடித் தப்பிவிடமுடியாதவாறு சிறீ சபாரத்தினத்தின் காலில் சுட்டுக் காயப்படுத்திவிட்டு கிட்டுவிற்கு உடனடியாகத் தகவல் அனுப்பிவிட்டிருந்தான் பின்னர் அங்கு வந்த கிட்டுவால் சிறீ சபாரத்தினம் சுட்டுக் கொல்லப் பட்டது அனைவரும் அறிந்ததே.


பின்னர் வடமராச்சியில் தொடங்கப்பட்ட ஒப்பிறேசன் லிபரேசன் தாக்குதல்கள் நடந்துகொண்டிருந்தபோது  வல்லை வெளிக்கு அருகில் அச்சுவேலிப் பகுதியில் வந்து வீழ்ந்து வெடித்த செல்லின் துண்டொன்று டொச்சனின் கழுத்துப் பகுதியை அறுத்துச் சென்றிருந்தது.நல்லவேளையாக  அவனது தொண்டைக் குளாய்கள் அறுபட்டுப் போகாததால் உயிர்தப்பியிருந்தான் அதற்கான சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்கும்போதே  மீண்டும் இந்திய இராணுவத்துடனான மேதல்கள் தொடங்கிவிட. ஒரு சுற்றி வளைப்பில்  கைதாகி இந்திய இராணுவத்தால் காங்கேசன் துறை முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்தவன் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தோடு விடுதலையாகி மீண்டும் புலிகளோடு இணைந்து செயற்படத் தொடங்கினான்.1992ம் ஆண்டு மாவீரர்தினத்தையொட்டி புலிகள் அமைப்பு வடக்கு கிழக்கு எங்கும் பெரும் தாக்குதல்களை  திட்டமிட்டு நடத்தியிருந்தார்கள். அதே நேரம்  யாழ் குடாநாட்டை  கைப்பற்றும் திட்டம் ஒன்றினையும்  இலங்கை  இராணுவம்  முன்னெடுத்து  5 முனைகளில்  தாக்குதல்களை  தொடங்கியிருந்தார்கள்  அதனை  தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு பலாலி கூட்டுப்படைத் தளத்தின் ஆயுதக கிடங்கினை  ஊடுருவித் தாக்கி அழிப்பதும் புலிகளின் திட்டத்தில் ஒன்று.

அதற்கான வேவுத் தகவல்கள் அனைத்தும் திரட்டப் பட்டு  பலாலியின் கிழக்குப் பகுதியான  மயிலிட்டி ஊடாக தொடர்ச்சியான காவலரண்களை தாக்கியடி முன்னேறி ஆயுதக் கிடங்கினை அழித்தொழிக்கவேண்டும் இந்தப் பொறுப்பு  டொச்சனிடம் ஒப்படைக்கப் படுகின்றது.தனது அணியினருடன்  நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் தாக்குதல்களை தொடங்குகிறான். மயிலிட்டி யிலிருந்து கடற்கரைப்பக்கமாக 4.5 கி.மீற்றர் தூரம் வரையிலான காவலரண்களை  தகர்த்தபடி டொச்சனின் அணியினர்  பலாலித் தளத்தினுள் ஊடுருவுகின்றார்கள்.அதிகாலையளவில் அவர்கள் இலக்கான ஆயுதக் கிடங்கினை நெருங்கி அதன் மீது மூர்க்கமான தாக்குதலை தொடுக்கின்றார்கள் ஆயுதக் கிடங்கு பெரும் சத்தத்தோடும் இரவைப் பகலாக்கிய வெளிச்சத்தோடும் வெடித்துச் சிதறியபடி எரியத் தொடங்குகின்றது. மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த டொச்சன்  தொடந்து அடியுங்கோடா என்று தனது அணியினரிற்கு கட்டளையிட்டபடியே ஆயுதக் கிடக்கை தகர்த்து விட்ட செய்தியினை நடைபேசி மூலமாக (வோக்கி) மற்றைய அணியினரிற்கு தெரிவித்துக்கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த எதிரியின் துப்பாக்கி குண்டொன்று அவனது தலையில் துளைபோட்டு வெளியேற  யாழ் குடா மீதான  பெரும் படையெடுப்பினை  தடுத்து நிறுத்திய  மன நிறைவோடு தான் நேசித்த மண்ணினை தனது குருதியால் நனைத்தபடி வீழ்ந்தவனை  பூமித்தாய் அரவணைத்துக் கொள்கிறாள்.

பி.கு .டொச்சனின் தாயார் டொச்சன் சிறு வயதாக இருந்தபேதே இறந்து போய்விட அவனது தந்தை வேறு திருமணம் செய்து கொண்டு போய்விட்டிருந்ததால் டொச்சனையும் அவனது தங்கையையும்  அம்மம்மாவே வளர்த்து வந்தார். டொச்சனின் சகோதரி தற்சமயம் கனடாவில் வசிப்பதாக அறிந்தேன்.
 

போருக்குப் பின் புலம்பெயர் வாழ் சமூகத்தின் அரசியல்.என்ன செய்யலாம்

2:08 PM, Posted by sathiri, No Comment

லண்டனில் நடந்த 40 வது இலக்கிய சந்திப்பில்   போருக்குப் பின்  புலம்பெயர் வாழ் சமூகத்தின் அரசியல்.என்ன செய்யலாம்  என்கிற  தலைப்பிலான உரை

இலக்கிய கூட்ட மண்டபத்திற்கு  உள்ளே நான் போய் சில நிமிடங்களில்  ஒருவர்   சிறிய புத்தகம் போல தயாரித்திருந்த  பிரதிகளை கொண்டு வந்து ஒவ்வொருவராக வினியோகம் செய்து கொண்டிருந்தவர் ஒன்றை என்னிடமும் நீட்டினார். வாங்கி பார்த்தேன் முகப்பில்  சாத்திரி  ரயாகர  மயாண காண்டம் என்று தலைப்பிடப் பட்டிருந்தது.பக்கங்களை  புரட்டியபோதுதான்  அது என்னையும் ராயாகரனையும் போட்டுதாக்குவதற்காக தயாரிக்கப் பட்டி பிரதிகள் என்றுபுரிந்தது. இன்றைய நிகழ்ச்சி  சூடாகத்தான்  இரக்குமென்று புரிந்தது. அது போலவே  நான் பேசும் முறை வந்ததும் ஒரே கூச்சலும் குழப்பமுமாக  சில நிமிடங்கள் கழிந்தது.அதைப் பற்றியும்  எனது உரைக்குப் பின்னரான  விவாதத்தின்போது  கேள்வி பதில்களை  தனியான ஒரு பதிவாக இடுகிறேன். இந்த கூச்சல் குழப்பங்கள் கட்டுப் பாட்டிற்குள் வந்ததும். எனது கையில் இருந்த பிரதியை காட்டி  சாத்திரி மயான காண்டம் என்று தலைப்பு கொடுத்திருக்கிறார்கள் எனவே சாத்திரியை  அரிச்சந்திரன்  என்று ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி ரெிவித்தபடி  எனது உரையை  தொடங்கினேன் கீழே எனது உரையின் முழு வடிவம்.

போருக்குப் பின்  புலம்பெயர் வாழ் சமூகத்தின் அரசியல்.

அனைவரிற்கும் வணக்கம்

இலண்டினில் இப்படி ஒரு  நிகழ்வு நடக்க இருப்பதாக அறிந்ததும்  நண்பர் பொளசர் அவர்களிடம் நானும் நிகழ்வில் கலந் கொள்ளலாமா என கேட்டிருந்தேன். காரணம் புலம்பெயர் வாழ்வில்  இப்படியான நிகழ்வுகளில்  எதிலுமே நான் கலந்து கொள்ளாது இதுவரை  விலகியே இருந்திருக்கிறேன் அதற்கான தேவைகளும் இருந்தது.  நான் கேட்டதுமே  உடனடியாக   ஓஓஓ...தாராளமாக கலந்து கொள்ளுங்கள் ஆனால்  போருக்குப் பின்  புலம்பெயர்ந்து வாழும் எமது சமூகத்தின் அரசியல் பற்றி  20 நிமிடம் கட்டாயம் ஒரு உரை ஒன்றை நிகழ்த்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அப்பதான்..அடடடா..சொந்தச் செலவிலை சூனியம் வைச்சிட்டமே என்று தெரிஞ்சிது. ஏனென்றால் நான் பத்திரிகைகளிலை  இணையங்களிலை  ஏதாவது கதை கட்டுரை  எண்டு எழுதிற ஆள். என்னட்டை ஒரு பேப்பரையும் பேனையையும். அல்லது ஒரு கணணியை தந்தால் மட மடவெண்டு ஏதாவது எழுதி தந்திடுவன். ஆனால். இப்பிடி கொஞ்சப் பேருக்கு முன்னாலை  கதைக்கவேணும் ..அதுவும் அரசியல். ..உருப்பட்ட மாதிரித்தான்...
போரிற்கு பின்னர் புலம்பெயர் வாழ் தமிழ் சமூகம் எப்படியான அரசியலை செய்யலாம்.
. என்ன செய்யலாமென்று  யோசித்துப் பார்த்தேன்    மிக சாதாரணம் ஒரே வரியில் சொல்லி விடலாம்.இப்போது  உள்ள சூழ் நிலையில் பொத்திக்கொண்டு போசாமல் இருப்பதுதான் சிறந்தது. ..
இல்லை அதை விட வேறு எதையாவது புலம்பெயர் தேசத்தில் எதையாவது செய்யவேண்டும் என நினைத்தால் . ஜ.நா சபை வரை நடக்கலாம்.அடுத்தது   இந்த  கங்கம் ஸ்ரைல் பாடலை எடுத்து    செய்து அதில்  மகிந்தா . சோனியா.  மன்மோகன் சிங். வேணுமெண்டால்  பான்கி மூன்.  இவர்கள்  சேர்ந்து  ஆடுகிற மாதிரி  கிராபிக் செய்து  யூ ரியூப்பில்  தரவேற்றி  இணையத்தில பரவ விடுவதோடு  முகப் புத்தகத்தில்  பதிவு செய்து அப்படியே  லைக்குகளை அள்ளலாம்.யாகம் நடாத்தலாம்.தேவாலயத்தில் திருப்பலி பூசை கொடுக்கலாம்.

சாகும்வரை உண்ணாவிரதம்  என்று அறிவித்து விட்டு  சில நாட்களின் பின்னர் ஒரு மனுவை யாரிடாவது  கொடுத்து விட்டு அப்படியே பேசாமல் போயிடலாம்.  உண்மையில் எனக்கு தெரியாத ஒரு விடயத்தை இங்கு கேட்கிறேன். அடிக்கடி  சாகும்வரை உண்ணாவிரதம் என்று    அதிரடி  அறிவிப்புக்கள்  சிலரது படங்களோடு வெளியாகும்..  ஆனால்   இந்த சாகும்வரை உண்ணா விரதப் போராட்டம்  என்று அறிமுக காலத்தில் இருந்து  இன்று வரை  திலீபனைத்தவிரை   கொண்ட கொள்களிற்காகவே  யாராவது  உண்ணா விரதம் இருந்து  உயிரை விட்டிருக்கிறார்களா????   யாருக்காவது தெரிந்தால் ஒரு பெயரை சொல்லுங்கள்.. பிறகு எதுக்கு  சாகும்வரை உண்ணா விரதம் என்று தொடங்கி  பிறகு   அதை  சத்தமேயில்லாமல் கைவிட்டு    சாகும்வரை உண்ணாவிரதம் என்றால் என்னவென்று  செய்து காட்டிய திலீபனை கொச்சைப்படுத்துகிறீர்கள்...... பேசாமல்  அடையாள உண்ணா விரதம் எண்டு அறிவியுங்கப்பா..
 ஆனால்  இவை எல்லாவற்றையும் ஏற்கனவே பலர் செய்து கொண்டிருக்கிறார்கள்.அதன் பலா பலன்கள் என்ன  என்பதும்  அதனை செய்பவர்களிற்கும் தெரியும் ஆனாலும் அதனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதை அப்படியே  விட்டு விடுவோம் அவரகள் தொடரட்டும்.

ஆனால்  இலங்கையில் வாழுகின்ற சிறு பான்மை இனங்களான தமிழ் மற்றும் தமிழ்பேசும் முஸ்லிம்கள் ஆகியோர் ஆக்கபூர்வமாக . நடைமுறைக்கு சாத்தியமான .யதார்த்தமான அரசியல்  எப்படிச் செய்யலாம் என்றுதான் பாரக்கவேண்டும்.  அதை செய்வது இலகு ஆனால் அதனை செய்வதற்கு யார் யார் முன்வருவார்கள் என்பதுதான் இங்கு பிரச்சனை. இங்கு நான்  தனியாக  தமிழர்களை மட்டும் குறிப்பிடாமல் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் குறிப்பிட்டதற்கு காரணம். அவர்கள் தமிழர்களோடு சேர்ந்து தமிழ்கட்சிகளோடு இணைந்து வேலை செய்து தங்கள் அரசியல் போராட்டங்களை  தொடங்கவேண்டிய காலகட்டம் இன்:று வந்து விட்டது.என்பதற்குமப்பால் அதற்கான கட்டயம்  வந்து விட்டது என்றுதான் சொல்லவேண்டும். இது இரண்டு  இனங்களிற்குமான இறுதி சர்ந்தர்ப்ம் என்றும் கூறலாம். ஏனெனில் கடந்த முப்பதாண்டு கால யுத்தத்தின் முடிவில் இலங்கையில் தமிழினம் தனது அனைத்து வளங்களையும் இழந்து  அதன் பலம் இழந்து  பேரினவாத அரசுடன் பேசும் பேசும் சக்தியையும் இழந்தது மட்டுமல்லாமல். அங்கு புலிகளின்  முடிவு  என்பது   தமிழர்களின் அரசியல் எதிர்காலம் என்ன என்பது என்று தெரியாமல் பெரும் சூனியத்திற்குள் தள்ளப்பட்டு நிற்கின்றது. தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வு அல்லது எதிர்காலம் என்ன என்பதே தெரியாமல் தங்களோடேயே அனைத்தையும் அழித்துக்கொண்டு தமிழர்களிற்கு இந்த வெற்றிடத்தை ஏற்படுத்தியதில் புலிகள் அமைப்பின் பங்கும் முக்கியமானது இது அனைவரிற்கும் தெரிந்த விடயம்தான் .
இப்படியாக தமிழ்த்தரப்பினை  முழுமையாக பலவீனப் படுத்தி முடித்துவிட்ட பேரினவாதம்  அடுத்தாக  இப்பொழுது கைவைக்கத் தொடங்கியிருப்பது தமிழ்பேசும் முஸ்லிம்கள் மீதுதான்.அதைப்பற்றி விபரமாக நான் இங்கு சொல்லததேவையில்லை.

இன்றைய  இலத்திரனியல் உலகத்தில் வினாடிக்கு வினாடி செய்திகள் பரவிக்கொண்டுதான் இருக்கின்றன. எனவே கடந்த காலங்களில்  முஸ்லிம் சமூகமானது  சில சுயநல அரசியல் வாதிகளினதும். இலங்கை ஆட்சியாளர்களது சூழ்ச்சிகளாலும்.குறுகிய நோக்கம் கொண்ட மதவாதிகளாலும் தவறாக வழிநடத்தப் பட்டதன் எதிரொலியாக  அவர்களிற்கும் தமிழர்களிற்கும் இடையில் தோன்றிய  முரண்பாடுகளால் இரு தரப்பிலுமே  பழிவாங்கல்கள் கொலைகள் கொள்ளைகள்   கிழக்கில்  தமிழ் கிராமங்கள்  மீதான் தாக்குதல்கள்  யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்களின்  வெளியேற்றம் என  இரு  இனங்களிற்கிடையேயும் பாரியதொரு இடைவெளி தோன்றி விட்டிருக்கின்றது. இந்த இடைவெளியை பயன்படுத்தி  இலங்கை ஆட்சியாளர்கள் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றி விட்டிருந்ததோடு அவர்களிற்கு உறுதுணையாக நின்ற  தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகளும்  வசதி வாய்ப்புக்களை அனுபவித்து விட்டார்கள்.
இப்பொழுது தமிழர் தரப்பு பலவீனப் பட்டு விட்டதன் பின்னர்  தங்களிற்கு  துணை நின்ற  தமிழ்தரப்பின் தேவைகள் ஆட்சியாளர்களிற்கு அற்றுப் போய் விட்ட நிலையில்  சிங்கள பேரினவாதம் தனது பார்வையை  முஸ்லீம்கள் மீது திருப்பியிருக்கின்றது. இப்படியான நிலையில் இதுவரை காலமும் ஆட்சியாளர்களிற்கு  முண்டு கொடுத்து வந்த முஸ்லிம் தலைமைகள்  ஆட்சியாளர்களை கண்டிக்கவும் முடியாமல் பாதிக்கப்பட்டவர்களை சமாதானப் படுத்துவதில் என்ன செய்வதென்று தெரியாமல் கைபிசைந்து நிற்கிறார்கள். எழுபதுகளில்  தமிழ் அரசியல் தலைமைகளை நம்பாமல் தமிழ் இளைஞர்கள்  எப்படி  பேரினவாதத்திற்கு எதிராக போராடத் தொடங்கினார்களோ  அதே போல இன்று பேரினவாதத்திற்கு எதிராக தங்கள் அரசியல் தலைமைகள் எதுவும் செய்யாது என்று நம்பிய  முஸ்லீம் சமூகம் தங்கள் எதிர்புக்களை காட்டத் தொடங்கி விட்டது.

இங்கு நான் பெளத்த சிங்கள இனவாதிகளை  பேரினவாதிகள்  என்று அழைப்பது எதனால் என்றால்  தமிழ் சமூகமும்  சிங்கள இனவாதத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாத அதேயளவு மூர்க்கத்தோடும் பழிவாங்கும் உணர்வுகளோடும் காலங்காலமாய்  தமிழினத்தை வழி நடாத்தியவர்களால் வளர்க்கப்பட்டுள்ளது. அதற்கு சாதாரணமான அண்மைக்கால உதரணம் ஒன்றையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.2009ம் ஆண்டு புலிகள் அமைப்பின்  முடிவின் பின்னர் நடந்த கடந்த தேர்தலானது  தமிழர்களிற்கு முக்கியமானதொரு தேர்தலாகவும் அந்தத் தேர்தல் முடிவுகளாவது தமிழர் அரசியல் சூனியத்தில் ஒரு ஒற்றையடி பாதையாவது காட்டி விடும் என்கிற நம்பிக்கை பலரிற்கு இருந்தது நான் உட்பட. அந்தத் தேர்தல் நெருங்கும்போது இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசியலிற்குள்ளும்  மாற்றம் ஏற்படுகின்றது.புலிகளை அழித்து வெற்றிக் கொடியேற்றிய இராணுவத்தளபதி பொன்சேகாவை  உண்மையான  சிங்கள வீரன் கெமுனுவின் வாரிசு என்று பதக்கம் குத்தி பாராட்டிய  மகிந்தாவிற்கும்  பொன்சோகாவிற்கும்.பங்கு பிரிப்பில் பிரச்சனை வந்து விடுகிறது...

அங்கையும் பங்கு பிரிப்பாலைதான் பிரச்சனை.. .....

இதனால் அவர் எதிரணிக்கு  தாவி தேர்தல் வேட்பாளராகிறார்.தமிழர் தரப்பில் புலிகள் அமைப்பு இருந்த காலத்தில் அவர்கள் ஆசீர்வாதம் பெற்று தமிழர் தரப்பில் பலமாக இருந்த  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு  தனித்து போட்டியிடுவதா அல்லது யாருடன் கூட்டு சேருவது என்று ஆலோசனைகள் நடாத்திக்கொண்டிருந்தார்கள்.அப்பொழுது சிங்கள இடதுசாரித் தலைவரான  விக்கிரமபாகு கருணாரட்ண தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக   இலங்கை வாழ் தமிழர்களிற்கு   பிரச்சனை உள்ளது நான் ஆட்சிக்கு வந்தால்  அவர்களும் இந்த நாட்டில்  சகல உரிமைகளோடும் வாழும்  சுய நிர்ணய முறையிலான  தீர்லை கொடுப்பேன் என்று அறிவிக்கிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தன்னோடு இணைந்து கொள்ளுமாறு  அழைப்பு விட்டு பேச்சு வார்த்தைகளும் நடந்தது அதே காலகட்டப் பகுதியில் விக்கிரமாபாகு  அவர்களின் செவ்வியொன்றை  பிரான்சில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி ஒன்றிற்காக செவ்வி காணுவதற்காக  அவரோடு தொடர்பு கொண்டு  அவரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது  தமிழர் தரப்பு தலைமைகள்  ஆதரவு தனக்கு எந்தளவு இருக்கும் என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் அவரிற்கு சொன்ன விடயம் என்னவென்றால் தமிழ் இனவாதம் என்பது  சிங்கள இனவாதத்திற்கு சற்றும் குறைவில்லாத ஒன்று. எனவே ஒரு இனவாம்  இன்னொரு இனவாதத்துடன் தான் கைகுலுக்கிக்கொள்ள விரும்புமே தவிர  உங்களைப்போன்ற இடதுசாரிகளுடன் கைகுலுக்கும் என்பது சந்தேகமே...ஆனாலும் முயற்சித்து பாக்கலாம் என்று கூறியிருந்தேன்.

அதே போல தமிழர்களிற்கு பிரச்சனை இருக்கின்றது அவர்களிற்கு சுய நிர்ணய அடிப்படையில் தீர்வு காணுவேன் என்று அறிவித்த விக்கிரமபாகுவை நிராகரித்து விட்டு  இந்த நாட்டில் எந்தப் பிரச்சனையுமே இல்லை  அவர்களிற்கு எதுவுமே கொடுக்கத்தேவையில்லை என்று அறிவித்த  பொன்சேகாவோடு கூட்டு சோர்ந்தார்கள். இங்கு ஒரு வரலாற்று உண்மையையும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்  1956 ஆம் ஆண்டு பருத்தித்துறை தொகுதியில்பி.கந்தையா எனும் கம்யூனிஸ்ட்டை நாடாளுமன்ற உறுப்பினாராய் தெரிவு செய்ததைத் தவிர வேறு எந்தொரு இடதுசாரியையும் தமிழ் மக்கள் தமது நீண்ட வரலாற்றில் தெரிவு செய்திருக்கவில்லை.

இங்கு சிங்களவர்களிடம் இனவாதமும் மதவாதமும்... தமிழர்களிடேயே  இனவாதம் இருக்கின்றது என்றில்லை முஸ்லிம்கள் மதவாதத்தால் தூண்டப்படுகிறார்கள். இங்கு ஒரு ஆறுதல் தமிழர் தரப்பு  இன்னமும் இலங்கையில் மதவாதத்தால் தூண்டப்படவில்லை..பிறகு அவர்களிற்குள்ளேயே  கிறீஸ்தவர்கள்  இந்துக்கள் என்று மோதிக்கொள்ளத் தொடங்கி விடுவார்கள். இங்கு தவறு எங்கு நிகழ்கிறதென்றால்  அந்த மக்களை வழிநடாத்தும் தலைமைகளாலேயே இவர்கள்  தவறாக வழிநடாத்தப்படுகிறார்கள். சரியான  சுயநலமற்ற தலைமைத்துவம் எங்கும் எந்த இனங்களிடேயும் இல்லை.
சரி பலகாலமாக வளர்க்கப்பட்ட இனவாதத்தை விட்டு  இப்பொழுதுள்ள  நடை முறைக்கு வருவம்.யுத்தம் முடிந்த பின்னர் புலிகள் அமைப்பில் இருந்த ஆயிரக்கணக்கான  பெண்போராளிகளின்  நிலை  மிக மோசமாக இருக்கிறது. பாவம் அவர்கள்.புலிகள் பலமாக இருந்த காலங்களில் தூக்கி தலையில் வைத்து கொண்டாடிய அதே சமூகத்தால்  அதே உறவுகளால் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்களை  முன்னை நாள் போராளிகள் என்று தூக்கி கொண்டாடச்சொல்லவில்லை  சாதரண ஒரு மனிதப் பிறவியாகவேனும் மதிக்கவில்லை  தமிழ் சமூகம்....இப்போ அண்மைக்காலத்திலும்  அல்ஜசீரா  தொலைக்காட்சியினர் முன்னைநாள் பெண் போராளிகளைப் பற்றி ஒரு விவரணம் தயாரித்திருந்தார்கள்.

 சில நேரங்களில் நீங்களும் பாத்திருக்கலாம்.. எனக்கு பார்க்கக்கிடைத்தது. அதை பார்த்தபோது அவர்கள்  ஒவ்வொருவரின் கதையையும் கேட்டால்  இந்த தமிழினத்திலை பிறந்தமே என்று வெட்கமாக இருந்தது. ஒருவர் சொல்கிறார் நான் பல வருடங்கள் போராளியாக  இருந்தவள் இரவு பகலாக காடுகள் எல்லாம் அலைந்தவள் யாராவது என்னுடன் பிரச்சனைக்கு வந்தால் அவர்களை தூக்கி அடித்து விரட்டும் தைரியம் என்னிடம் உள்ளது ஆனால் இப்பொழுது  இரவு ஏழுமணிக்கு மேலே வெளியாலை போகவே முடியவில்லை  அதற்கு காரணம் எனக்கு பயம் அல்ல என்னை சுற்றியுள்ள சமுகம்தான்  இரவு வெளியில் போனாலே   இவள் இந்த நேரம் எங்கை போறாள்???..............ஏதும் அப்பிடி இப்பிடி இருக்குமோ??....என்கிறார்கள் அதனால் நான் முடங்கிப் போய் இருக்கிறேன் என்கிறார்.. இன்னொருவர் சொல்கிறார் எங்கள் வீட்டில்  பப்பாளிப்பழம்  மரத்தில் பழுத்து தொங்குகிறது அது கீழே விழுந்து நாசமாகிப் போகாமல் அதை பிடுங்கி சாப்பிட ஆசையாய் இருக்கின்றது. அதன் அருகில் இருக்கும் மதிலில் ஏறி என்னால் பிடுங்க முடியும்  ஏனெனில் இயக்கத்தில் இதைவிட பெரிய மதில்களையெல்லாம் சாதாரணமாய்  தாவிப் பாய்ந்து  கடந்து சண்டையிட்டிருக்கிறேன்.மரத்தில் கூட என்னால் ஏறி பிடுங் முடியும் ஆனால் இந்த சிறிய மதிலில் ஏறவே  எனக்கு பயமாக இருக்கின்றது .. .........இவள் என்ன  ஆம்பிளையா  பொம்பிளையா???? என்கிறது சுற்ற உள்ள சமூகம்.

ஆகவே இங்கு   பெரும்பான்மை  அரசிடம்  இருந்து சிறுபான்மை இனங்களிற்கான  நிம்மதியான சுதந்திரமான  வாழ்க்கையை  பெற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லமல்  எங்கள் சமுகத்திடம் இருந்தும் இந்த முன்னை நாள் போராளிகள் குறிப்பாக பெண்போராளிகளிற்கும் நிதந்தரமானதும் சுதந்திரமாதுமான வாழ்வை பெற்றுக் கொடுக்க புலம் பெயர் சமூகம் அதாவது நாங்கள் என்ன செய்யலாம்....  அப்பாடா  சாத்திரி இப்பவாவதே ஒருமாதிரி தலைப்புக்கை வந்தானே என்று யோசிப்பீங்கள்....
யோசிக்கும்போது  நான் ஆரம்பத்தில் சொன்னதுபோல்  பொத்திக்கொண்டும் போக  முடியாது...அடுத்ததாக  கூறியது போல  இந்த யாகம் வளக்கிறது  ..ஜெனீவா நொக்கி நடப்பது ..காவடி எடுப்பது... இதனை பலர் செய்துகொண்டிருப்பதால். அவர்களே  அதனை தொடர்ந்து செய்யட்டும்.  ஆனால்  புலிகளின் வெற்றிகளின் போது  விசிலடித்து  மகிழ்ந்து  யுத்தத்திற்காக  பணம் கொடுத்தவர்கள்.  புலிகள்  சரியில்லை  அவர்களிடம்  ஜன நாயம் இல்லை  அவர்களின் போராட்டம் சரியில்லை.என்றவர்கள்..  வெளி நாட்டிற்கு வந்தாச்சு  அங்கை  இருப்பவர்கள் எக்கேடு கெட்டால்  என்ன  எங்களிற்கு புலியும் வேண்டாம் அரசாங்கமும் வேண்டாம்  என்று  ஒதுங்கி இருந்தவர்கள்  என்று அனைவரிற்குமே இலங்கைத் தீவில் வசிக்கும் எங்கள் உறவுகளின் இன்றைய இந்த நிலைமைக்கு  காரணம்..  புலம்பெயர் ந்து வாழும் அனைத்து  தமிழர்களும் ஏதோ வழியில்  காரணம்...இதனை யாரும் தட்டிக் கழிக்ககவோ மறுக்கவோ முடியாது. எனவே நாங்கள் இங்கு எம்மை பிரதிபலிக்கும் அமைப்புக்கள்.நாங்கள் சார்ந்த  சங்கங்கள்....சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததமிழன் இன்று புலம் பெயர் தேசமெங்கும் ஊர்சங்கம்..பழைய மாணவர் சங்கம். வர்த்தகர்  சங்கம் என ஏகப்பட்ட சங்கங்கள்  வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னத்தை வளர்க்கிறார்கள் என்பது எனக்கு  தேவையில்லாத விடயம்

. அதைவிட  எங்கள்  பிரதமர்  திரு  உருத்திர குமார் இருக்காக.....
ஆம். நாடு கடந்த தமிழீழ அரசு ..உலகத்தமிழர் பேரவை. பிரித்தானியத் தமிழர் பேரவை. எல்லா நாடுகளிலும் இருக்கும்  மக்கள் பேரவைகள். முக்கியமாக அனைத்து நாடுகளில் உள்ள வர்த்தகர் சங்கங்கள்.  அதை விட மிக   மிக முக்கியமாக  இலங்கைத் தீவில்  தமிழர் தரப்பையும். தமிழ் பேசும் முஸ்லீம்  தரப்பையும் பிரதிநிதித்துவ படுத்தும்  அமைப்புக்கள்.  காணரம் நாங்கள் என்னதான் வெளிநாட்டில் இருந்து  கத்தினாலும்  சர்வதேசம் என்பது  அங்கிருந்து வரும் குரலிற்கே  அதிகளவு   செவிமடுத்து மதிப்பளிக்கும். ஏனெனன்றால் பிரச்சனை அவர்களிற்கே தவிர எங்களிற்கல்ல..எனவே எல்லாருமே ஒரு பொது நோக்கத்தோடு இணைந்து  ஒவ்வொரு அமைப்பில்  இருந்தும் ஒரு பிரதிநிதியை  தேர்வு செய்து  ஒரு குழுவை  உருவாக்க வேண்டும்.  அந்தக் குழு  பேச்சு வா்த்தையில் ஈடுபடவேண்டும்.......

யாரோடு?????....பேச்சு வார்த்தையில் ஈடபடவேண்டும் எண்டிட்டானே யாரோடை  யாரோடை பேசிறதெண்டு சொல்லவேயில்லையே......??. இலங்கையரசோடு பேச்சு வார்த்தையில் ஈடுபடவேண்டும்..........

அப்பவே நினச்சம் ஜயா.சாத்திரி இதைத்தான் சொல்லுவானெண்டு...பெரிய தொகையா வாங்கியிருப்பானோ??? இலங்கை புலனாய்வுத்துறை  அனுப்பியிருக்குமோ??? இணக்க அரசியல்  செய்யச்சொல்லுறானோ????இப்படித்தான்  பலர் நினைக்க முதல்  எழுத முதல் கெதியா சொல்ல வந்ததை சொல்லிடுறன்.இதனை பேச்சுவார்த்தை என்பதை விட  ஒரு பேரம் பேசுதல். நிகோசியேசன்.இதனை நாங்கள் எங்கள் சார்ந்த அமைப்புக்கள் ஏன் ஈடுபடவேண்டும் என்றால்.எங்களிற்கான தீர்வை சர்வதேசமோ. அமெரிக்காவோ..ஜ.நா.சபையோ. இந்தியாவோ..வந்து வாங்கித் தருவார்கள் என்றும். ஒவ்வொரு ஆண்டும் ஜ.நா  கூடும்போது  இலங்கையரசிற்கு  எதிராக  தீர்மானம் கொண்டு வந்து  மகிந்தா அரசை கலைத்து போர்குற்ற விசாரணை நடாத்தி மகிந்தாவையும் கோத்தபாயாவையும். கொண்டு வந்து தூக்கில் தொங்கவிடுவார்கள் என்று கற்பனைகளிலேயே வாழ்ந்துகொண்டிருக்க முடியாது. ஏனென்றால்  மக்காளால் தெரிவு செய்யப் பட்ட  ஒரு நாட்டின் அதிபரை அது எந்த மக்கள்  என்றெல்லாம்  கிடையாது   அவர் பதவில் இருக்கும் போது  விசாரணையே செய்யமுடியாது  இது எல்லா நாட்டிற்கும் பொதுவான சட்டம்.  அப்படி எந்த நாட்டிலும் நடந்ததும் கிடையாது.அப்படியிருக்கும்போது  பதவியில் இருக்கும் மகிந்தாவை  அதுவும் போர் குற்றவிசாரநை நடத்தி தண்டனை கொடுப்பது என்பது  நடக்கவே நடக்காது.

அவரது பதவி பறி போனதன் பின்னர் அதற்கான சந்தர்ப்பங்கள் வரலாம் ஆனால் அவர் பதவி போவதற்கான சாத்தியங்களும் இப்போதைக்கு இல்லை. அதனால்தான் கற்பனைகளில் வாழவேண்டாம் என்று சொன்னேன்.  அடுத்ததாக    எம்மவர்களால்  நடாத்தப்படும் போர்குற்ற விசாரணை  போராட்டங்களில் பொன்சேகா  பெயர் இல்லை ஏனெண்டால் அவர் இப்ப நம்மாள்...
இந்தியா எங்கள் பிரச்சனையை  தீர்க்கவேண்டும் என்கிறார்கள் பலர். இந்தியாவில் ஆட்சிகள் மாறலாம் ஆனாலும் அதன்  வெளியுறவு கொள்கை வகுப்பு என்பதில் பெரிய மாற்றம் எதையும் எதனையும்  உடனடியாக நாங்கள் எதிர் பார்க்க முடியாது. இந்தியாவின் கொகை வகுப்பு என்பதே  இந்திய நலன் என்பதற்குமப்பால்  இந்திய கொள்கை வகுப்பளர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பே இந்தியாவின் கொள்கைவகுப்பாகின்றது  இந்த கொள்கை வகுப்பாளர்கள் தமிழர் நலன் என்பதை கணக்கில்  எடுத்தில்லை என்பது கடந்த காலங்களின் வரலாறு.இந்தியா தனது நலன்களிற்காக  இலங்கைத் தீவில் பிரச்சனைகளை உருவாக்குமே தவிர தீர்வை பெற்றுத்தரப் போவதில்லையென்னபதும்  எண்பதுகளில் இயக்கங்களிற்கு பயிற்சியளித்து ஆயுதம் கொடுத்தது வரலாறாகி நிற்கின்றது.அது மட்டுமல்ல அவர்கள் நினைத்திருந்தால் இந்தியப படைகள் இலங்கையில் இறக்கியிருந்தபோதே   இலங்கையரசிற்கு அழுத்தத்தை கொடுத்து  பிரச்னையை தீர்த்திருக்கலாம்.. ஆனால் புலிகள்தான் குழப்பினார்கள் என்பது  தங்கள் தவறை மறைப்பதற்கான வழுவல் பதில் என்பதே உண்மை..


இன்று தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம்  எம்மவர் எல்லாரது கவனத்தையும் திருப்பியிருக்கின்றது ..நல்ல விடயம். ..தமிழர்கள்  என்கிற  ரீதியில் அதற்கான தார்மீக கடைமை அவர்களிற்கும் உண்டு.ஆனால் அது இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பெரிய மாற்றம் எதனையும் இது கொண்டு வந்துவிடாது . ஏன்  ??சட்ட மன்றத்தில் முதவமைச்சர் ஜெயலலிதாவே  தீர்மானம் போட்டிருக்கிறாரே  என்று சொல்லலாம்.  அது கூட அடுத்த லோக்சபா  தேர்தலிற்காக  ஈழத் தமிழர் விவகாரத்தை   மீண்டும் தன் கையில் எடுத்து டெசோ  மூலமாக  தமிழ்நாட்டில் சரிந்த தனது செல்வாக்கை  மீண்டும் தூக்கி நிறுத்துவதற்காக  கருணாநிதி போட்ட திட்டத்தை  முறியடிக்க  சாதுரியமாக  மாணவர் போராட்டங்களிற்கு ஆதரவளித்து  சட்ட மன்றத்தில் தீர்மானத்தையும் நிறைவேற்றி மாணவர் போராட்டத்தால் எழுந்த  உணர்சியலையின் ஆதரவுகள் அனைத்தையும் அப்படியே தன்பக்கம் திருப்பி  அரசியல் சாதுரியத்தை காட்டி விட்டிருக்கிறார். ஜெயலலிதா..இது அவர்களது  அரசியல் என்றாலும்  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது  எமங்கு வந்தவரை இலாம்  என்பதோடு இதை வைத்துக்கொண்டு  நாங்கள் அடுத்த கட்ட அரசியலை எப்படி நகர்த்தப் போகிறோம்  என்தில் தான் மிகுதி தங்கியிருக்கின்றது. ஆனால் தீர்மானம் நிறைவேற்றிய  முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு வாழ்து சொல்வதோடு எம்மவர்களின் அமைப்புக்கள் நின்றுவிடும் என்பதே உண்மை..

அதே நேரம் இந்தியா என்பது 28 மானிலங்களையும்.  ஏழு யூனியன் பிரதேசங்களையும் கொண்டதொரு நாடு  28 மானிலத்தில் ஒரேயொரு மானிலம்  அந்த மானில அரசின் எந்த பிரதிநிதியும்  மத்திய அரசில் அங்கம் வகிக்கவில்லை  இப்படியானதொரு நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சரின் தீர்மானம்  மத்திய அரசில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.... தமிழ் நாடு அரசு   தமிழ் நாட்டின் நலன்களிற்காக நிறைவேற்றி கிடப்பில் கிடக்கும் தீர்மானங்களே  ஆயிரக்கணக்கில்  இருக்கின்றது.  அதை விட  மத்திய  அரசானது  தமிழ்நாட்டையும் தமிழர்களையும்  எந்தளவு  கவனத்தில்  எடுக்கின்றது  என்பதற்கு அண்மைய  உதாரணம். இரண்டு  மலையாள  மீனவர்களை இந்திய கடல் எல்லையில்   இத்தாலிய  கப்பல் சிப்பந்திகள்  சுட்டு கொன்றதும்  இந்தியா  எடுத்த  நடவடிக்கைளும்.  அதே நேரம்  இன்றுவரை  சுமார் நானூறு தமிழ்நாட்டு தமிழர்கள்  இலங்கை இராணுவத்தால்  கொல்லப்பட்டு  பலர் இலங்கை சிறையில் வாடினாலும்  அதற்காக  ஒரு கண்டனம் கூட தெரிவிக்காமல்   இலங்கை நட்பு நாடு என்று    அதனை தாங்கி பிடிக்கும்  இந்தியாவை  நாம் எவ்வளவு  தூரம் நம்பலாம். இது கேள்விதான்.
வெளிநாட்டவர்கள் எங்கள் பிரச்சனையில் தலையிட வேண்டாம் இது அண்ணன் தம்பி பிரச்சனை நாங்கள் அடித்து கொள்ளுவோம்  கட்டியும் பிடிப்போம் எனவே   இதனை எங்களிற்குள்  தீர்த்துக்கொள்கிறோம் என்று இந்தியாவிற்கு  பகிரங்கமாக அறிவித்திருந்தார்  அன்றைய இலங்கை ஜனாதிபதி  ரணசிங்க பிரேமதாசா.இலங்கைப் பிரச்சனையில் அவ்வளவு தெளிவோடு இருந்தவரையும் நாம் சரியாக பயன் படுத்தாமல்  .அனுப்பியாச்சு..

 அடுத்ததாக  சர்வதேசம். வருடா வருடம் ஜ.நா சபையில்  தீர்மானம் கொண்டு வரும். இந்த வருடமும் கொண்டு வந்தது. அடுத்த வருடமும் கொண்டுவரும். எம்மவர்களும் ஜெனீவாவிற்கு  போவார்கள்.  தீர்மானத்திற்கு  ஆதரவாக  25 நாடுகள் ..எதிராக   18 நாடுகள்  வாக்களித்தன..  10 நாடுகள்  வாக்களிப்பில்  கலந்து கொள்ளவில்லையென்று செய்திகளிள் வெளியாகும்.  ஆனால் தீர்மானம் என்னவென்றால்  இலங்கையில்  நடந்து முடிந்த   மேசமான  வன்முறைகளை   இலங்கையரசு விசாரிக்கவேண்டும்.  அதவது  இலங்கையில் நடந்தது படுகொலைகள் என்றோ  இனவழிப்பு என்றோ அங்கு  குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அதே நேரம் அதை அவர்களே  விசாரிக்கவேண்டுமாம். களவு எப்படி நடந்தது  கள்ளனே  விசாரிக்க வேண்டுமாம். தீர்மானம் நல்லாயில்லையா???? ஆகவே சர்வதேசமும்  தமிழரிற்கானதொரு தீர்விற்காக  இலங்கையரசின் மீது அழுத்தத்தை பிரயோகிக் போவதில்லை. அவர்களின அழுத்தங்கள் எல்லாம் இலங்கையரசை பணிய வைத்து தங்கள் சார்புநிலை  எடுக் வைத்து  தங்கள் பொருளாராதார  நலன்களை  பேணுவது மட்டுமே.

ஆகவேதான்  சாட்சிக் காரனை விட சண்டைக்காரனேடு  பேசுலாம் என்கிறேன். தனித் தமிழீழத்திற்கான  வாக்கொடுப்பு வேண்டும் என்று  தமிழகத்திலும் போராட்டங்கள்  சூடு பிடித்திருக்கிற நேரத்திலை   சில நேரம்  ஜ. நா சபையே  வாக்கெடுப்பு நடத்தி  தமிழீழத்தை வாங்கி  தந்தாலும் தரலாம்  இந்த நேரம் போய்  இந்த நேரத்திலை சாத்திரி  வேணுமெண்டே குளப்புறானே........

சரி  ஜ. நா சபையே நாளைக்கு  இந்த தீர்மானத்தை நிறைவேற்றி  இலங்கையில் வாக்கெடுப்பு  நடத்தி அதற்கு வாக்குகளும் விழுந்து விட்டது  என்று வைத்துக்கொள்ளுவோம். இப்போ தமிழீழத்தை கொண்டுபோய் யார்  கையில் கொடுப்பது.  சம்பந்தர் தலைமையிலால தமிழ் தேசியக்கூட்டமைப்பிடமா??? தமிழ்த்தேசியக்கூட்டமைப்பே இன்னமும்  பதிவு செய்யப் படாத கட்சியாக  உள்ளுக்குள் தமிழரசு  கட்சி தனியாகவும் மற்றைய கட்சிகள் தனியாகவும் குத்துப்பட்டக் கொண்டிருக்கிறார்கள். அப்படி கொடுத்தாலும் இங்கு  உடைனேயே   சைக்கிள்  சம்பந்தர் என்று தொடங்கிடுவார்கள்.. அடுத்தது  டக்லசிடமா????டக்லஸ் ஒட்டுக்குழு  துரோகி என்பார்கள்.  அங்கை உள்ள எல்லா மிச்ச எல்லா கட்சிக்கும் அதே பிரச்சனைதான்.  அதனாலை அங்கை விடுவம்  தமிழீழத்தை   இங்கு  நாடு கடந்த அரசு உருத்திர குமாரிடம் கொடுக்கலாமா??   முடியாதே   உருத்திரா கே.பின்  ஆள் என்கிறார்கள். சரி இந்த  ஜி. ரி. எவ்...  பி. ரி.. எவ்...   இவங்களும்  இடைக்கிடை  ஏதாவது  கூட்டம் வைக்கிறதாலையும் அறிக்கை விடுறதாலையும்தான்  இவர்கள் இருக்கிறதே தெரிய வருகிறது...  சரி அப்ப  வருசா வருசம் நடக்கும் ஒரேயொரு  மாவீரர் தினத்தை  இரண்டாக பிரித்து கொண்டாடுகிறார்களே  அவங்களிட்டை  கொண்டு போய் குடுக்கலாமா??.. தமிழீழத்தை பிரிச்சு குடுக்கலாமெண்டு  முடிவு செய்த ஜ. நா சபையே இப்ப குழம்பிப் போயிருக்கும்.  என்ன தான் செய்யலாம்  தமிழீழத்தின்  அரசாங்கத்தை நிருவகிக்க  தமிழீழத்  தமிழர்கள்  சரியான   தகுதியானவர்கள் யாருமே இல்லையே  என்ன செய்யலாம்  ஒரு மாறுதலுக்காக  கொண்டு போய் சீமானிடம் குடுக்கலாமா??? வை.கோ....நெடுமாறன்.... இவர்கள் தமிழ் நாட்டில் இருந்து  தமிழீழத்தை நிருவாகிக்கலாம்.  எப்பிடி ஜடியா??

ஆகவேதான் கேக்கிறேன் தமிழீழம் என்கிற கட்டமைப்பை ..தனி நாட்டை..  சிறப்பாக நிருவாக சீர்கேடுகள் இன்றி ..சுயநலம் இன்றி  தூர நோக்கோடு தமிழர்களின் எதிர்காலம் குறித்த  அக்கறைகளோடு  வழி நடாத்தக் கூடிய   ஒட்டு மொத்த தமிழர்களின்  நம்பிக்கைகளையும் பெற்ற  பலமானதொரு  அமைப்பு எம்மிடம் உள்ளதா??????........இல்லை.....அது மட்டுமல்ல அதனை யாரும் வாங்கித் தரப் போவதும் இல்லை. ... பக்கத்து நாட்டுக் காரனையும் வெளி நாட்டுக்காரர்களையும் நம்பி காலத்தை கழித்துக்கொண்டிருக்கப் போகின்றோமா??
அல்லது தமிழீழத்தை பெற்று அங்கு வாழ்வதற்கு  முதலில்  அங்கு தமிழர்கள் இருக்கவேண்டும்.  அவர்கள் நிலங்கள்  இருக்கவேண்டும் .  எனது நிலத்தில் எனது காணிக்குள் நின்றுதான் நான் எனது உரிமைகளிற்காக போராட முடியும்.  எனது நிலம் பறி போன பின்னர் எனது தேசம் பறிபோன பின்னர் .. எமது உறவுகள் எல்லாம் புலம் பெயர்ந்தும்  இறந்தும் போன பின்னர் வெளிநாட்டில் இருந்து கொண்டு கத்தி பிரயோசனம் இல்லை.. பலவந்தமான குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப் பட்டு  எங்கள் நிலங்கள் தக்கவைக்கப்படவேண்டும்.  முன்னைநாள் போராளிகள் பாதுகாக்கப்படவேண்டும். பெண் போராளிகளிற்கான சுதந்திரமானதும் பாதுகாப்பானதுமான வாழ்வு உறுதிப் படுத்தப் படவேண்டும்.  அதற்கு  நான்  முன்னர் கூறியது போல் அனைத்து  தமிழர் தரப்பையும்  தமிழ்பேசும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியதொரு  குழு அமைக்கப் பட்டு இலங்கையரசோடு பேச்சு வார்த்தைகளை  தொடங்கவேண்டும்.  அந்த பேச்சு வார்த்தைகள்  ஊடாக  சிறுபான்மையினரின் பாது காப்பு உறுதிப் படுத்துவதோடு  அவர்களிற்கு  காவல்த்துறை  மற்றும் காணி அதிகாரங்களுடன் கூடிதொரு  நிருவாக சபை ஆட்சியமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்..  அதன் மூலமாக விழுந்து போய் உள்ள எமது மக்களை  தூக்கி நிறுத்த முடியும்.  அவர்கள் அரசியல் ரீதியாகவும்  பொருளாதார ரீதியாகவும் மீண்டும் நிமிந்ர்து நிற்க பல ஆண்டுகள்  எடுக்கும். அப்போ இங்கு பேசிக் கொண்டிருக்கின்ற நாங்கள் எல்லாம் இருப்போமா தெரியாது. ஆனால்  அந்த மண்ணில் வாழ்கின்ற மக்கள்  தாங்களாக நிமிர்ந்து நின்ற பின்னர் தங்களிற்கு என்ன தேவையோ அதனை அவர்களே தீர்மானிப்பார்கள்.

முருகதாசனின் மரணத்தின் மர்மமும் ஒரு ஒப்புதல் வாக்கு மூலம்.

4:49 PM, Posted by sathiri, No Comment

  அண்மையில் நான்  எது வரை  என்கிற இணைய  சஞ்சிகைக்கா  எழுதிய  தியாகிகளும் துரோகிகளும்  என்கிற  கட்டுரையில். ஜெனிவாவில்  தீக்குளித்து  இறந்து போன  முருகதாசன் மரணத்தில்  சில சந்தேகங்களை  எழுப்பியிருந்தோன். அதற்கு புலிகள் அமைப்பில்  சமாதான காலத்தில் தொடங்கப் பட்ட வன்னி ரெக் என்கிற அமைப்பில் இணைந்து பின்னர் இறுதி யுத்தத்தின் போது  வெளிநாட்டு  தொலைத் தொடர்பாளராக  பணிபுரிந்து  முள்ளி வாய்கால் இறுதி யுத்தத்தின் பின்னர் ஸ்கன்டிநேவியன்  நாடு ஒன்றில்  தஞசமடைந்திருந்து  அபிராம் என்கிற புனை பெயரில் எழுதுபவரால் முருகதாசன்  தற்கொலைக்கு தூண்டப் பட்டு     இறந்து  பேனான்  என்று எழுதப் பட்ட எதிவினை  இங்கு  கீழே.
2009 தை மாசம் இருப்தேட்டாம் திகதி, இரணைப்பாலை சந்திக்கு புறமாக ஆனந்தபுரத்தின் தென்னந்தோப்புகளுக்கு நடுவில் அமைந்திருந்த, விடுதலைபுலிகளின் புலனாய்வுத்துறை செய்மதி தொலைத்தொடர்பு மையத்துக்கு, லண்டனில் இருந்த புலனாய்வு முகவரிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்புக்குரியவர் ஞானவேல் அண்ணைக்குரிய முகவராவர். அவர் ஞானவேல் அண்ணைக்கு ஒரு முக்கிய செய்தியை சொல்லுவதற்காக அந்த அழைப்பை எடுத்திருந்தார். 
அந்த செய்தியை என்னிடம் சொல்லும்படி, நான் ஞானவேல் அண்ணையிடம் சொல்லுகிறேன் என்று சொன்னபோது, அவர் லண்டனில் ஒரு பெடியன், புலம்பெயர் தேசங்களில் ஒரு எழுச்சி வேண்டும், தனியே எங்களுக்காக தமிழக தமிழர்கள் தான் தீக்குளிப்பார்களா, நாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிப்பதாக ஒரு பெடியனை அறிமுகபடுத்தினார். அவன் தான் முருகதாஸ்.
நான் அவனுடன் பேசிய போது, ஏதாவது ஒரு எழுச்சி வேணும் அண்ணே. நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும். புலம்பெயர் தேசங்களில் ஒரு மக்கள் எழுச்சி வந்தால் மட்டுமே உங்க நடக்கிற சண்டையை நிப்பாட்ட முடியும் என்று தெளிவாக உறுதியாக பேசினான். ஒரு ஈழத்தமிழன் புலம்பெயர் தேசத்தில் தன்னை ஆகுதியாக்கும் தெளிவுடன் பேசியது என்னை கொஞ்சம் அதிர வைத்தது. அலைபேசியில் ஞானவேல் அண்ணையை தொடர்பு கொண்டு விடயத்தை தெளிவுபடுத்தினேன். 
சில மணி நேரங்களில், தமிழ்குமரனுடன் ஞானவேல் அண்ணை, எங்களின் முகாமுக்கு வந்திருந்தார். முருகதாசுடன் தெளிவாக பேசினார். எழுச்சிக்காக மக்கள் விடிவுக்காக இவ்வாறான தியாகங்கள், புலம்பெயர்நாடுகளில் பெரிதாக எடுபடாது என்று சொன்னார். முருகதாஸ் அவனது முடிவில் உறுதியாக இருந்தான். அவன் ஞானவேல் அண்ணாவிடம் இரண்டு கோரிக்கைகள் வைப்பதற்காகவே தொலைபேசி அழைப்பை எடுத்ததாக கூறினான்.
முதலாவது கோரிக்கை தனது சாவின் மூலம் ஏற்படும் அந்த எழுச்சியை புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்க கூடிய கட்டமைப்பு, ஒழுங்கமைப்புகளை செய்யும்படி கோரி இருந்தான்.
இரண்டாவது தனது சாவுக்கு முன்னர் ஒரு தடவையாவது தலைவர் அல்லது பொட்டு அம்மானுடனாவது பேசவேண்டும் என்று கோரி இருந்தான். 
இந்த கோரிக்கைகள் குறித்து அம்மானிடம் பேசி ஒரு முடிவுக்கு வருவதற்கு கால அவகாசத்தை கோரி இருந்தார் ஞானவேல். பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு பிறகு அம்மான் ஒழுங்குகளுக்கான ஒப்புதல் அளித்திருந்தார். இருந்தாலும் நிச்சயமாக வெளிநாட்டு ஊடகங்களும் அரசாங்கங்களும் இவ்வாறான நிகழ்ச்சிகளை இருட்டடிப்பு செய்யும் என்று குறிப்பிட்டார்.
மிகவும் இரகசியமான இந்த ஒப்புதல் ஞானவேல் அண்ணை தலைமையிலான ஒரு குழுவுக்கு வழங்கபட்டிருந்தது. அதில் ஞானவேல் அண்ணா, தமிழ்குமரன், சிறி அண்ணா, நான் இடம்பெற்று இருந்தோம். 
திரும்பவும் மாசி மாதாம் இரண்டாம் திகதி முருகதாசுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்ட நாம், தீக்குளிப்பு பின்னரான எழுச்சிக்கான பொறுப்பை கையாளுவதற்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக முருகதாசிடம் குறிப்பிட்டோம். இரண்டாவது கோரிக்கையை நிறைவேற்ற முடியாமைக்கான காரணங்களை விளக்கி இருந்தோம். எங்களுக்கு தீக்குளிப்புகான திகதியை கோரி இருந்தோம். 
தனக்கு லண்டனில் சில கடமைகள் செய்துமுடிக்க வேண்டிய தேவை இருப்பதால் மாசி 12 ஆம் திகதியை தெரிந்தெடுத்திருப்பதாக குறிப்பிட்டான். ஒரு கரும்புலிக்கு நிகரான சாதனையை செய்ய போகும் அவன் மனசில் இருந்த வீரமும் தெளிவும் இன்னமும் எங்களை போராட்டத்தை விட்டு விலகி செல்லவிடுகுது இல்லை. 
வான்புலிகள் கொழும்பிலே ஒரு தாக்குதலை நடாத்த திட்டமிட்டிருப்பதை தெரிந்து கொண்ட நாங்கள், அதற்கு முதல் இந்த நிகவு இடம்பெற வேண்டும் என்று மட்டும் தான் மனசிலே நினைத்து இருந்தோம். அது போலவே முருகதாசும் மாசி 12 இனை தெரிந்தெடுத்திருந்தான்.
மாசி 10, காலை எங்களுக்கு அனுப்பிய ஈமெயில் இல், அவன் தீக்குளிப்புக்கு பின்னர் வெளியிட வேண்டிய கடிதத்தின் நகலை தட்டச்சு செய்து அனுப்பி இருந்தான். எங்களுக்கு அதில் ஏதும் மாற்றம் செய்ய வேண்டி உள்ளதா என்று கேட்டு அனுப்பி இருந்தான். மக்களை எழுச்சி கொள்ள செய்ய அதில் ஏதும் வசனங்களை சேர்க்க வேண்டுமாயின் சேர்க்க சொல்லி குறிப்பிட்டு இருந்தான். நாங்கள் சில வசனங்களை அவனின் தியாகம் மூலமாவது மக்கள் எழுச்சி கொள்ள வேண்டும் என்று சேர்த்திருந்தோம். அவற்றை அச்சுபிரதி எடுத்து அவற்றை தன்னுடனேயே வைத்திருந்தான்.
தனது கடமைகளை முடித்து கொண்ட முருகதாஸ் சுவிசுக்கு பயணமாகி தனது நண்பர்களுடன் தங்கி இருந்தான். அவர்களுக்கு கூட தான் சுவிஸ் வந்ததன் நோக்கம், தான் செய்ய போகும் தியாகம் பற்றி குறிப்பிடவில்லை. 
இவ்வளவும் ஏன் தன்னை பெற்ற தாய் தந்தையருக்கு கூட அவன் தான் செய்ய போகும் தியாகம் பற்றி குறிப்பிடவில்லை. 
மாசி 12 
எங்களது செய்மதி பரிவர்த்தனையும் சரியாக வேலை செய்யவில்லை, அண்மையில் நடந்த கிபிர் தாக்குதல், மறைப்புகள், receiver இருந்த பிரச்சனைகள் காலையில் இருந்தே எங்களுக்கு கரைச்சல் கொடுத்துகொண்டிருந்தது. எங்களுக்கோ பதபதைப்பு இன்றைக்கு நினைச்சபடி முருகதாஸ் சாதிப்பான என்ற பததைப்பு மட்டுமல்ல. ஒரு கரும்புலிக்கு நிகரான வீரனின் தியாகம் வீண்போக கூடாது என்று பதபதைப்பு. 
மாலை ஆறுமணிக்கு பின்னர் தான் எங்களின் தொழிநுட்பவல்லுநர்களின் கடுமையான முயற்சிக்கு பின்னர் தொலைத்தொடர்பு கருவிகள் இயங்க ஆரம்பித்தன. பிபிசி முக்கிய அறிவிப்பாளருடன் தொடர்பு கொண்ட சிறி அண்ணா உங்களுக்காக ஒரு முக்கிய செய்தி இன்னும் கொஞ்ச நேரத்தில் கிடைக்கும் தயவு செய்து இருட்டடிப்பு செய்யாமல் ஒலிபரப்பு செய்யுங்கள் என்று கேட்டுகொண்டார். எங்களுடன் தொடர்பை ஏற்படுத்த நிறையதடவை முயன்றும் தொடர்பு கிடைக்காமல் கூட தனது கடமையில் தவறாத அந்த வீரன் மாலை 8 மணிக்கு  எங்களை தொடர்பு கொண்ட போது கொஞ்சம் படபடப்புடன் பேசினான்.
அண்ணே நான் நினைத்த மாதிரி மாலை 4:30 இற்கு ஐ நா வாசலை அடைய முடியாது. புகையிரதம் தாமதமாக உள்ளது. இனி டாக்ஸி பிடித்து போனால் கூட அது வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கும். கொஞ்சம் தாமதமானாலும் நான் அந்த இடத்துக்கு சென்று எப்படியும் தீக்குளிப்பேன் என்று குறிப்பிட்டான். அவனுக்குள் இருந்த அந்த உறுதி தளரா வீரம் எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. ஐநா பணியாளர்கள் வேலை முடித்து திரும்பும் வேளையில் தீக்குளிப்பதன் மூலம் தான் ஒரு செய்தியை கூற முடியும் என்று நம்பிய நாங்கள். அவனை அந்த திட்டத்தை கைவிட்டு நாளைய தினத்துக்கு மாற்றும் கேட்டு கொண்டோம். 
அதற்கு அவன் இல்லை அண்ணே, நாளை மறுதினம் காதலர் தினம், நான் நாளைக்கு தீக்குளித்தால் காதல் தோல்வியால் தீக்குளித்த மாதிரி ஆகிவிடும் என்ன ஆனாலும் இன்றே செய்கிறேன் என்று உறுதியோடு கூறினான். அவன் ஐநா இடத்தை அடையும்போது ஐந்துமணியை தாண்டி இருந்தது. இறுதியாக சில வசனங்கள் பேசினான். நாங்கள் அவனுக்கு பொட்டம்மான் சொன்ன செய்தியை சொன்னோம். 
என்னுடைய இந்த சாவு இங்கே ஒரு பெரிய எழுச்சியை உருவாக்கும். அது தலைவரை, உங்களை, எங்கள் மக்களை காப்பாத்தும் என்ற நம்பிக்கையில் தான் நான் எரிகிறேன். இங்கே நிறைய கூட்டம் இல்லை. பஸ் ஸ்டாண்டில் ஒன்று இரண்டு பேர் நிக்கிறார்கள். நான் கடிதத்தை என்னுடன் வைத்திருந்தால் எரிந்துவிடும். பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில் பறக்காமல் கல்லு வைத்து வைத்துவிடுகிறேன். உங்கட ஆட்களை விட்டு எடுக்க சொல்லுங்க அண்ணே. எனக்கு தெரியும் இங்கே சில நேரம் உங்கட ஆட்கள் நிப்பினம். அவையிடம் சொல்லுங்கோ நான் என்ன கத்தினாலும் என்னை காப்பாத்த வரவேண்டாம் என்று சொல்லுங்கோ. தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்று சொன்னான்.
இவை தான் அவனின் கடைசி வரிகள்.
பார்த்த எங்களின்  முகவர்கள் சொன்னார்கள், அவன் குளிர் தாங்கும் ஜாக்கெட்டுடன் தான் எரிந்தான். அவை உருகி அவன் உடலில் படும்போதும் Stop the War in Sri Lanka என்று கத்தி கொண்டதுதான் இருந்தான். தன்னுடலில் எரிகிறதே என்று விழுந்து படுத்து உருள கூட இல்லை. கடைசி நிமிடங்களில் என்ன நினைத்தானோ ஐ நா வாசலை நோக்கி ஓடினான். வாசலை அடையும் முன்னே நிலத்தில் வீழ்ந்துவிட்டான். அவனின் கரிய புகை மட்டும் வானை நோக்கி எழும்பி கொண்டிருந்தது. அது மக்களுக்கு விடிவைதேடி தரும் என்ற நம்பிக்கையில் அந்த தியாக வீரன் உயிரை விட்டிருந்தான்.
சுவிஸ் காவல்துறை இதை ஒரு சாதாரண தற்கொலையாக பதிவிட்டு எங்கோ ஒரு மூலையில் செய்தி போட்டது. BBC அன்றைய நாளில் சொல்லாமல் அடுத்த நாளில் அவனது கோரிக்கைகள் கூட சொல்லாமல் ஒரு சாதாரண செய்தியாக வெளியிட்டது.
இன்று அந்த குழுவில் ஞானவேல் அண்ணே வீரச்சாவு , தமிழ்குமரன் இல்லை, சிறி அண்ணா இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் வீரச்சாவு.
தன் சாவில் கூட உறுதியோடு இருந்த ஒரு தியாகியின் சாவை கொச்சைபடுத்தும் ஒரு கட்டுரையை பிரசுரித்த பிறகும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை.முருகதாசின் பெற்றோருக்கு கூட தெரியாத இந்த இரகசியம் என்னுடன் அழிய கூடாது. அழிந்தால் இந்த சாத்திரி மாதிரி ஆயிரம் சாத்திரிகள் தங்களின் எண்ணத்துக்கு கட்டுரைகளை எழுதி சாவு வியாபாரம் நடத்தும். அதை பிரசுரிக்க என்று இணையத்தளங்கள் அலையும். புலிகள் தான் அழிந்தார்கள். அதற்காக உண்மையை சொல்ல ஒருவரும் இல்லை என்று நீங்களே கதைகள் எழுதாதீர்கள். இது அதைவிட ஈனத்தனமான செயல்.
இந்த இரகசியத்தை எழுதியமைக்காக புலனாய்வுத்துறை என்ன தண்டனை தந்தாலும் நான் ஏற்க தயார். ஆனால் அந்த தியாகவீரனின் தியாகத்தை நீங்கள் எழுச்சியாக மாற்ற முடியாவிட்டாலும், தயவுசெய்து கொச்சைபடுத்தாது விடுங்கள்.
நன்றி வணக்கம்

*தியாகிகளும் துரோகிகளும்- சாத்திரி

2:17 PM, Posted by sathiri, No Comment

 



ழத்திற்கான ஆயுத விடுதலைப் போராட்டம் என்பதன் ஆரம்பமே ஆயுதப் போராட்டங்களை வழிநடத்தியவர்களின் துப்பாக்கிகள் , முதன் முதலில் எதிரியானவர்களை நோக்கி நீளாமல் துரோகிகளாக இனம் காணப்பட்டவர்களை நோக்கியே நீண்டது. ஏனெனில் எதிரியை விட துரோகியே ஆபத்தானவன் என்பது பொதுவாகவே உலகமெங்கும் ஆயுதப்போராட்டங்களை நடத்திய விடுதலை இயக்கங்களின் தாரக மந்திரமாகவே இருந்தது. அது எமது விடுதலைப் போராட்டத்தில் கொஞ்சம் தூக்கலாகவே இருந்துவிட்டது.மேடைகள் தோறும் தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் துரோகியாக வர்ணிக்கப்பட்ட சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை என்னும் செய்தி இலங்கைத் தீவில் பெரும் அரசியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது மட்டுமல்லாமல் துரேக அழிப்பு என்று பெருமையாக மக்களால் கொண்டாடப்பட்டதோடு தொடங்கி துரையப்பாவின் கொலைக்கு மறைமுக ஆதரவுகளை வழங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கமும் அதே துரோகப்பட்டியலில் இணைக்கப் பட்டு கொல்லப்

பட்டார்.இப்படியாக ஈழ விடுதலைப் போராட்டத்தில் துரோகிகளாக இனம் காணப்பட்டு கொல்லப்பட்டவர்களின் பட்டியல் என்பது மீக நீளமானது.
துரோகிகள் என்று போட்டுத் தள்ளியதில் ஈழத்து அனைத்து விடுதலைப் போராட்ட இயக்கங்களும் ஒன்றிக்கொன்று சளைத்தலையல்ல.இறுதியில் மிஞ்சிய இயக்கங்களை துரோகிகளாக்கி போட்டுத் தள்ளியபடியே புலிகள் இயக்கம் மட்டும் மக்களிற்கான விடுதலையை பெற்றுத்தரும் போராட்ட இயக்கமாக தனித்துநின்று ,2009 மே மாதத்தோடு அதுவும் முடிந்துபோய்விட்டது. விடுதலை இயக்கங்களாலும் முஸ்லிம் குழுக்களாலும் தங்களிற்குளேயும் வெளியேயும் மாறி மாறி கொல்லப்பட்ட அந்த அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின் எண்ணிக்கை என்பது எங்கள் பொது எதிரி என விடுதலை இயக்கங்களால் இனம்காணப்பட்ட இலங்கை இராணுவத்தால் கொல்லப் பட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் தொகையோடு ஒப்பிடும்போது இரண்டிற்கும் பெரியளவு வித்தியாசம் இருக்கப்போவதில்லை.


இதில் வேடிக்கை என்னவென்றால் எமது விடுதலைப் போராட்டத்தில் தியாகிகள் துரோகிகளாகியும். துரோகிகள் தியாகிகள் ஆன விந்தையான வரலாறும் கூட உண்டு. அதற்கு ஒரு சில உதாரணங்களாக துரோகிகளாக கருதப்பட்ட அமிர்தலிங்கம் சுடப்பட்டபோது சூடுவாங்கி மயிரிழையில் உயிர் தப்பிய சிவசிதம்பரமும். புலிகள் அமைப்பின் பரம எதிரியான புளொட்டின் முக்கிய உறுப்பினர் தாராகி சிவராமும் தியாகிகளாகியும் அதே நேரம் மக்களிற்காகவும் அந்த மண்ணிற்காகவும் உயிரைக்கொடுத்து தியாகிகளாக போராட வந்த மாத்தையாவோடு சேர்ந்த சுமார் முன்னூறிக்கும் அதிகமானவர்களும்.கருணாவோடு சேர்ந்து சுமார் அறுநூறு பேர்வரை துரோகிகளாக்கப்பட்டு கொல்லப்பட. கருணாவும் இன்னும் சிலர் மட்டும் உயிர்தப்பிவிட்டார்கள் .இதே கருணா மீண்டும் தியாகியும் ஆகலாம் நடக்காது என்று சொல்வதற்கில்லை.


இங்கு தியாகி துரோகி என்பதை யார் தீர்மானிக்கிறார்கள் என்றால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பலமானவர்களாலும் கையில் ஆயுதங்கள் உள்வர்களாலுமே தீர்மானிக்கப் படுகின்றது. இங்கு முக்கிய விடயம் என்னவென்றால் ஆயுத விடுதலைப் போராட்டத்தின் போது சேர்ந்தே தாயகத்தில் தொடங்கப்பட்ட இந்த தியாகி துரோகி விளையாட்டு இன்றைய நிலையில் அங்குள்ள மக்களினால் மறக்கப்பட்டு அவர்கள் தங்கள் வாழ்வாதாரப் போராட்டத்தில் இறங்கிவிட , தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் பரவிவிட்டது மட்டுமல்லாமல் இது ஒரு மன நோயாகவே மாறிவிட்டிருக்கின்றது.அதற்கு வலுச் சேர்ப்பது புலம்பெயர் தமிழர்களால் நடாத்தப் படும் இணையத் தளங்களாகும்.


தமிழில் இணையத் தளம் நடாத்துவதென்பது புலம்பெயர் தேசங்களில் குடிசைக் கைத்தொழில் போல் ஆகிவிட்டது. ஒரு கணணியும் தமிழில் தட்டச்சும் செய்யத் தெரிந்தால் அவர் ஒரு செய்தி இணையத் தளத்தை நடாத்துவார் என்பது மட்டுமல்ல தினமும் பிரதான செய்தித் தளங்களில் வெளியாகும் செய்திகளை எடுத்து தலைப்பை மட்டும் தனகோற்றவாறு கவர்ச்சிகரமாக மாற்றத் தெரிந்துவிட்டால் அவர் பத்திரிகையாளராகவும் மாறிவிட்டிருப்பார். அதே நேரம் செய்திகளின் கீழ் தாயகத்திலிருந்து எமது செய்தியாளர் என்று அவர் போடத் தவறுவதும் இல்லை.இப்படி இங்கு இணையத் தளம் நடத்தும் ஒருவரிற்கு யார் யாரையெல்லாம் பிடிக்காதோ அவர்களெல்லாம் துரோகிகள்தான்.


புலம்பெயர் நாடுகளில் பெருமளவான இணையத் தளங்களை நடாத்திக் கொண்டிருப்பவர்கள் புலிகள் அமைப்பின் வெளிநாட்டுக் கிளைகளாக இயங்கிய அனைத்துலகச் செயலகத்தை சேர்ந்தவர்களே.அதே நேரம் புலிகள் அமைப்பின் பெருமளவான சொத்துக்கள் இன்னமும் இவர்கள் கைகளிலேயே தங்கியிருப்பதால் இன்றைய நிலவரப்படி பணபலம் மற்றும் இணையத்தளங்களின் பலத்தோடு தமிழர்கள் புலம்பெயரந்து வாழும் நாடுகளில் இவர்களே தியாகிகளையும் துரோகிகளையும் தீர்மானிக்கிறார்கள்.முன்னைய காலங்களில் தாயகத்தில் இயக்கங்களால் துரோகிகள் என தீர்மானிக்கப்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப் படுவார்கள். பின்னர் புலிகள் தங்கள் கட்டுப் பாட்டுப் பகுதிகளில் சிறைகளில் அடைத்தார்கள். ஆனால் வெளிநாடுகளில் இவை இரண்டையுமே புலிகளின் அனைத்துலகச் செயலகத்தினரால் செய்யமுடியாது என்பதால் துரோகியாக்கப்பட்டவரின் படத்தோடு தங்களால் இயக்கப்படும் இணையங்களில் இவர் இலங்கை புலனாய்வுத் துறையோடு சேர்ந்து இயங்குகிற கைக்கூலி என பதிவிட்டபின்னர் இராணுவத்தில் லெப்ரினன்ற்.லெப்.கேணல். கேணல் என தர வரிசை வழங்குவது போல் துரோகியாக்கப் பட்டவரிற்கு மேலதிகமாக தர வரிசை பதவிகள் வழங்கப்படும். அந்த மேலதிக தர வரிசைக்காக அவர்கள் பயன்படுத்துவது டக்லஸ் தேவானந்தா, பிள்ளையான் ,கருணா, கே.பி ஆகியோரோடு சேர்ந்து இயங்குகிறார் என்பதுதான்.


கே.பி யின் வருகைக்கு பின்னர் துரோகப் பதவி கொடுப்பவர்களால் டக்லஸ் பின்னிற்கு தள்ளப்பட்டு விட்டார்.கே.பி யோடு சேர்ந்து இயங்குகிறார் என ஒருவரிற்கு வழங்கப்படும் துரோகிப் பட்டம்தான் மிக உயர்ந்த லெப்.கேணல் அல்லது தளபதி துரோகிப்பட்டம் ஆகும். அத்தோடு இவர்களிற்கு இந்த உலகநாடுகளின் உளவமைப்புக்களில் தெரிந்த இரண்டேயிரண்டு உளவமைப்புக்களின் பெயரான இந்திய றோ..வின் கைக்கூலி மற்றும் அமெரிக்காவின் சி.ஜ.ஏ.ஏஜெண்ட்.என்கிற வசனங்களையும் சேர்ந்து விடுவார்கள். இப்படி அண்மையில் அனைத்துலகச் செயலகத்தினரால் தங்கள் இணையத் தளங்களில் துரோகிகளாக அறிவிக்கப்பட்டவர்கள்தான் முருகதாசனின் பெற்றோர்கள்.
யார் இந்த முருகதாசன் ஏன் அவரின் பெற்றோர்கள் துரோகியாக்கப்பட்டார்கள் என்று இனி பாரக்கலாம். புலிகளிற்கும் இலங்கையரசிற்குமான யுத்தம் இறுதிக்கட்டத்தை இலங்கையில் அடைந்துகொண்டிருக்கும் போது 2009 ம் ஆண்டு மாசி மாதம் 12 ம் திகதி வியாழக் கிழைமை இரவு சுவிஸ் நாட்டில் ஜெனீவா ஜ.நா சபைக்கு முன்பாக இலண்டனில் இருந்து வந்து தீக்குளித்து இறந்து போகிறார் முருகதாசன் என்கிறவர். இதற்கு முன்னரேயே தமிழ் நாட்டில் முத்துக்குமார் என்பவர் இதே ஈழத் தமிழர்களிற்காக தனது கைப்பட கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்து போயிருந்த சம்பவம் நடந்திருந்தது.அந்தச் சம்பவத்தால் தமிழ்நாட்டு இளையோர் மாணவர்களிடையே ஈழத் தமிழர்களிற்கு ஆதரவாக ஏற்பட்டதொரு எழுச்சியானது தமிழ் நாட்டு அரசியல் வாதிகளினால் சிதைந்து சின்னாபின்னமாகிப் போனது வேறு கதை. அதில் எந்த கட்சிகளுமே சளைத்தவர்கள் அல்ல என்று நிருபித்திருந்தார்கள்.


அதே போல முருகதாசனின் மரணமும் புலம்பெயர் தமிழர்களிடம் ஒரு உணர்வு ரீதியான எழுச்சியை கொடுத்திருந்தது என்பது உண்மை.அதே நேரம் முருகதாசனின் மரணத்தின் பின்னால் பல சந்தேகங்களும் இருக்கவே செய்கின்றது .அவை என்வெனில்,முருகதாசன் இலண்டனில் இருந்து ஜெனிவா நோக்கி ஒரு பச்சைக் நிற காரில் நண்பர்களோடு புறப்பட்ட வீடியோ ஒளிப்பதிவென்றை பிரித்தானிய காவல்த்துறையினர் கைப்பற்றி விசாரணைகளும் நடாத்தியிருந்தார்கள்.அடுத்ததாக ஈழத் தமிழர்களின் படுகொலைகளையும் அவர்களது நிலைமையையும் சர்வதேசத்திற்கும் ஜ.நா சபைக்கும் எடுத்துச் சொல்லி அதனை தடுத்து நிறுத்தக்கோரி தீக்குளித்தவன் எதற்காக ஜ.நா சபை சுற்றாடலில் யாருமேயற்ற இரவு நேரம் தீக் குளித்தான்?.முருகதாசன் தீக்குளித்து இறந்து போய் நீண்ட நேரத்தின் பின்னராகவே தீயணைக்கும்படையினர் அந்த இடத்திற்கு வந்துள்ளனர் .எனவே முருகதாசனுடன் சென்றவர்கள் அதுவரை என்ன செய்தார்கள்? அவர்கள் யார்??. ஈழத்தமிழர் விடயத்தில் சர்வதேசம் தலையிட வேண்டும் என முருகதாசனால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் ஏழுபக்க அறிக்கை என்று இணையத் தளங்களில் மட்டுமே செய்தியாக வெளியாகியிருந்தது. அதன் மூலம் எங்கும் இல்லை.

குடும்பத்தின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த முருகதாசன் தனது இறுதிக் கணம் வரை தனது பெற்றோருடன் தொடர்பு கொள்வேயில்லை. அவன் இறந்துபோன செய்தியை மறுநாள் மாலையளவில் செய்திகளை பார்த்தே அவர்கள் அறிந்து கொண்டிருந்தார்கள். அதுவரை அவர்களிற்கு தங்கள் பிள்ளை எங்கே இருக்கிறான் என்றே தெரிந்திருக்கவில்லை இப்படி ஏகப்பட்ட கேள்விகளும் சந்தேககங்களும் முருகதாசனின் மரணத்திற்கு பின்னால் இருந்தாலும். ஒரு இனத்தின் அவலத்தை நினைத்து தனது உயிரையே ஆகுதியாக்கியாக்கிவன் என்கிற காரணத்திற்காக அதைப்பற்றி ஆராச்சி செய்யாமல். அடுத்த கட்டத்திற்கு போவோம்.

முருகதாசனின் மரணத்திற்கு பின்னர் முருகதாசனிற்காக இலண்டனில் ஒரு நினைவிடம் எழுப்ப வேண்டும் என அவரது பெற்றோர்கள் விரும்பினார்கள். அதற்காக முருகதாசன் அறக்கட்டளை என்கிற பெயரில் ஒரு அமைப்பினை தொடங்கி நினைவிட கற்களை இந்தியாவில் செய்வதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கியிருந்தார்கள். ஆனால் முருகதாசன் என்பவன் அனைவரிற்கும் பொதுவானவன் , எமது மக்களின் அவலத்தை உலகத்திற்கு அறிவிப்பதற்காக மரணித்தவன் எனவே அதனை பொது அமைப்பின் சார்பாக அனைத்து பிரித்தானிய மக்களின் பங்களிப்போடு கட்டித் தருகிறோம் என நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டிருந்ததோடு அந்த அமைப்பின் மாவீரர் மற்றும் மாவீரர் குடும்ப விவகார அமைச்சர் எனப்படும் சேகர் என்பவர் ( இந்த அமைப்பில் அடிக்கடி பதவிகள் மாற்றப் படுவதால் சேகர் என்பவர் தற்சமயம் என்ன அமைச்சராக இருக்கிறார் என்று தெரியவில்லை) நினைவிடம் அமைப்பதற்கு நிதி சேகரிப்பதற்காக பற்றுச் சீட்டுக்கள் தயாரிக்கபட்டு விற்பனை தொடங்கியிருந்த நேரம், சேகரை தொடர்பு கொண்ட இலண்டன் அனைத்துலகச் செயலக பொறுப்பாளர் தனம் என்பவர் நீங்கள் முருக தாசனிற்கு நினைவிடம் அமைப்பதற்காக மக்களிடம் நிதி சேகரிக்க தேவையில்லை. அதனை நாங்களே எங்கள் செலவில் செய்து தருகிறோம் எனவே உங்கள் திட்டத்தை கைவிடுங்கள் என கோரிக்கை வைக்கிறார்.அவரது கோரிக்கையை அடுத்து நாடு கடந்த தமிழீழ அரசு அந்த திட்டத்தை கை விட்டு விற்பதற்காக கொடுத்த பற்றுச் சீட்டுக்களையும் மீளப் பெற்றுக்கொண்டதோடு முருகதாசன் குடும்பத்தினரிற்கும் தகவலை தெரிவித்து விடுகிறார்கள்.

ஆனால் ஒரு வருடம் கழிந்தும் நினைவிடம் கட்டுப்படாமல் இருக்கவே முருகதாசனின் பெற்றோர்கள் அனைத்துலகச் செயலத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது சரியான பதில் ஏதும் வராததால் அவர்கள் ஆரம்பத்தில் தொடங்கியிருந்த இந்தியாவில் நினைவு கல் செய்து, இலண்டன் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை தொடரத் தொடங்கியிருந்தார்கள்.அப்போதுதான் கடந்த வருடம் மாவீரர் நாளிற்கு சரியாக இரண்டு நாளிற்கு முன்னர் முருகதாசன் குடும்பத்தினரிற்கு அனைத்துலக செயலகத்திடமிருந்து ஒரு அழைப்பு. அது என்னவென்றால் உங்கள் மகனிற்கு நினைவுக்கல் நட்டுவிட்டோம் அதற்கு நிகழ்வு செய்யப் போகிறோம் அங்கு வந்து சேருங்கள் என்கிற அதிகார தோரணையிலான அழைப்பு.அதே நேரம் அனைத்துல செயலத்தினரால் நடாத்தப்படும் இணையத் தளங்களிலும் முருகதாசனின் நினைவுக்கல் நடப்பட்டு மரியாதை செய்யப்பட்டதாக செய்திகள் படங்களோடு வெளியாகியிருந்தது.
மாவீரர் தினத்திற்கு இரண்டே நாளிற் முன்னர் ஏன் அவசர அவசரமாக நினைவுக்கல் அமைக்கப்பட்டதன் பின்னணி என்னவெனில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளி நாடுகள் எங்கும் புலிகள் அமைப்பின் பிரதான பிரிவான தலைமைச் செயலகம் மற்றும் வெளிநாட்டு பிரிவான அனைத்துலகச் செயலகம் என இரண்டு பிரிவுகளால் மாவீரர் தினம் இரண்டு இடங்களில் நடாத்தப்பட்டது. அது தொடர்ந்து கொண்டும் இருக்கின்றது. வெளிநாடுகளில் அனைத்துலகச் செயலகத்தின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்த பலரும் தலைமைச் செயலகத்தின் நடவடிக்கைகளிற்கு ஆதரவு கொடுக்கத் தொடங்கியிருந்தார்கள்.

 எனவேதான் கடந்த வருடம் தலைமைச் செயலக்தினரால் நடாத்தப்பட்ட மா வீரர் நிகழ்வுகளிற்கு மக்கள் போய்விடாமல் தங்கள் பக்கம் அவர்களை இழுப்பதற்கான ஒரு தந்திரம்தான் திடீரென நடப்பட்டு விளம்பரம் செய்யப்பட்ட முருகதாசன் நினைவிடம் ஆகும். இங்கு நடந்தேறியது உண்மையில் முருகதாசனிற்கான நினைவிடத்தை எழுப்பி மனசார அவனின் தியாகத்திற்கு மதிப்பளித்து , அவனிற்கு அஞ்சலி செலுத்தி அவனது குடும்பத்தினரிற்கு மதிப்பளிப்பது என்பது அல்லாமல் அனைத்துலகச் செயலகத்தின் பண பலம், ஆட்பலம், ஊடக பலம் என்பதனையும் நிரூபிப்பதோடு மட்டுமல்லாமல் தாங்களே தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்கிற இன்னொரு செய்தியையும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிற்கு தெரியப் படுத்துவது என்பதாகும்.

ஆனால் இவர்களது அரசியல் விளையாட்டில் தங்களது மகனின் நினைவிடம் சிக்கி தவிக்கிறது என்பதை தாங்க முடியாத முருகதாசனின் குடும்பத்தினர் எந்த அமைப்பினது நினைவிடமும் தங்களிற்கு வேண்டாம் என முடிவெடுத்து அவர்கள் ஏற்கனவே தொடங்கியிருந்த முருகதாசன் அறக்கட்டளையால் இந்தியாவில் செய்ப்பட்ட நினைவுக்கல்லை இலண்டனிற்கு எடுத்து வந்து இந்த வருடம் தங்கள் மகனின் நினைவு நாளன்று ஏற்கனவே அனைத்துலகத்தினால் நிறுவப் பட்ட கல்லை எடுத்து தங்கள் வீட்டு காணியில் நிறுவி விட்டு தங்கள் கல்லை அதே இடத்தில் நிறுவி விட்டார்கள். தங்களால் நிறுவப் பட்ட நினைவுக்கல் அகற்றப் பட்டதால் அனைத்துலகச் செயலகத்தினர் சும்மாயிருப்பார்களா??
அதன் இலண்டன் பொறுப்பாளர் அவசரமாக ஒரு அறிக்கையை விட்டார். அது என்னவெனில் இலங்கை அரசின் கைக்கூலிகள் முருகதாசனது நினைவிடத்தை உடைத்தனர், இவர்கள் துரோகிகள் என்பதோடு மட்டுமல்லாமல் அதி உயர் பதவியான கே.பி யின் கைக்கூலிகள் என்று அறிக்கை வெளியானது. இங்கு இலங்கையரசின் கைக்கூலி , துரோகி கே.பியின் கையாள் என வர்ணிக்கப்பட்டவர்கள் யாரெனில் முருக தாசனின் தாய் தந்தையரே. இது மட்டுமல்ல அனைத்தலகச் செயலகத்தின் கடந்தகால செயற்பாடுகளால் வெறுப்படைந்து இவர்களால் நடாத்தப் படும் மாவீரர் தினநிகழ்வுகளிற்கு போகாது விட்ட மாவீரர் குடும்பங்களினது உறவுகளான மாவீரர்களது படங்களை கடந்த வருடம் பல நாடுகளிலும் கடந்த மாவீரர் தின நிகழ்வுகளில் வைக்காது புறக்கணித்து விட்டிருந்தார்கள்.

எனக்கு தெரிந்த கிழக்கு மகாணத்தை சேர்ந்த ஒருவரின் குடும்பத்தில் 5 பேர்கள் போராளிகளாக இருந்தவர்கள். அவர்களில் நான்கு பேர் இயக்கத்தின் பெரிய பொறுப்புக்களில் இருந்து மாவீரர்கள் ஆகிவிட்டிருந்தனர்.எஞ்சியிருந்த கடைசி போராளி தற்சமயம் ஜரோப்பாவில் வசிக்கிறார். அவரது குடும்பத்தின் நான்கு மாவீரர் படங்களும் ஒவ்வொரு வருடமும் வணக்க நிகழ்விற்காக வைக்கப்படுவது வழமை. ஜரோப்பாவில் வசிக்கும் அந்த போராளிக்கும் அனைத்துலக செயலகபொறுப்பாளரிற்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு விட்டது, அதனால் அந்த போராளி துரோகியாக்கப் பட்டதோடு கடந்த வருடம் மாவீரர்களான அவரது நான்கு சகோதரர்களின் படங்களும் நிகழ்வில் வைக்காமல் புறக்கணிப்பு செய்துவிட்டிருந்தார்கள்.இது தெரியாமல் வழைமை போல் வணக்க நிகழ்விற்கு குடும்பத்தோடு அந்த போராளியும் போயிருந்தார்.அவரது பிள்ளைகள் மாவீரர்களான தங்கள் பெரியப்பாக்களின் படங்களிற்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக படங்களை தேடியபோது எந்தப் படங்களும் இருக்கவில்லை . நிகழ்வு பொறுப்பாளரிடம் படங்கள் எங்கே என்று கேட்டபோது ஏதோ தவறுதலாக விடுபட்டிருக்கலாம் என்றார்.

ஒரு படம் தவறுதலாக விடுபட்டிருக்கலாம் நான்கு படங்களுமே எப்படி தவறுதலாக விடு பட்டது என்று கேட்டபோது அதை பற்றியெல்லாம் எனக்கு தெரியாது அடுத்த வருடம் பார்க்கலாமென்று விட்டு அந்த இடத்தை விட்டு நழுவிவிட்டார்.அங்கு போயிருந்த போராளி மற்றைய மாவீரர்களின் படங்களிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டிருந்தார்.
இப்படியாக தங்கள் மக்களிற்காகவும் தங்கள் மண்ணிற்காகவும் எந்த சுயநலமும் இன்றி பெரும் கனவுகளோடு தங்கள் உயிரையே காவு கொடுத்த மாவீரர்களும் அந்த மாவீரர்களை இழப்பை நினைத்தபடியே தினமும் கவலையோடும் கண்ணீரோடும் தங்கள் நாட்களை கடத்தும் அவர்களது தாய் தந்தையரும் ,உறவினர்களும், துரோககிகள் என்றால் தியாகிகள் யார்?? ஒரு கதைக்காக நாளை தலைவர் பிரபாகனே உயிரோடு இங்கு வந்து இவர்கள் முன்னால் நான்தாண்டா பிரபாகன் என்று சொன்னால் போய்யா நீ இலங்கையரசின் கைக்கூலி , கே.பி யின் கையாள் என்றுவிட்டு மக்களே விழிப்பாயிருங்கள் பிரபாகரன் என்கிற பெயரில் இலங்கை புலனாய்வுப் பிரிவும் ,றோவும் ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் ,அவர் ஒரு துரோகி என்று தங்கள் இணையத் தளங்களில் அவரது படத்தை போட்டு செய்தியும் போட்டு விட்டு ,தங்கள் இலாபநட்டக்கணக்கை பார்க்கப் போய்விடுவார்கள் என்பது மட்டும் உண்மை.
மீண்டும் ஒரு பதிவோடு “எதுவரை”யில் சந்திப்போம் அதுவரை .இப்படிக்கு துரோகி (லெப்.கேணல், தளபதி )

பங்கு பிரிப்பும் படுகொலையும் இறுதிப்பாகம்.

10:38 AM, Posted by sathiri, One Comment

பங்கு பிரிப்பும் படுகொலையும் இறுதிப்பாகம்.

கடந்த பகுதியில் பரிதிக்கும்  தலைமைச் செயலக  தமிழரசனிற்கும் நடந்த பேச்சு வார்த்தைகளின் பின்னர்  தலைமைச் செயலக்தினருடனான இணைவிற்கு  பரிதி ஒத்துக்கொண்டு அறிக்கை  வெளியிடுவதற்கு  முன்னராக  அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக   லண்டன்  தனத்திடம் இருந்தும்  சுவிஸ் ரகுபதியியாலும்   கொடுக்கப் பட்ட அழுத்தத்தை தொடர்ந்து  ஜெர்மனியில் இருந்த இரும்பொறை பிரான்சிற்கு  விரைந்து வந்ததும்  பரிதி சுட்டுக் கொல்லப் பட்டார் என்பதை பார்த்தோம். பரிதி சுட்டுக் கொல்லப் பட்ட சில நிமிடங்களிலேயே அனைத்துலக செயலகம் சார்ந்த  இணையத் தளங்கள்  இந்தக் கொலையை  தலைமைச் செயலகத்தை சேர்ந்தவர்களே செய்ததாக ஒரு தோற்றப் பாட்டை ஏற்படும் கடும் முயற்சியில் இறங்கியிருந்தார்கள். அதற்காக அவர்கள் அவிழ்த்த பொய் செய்திகள்தான்  பாரிசில் வினாயகம்  சுற்றி வழைத்து கைது. தமிழரன். கைது. கனி என்பவர் என்கிற  பரபரப்பு செய்திகள். இவை எல்லாவற்றையும் விட  அதிர்வு என்கிற அனைத்துலகத்தின்  அம்மம்மா குழல்(ஊதுகுழல் )இணையம் வெளியிட்ட செய்தியை பார்த்து  விழுந்து  விழுந்து சிரிப்பதா  அல்லது  கோவி  கோவி அழுவதா என்றே தெரியாதிருந்தது.

காரணம் அவர்களது செய்தியில்  வினாயfம் சுற்றி வழைத்து கைது  என்பதோடு செய்தியை உறுதிசெய்வதானால்  பிரெஞ்சு புலனாய்வு த் துறையோடு தொர்பு கொள்ளவும் என்று  077 என்று தொடங்கும் ஒரு இலக்கத்தையும் எழுதியிருந்தார்கள்.   அதை படிப்பவர்கள் பாவம் பிரெஞ்சு  புலனாய்வுத் துறை  அவர்களிற்கு  சாதாரண தொலைபேசி இணைப்பே இல்லை  கைத்தொலைபேசி   தான் பாவிக்கிறாங்கள் என்று நினைத்து விட்டு அந்த  இலக்கத்திற்கு போனடித்திருந்தால் இந்த இணைப்பு பாவனையில் இல்லையென்று  சொல்லியிருக்கும். அட பாவமே  பிரெஞ்சு புலனாய்வு துறையிடம் பணம் இல்லாததால்  தொலைபேசி கட்டணத்தை கட்டவில்லையென்று நினைத்திருப்பார்கள்.

அவர்களின் இந்த திட்டமும் பிசுபிசுத்து போக  அனைத்துலகச் செயலகத்தின் அடுத்த திட்டம்தான்  மீள இணையும் புலிகள் என்கிற ஒரு காணொளி.
இந்தக் காணொளியானது இறுதிக் கட்ட யுத்தத்தில்  நாட்டை விட்டு விட்டு வெளியேறி  அவுஸ்ரேலியா போவதற்காக இந்தோனோசியாவில்  தங்கி நிற்கும் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களால் தயாரிக்கபட்டிருந்தது. இவர்களிற்கு அனைத்துலகச் செயலகமே பணஉதவி செய்துவிட்டு அப்படியொரு காணொளியினை தயாரித்து அனுப்புமாறு கோரியிருந்தனர்.  காணொளியினை பார்ப்பவர்களிற்கு  அதனை தயாரித்ததன் நோக்கம் புரியும்.



ஆனால்  பரிதியின் கெலையை பிரெஞ்சு காவல்த்துறை  ஆரம்பத்தில் மூன்று கோணங்களில் விசாரிக்க ஆரம்பித்திருந்தனர். அவை. 1) இலங்கை புலனாய்வுத் துறை.  2) உள் வீட்டு மோதல்கள் அதில் தலைமைச் செயலகம்.  அல்லது அனைத்துலக்கத்திற்கிடையேயான  குழு மோதல்.  விசாரணைகளின் ஆரம்பத்திலேயே   கொலை சம்பந்தமாக   பரிதியுடன் நெருக்கமாக  இருந்த பாம்புக் குழுவை சேர்ந்த  இருவர்  கைதானதும் தலைமைச் செயலகத்திற்கும் கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்று உறுதியாகிவிட்ட நிலையில்தான்  அடுத்ததாக அவர்களத விசாரணை  இலங்கை புலனாய்வு பிரிவா அல்லது அனைத்துலகத்தின்  உள்வீட்டு மோதலா? என்கிற கோணத்தில் விசாரணைகள் போய்க்கொண்டிருந்தது.  அப்பொழுதான்  பிரான்சின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான Le Parisienபத்திரிகையில் இலங்கையரசே  பரிதியின் கொலைக்கு பின்னால்  இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.


ஆனால் இது போன்ற  அரசியல் கொலை பற்றிய செய்திகளில் தகவல் அடிப்படையாக  ஒரு விசாரணை  அதிகாரியை மேற்கோள் காட்டியோ அல்லது உள்துறை அமைச்சர் அல்லது அதன் குரல் தரவல்ல அதிகாரிகளை  மேற்காட்டியே செய்தி வெளியாவது  வழைமை. அதன் அண்மைய ஊதாரணம்  பாரிசில் படுகொலை செய்யப் பட்ட மூன்று குர்திஸ்தான் போராளிகள் பற்றிய செய்திகளை பிரெஞ்சு பத்திரிகைகள் வெளியிட்ட விதத்தினை படித்திருந்தவர்களிற்கு புரிந்திருக்கும். ஆனால் பரிதி பற்றி Le Parisienபத்திரிகையில் ஒரு மொட்டை செய்தியாகவே வெளிவந்திருந்தது. அதையெல்லாம் விட்டுவிடலாம்.  இந்தக் கொலையை இலங்கை  அரசே செய்தது என வைத்துக் கொள்வோம்.  அரசியல் கொலைகளை  கன கச்சிதமாக உளவுப் பிரிவுகள் மூலம் மேற்குலக நாடுகளும். இரஸ்யாவும்.  இஸ்ரவேலுமே இதுவரை செய்து முடித்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் தங்கள் அனைத்து வளங்களையும் பாவித்திருப்பதோடு கொலை நடந்து பல வருடங்களின் பின்னர் அதனோடு சம்பந்தப் பட்டதொருவர்  ஓய்வு பெற்ற காலத்தில் ஒரு புத்தகத்தை எழுதினாலோ அல்லது ஏதாவது ஒரு பத்திரிகையாளர் பல வருடங்களாக  நோண்டி விடயத்தை வெளியே கொண்டு வந்தால்தான் வெளி வரும். அனால் அந்த உண்மைகள் வெளிவரும் போது அந்த விடயமே மறந்து போய்விட்டிருப்பதோடு  அதை வைத்து எந்த நியாயமும் கிடைத்ததும் இல்லை.இவங்கை போன்ற சிறிய நாடுகள் மேற்குலக நாடுகளிற்குள் புகுந்து அரசியல் கொலைகளை செய்வதற்கு துணிய மாட்டாது காரணம் கொலையை இலங்கையரசுதான் செய்ததென்று நேரடியாக உறுதிப் படுத்தப் பட்டால் பிரான்ஸ் போன்ற  பலமான நாடுகளிற்கு  தங்கள் நாட்டின் பாதுகாப்பு பிரச்சனையாகி  கெளரவ பிரச்சனையாகி அது இலங்கை மீதான அழுத்தத்தை கொடுக்கும் என்று தெரியாத அளவிற்கு  இலங்கையரசு முட்டாள் அல்ல .

அதுவும்  Le Parisienபத்திரிகையில் வெளி வந்தது போல் இலங்கையரசின் தூதரகம் நேரடியாக சம்பத்தப் பட்டிருக்காது. இலங்கைத் தூதரகத்திற்கே தெரியாமல் இலங்கை புலனாய்வுத்துறை  வேறு தரகர்கள் ஊடாக கூலிக் கொலையாளர்களை வைத்து நடத்தியிருக்கும். அப்படியே  தரகர்கள் ஊடாக கூலிக்கு ஆளை வைத்து  பிரிதியை கொலை செய்திருந்திருந்து பிரெஞ்சு புலனாய்வுத் துறை அதை கண்டுபிடித்திருந்தாலும்  பிரெஞ்சு அரசு  தமிழர்களிற்கு அநீதி நடந்து விட்டது என்று இலங்கை யரசை குற்றம் சாட்டவோ ஜ.நா சபையில் இலங்கைக்கெதிராக தீர்மானமோ. அல்லது தமிழீழத்தை வாங்கித் தரப் போவது கிடையாது. பிரான்ஸ் தன்னுடைய நலனிற்கு தேவையான ஏதோ ஒன்று இலங்கையிடமிருந்து  பெறமுடியுமானால்  இலங்கையரசுடன் பேரம் பேசி இலங்கையை அடிபணியவைத்து தன்னுடைய தேவையை  தீர்துக்கொள்ளும். அதே நேரம் பரிதி கொலைக்காக  நீதி கேட்டு கூட்டம் போட்டாலென்ன  பாரிசில் இருந்து  ஜ.நா சபைவரை பிரதட்டை  தூக்கு  காவடி  என்று எடுத்தால் கூட ஒன்றும் நடக்கப்போவதில்லை.காரணம் பரிதி பரிதி பிரான்சில் தடைசெய்யப் பட்டதொரு அமைப்பின் பிரதிநிதி என்பதோடு  பிரெஞ்சு காவல்த்துறையின் கண்காணிப்பில் இருக்கின்ற ஒரு முன்னை நாள் கைதி.

ஆனால் தற்சமயம் பரிதியின் கொலை விசாரணை உள்வீட்டு விவகாரம் என்கிற கோணத்திலேயே தான் போய்க்கொண்டிருக்கின்றது. கைதானவர்கள் பரிதியோடு நெருக்கமாக இருந்த ஒரு வன்முறைக் குழுவினர். பரிதி தலைமைச் செயலகத்துடன் இணைவதை விரும்பாத சுவிஸ் ரகுபதியும். லண்டன் தனமும் கொடுத்த அழுத்தத்தினால்  இரும்பொறையே  பாம்பு குழுவிடம் பரிதியை  போடச் சொல்லியிருக்கலாம். இப்படி நடந்ததை பிரெஞ்சு காவல்த்துறை உறுதி செய்தாலும்  செய்ததும் தமிழன் செத்ததும் தமிழன் . எனவேப கணக்கு தீர்த்தல் என்கிற  வகையில் இந்த கொலையை அடக்கி கைது செய்யப் பட்டவர்கள் விசாரணை கைதிகள் என்கிற பெயரிலேயே  ஆறு அல்லது ஏழு வருடங்கள் கழித்து எச்சரித்து விடுவித்து விடுவார்கள்.  அவர்கள் விடுவிக்கப்பட்ட செய்தி எந்த ஊடகத்திலும் வராது. ஆனால் உண்மையில்  என்ன நடந்தது என்பதனை  ஊடுருவி தேடல்கள் நடத்தி கண்டு பிடித்து கொலையை வெளியே கொண்டு வரும் அளவிற்கு எம்மவரின் எந்த ஊடகமோ  ஊடகர்களோ இல்லை.  எங்களை நாங்களே மகிழ்ச்சிப் படுத்த  எழுதும் ஊடகங்களும்   தலைப்பை மட்டும் மாற்றி விட்டு வெட்டி ஒட்டும் ஊடகங்கள் மட்டுமே எம்மிடம் உள்ளது.எனவே பரிதியின் கெலை என்பது  இன்னும் சில காலங்களில் மறக்கப்பட்டதொன்றாகவே மாறிவிடும்.

இது இப்படியிருக்க  அனைத்துலகச் செயலகம் அடுத்த கட்ட ஆயுதப் போரை நடத்தப் போவதாக கூறியிருப்பது தெய்வீகன் என்கிற  நபரை வைத்துத்தான்.தெய்வீகன் என்பவர் யாரென்று சுருக்கமாக பார்த்து விடலாம். இவர் புலிகள் அமைப்பில் ஒரு இளநிலை போராளி விமான ஓட்டியாக பயிற்சி பெறுவதற்காக புலிகள் அமைப்பினால்  கிழக்கு ஜரோப்பிய  நாடொன்றிற்கு அனுப்பி விமான ஓட்டிக்கான கல்வியும்  பயிற்சியும் பொற்றவர்  அதில் தேர்ச்சி பெறாததால்  திரும்பவும் வன்னிக்கு அழைத்து  புலிகளின் உள்ளக புலனாய்வு பிரிவில் இணைக்கப் பட்டிருந்தார். இறுதிகட்ட யுத்தத்தில் இவரே வழங்கலிற்கும் பொறுப்பாக இருந்தவர். புலிகள் அமைப்பின் இறுதி முயற்சியான ஆனந்த புரம் ஊடறுப்பு சமர் நடந்தவேளை  அதற்கு  தலைவர் பிரபாகரனே  நேடியாக நின்று கட்டளைகளை வழங்கியிருந்ததும் அது தோல்வியில் முடிந்து  புலிகள் அமைப்பின் முன்னணி தளபதிகளும் ஆயிரக்கணக்கான போராளிகளும் பலியானதோடு தலைவர் பிரபாரன்  உயிர் தப்பியிருந்தார். அந்த சண்டைக்காக மேலதிக ஆயுத மற்றும் காயமடைந்தவர்களிற்கான  அவசர மருத்துவ உபகரணங்களை வழங்குமாறு களத்தில் நின்றிருந்த தளபதிகள்  தெய்வீகனை தொடர்பு கொள்ள முற்பட்ட வேளை  தனது தொடர்புகள் அனைத்தையும் துண்டித்து விட்டு காணாமல் போயிருந்தவர். மீண்டும் 2010 ம் ஆண்டு தை மாதமளவில்  இந்தியாவில் மதுரையில் நடமாடத் தொடங்கியிருந்தார்.

 அவரோடு வெளியக புலனாய்வுத் துறையின் புகழேந்தி  மற்றும் தென்னவன் அல்லது கரிகாலனும் மதுரையில் தங்கியிருந்து புலிகளின் அனைத்துலக செயலகத்தின் வெளிநாட்டு கிளைகளோடு தொர்புகளை ஏற்படுத்தி தாங்கள் இன்னமும்  பலநூறு  போராளிகளுடன் வன்னி காடுகளிற்குள்ளேயே நிற்பதாகவும் மறு பக்கம் கிழக்கு மாகாண காட்டிற்குள்  ராமும் தங்களோடு தொடர்பில் இருப்பதாகவும்  ராமின்  தலைமையில் அடுத்த கட்ட தாக்குதல்களை நடத்துவதற்காக  தங்களிற்கு ஆயுதங்களை பெறுவதற்காகவும்  அத்தியாவசிய தேவைகளிற்காவும் நிதி உதவி கோரியிருந்தார்கள்.  அதை நம்பி அனைத்துலக செயலகமும் பணம் அனுப்பியிருந்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் தென்னவன் என்கிற கரிகாலனும் என்னுடன் தொர்புகளை ஏற்படுத்தி கதைத்திருந்தார். பணத்தை அனுப்பிவிட்டிருந்த அனைத்துலகச் செயலகத்தினர் தாக்குதல் எதுவும் நடக்காததால் ஏமாற்றமடைந்து  ராமோடு தொடர்புகளை ஏற்படுத்தி ஏதாவது தாக்குதல் செய்தால் தான்  இங்குள்ள மக்கள் நம்புவார்கள்  அப்பொழுதான் பணம் சேகரித்து அனுப்பலாம் ஏதாவது தாக்குதலை  செய்யும்படி கேட்டிருந்தனர். ஆனால் இது வரை காலமும் தலைவரின் கட்டளைக்கிணங்கவே  தான்  தாக்குதல்களை நடத்தியதாகவும்  வெளிநாட்டிலிருந்து  வரும் கட்டளைகளிற்கிணங்க தன்னால் இயங்க முடியாது  தலைவரின் கட்டளை  வராமல்  தன்னால் எதையும் செய்ய முடியாதென  ராம் எவ்வித தாக்குதலையும் செய்ய மறுத்து  தெய்வீகனின் தொடர்பும் தனக்கு இல்லையென்று அவர்களிற்கு சொல்லிவிட்டிருந்தான். பின்னர் ராமிற்கும் எனக்கும் நடந்த உரையாடல்களின்போது அதை தெரித்திருந்தான். அன்றை கால கட்டத்தில் தான் இலங்கை வான்படையின் உலங்கு வானுர்தியொன்று காலநிலை காரணமாக  கட்டுப் பகுதியில் விபத்திற்குள்ளாக அதனை ராமின் தாக்குதலிற்குள்ளானதாக  வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்யவும் அனைத்துலகம் முயன்றிருந்தது.

பின்னர் சில காலங்கள் தெய்வீகனின் தொடர்பு அறுந்து பேயிருந்ததோடு தென்னவன் (கரிகாலன் )பிரான்ஸ் வந்து சேர்ந்ததும் மீண்டும் அனைத்துலக செயலகம் மற்றும் பழைய வெளிநாட்டு கட்டமைப்பை சேர்ந்தவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்துகிறார். அப்பொழுது மீண்டும் என்னுடன்  ஒரு தொடர்பையும் ஏற்படுத்தியிருந்தார். இவர்தான்  தற்சமயம் அனைத்துலக செயலகத்தோடு சேர்ந்து நின்று  தெய்வீகனால் அடுத்த கட்ட ஆயுத போரை வழிநடத்த முடியும் என்று  அவர்களையும் நம்பவைத்து  தெய்வீகனோடு தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். ஆயுதப் போர் நடக்கிதா இல்லையா அனைத்துலகம் மக்களையும்... தெய்வீகன் அனைத்துலகத்தையும் ஏமாற்றுகிறாரா என்பதையெல்லாம் விட்டு விட்டு பார்த்தால். இறுதியாக  மாவீரர் தினத்தின் போது யாழ் பல்கலைக்கழகத்து  பிரச்சனைகளின் பின்னால் யாழில் பல மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர்  . பின்னர் அதன் தொடர்ச்சியாக தமிழ் நாட்டிலும் சில கைதுகள்  நடந்து செய்திகளில் வெளிவந்தவைதான்.  ஆனால் அதன் பின்னால் இருந்த தெய்வீகனும் புகழேந்தியும் தமிழ் நாட்டில் மதுரையில் சுதந்திரமாகத்தான் நடமாடுகின்றார்கள்.  அதாவது  இந்தியாவின்  இலங்கை மீதான அடுத்த  கட்ட மேலாதிக்க நடவடிக்கைகளிற்கு தொடர்ந்தும் பலியாக போவது நாங்களா??   அதற்கு அனுசரணை  புலிகளின் வெளிநாட்டு கிளைகளான அனைத்துலக செயலகமா??   இது கேள்வி மட்டும் தான்  பதில் எனக்கும் தெரியாது  காலம்தான் பதில் சொல்லும். 

இறுதியாக ஒரு வியடம்  அனைத்துலகச் செயலக்த்தின்  டென்மார்க் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது  பிரியனின் தலைமையில் அண்மைக்காலமாக  டக்லஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கட்சி ஊடாக தாயகத்தில் மக்களிற்கான உதவிகளை செய்து வருகிறார்கள். அதே போல சுவிஸ் இளையோர் அமைப்பும்  தமிழர் ஒருங்கிணைப்பக் குழுவும் தங்கள் பிரதிநிதிகளை  கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி கிழக்கு மக்களிற்கு உதவுகின்றனர்.இந்த மாற்றம் வரவேற்கப்படவேண்டிய விடயம்.  இவர்களை முன் மாதிரியாக எடுத்து மற்றைய நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்களும் வீணே  ஊருக்கு போகின்றவன் உதவி செய்பவன் எல்லோரையும் துரோகி என்றும் அடுத்த கட்ட ஆயுதப்போர் என்று கதைவிட்டு காலத்தை கடத்தாமல்   தாயகத்து மக்ககளிற்கான  உதவிகளை செய்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்திவிடுவதே இனிவரும் காலங்களில் செய்யக்கூடியதொன்றாகும்.செய்வார்களா????

கரிகாலன்(பிரான்ஸ்), குட்டி(டென்மார்க்) பிரியன்,(டென்மார்க்) தனம் (இலண்டன்), சிறீறவி'ஜெர்மனி) , அதிர்வு கண்ணன்(இலண்டன்)  பெஞ்சமின்(நோர்வே) அம்புறுஸ்(இத்தாலி..தற்சமயம் பிரான்ஸ்) ஆகியோரது பங்கு பிரிப்புக்கள் பற்றி இன்னொரு கட்டுரையில் தனியாக பார்க்கலாம்.  அதுவரை நன்றி வணக்கம்.


தோடம்பழக் கொம்பனியும்.லண்டன் பயணமும்.

1:20 PM, Posted by sathiri, No Comment

தோடம்பழக் கொம்பனியும்.லண்டன் பயணமும்.
சாத்திரி  ஒரு பேப்பர்.

 இந்த வருசம்  நத்தாரோடை பத்து நாளைக்கு  கடையை பூட்டுவம் எண்டு முதலாளி சொல்லிட்டான்.நீண்ட நாளின் பின்னர்  பத்துநாள் லீவு மகிழ்ச்சிதான் நத்தார் முடிந்ததுதம் லண்டனுக்கும் ஒருக்கா போய்   சில உறவுக்காரர் பழைய சினேதங்கள். எல்லாத்தையும் பாத்திட்டு வரலாமெண்டு நெற்றிலை மலிவாய் றிக்கற்றை பாக்கத் தொடங்கினன். வழக்கம் போலை தோடம் பழக் கொம்பனி அதுதானுங்கோ Easy jet   அதிலை றிக்கற்றும் பதிஞ்சிட்டன். ஆனால் போகிற நேரக் குளப்பத்தாலை பதிவு போடுறதும் நிறுத்திறதும் திருப்ப பதியிறதுமாய் ஒரு நலைஞ்சு தரம் செய்து  ஒரு மாதிரி பதிஞ்சு முடிச்சிட்டன்.


நத்தாருக்கு மனிசி எனக்கு ஒரு ஜுன்ஸ் பரிசா வாங்கி வைச்சிருந்தாள். வாங்கியந்தவுடைனையே போட்டு அளவு பாக்கச் சொல்லி அளவு சரிவராட்டி மாத்தலாமெண்டாள். போட்டுப் பாத்தன் வருசக் கடைசி கொஞ்சநாளாய் தொடந்து ஒரே தும்படி எண்டிதாலை கொஞ்சம் மெலிஞ்சு போயிருந்தன். ஜுன்ஸ்  ஒரு ஒண்டரை அங்குலம் அளவு  பெரியதாயிருந்தது. மாத்திக் கொண்டு வரவா  என மனிசிகேட்டாள். வேண்டாம் கோடை(சமர் )தொடங்கி  இரண்டு பியரடிக்க வண்டி கொஞ்சம் வைக்கும்  அப்ப அளவாயிருக்கும்  இப்போதைக்கு ஒரு பெல்ட்டை  கட்டினால் சரியாயிடும். திரும்ப கடைக்கு அலைய வேண்டாம் எண்டு சொல்லிட்டன்.


லண்டனுக்கு போகேக்குள்ளை தான் ஆசையாய் வாங்கின ஜுன்சை போட்டுக் கொண்டு போகச்சொல்லி மனிசி சொன்னதாலை அதையே போட்டுக்கொண்டு  ஏயா பேட்டுக்கு வந்து தோடம்பழ கொம்பனி கவுண்டரிலை  போடிங் எடுக்கிறதுக்காக  வரிசையிலை நிண்டன். இரண்டு கவுண்டரிலை ஒண்டிலை ஒரு ஆணும்  மற்றதிலை பெண்ணும்  போடிங்குடுத்துக் கொண்டு இருந்தார்கள்.பெண்ணை பார்த்தன்  கறுப்பிற்கும் வெள்ளைக்கும் பிறந்த பழுப்பு  அழகாக இருந்தாள்.வரிசை நகர்ந்து கொண்டிருந்தது  கடவுளே என்ரை முறை  அவளிட்டை  வரவேணும்  எண்டு மனதிற்குள் வேண்டுதல். ஆனால்  என் முறை  ஆணிடம் வந்து விட்டது. பின்னலை திரும்பிப் பார்த்தன் ஒரு பெண்  கைக் குழந்தையோடை நின்றிருந்தாள். உடனை அவரிட்டை  எனக்கொண்டும் அவசரமில்லை நீங்கள்  போகலாம் எண்டு விட்டு ஒதுங்கி கொள்ள  அவளும் நன்றி என்றிட்டு என்னை  அழைத்த ஆணிடம் போடிங்  எடுக்க போயிட்டாள்.   அப்பாடா.. இப்ப எனது முறை  என்னைப் பார்த்து  அவள்  வரச்சொல்லி கையசைத்து  புன்னகைத்தாள். அவளிடம் போய் பாஸ் போட்டை நீட்டினன். தனக்கு பின்னால் இருந்த ஒரு படத்தை காட்டி இதில் உள்ள பொருட்கள் ஏதாவது உங்களிடம் இருக்கின்றதா என்றாள்.
அவள் காட்டின படத்தை நிமிர்ந்து பாத்தன். அதிலை  கத்தி சுத்தியல்.ஸ்கூருட்றைவர்.துவக்கு.கைக்குண்டு.காஸ் போத்தல் ஆகியவற்றின் படங்கள் இருந்தது.

அந்த பொருள் ஒண்டுமே என்னட்டை இருக்கேல்லை  இதெல்லாம் இருந்தால் தான் பிளேனிலை ஏத்துவாங்களோ எண்டொரு  பயம் எனக்கு வந்திட்டுது. தயங்கியபடி இதிலை ஒண்டும் என்னட்டை இல்லை .அதே நேரம் நான் பிளேன் கடத்திறதுக்காக வரேல்லை  லண்டனுக்கு  சொந்த அலுவலாய் போறன் எண்டதும் . சிரித்தபடியே அடுத்த கேள்வியை கேட்டாள். உங்களிற்கு தெரியாதவர்கள் யாராவது ஏதாவது பொருட்கள் தந்தார்களா??  இதென்ன கோதாரி எண்டபடி எனக்கு தெரிஞ்சவங்களோ எனக்கு ஒண்டும் தாறேல்லை.இதுக்கை  தெரியாதவங்கள் எப்பிடி ஏதாவது தருவாங்கள் விரும்பினால் நீ ஏதாவது எனக்கு தரலாம் மகிழ்ச்சியோடை ஏற்றுக் கொள்ளுவன் எண்டன். தலையாட்டினபடி போடிங்கை மட்டையிலை  இருக்கை   இலக்கத்தை  சுற்றி ஒரு வட்டத்தை போட்டு தந்து விட்டாள். அதை வாங்கிக் கொண்டு  உள்ளை போனன். இனி பரிசோதனை  பகுதி அங்கை என்ரை கைப்பை  பொக்கற்றுக்கை இருந்த போன் திறப்பு எல்லாத்தையும் எடுத்து   ஒரு  பிளாஸ்ரிக் பெட்டியிலை போட்டு ஸ்கான் பண்ணிற பெல்ட்டிலை  வைச்சிட்டு  உள்ளை போக வெளிக்கிட அங்கை நிண்ட காவலாளி என்ரை இடுப்பு பெல்ட்டையும்  கழட்டி என்ரை பொருள்களோடை பிளாஸ்ரிக் பெட்டிக்குள்ளை போடச் சொன்னான்.


ஜயையோ என்ரை ஜுன்சே அந்த பெல்ட்டை நம்பித்தானே நிக்கிது  ஆனால் வேறை வழியில்லை  பெல்ட்டை கழட்டி பிளாஸ்ரிக் பெட்டியிலை போட்டிட்டு  இடக் கையாலை ஜுன்சை  பிடிச்சபடி  உள்ளை போனன். உடல் பரிசோதனைக்காக கையிலை ஒரு மெட்டல் டிடெக்ரர் ஒண்டை  கையிலை பிடிச்சபடி தயாராய் நின்றிருந்த ஒருத்தி நல்வரவாகுக கைகளை உயர்த்துங்கள் என்றாள்.இடக்கை   ஜுன்சை பிடித்தபடி  இருந்ததால் வலக்கையை  மட்டும் உயர்த்தினன். இரண்டு கைகளையும் உயர்த்தவேண்டும் என்றாள். அம்மணி இரண்டு கையையும் ஒரே நேரத்திலை உயர்த்தினால்  என்ரை மானம் பிளேன் ஏறிடும். அதாலை என்ரை ஜுன்சை நீ கொஞ்ச நேரம் விழவிடாமல்  பிடிச்சிரு நான் கைளை உயர்த்திறன் என்று மெல்லிதாய் சிரித்தபடி சொல்ல அவளும்  ஓ தாராளமாய் என்றபடி  அங்கை நிண்ட காவலாளியளிலை  கறுவல் தடியன்  ஒருவனை கூப்பிட்டு  இவனின்ரை ஜுன்சை ஒருக்கா பிடித்து உதவி செய் என்றாள். என்ரை பிளான் பிழைச்சு போச்சுதெண்டு விழங்கிட்டுது. உடைனே நான்  என்னை  நோக்கி வந்த தடியனிட்டை  வேண்டாம் எண்டு சொல்லிட்டு தம் பிடிச்சு வயித்தை தள்ளி ஜுன்சை விழவிடாமல் பாதுகாத்தபடி கைகளை உயத்தினன்.  மெட்டல் டிடெக்கராலை  பின்னுக்கு முன்னுக்கு எல்லாம் தடவிப் பாத்திட்டு உன்னட்டை  ஒரு ஆயுதமும் இல்லை நீ போகலாம் எள்றாள்.  அவள் என்னட்டை ஆயுதம் இல்லையெண்டதும் எனக்கு அழுவை அழுவையா வந்திச்சிது ஆனாலும் அடக்கினபடி போய் பெல்ட்டை எடுத்து கட்டிக்கொண்டு என்ரை பொருட்களையும் எடுத்துக் கொண்டு பிளேனை பிடிச்சு லண்டன் வந்து இறங்கியாச்சு.


விமான நிலையத்திலையிருந்து என்ரை சொந்தக்காரனுக்கு போனடிச்சு நான் வந்திட்டன்  எங்கை வாறது என்டு கேட்டன்  அதுக்கு அவன் பட்டினி எண்டான். எனக்கு எரிச்சலாயிட்டுது  டேய் நீ சாப்பிட்டியா  இல்லை சிவ பட்டினியா  எண்டது  எனக்கு பிரச்சனையில்லை உன்ரை இடத்தை சொல்லு  எண்டதும்  அதுக்கு அவன்  நான் இருக்கிற இடத்தின்ரை பேர்தான் பட்டினி எண்டான். ஒரு பணக்கரான்  இருக்கிற இடத்தின்ரை பேர் பட்டினி எண்டு நினைச்சபடி  றெயின் ஏறிபோய் சேந்திட்டன். முதல்நாள்  எங்கடை குடும்ப அலுவல் கதைச்சு முடிஞ்சதும். என்ரை ஒரு பேப்பர் சினேதங்களை  சந்திக்கலாமெண்டு  அவங்களையும் சந்திச்சு கதைசன். அதை விட முக்கியம்.தலைவரின்ரை நேரடி வழிகாட்லிலை இந்த வருசம் மூண்டாவது மாவீரர் தினத்தை ஏற்பாடு செய்த எங்கடை பாலாண்ணையும் சந்திச்சு கடைசியாய் தலைவர் என்ன செய்தி சொன்னவர் எண்டிறதையும் கேக்கிற ஆவல் . ஆனால் அவர் அதை கடைசிவரை சொல்லவேயில்லை ஏமாற்றம்.  போற வழியிலை எங்கடை பேப்பர் ஆசிரியர் கோபிட்டை பட்டினி பாலத்திலை இறக்கிவிட சொன்னன் அவரும் இறக்கி விட்டிட்டு போயிட்டார்.  அடுத்தநாள் சந்திப்பு புலம் பெயர் தேசங்களிலை  தமிழரின்  அடுத்த கட்ட அரசியலை நகர்த்துபவர்களாக சொல்லிக் கொள்பவர்களிடமானது.  நான் அவங்களை சந்திச்சு எப்பிடி கதைக்கிறது என்ன கதைக்கிறது எண்டு றூம் போட்டு யோசிக்கவேணும் எண்டு நினைச்சபடி  நான் நிண்ட சொந்தக் காரனிட்டை இண்டைக்கு அரசியல் சந்திப்பு எண்டதும். அவன் நீ யாரையும் சத்திச்சு கதை ஆனா தயவு செய்து வீட்டை ஒருத்தரையும் கூட்டிவராதை எண்டு கையெடுத்து கும்பிட்டான்.

வேறை வழி  நான் நினைச்ச மாதிரி றூம் போட வேண்டியதுதான் எண்டு நினைச்சு அங்கையே ஒரு விடுதியிலை றூமை போட்டு அடுத்த அரசியல் சந்திப்பு நல்ல மாதிரி முடிஞ்சுது. ஆனால் வழக்கம் போலை வாறதாய் சொன்ன ஒரு குழு கடைசி நேரம் காலை வாரிட்டுது.
அவங்களோடை கதைச்சு முடிஞ்சு படுக்க போக ஒரு மணியாயிட்டுது திரும்ப  மூண்டு மணிக்கு எழும்ப வேணும். ஏனெண்டால் எனக்கு ஆறு மணிக்கு பிளைற். இரண்டு மணித்தியாலம் நித்திரை கொள்ளலாம் எண்டு நினைச்சு போனிலை அலாம் வைச்சிட்டு படுத்திட்டன். அலாரம் அடிச்சதும்  அடிச்சுப் பிடிச்சு வெளிக்கிட்டு கொண்டு ஓடிப்போய் ரக்சியிலை ஏறி Luton air port க்கு போகவேணும் எண்டன். ரக்சி ஓடியவர் தமிழர் அவர் அண்ணை வணக்கம் எண்டார். நானும் வணக்கம் சொல்லிட்டு  பாதி நித்திரையிலை  கண்ணை  மூடினன். ஆனால் ரக்சி காரர் விடுறமாதிரியில்லை.
நீங்கள் ஊரிலை எந்த இடம்.தொடங்கினார்.

நான் மானிப்பாய் நீங்கள்.??

நான் சண்டிலிப்பாய். அப்ப பக்கத்திலைதான். நீங்கள் நாட்டு பிரச்சனையை பற்றி என்ன நினைக்கிறீங்கள்.??

நித்திரை தூக்கத்திலை ஏற்கனவே எரிச்சலாயிருந்த எனக்கு மேலும் எரிச்சலோடு என்னத்தை நினைக்கிறது ஏதோ போகுது எண்டன்.

அண்ணை  முதல்லை கொழும்பை தரை மட்டமாக்கவேணும்.

ம்..நல்லது.

பிறகு மகிந்தா குடும்பத்தை அவங்கடை சகோதரங்களையும் கூண்டோடை அழிக்க வேணும்.

ம். நல்லது.

அடுத்ததா இந்தியாவை துண்டு துண்டா உடைக்க வேணும்.

ம்..நல்லது

சோனியாவையும் மன் மோகனையும்  பான்கி மூனையும் போட வேணும்.

ம்.நல்லது.

என்னை திரும்பி பாத்தவர்.உங்களுக்கு அரசியல்லை இன்றஸ்ற் இல்லை போலை ??

நீங்கள் ரக்சி ஓடுறது முழுநேர வேலையோ இல்லாட்டி பகுதிநேரமோ??

இப்ப இருக்கிற எக்கொனமி பிரச்சனைக்குள்ளை  வீடு வேறை வாங்கிட்டன். பகல்லை வேலை செய்திட்டு  இரவிலை  பாட் ரைமா ரக்சி வேறை ஓடுறன்.

உங்கடை வாழ்க்கையே இப்பிடி பொருளாதார பிரச்சனைக்குள்ளாலை ஓடுது நீங்கள்  முதல் சொன்ன எல்லாத்தையும் செய்யப் போறது யார்?? என்று கேட்க மனம் உந்தினாலும். எதுக்கு முன் பின்ன தெரியாத ஒருத்தரோடை விவாதம் எண்டு நினைச்சிட்டு கண்ணை மூடிட்டன். விமான நிலையம் வந்து  இறங்கியாச்சு தோடம்பழ கொம்பனி கவுண்டரிலை பாஸ்போட்டை கொண்டு போய் நீட்டினன்.

அவன் வாங்கி கணணியை தட்டிட்டு என்னையும் கணணியையும் மாறி மாறி பாத்தான்.ஏதாவது பிரச்சனையா எண்டன். அதற்கு அவன் ஜயா நீங்கள் வந்திருப்பது  Luton air port

இது எங்களிற்கு தெரியாதா?

எதற்காக இங்கே வந்தீர்கள்.??

 இவன் என்ன கேனைத் தனமா  கேக்கிறான்  ..வீட்டை போறதுக்கத்தான் ..

அதற்கு நீங்கள் Getwick air port ற்கு போக வேண்டும் அங்கிருந்துதான் உங்கள் விமானம் கிழம்புகின்றது.
அப்பதான் எனக்கு மண்டையில் யாரோ குட்டின மாதிரி உறைத்தது. முதலில் ரிக்கற்றை மாத்தி மாத்தி போட்டதிலை   Luton air port  மனதினை நிண்டிட்டுது.மாறி வந்திட்டன் என்ன வெய்யலாமெண்டு கைத் தொலை பேசியை எடுத்து  நவிகேற்றரிலை அங்கையிருந்து Getwick air port க்கு போறதுக்கு எவ்வளவு நேரம் எண்டு பாத்தன் நேரம் காணாது. Luton air port லை இருந்து என்ரை ஊருக்கு போறதுக்கு மத்தியானமளவிலை ஒரு பிளேன் இருந்திச்சிது அதிலை றிக்கற்றை மாத்திட்டு போய் ஒரு கதிரையிலை சாய்ஞ்சு படுத்திருந்தன்.  யாருடைய போன் வரக்கூடாது எண்டு பயந்துகொண்டிருந்தனோ அந்த போன்  வந்தது எடுத்து காதிலை வைச்சன்.

என்னப்பா  வந்திட்டியளோ??எங்கை நிக்கிறியள்.??

இல்லை பிளேனை  தவற விட்டிட்டன்.

உனக்கு இதே வேலையா போச்சு உருப்டியா என்னதான் செய்யாத் தெரியும். என்று  தொடங்க நான் போனை காதை விட்டு எடுத்திட்டன்  ஒரு நாலு நிமிசத்தாலை..சரி வா நேரிலை மிச்சம் இருக்கு போன் கட்டாயிட்டுது.
பிளேனை தவற விட்டிட்டன் எண்துக்கே இப்பிடியெண்டால் ஏயா போட்டையே மாறி வந்திட்டன் எண்டால் என்ன நடந்திருக்கும். உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன் .. :(

கடைசியாய்  ஒரு கேள்வி  விமான நிலையங்களிலை எதுக்கு ரெர்மினல் TERMINAL எண்டு பேர் வைச்சிருக்கிறாங்கள் பல பேரின்ரை வாழ்க்கை  அங்கையே முடியிறதாலையா?? இந்த பேரை பாத்தாலே பிளேனுக்குள்ளை ஏற மனம் வருதில்லை பயமாகிடக்கு
நன்றி வணக்கம்.
 பிற்குறிப்பு. பல யாழ்கள உறுவுகளையும் சந்திருந்தேன். அவர்கள் தங்கள் பெயர்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க   யார் யாரை சந்தித்தேன் என்று  சொல்ல மாட்டன்.

பங்குபிரிப்பும் படுகொலையும் பாகம் 4

1:59 PM, Posted by sathiri, One Comment

பங்குபிரிப்பும் படுகொலையும்  பாகம் 4
சாத்திரி

தலைமைச் செயலகம் நாடு கடந்த அரசு அனைத்துலகச் செயலகம் ஆகியன ஒன்றிணைந்து புலம் பெயர் தேசங்களில்  அடுத்த கட்ட நடவடிக்கைகளை நகர்த்தவேண்டும் என கடந்த வருடம் தொடராக  பிரான்சில் நடந்த பேச்சு வார்த்தைகளில் சிலதில் நானும் கலந்து கொண்டு அது  அனைத்துலக செயலகத்தின் அடம் பிடிப்பால் தோல்வியில் முடிந்து போக நானும் பின்னர் அது பற்றிய அக்கறை கொள்ளவில்லை ஆனால் இந்த வருடமும் தொடர்ந்த முயற்சியில்  பேச்சு வார்த்தை  நடாத்திய இரண்டு தரப்பும் பேசியவை அது பற்றிய விபரங்களை  பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட இரு தரப்பினரோடும்  இரு தரப்பிற்கும் மத்தியஸ்த்தம் வகித்தவரிடமும் அறிந்து கெண்டேயிருந்தேன்பரிதி சுடப்படுவதற்கு மூன்று வாரங்களிற்கு முன்னர் முதலாவது  பேச்சுவார்த்தை பாரிஸ் 18 Marcadet Poissonnier என்னமிடத்தில் குமார் என்பவரது உணவகத்திலேயே நடந்தது,குமார் என்பவர் மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல கடந்த காலங்களில்  பிரான்சில் மாவீரர் குடும்பங்களின் விபரங்களை திரட்டி அவர்களை கெளரவிக்கும் பொறுப்பிலும் இருப்பபவர் அனைத்து தரப்பும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என பாடு படுவதோடு அதற்கான பேச்சு வார்த்தை முன்னெடுப்புக்களை தொடர்ந்தும் முன்னெடுக்கும் ஒருவர், இவரது கடையிலேயே அனைத்துலகம் சார்பில் பரிதியும் தலைமை செயலகம் சார்பில் தமிழரசனும் பேசத் தெடங்கினாரகள்,,
இங்கு பேச்சு வார்த்தை தொடக்கத்தில் தமிழரன் முன்று கோரிக்கைகளை  அடிப்படை கோரிக்கைகளாக முன்வைக்கிறார் அவை

1  புலம்பெயர் தேசங்களில் இயங்குகின்ற ஏனைய அமைப்புக்கள் உதாரணத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசு ,உகத்தமிழர் பேரவை போன்றனவற்றின் செயற்பாடுகளை குழப்பபாமல் அவர்களிற்கும் ஆதரவு அளித்து அவர்களோடு பயணித்தல்,அல்லது ஆதரவு அளிக்காவிட்டாலும் குறைந்த பட்சம் குழப்பாமல் விடுதல்.அதே நேரம் வெறுமனே  மாவீரர் தினத்தையும் விழையபட்டு போட்டிகளையும் மட்டும் நடத்திக்கொண்டிராமல்  இலங்கையரசின் போர்க்குற்றம் மீதான விசாரணைகள்  மற்றும் தாயக மக்களின் சுதந்திர வாழ்விற்காவும் தொடர்ந்து போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்தல்,

2 தற்போது உள்ள சூழலில் தாயகத்தோடு தொடர்பு இல்லாமல் வெளிநாடுகளில் மட்டுமே பரப்புரைகளை மேற்கொள்வது எமது போராட்டங்களிற்கு பலம் சேர்க்காது, எனவே தாயகத்தில்  பல குழப்பங்களோடு இயங்கிக் கொண்டு இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து அவர்களையும் சீரமப்பதற்கான அழுத்தங்களை கொடுத்து  அவர்களோடு தொடர்புகளை பேணியபடி அரசியல் ரீதியாக புலம்பெயர் மக்களையும் இணைத்து சரியான பாதையில் பயணிப்பது

3போரால் பாதிக்கப்பட்ட  போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களிற்கு முன்னுரிமைகொடுத்து பராமரிப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்கான திட்டமிடல்களை மேற்கொண்டு அவற்றை நடை முறைப்படுத்துதல்

இந்த மூன்று கோரிக்கைக்கும் அனைத்துலகச் செயலகம் இணங்கும் பட்சத்தில் தலைமைச்செயலகத்துடன் இணைந்து ஒரு கூட்டறிக்கை தயாரித்து ஊடகங்களிற்கு அறிவித்துவிட்டு சேரந்து இயங்லாம் என்று கோரிக்கை வைக்கப்பட்டது,
இந்த கோரிக்கைகளிற்கு பரிதி அளித்த பதில்கள் என பார்ப்போம்,முதலாவது கோரிக்கைகான பதில் நாடுகடந்த அரசை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் காரணம் அவர்கள் கே.பி யால் தொடக்கப்பட்டவர்கள்.இலங்கையரசுடன் வேலை செய்கிறார்கள் துரோகிகள்,துரோகிகளுடன் இணையமாட்டோம், உலகத் தமிழர் பேரவையானது செயற்பாட்டில் இல்லை அவர்கள் செயற்படும்போது யோசிக்கலாம் என்பது
இரண்டாவது கோரிக்கைக்கான பதில்,தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்ப முடியாது அவர்களும் துரோகிகள்,அதனால் நாங்கள்  செல்வராசா கஜேந்திரன் தலைமையில் புதிதாக ஒரு ஒரு அரசியல் கட்சியை உருவாக்குவதோடு  வெறுமனே அரசியலோடு மட்டும் நிற்காமல் அடுத்த கட்ட ஆயுதப்போரை தொடங்குவதற்கான  ஆயத்த வேலைகளிலும் இருக்கிறோம் விரைவில் ஆயுதப்போர் தெடங்கும்,

முன்றவதான  மாவீரர் குடும்பங்கள் மக்களின் வாழ்வாதாரங்கள் பற்றிய கோரிக்கைக்கு பரிதியின்பதில் அதைப்பற்றி எங்களிற்கு தெரியும், முதலில் மக்களின் விடுதலை பிறகு மற்றவற்றை பாக்கலாம் என்றதுதான்,

 நடைமுறைக்கு சாத்தியமற்ற  வில்லங்கமான பரிதியின் பதில்களால் மத்தியஸ்த்தம் வகித்தவர்கள் ஆத்திரமடைந்து  வில்லங்கமான பதில்தராமல் தற்காலத்திற்கேற்றவாறு  யோசித்து பதில் தருமாறு கூறிவிடுகிறார்கள் பரிதி கோபமாக அங்கிருந்து வெளியேறிவிடுகிறார், ஆனலும் பேச்சு வார்த்தை முயற்சியில் ஈடுபட்டவர்கள் விடுவதாயில்லை இந்த வருடம் எப்படியாவது அனைவரையும் இணைத்து மாவீரர் தினத்தை கொண்டாடுவதோடு ஒற்றுமைபப்படுத்தி விடவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தவர்கள் பரிதியோடு தொடர்ந்து பேசினார்கள், கடந்த முறையைப்போல  எவ்வித நிபந்தனைகளும் விதிக்காவிட்டால்  ஒற்றுமையை பற்றி பேசலாம் என்று விட்டார், அதற்கு மத்தியஸ்த்தம் வகித்தவர்களும் தலைமை செலகத்தை சேர்ந்தவர்களும் சம்மதித்தனர்.

சரியாக ஒரு வாரம் கழித்து  மீண்டும் அதே கடையில் பலர் முன்னிலையில் இருதரப்பும் பேசியது , நிபந்தனைகள் இன்றி இரு தரப்பும் ஒற்றுமையாக செயல்படவும் ஒன்றாக மாவீரர் தினத்தை கொண்டாடுவது எனவும் தொடர்ந்தும் அடுத்த நடிவடிக்கைகள் போராட்டங்களை இணைந்தே முன்னெடுப்பது என்பதற்கு பரிதி சம்மதம் தெரிவித்தார், பேச்சு வார்த்தையை ஏற்பாடு செய்தவர்களிற்கும் மகிழ்ச்சி பேச்சுவார்த்தை வெற்றி என்கிற செய்தி தொலைபேசி முலமாக அனைவரிற்கும் பரிமாறப்படுகின்றது,எனது கைத்தொலைபேசியும் உதறியது, இரு தரப்பும்  தனித்தனியாகஅறிக்கை தயாரிப்பது என்றும் அதனை பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்தவர்களோடும் இணைந்து சரிபார்த்து விட்டு கூட்டறிக்கையாக்கி ஊடகங்களிற்கு அனுப்புவது என்றும் முடிவுசெய்யப்பட்டது, பரிதியும் குறித்துவிட்டு கைகுலுக்கி  மகிழ்ச்சியோடு விடை பெற்றார்கள்,

ஆனாலும் பேச்சு வார்த்தையை ஒழுங்கு செய்தவர்களிற்கு எல்லாமே திட்டமிட்டபடி நடக்குமா என்கிற சந்தேகம் இருக்கத்தான் செய்தது காரணம் 2009 ம் ஆண்டு புலிகள் அமைப்பின் ஆயுதப்போர் முடிவிற்கு வந்த பின்னர்  நாடு கடந்த அரசு தொடங்கப் பட்டதிலிருந்து வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பு என்று தொடங்கி 2010 ம் ஆண்டு மாவீரர்  தினத்தன்று தலைவர் பிரபாகரனின் மரணணத்தை அறிவித்து அவரிற்குரிய மரியாதையை செலுத்தவேண்டும் என மேற்கொண்ட முயற்சிகள் வரை அனைத்திலுமே அனைத்துலகச் செயலகம் ஆரம்பத்தில் ஒத்துவருவது போல போக்கு காட்டிவிட்டு கடைசி நேரத்தில் காலை வாரிவிடுவது அவர்களது வழக்கமாக இருந்தது,அதைப்போலவே  இந்தத்தடைவையும் கடைசிநேரத்தில் காலை வாரிவிடுவார்களா என்கிற சந்தேகத்தில் இரு தரப்பையும் தொர்பு கொண்டு அறிக்கையின் முன்னேற்றம் பற்றி அறிந்து கொள்கிறார்கள்: ஆனால் அவர்கள் பயந்தது போல் நடந்தே விட்டிருந்தது, இரண்டு நாள் கழித்து தமிழரசனோடு தொலைபேசியில் தொடர்பு கொண்ட பரிதி , ஊடக அறிக்கை  ஒண்டும் வேண்டாம் மற்றைய நாட்டு பொறுப்பாளர்களும் இரும்பொறையும்  அதற்கு  ஒத்து வருகிறார்கள் இல்லை நாங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் இணைந்து செயற்படுவோம் என்கிறார், மீண்டும் தேவாங்கு தென்னை ஏறப்போவதை (எத்தனை நாளைக்குத்தான் வேதாளம்  மட்டும் முருங்கையில் ஏறுவது) பேச்சு வார்த்தை ஏற்பாட்டாளர்களிற்கு அறிவிக்கிறார்,

குமார் உட்பட மேலும் பலர் பரிதியை தொடர்பு கொண்டு கூட்டறிக்கை விடவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்கள், காரணம் கூட்டறிக்கை ஒன்று வந்தால்தான்  பிரான்சை முன்னுதாரணமாக எடுத்து மற்றைய நாடுகளிலும் இணைப்புக்களை ஏற்படுத்தலாம், அல்லது மற்றைய நாடுகளில் தொடர்ந்தும் மாறி  மாறி துரோகி பட்டங்கள் வழங்குவது தொடரும், அடுத்ததாக எம்மவர்களிற்குள் உள்ள சிறிய பிழவுகளை வைத்துக்கொண்டு எதிரியானவன் அதற்குள் புகுந்து பிழவுகளை வலுப்படுத்தி மோதல்களை ஊக்கிவித்து எம்மைகொண்டே எம்மை அழிக்கும் வேலையை செய்து முடிப்பான், எனவே இந்த கூட்டறிக்கையானது நிச்சயம் எதிரிக்கு ஏமாற்றத்தை கொடுக்கும், எனவே கூட்டறிக்கை அவசியம் என்று வலியுறுத்தியதோடு மீண்டும் நவம்பர் மாதம் 11 ந்திகதி சந்திப்பு ஒன்றை நடத்துவதோடு அறிக்கையயும் வெளியிடுவதென உறுதியாக சொல்லி விட்டார்கள்,

அதற்கிடையில் பிரான்சில் தான் மற்றைய அமைப்புக்களோடு இணைந்து இயங்கப்போவதாக  மற்றைய நாட்டு அனைத்துலகப் பொறுப்பாளர்களிற்கும் அறிவித்து விடுகிறார், உடனடியாகவே  இலண்டன் பொறுப்பாளர் தனத்திடம் இருந்தும், சுவிஸ் பொறுப்பாளர் ரகுபதியிடம் இருந்தும் எதிர்ப்பு கிழம்புகின்றது, அதுமட்டுமல்ல அவர்கள் உடனடியாக இரும்பொறை( அரவிந்தன் இவர்தான் நெடியவன் மற்றும் வாகீசன் ஆகியோர் கைதான பின்னர் அனைத்துலகத்தை வழி நடத்தும் முக்கியமானவர்,  என்பவரை தொர்பு கெண்டு  பிரான்சில் பரிதியின் இணைவை எப்படியாவது தடுத்து நிறுத்தும்படியும் அப்படி அங்கு இணைந்தால் அதே முன்னுதாரணமாகி அனைத்து நாடுகளிலும்  அனைவரோடும் இணையவேண்டி வரும், பின்னர் கணக்கு வழக்கு எல்லாம் காட்டவேண் வரும்   இணைப்பை நிறுத்தி விடுமாறு  கூறிவிடுகிறார்கள், பரிதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இணையவேண்டாம்  அறிக்கையும்  விடவேண்டாம் என கோரிக்கை வைக்கிறார்,  ஆனால் தான் இக்கட்டான நிலையில் இருப்பதாக பரிதி தெரிவிக்கிறார், இணைப்பை எப்படியாவது தடுத்து நிறுத்திவிடவேண்டும் என்கிற நோக்கோடு யேர்மனியில் இருந்த இரும்பொறை பாரிசிற்கு விரைகிறார், அன்று இரவு பரிதி சுட்டுக்கொல்லப் படுகின்றார்,, 
B870BB00BC10BAE0BCD0BAA0BC60BBE0BB10BC80
இரும்பொறை

BB00B950BC10BAA0BA40BBF0B9A0BC10BB50BBF0

ரகுபதி சுவிஸ்

BB20BA30BCD0B9F0BA90BCD0BA40BA90BAE0BCD0

தனம் இலண்டன்
அடுத்தபாகத்துடன் முடிவடையும்....

பங்குபிரிப்பும் படுகெலையும் பாகம் 3

2:20 PM, Posted by sathiri, 5 Comments

 பங்குபிரிப்பும் படுகெலையும் பாகம் 3
 
(பூபாளம் கனடா)
சாத்திரி
 
கடந்த தெடரில் பங்குபிரிப்பும் 1995ம் ஆண்டு புலிகளின் புலனாய்வு மற்றும் வெளிக்கட்டமைப்பை சேர்ந்தவர்களாலேயே புலிகளின் அனைத்துலகத்தால் நடாத்தப்பட்ட  வியாபார நிலையமும் அவர்களது அலுவலகமும் தாக்கப்பட்டதை  எழுதியிருந்தேன். அது பலரிற்கும் ஆச்சரியத்தை கொடுத்திருந்தது, என்னுடைய நண்பர்கள் மட்டுமல்ல பல முன்னைநாள் போராளிகள் கூட அந்தச் சம்பவம்பற்றி அறிந்திருக்கவில்லை,உண்மையிலேயே இலங்கை புலனாய்வாளர்களோ அல்லது ஒட்டுக்குழுக்களோ நடத்தியதாகவே இது வரை காலமும் நினைதஇதிருந்தார்கள், அதேபோலத்தான்  புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தை சேர்ந்தவரே தங்களது பொறுப்பாளரை போட்டுக்கொடுத்த சம்பவம் ஒன்றும் யெர்மனியில் நடந்தது,
 
 
புலிகள் அமைப்பின் முடிவிற்கு பின்னர் அனைத்துலக செயலக பொறுப்பாளர் கஸ்ரோ இறந்துபோக வெளிநாட்டு அனைத்துலகச்செயலகம் அனைத்தையும் நோர்வே யில் இருந்து நெடியவன் என்பவர் இயக்க அவரிற்கு அடுத்த நிலை பொறுப்பாளராகவும் யெர்மனிய பொறுப்பிலும் இருந்தவர்தான் வாகீசன் என்பவர். புலிகளின் முடிவிற்கு பின்னர் நெடியவனும் வாகீசனும் கனடா அமெரிக்கா தவிர்ந்த மற்றைய நாடுகளிற்கு பயணம் செய்து புலிகள் அமைப்பின் சொத்து விபரங்களை திரட்டியவர்கள்  தங்களின் நம்பிக்கைக்குரிய தாங்கள் கைகாட்டும் நபர்களின் பெயரிற்கு மாற்றி விடும்படி கோரிக்கை வைத்தனர் ,மறுத்தவர்கள் மிரட்டப்பட்டனர்
 
vakesan_zps04d82faf.jpg
,
அதேபோலத்தான் சுவிசிலும் அனைவரிடமும் கோரிக்கை வைத்தபோது சுவிஸ் பொறுப்பாளராக இருந்த குலம்  இவர்களது கோரிக்கைக்கு மறுத்ததோடு பலர்  தன்னை நம்பித்தான் கடன் எடுத்து பணம் தந்திருக்கிறார்கள் எனவே வியாபார நிலையங்களால் வரும் வருமானத்தை வைத்து அந்தக்கடன்களை அடைக்கவேண்டும் என்று சொன்னதற்கு. கடன் அடைக்கிற வழி எங்களிற்கு தெரியும் நீ உனது வேலையை பார் இன்றிலிருந்து நீ பொறுப்பாளர் இல்லையென்று விட்டு நெடியவன் குலத்தை தாக்கி அலுவலகத்தை விட்டு துரத்தியும்விட்டிருந்தார்கள், இங்கு குலம் என்பவர் யார் என்றும் சுருக்கமாக சொல்லி விடுகிறேன், சுவிஸ் நாட்டில் புலிகளின் பொறுப்பாளரக இருந்த முரளி  தற்சமயம் கனடாவில் வசிக்கிறார் இவர் நிதி சேகரித்தது சிலரை அச்சுறுத்தியது தொடர்பா சுவிஸ் காவல்த்துறையால் கைதான பின்னர் சுவிஸ் பொறுப்பை ஏற்றவர் குலம்,எழுபதுகளின் இறுதியில் பிரபாகரன் அவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்திய காலங்களில் பிரபாகரனை புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தனது வீட்டில் தங்கவைத்து பராமரித்ததில் இருந்து இவரது இயக்கத்துடனான தொடர்பு தொடங்குகின்றது,பிரபாகரனே குலம் அண்ணை என்று மரியாதையோடு அழைக்கப்பட்டதொரு மனிதர்,
 
ltteSwisskulam-147x150_zps1beb18ec.jpg
 
1984 ம் ஆண்டு இலங்கையரசின் அவ்ரோரக விமானத்தை தானே தயாரித்து எடுத்துச்சென்ற நேரக்கணிப்பு குண்டின் முலம் தகர்த்தவர்,அதற்கும் மேலால்  ஆரம்ப கால இயக்க விதிக்கு அமைய இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஒரு மனிதன் , பிரபாகரன் அவர்களே திருமணம் செய்த பின்னர்  பல தடைவைகள் குலத்தை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டும் தமிழீழம் கிடைக்கட்டும் பார்க்கலாம் என்று சொல்லிவந்தவர்,புலிகளை திட்டுபவர்கள் கூட குலம் அண்ணையை திட்டுவது கிடையாது அப்படியான ஒருவரை சொத்திற்காக நெடியவனும் வாகீசனும்அடித்து உதைத்திருந்தார்கள்,பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால்  இந்த செய்கைக்காக நெடியவனையும் வாகீசனையும்  வெளிநாட்டில்வைத்தே போட்டுத்தள்ள சொல்லியிருப்பார், 
 
nediyavan_zps0a7d3761.jpg
 
இதற்கு அடுத்ததாக யெர்மனியில் அனைத்து மானிலங்களிலும் தங்கள் பெயர்களில் சொத்துக்களை வைத்திருந்த பொறுப்பாளர்கள் அனைவரையும் அதன் விபரங்களோடு தன்னை வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்த வாகீசன் சந்திக்கும் இடம் திகதி நேரம் அனைத்தையும் அறிவித்து விடுகிறார். அவர்கள் சந்திப்பதாக சொல்லியிருந்த  உணவு விடுதியில் வாகீசன் காத்திருக்கிறார். பெரும்பாலனவர்கள் வந்துசேர்ந்துவிட்டிருந்தார்கள் முக்கியமான ஒருவரைத்தவிர,அவர் யாரெனில் தென்மானிலங்களிற்கு பொறுப்பாக இருந்த ஸ்ருக்காட் நகரை சேர்ந்த சிறிரவி  என்பவரே,  சிறிரவிக்காக காத்திருந்தவேளை சிறிரவி வரவில்லை அவரிற்கு பதிலாக அங்கு வந்தவர்கள் யெர்மனிய காவல்த்துயையினர், வாகீசனையும் அவரோடு நின்றவர்களையும் கைது செய்கிறார்கள், ஒபகௌசன் என்னும் இடத்தில் இயங்கிய வாகீசனின் அலுவலகத்தினுள் புகுந்த யெர்மன் காவத்துறையினர் அங்கிருந்த ஆவணங்களையும் எடுத்துச் சென்றார்கள்.
 
வாகீசனை ஏற்கனவே யெர்மனிய காவல்த்துறையினர் தங்கள் கண்காணிப்பு வழையத்தினுள் கொண்டுவந்திருந்தாலும் அன்று அனைவரும் முக்கிய ஆவணங்களோடு சந்திப்பதை போட்டுக்கொடுத்ததேடு தன்னுடைய சொத்துக்களை சிறிரவி வாகீசனிடமிருந்து பாதுகாத்துக்கொண்டார்,  ஆனால் வழைமைபோல இலங்கை அரசின் சதி என்று தமிழ் இணையங்கள் எழுதித் தள்ள  இந்த கைதுகளின் பின்னணியில் தானே இருந்ததாக சிறீலங்காவிற்கான தூதர் ஜெகத்டயஸ் அறிவித்ததாகவும் செய்திகள் வெளியானது, தொடர்ந்தும் யெர்மனியில் பலர் கைதாகி விசாரணைகள் நடந்தாலும் இதுவரை புலிகள் அமைப்பில் ஒரு பெரும் பகுதியான தென்மானில பொறுப்பாளரான சிறிரவியை மட்டும் இன்னமும் யெர்மன் காவல்த்துறையினர் விசாரணை செய்யவில்லை.இவரிடமிருந்து தொடர்ந்தும் யெர்மன் காவல்த்துறை தகவல்களை பெற்றுக்கொண்டிருக்கலாம், எல்லாவற்றையுமே பணமாக்கத் தெரிந்த அனைத்துலகசெயலகம் வாகீசன் கைதானதும் ,வாகீசனை வெளியே எடுக்கவேண்டும் என்று அதற்கும் மக்களிடம் பணம் சேர்த்தார்கள், நிதி சேர்ப்பது விரும்பியவர்கள் கொடுப்பது அவரவர் விருப்பம் ஆனால் நிதியை சேகரிப்பவர்  சிறிரவியே . அவரே மாட்டியும் விட்டுவிட்டு வெளியே எடுக்க அவரே நிதியும் சேகரிக்கிறார்,சிறி ரவி தான் வாகீசனை போட்டுக்கொடுத்தார் என்று அறிந்த சிலர் சிறிரவியிடம் எதற்காக வாகீசனை போலிசிடம் போட்டுக்குடுத்தாய் எனகேட்டதற்கு அவர் சொன்ன பதில்  நான் போட்டுக் குடுக்கவில்லை நான் யேர்மனியில் வசிப்பதால் யேர்மன் நாட்டு காவல்த்துறையின் நடவடிக்கைக்கு ஒத்துளைப்பு கொடுத்தேன்  அது காட்டிக்கொடுப்பு அல்ல என்றாராம். இதே மற்றவங்கள் என்றால் துரோகி உளவாளி கட்டிவைத்து போட்டுத்தள்ளவேண்டும் ,
 
அதே இவர்களே தங்களுக்குள்ளை காட்டிக்குடுத்தால்  அது காவல்த்துறைக்கு ஒத்துளைப்பாம்,கவுண்டமணி பாணியில்  அடங்கொக்கா மக்கா என்று  சொல்லதோன்றுகிறதா,,ஆனால் வாகீசன் வெளியே வந்தபாடுதான் இல்லை, இதேபோலத்தான் பிரான்சில் பரிதி மற்றும் பலரும் கைது செய்யப்பட்டபோதும் பிரான்சிலும் அவர்களை வெளியே எடுக்கவென நிதி சேகரிக்கப்பட்டது  அதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு அதற்கு பொறுப்பாளராக பாரிஸ் ஈழநாடு  பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார் , இந்தக்குழுவை பரிதி கைதின் பின்னர் பிரான்ஸ்  பொறுப்பை எடுத்த மயூரன் குட்டி அல்லது விடுதலை  என்பவரோடு சேர்ந்து அமைத்தவர்களில் நானும் ஒருவன் ,அந்த குழுவை அமைத்ததோடு நான் ஒதுங்கி விட்டிருந்தேன், பிரான்சிலும் நிதி சேகரிக்கப்பட்டது ஆனால்  கைதானவர் எவரது வழக்கிற்கும் அந்த நிதி செலவளிக்கப்படவில்லை .கைதானவர் அவரவர் தங்கள் உறவுகள் நண்பர்களின் உதவிகளுடனேயே வழக்கு செலவுகளை கவனித்திருந்தார்கள்.
 
 
இது இப்படியிருக்க யெர்மனியில் பரப்புரைக்கு பொறுப்பாக இருந்தவர் பெயர் அகிலன் என்பவர். இறுதி யுத்தத்திற்கு என சேகரித்த நிதியில் ஒரு பகுதி இவரது கைகளிலும் இருந்தது அதனை அவர் மடகஸ்காரில் முதலீடு செய்திருந்தார் அதேநேரம் அகிலன் சிறுவயதிலேயே யெர்மனிக்கு வந்துசேர்ந்தவர் யெர்மனிய குடியுரிமை பெற்றவர் இவரிற்கு யெர்மன் சட்டதிட்டங்கள் என்றால் என்ன யெர்மனிய காவல்த்துறை எப்படிப்பட்டது என்று தெரிந்திருந்திருந்தவர். வாகீசனின் அடிதடி அடாவடி அரசியலால் நிச்சயம் ஒரு நாளைக்கு மாட்டவேண்டி வரும் என்று தெரிந்திருந்தது ஆனால் வாகீசனை கட்டுப்படுத்த முடியாமல் இருந்தார். அதனால் நிரந்தரமாக குடும்பத்துடன் மடகஸ்காரிற்கு சென்று குடியேறிவிட திட்டமிட்டிருந்தார். ஆனால் யேர்மன் காவல்த்துறை முந்திவிட்டிருந்தது.வாகீசனை கைது செய்துவிட்டார்கள். அதை அறிந்த உடனே அகிலன் யேர்மனிய காவல்த்துறை எல்லாம் மொக்கனுகள் என நினைத்தாரோ என்னவோ அவசரமாக மடகஸ்காரிற்கு தனியா பறந்துவிட்டிருந்தார்.ஆனால் அவரது நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருந் யேர்மன் காவல்த்துறையினர்  அகிலனை மடகஸ்காரிலிருந்துயேர்மனிக்கு  நாடுகடத்தவைத்து யேர்மன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
 
இவையனைத்தும் அவ்வப்போது செய்திகளாக வெளிவந்தவைதான். அனைத்துலகச் செயலகம் புதிதாக விட்ட புலுடாதான்  மீள இணையும் புலிகள் என்கிறதொரு   காணொளி. 
கைத்தொலைபேசி முலம் எடுக்கப்பட்ட காணொளியில் முதலில் மாவீரர்நாள் உறுதி உரை என எழுத்து போகின்றது. பின்னர்  இருளான  மரங்கள் உள்ள  இடமொன்றில் முகங்கள் மறைக்கப்பட்ட சிலர் கறுப்பு உடையணிந்தபடி நிற்க முன்னால் ஒரு பெண் சிறிய ரோச்லைற் வெளிச்சத்தில் கடதாசியில் எழுதியிருப்பதை படிக்கிறார். தாங்கள் முள்ளிவாய்க்காலில் நின்றே உறுதியெடுப்பதாக தொடங்குகிறார். முள்ளிவாய்கால் பகுதிமுழுக்க முழுக்க இலங்கை ராணுவமே நிற்கிறதென்பது வேறை கதை. அறிக்கையை படித்தவர்   5ம் கட்ட ஈழப்போரை தொடங்கப்போகிறோம் என்கிறார்.ஒருவர் கைகளிலும் ஒரு பொல்லாங்கட்டை கூட இல்லை. சரி அவர்களது உறுதி மொழியில் அடுத்த கட்ட நடவடிக்கை கொள்கை விளக்க உரை தரைவரைப்பற்றிய தகவல்கள்.எதாவது வருமா என நானும் ஆவலோடு காத்திருந்தேன். ஆனால் அந்தப் பெண்மணியோ  வினாயகத்தையும்  அவரது சகோதரரையும் திட்டித்தீர்க்கிறார்,இதுதான் அவர்களது மாவீரர் உறுதி உரை. மற்றையவர்களை திட்டித்தீர்ப்பதுதான் அவர்களது 5 ம் கட்டப்போர் என்று அப்பொழுதுதான்  எனக்குப்புரிந்தது.
 
அறிக்கை படித்து முடிந்ததும் ஒருவர் ஆமிவாறான் ஓடுங்கோ என்பார் . அறிக்கை படித்து முடியும்வரை ஆமிக்காரரை காத்திருக்கச் சொல்லியிருப்பாங்கள் என்று நினைக்கிறேன். பற்றைகள் உள்ள பகுதியால் ஓடுகிறார்கள். தமிழ் சினிமாவில் கதாநாயகன் உசிலம்பட்டியில்  கொழுத்தும் வெய்யிலில் கதா நாயகியை கலைக்கத்தொடங்க  உடனேயே சுவிசில் கொட்டும் பனியில் பாடல் தொடங்குவதைப்போல  பற்றைக்குள்ளால் ஓடியவர்கள் திடீரென மணல் நிறைந்த கடற்கரை ஓரமாக இரண்டு கல்லறைகள் போல் மணலால் அமைக்கப்பட்டு  ஒரு தீப்பந்தம் ஏற்றிய இடத்தில் சத்தியப்பிரமாணம் எடுக்கிறார்கள். அத்தோடு அனைத்துலகத்தின் படம்காட்டல் முடிவடைகின்றது.  5ம் கட்ட ஈழப்போர் என்பது அடுத்தவரை திட்டித்தீர்ப்பது என்பதால் இக்கட்டுரையை எழுதத்தொடங்கியதிலிருந்து என்மீதும் 5 கட்ட ஈழப்போர் தொடங்கி விட்டது எனவே இந்தக் கட்டுரையில் வாகீசனின் கைது பற்றி  எழுதவேண்டி வந்ததால் பரிதி இறுதியாக தமிழரசனோடு நடாத்திய பேச்சு வார்த்தை பற்றி எழுதமுடியவில்லை. எனவே அதனை அடுத்த  பதிப்பில் பார்ப்போம்..தொடரும்...............