Navigation


RSS : Articles / Comments


ஈழத்துப் பெண்கள் அட்டை பிகருகள்

1:53 PM, Posted by sathiri, 27 Comments

டோண்டுவிற்கான பெயரிலியின் அனாகரீகம் நளினமானது என்கிற பதிவில் முரளி என்பவர் எழுதியிருப்பது முரளி கருத்து:

அதுஎன்னவோ தெரியவில்லை இலங்கை தமிழர்களில் சிலர் என்னேரமும் கற்பழிப்பு கற்பழித்தார்கள் என்று உளறி கொட்டிகொண்டே இருக்கின்றனர்.

ஈழத்தில் ஐஸ்வர்யா ராய் போன்ற அழகு தேவைதைகள் எங்கும் கொட்டி கிடக்கிறார்கள் போலும். தனுவை ஒருவன் கற்பழித்தான் என்று உணர்ந்த போது அடப்பாவமே அவளை கற்பழித்தவனுக்கு இந்தளவு உணர்ச்சியோ என்ற குழப்பம் கூட.அட்டு புகர்களை கூட கற்பழிக்க சில காரணங்களே இருக்க வேண்டும்.
அட்டு புகர்கள் தன்னை எவனாவது புணரமாட்டானா என்ற ஏக்கம் அல்லது அங்கு இருக்கும் ஆண்கள் பேச மட்டும் தான் என்று கூட சொல்லாம்.

முரளி என்பவரிற்கு சொல்லிக்கொள்ள விரும்புவது ஜயா (சார்) எங்களது ஈழத்து பெண்கள் அட்டை பிகருகள்தான். அவர்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும். முழு ஒப்பனை செய்த முககங்களோ. பருத்து நிமிர்ந்த மார்புகளோ. துருத்தி நிற்கும் பிட்டங்களோ. வளு வளு கால்களோ . இடையில் இருந்து மேலெழும் அளவுகளான இருபத்தியாறு . முற்பத்தியிரண்டு .இருபது என்கிற அளவுகளோ இல்லைத்தான். முப்பதாண்டுகள் திணித்து விடப்பட்ட யுத்தம் இலங்கை சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டு கால வரலாற்றில் அய்ம்பது ஆண்டுகள் அவசரகாலச்சட்டத்திலேயே ஆட்சி நடத்திவிட்டதன் பெருமை பொருளாதாரத்தடை என்பதால். துருத்தி நிற்கும் பற்கள்.வற்றிப்போன மார்புகள். வாடிப்போன முகம். ஒல்லியான கால்கள்.ஒட்டிய வயிறு . காலிலிருந்து கழுத்துவரை ஒரே அளவுகள்தான். ஆனாலும் அதிலிருந்த ஒரு வாசலையெ விட்டு வைக்காத இந்திய இராணும். நீங்கள் சொன்னது போல ஜஸ்வர்யா ராயாய் இருந்திருந்தால் ஒரு பெண்ணின் மிகுதி ஓன்பது வாசல்களையும் விட்டு வைத்திருப்பார்களா?? அவர்கள் மீதம் விட்டிருந்த மிகுதி வாசல்களையும் நீங்கள் உங்கள் எழுத்தால் நிரப்பியுள்ளீர்கள். நன்றிகளும் வாழ்த்துக்களும்.

சுய இன்ப டோண்டுவிற்கும் கையை இழுத்த பெயரிலிக்கும்.

2:38 PM, Posted by sathiri, 6 Comments

சுய இன்ப டோண்டுவிற்கும் கையை இழுத்த பெயரிலிக்கும்.

தொடர்ந்து ஈழத்தமிழர்களிற்கு எதிரான விடயங்களை தேடியெடுத்தும் சொந்தமாகவும் அனுபவித்து எழுதி சுய இன்பம் அடைந்து கொண்டிருந்து டோண்டுவின் கையை அதியுச்ச நிலையின்போது இழுத்து விட்டபெயரிலிக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக்கொண்டு நான் எழுதுவது என்னவெனில்... ஈழத்தமிழனின் உண்மையான வலிகளை யூரியுப்பில் பார்த்துவிட்டு ஒரு குத்துப்பாட்டும்(குத்துசாங்) ஒரு சண்டை(பைட்டும் ) வைத்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும்.என்று சினிமா விமர்சனம் எழுதுபவர்களிடம் நாங்கள் தமிழன் என்கிற உணர்வினை எதிர்பார்ப்பது தறிகெட்டத்தனம்.எனவே எழுதி விட்டுப்போகட்டும்.

வாமலோசன் விடுவிக்கப்பட்டார்.

1:09 AM, Posted by sathiri, 12 Comments

அறிவிப்பாளர் வாமலோசன் விடுவிக்கப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட வெற்றி எம் எம் வானொலியின் நிகழ்ச்சிப் பிரிவு பணிப்பாளரும் அறிவிப்பாளருமான ஏ ஆர் வி வாமலோசன் இன்று நண்பகல் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தற்கொலைதாரி ஒருவரின் கையடக்க தொலைபேசியில் இவருடைய கையடக்க தொலைபேசி இலக்கம் இருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் மலேசியாவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது பொலிஸாரால் சுமத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று நண்பகல் அவர் கொழும்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


http://www.tamilwin.com/view.php?22OpDcc3n...9E2e2ILL3b37GYe

பயோடேற்ரா (கருணா)

1:26 AM, Posted by sathiri, One Comment


மதிக்கப்பட்ட பெயர். கருணா அம்மான்
மதிப்பிழந்த பெயர். முரளிதரன்
தொழில். .நக்குவது
உபதொழில்.காட்டிக்கொடுப்பு. கடத்தல்.கப்பம்
பொழுது போக்கு.துரோகம் செய்வது
சாதனை. கிழக்கு மாகாண தமிழ்மக்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும் உணர்வுகளையும் சிங்களத்திடம் அடகுவைத்தது.
சோதனை.பிள்ளையான்.
வேதனை.இங்கிலாந்தின் சிறைவாசம்.
நண்பர்கள். அண்மைக்காலமாக தேவானந்தா.
எதிரிகள்.தன்மானமுள்ள உலகத்தமிழர்கள் அனைவரும்.
இலட்சியம். எதுவுமே கிடையாது
பிடித்த பாடல். எங்கே செல்லும் இந்தப் பாததை யார்தான் யார்தான் அறிவாரோ(படம்.சேது)
மறந்தது. தமிழீழம்
நினைப்பது.மகிந்தா. கோத்தபாய.

புலம்பல்.அரசனை நம்பி புருசனை கைவிட்டதெண்ட பழமொழி எனக்குத்தான் பொருந்தும்.அரசாங்கத்தை நம்பி பெண்டாட்டி பிள்ளையளையும் கைவிட்டிட்டன்.இப்ப கோட்சூட்டை வேறை மாட்டி பார்லிமென்ருக்குள்ளை தள்ளிவிட்டிட்டாங்கள்.அறிக்கை வேறை விடவேண்டிக்கிடக்கு ஜயோ..ஜயோ..

இந்தியாவே இது தேவையா????

2:24 PM, Posted by sathiri, No Comment

இலங்கையின் போரை நிறுத்தவே முடியாது- ஆனால் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பேன் என்று இந்தியத் தலைநகர் புதுடில்லியில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

புதுடில்லி சென்றுள்ள மகிந்த ராஜபக்ச இன்று அந்நாட்டு ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தால்தான் போரை நிறுத்த முடியும்.

இலங்கையில் வாழும் தமிழர்கள் என் நாட்டு குடிமக்கள். அவர்களைப் பாதுகாப்பது எனது பணி என்பதை இந்தியப் பிரதமருக்கும் உலக நாடுகளுக்கும் தெரிவிக்கிறேன்.

இந்தியாவில் பயிற்சி பெற்ற 1,200 தமிழர்களை (துணை இராணுவக் குழுவினரை) சிறிலங்கா படையில் இணைத்துக் கொண்டுள்ளோம் என்றார் அவர்.

2008 ஆண்டின் சிறந்த நகைச்சுவை

6:35 AM, Posted by sathiri, No Comment




இலங்கை
அமைதி ஒப்பந்தத்தி்ற்குப் பின்னர் தனது சொந்த குண்டு துளைக்காத உடையை, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு வழங்கினார் ராஜீவ் காந்தி. ஆனால் அவரையே குண்டு வைத்துக் கொன்றனர் புலிகள் என்று சட்டசபையில் காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்ஸ் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

எப்பிடித்தான் யோசிப்பாங்களோ?? யாராவது ஒரு விருதிற்கு அல்லது ஒரு பொன்னாடைக்காவது ஏற்பாடு பண்ணுங்கப்பா.

சிறீலங்கா வான் படை

10:33 AM, Posted by sathiri, No Comment

சிறீலங்கா வான் படையினர் இன்று பரந்தன் பகுதியில் நடத்திய கொடூரத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட ஐந்து பொது மக்கள் படுகாயமடைந்துள்ளனர். மதியம் 12.50 மணியளவில் இரண்டு குமாரபுரம் பகுதியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கடந்த மாதம் சிறீலங்கா வான் படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த திருமதி மனோகரன் என்பவரின் 31ம் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோதே, விமானப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதே நேரம் தாங்கள் கடற்புலிகளின் முக்கிய தளத்திற்கே குண்டு வீசியதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையரசு சொன்ன காயமடைந்த கடற்புலிகளின் படங்கள் இணைத்துள்ளேன். படங்கள் நன்றி செய்தி கொம்.



பிரான்சில் மாவீரர்நாள் விபரம்

3:24 PM, Posted by sathiri, No Comment

யாழ்ப்பாண பத்திரிகைகளின் இன்றைய பரிதாப நிலை

2:31 AM, Posted by sathiri, One Comment

யாழ்ப்பாணத்து மக்களினதும் யாழின் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்களின் நிலைமையை பதிவு செய்த யாத்ரா பதிவாளரிற்கு நன்றிகள்










நன்றி யாத்ரா

உடன் பிறப்புக்களே

12:30 PM, Posted by sathiri, No Comment



உடன் பிறப்புக்களே என்
முயலாமை நான்கெழுத்து
தள்ளாமை நான்கெழுத்து
இயலாமை நான்கெழுத்து
ஈழத்தமிழா
மரணம் நான்கெழுத்து
அதுதான் உனது
தலையெழுத்து

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்திய பல்கலைக்கழகமொன்று டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்க உள்ளது. பெனரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தினால் ஜனாதிபதி மஹிந்த

1:37 PM, Posted by sathiri, No Comment

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்திய பல்கலைக்கழகமொன்று டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்க உள்ளது.
பெனரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தினால் ஜனாதிபதி மஹிந்த கௌரவிக்கப்படவுள்ளார்.எதிர்வரும் விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி கௌரவிக்கப்படவுள்ளார். கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளது. ஜனாதிபதிக்கு டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பில் இந்திய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=735:2008-10-26-04-03-08&catid=36:2008-09-21-04-33-30&Itemid=103

இந்திய குடியரசுத் தலைவி பிரதீபா பாட்டீல் இந்த கௌரவ விருதினை இலங்கை ஜனாதிபதிக்கு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிழலாடும் நினைவுகள்

10:42 AM, Posted by sathiri, One Comment

நிழலாடும் நினைவுகள்

கப்ரன் கோணேஸ் (R.P.G.கோணேஸ்)

16.05.87.அன்று பிறபகல் ஒரு இரண்டுமணியளவில் வல்லைவெளியில் வடமராட்சியிவிருந்து ஒரு வாகனம் அச்சுவேலி நோக்கி வந்து கொண்டிருந்தது.அந்த வாகனம் வல்லை பாலத்தை அணமித்துகொண்டிருந்த பொழுது அப்போ பலாலி படைத்தளம்நோக்கி போய் கொண்டிருந்த உலங்கு வானுர்தியொன்று அந்த வாகனத்தை கவனித்தவிட்டு அதன் மீது தாக்குதலை தொடுக்கவும்.

அச்சு வேலியில் வல்லைவெளியின் முடிவில் இருந்த தெனங்காணி ஒன்றினுள் இருந்த காவலரணில் காவல் கடைமையில் இருந்த இரண்டு போராளிகள் அந்த உலங்குவானுர்தி மீது தாக்குதலை தொடுக்க உலங்கு வானுர்தி திரும்பி பலாலி படைத்தளத்துனுள் சென்று மறைந்து கொள்கிறது. உலங்கு வானுர்தி நடாத்திய தாக்குதலில் வாகனத்தில் வந்த ஒருவர் காயமடைந்திருந்தார் அவரிற்கு முதலுதவி வழங்கி அவரை அந்த வாகனத்திலேயே வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துவிட்டு அவர்கள் தங்கள் காவலரணினுள் மீண்டும் போகவும் பலாலியில் இருந்து ஒரு கடல் விமானம் மேலெழுந்து வட்டமடிக்க தொடங்க (இந்த விமானம் தான் 80 களின் இறுதியிக் காலங்களில் இலங்கை இராணுவம் உளவு பார்க்க பயன்படுத்தியது)இரண்டு உலங்கு வானுர்திகள் மேலெழுந்து போராளிகள் இருந்த அந்த காவலரணை தாக்கதொடங்கின.

உடனடியாக அந்த போராளிகளிற்கு உதவ அச்சுவேலி வசாவிளான் வீதியில் ஒட்டகப்புலத்தில் அமைந்திருந்த புலிகளின் முகாமில் இருந்து சில போராளிகள் ஒரு வாகனத்தில் விரைகின்றனர்.அவர்கள் அச்சுவேலி நோக்கி போய்கொண்டிருந்த வாகனம் பட்டுபூச்சி பண்ணையை கடக்கும் போது மூண்றாவதாக ஒரு உலங்கு வானூர்தி அந்த வாகனத்தை கலைத்து தாக்குதல் நடாத்ததொடங்கியது.தோப்பு சந்தியை வாகனம் அண்மித்ததும் உலங்கு வானுர்திஏவிய ஒரு குண்டென்று வாகனத்தின் அருகில் வீழ்ந்து வெடிக்கவும் நிலை தடுமாறிய வாகனம் அங்கிருந்த சிறிய மதகில் மோதிநின்றது.

வாகனத்தினுள் இருந்த கோணேசிற்கும் இன்னொரு போராளிக்கும் வாகன கண்ணாடிகள் உடைந்ததில் காயங்கள் ஏற்படவே வாகனத்தை மீண்டும் இயக்கிய போராளிகள் அச்சுவேலி சந்தியில் அமைந்திருந்த ஒரு தனியார் வைத்திய சாலையில் கோணெசையும் மற்ற போராளியையும் இறக்கிவிட்டு வல்லை சந்தியை அடைந்து அங்கு உலங்கு வானுர்திகள் மீது தாக்குதலை தொடுக்கவும் சில நிமிட நேர சண்டையின் பின்னர் உலங்கு வானூர்தியும் கடல் விமானமும் பலாலி தளத்தினுள் சென்று மறைய அந்த சண்டை முடிவுக்கு வருகிறது. வைத்திய சாலையில் கோணேஸ் காயமடைந்து அனுமதிக்கபட்ட செய்தி கெள்விப்படதும் அவள் அழுதபடி பதறியடித்து கொண்டு ஓடோடி வந்தாள் என்ன நடந்தது பெரிய காயமா ஆழுக்கு ஒண்டும் இல்லையா என்று அங்கு நின்ற தாதியை கேள்விகளால் துளைத்தவளை.

ஒண்டும் இல்லை சின்னகாயங்கள்தான் வான் அடிபட்டடு கண்ணாடி உடைஞ்சதாலை கன்னத்திலையும் நெஞ்சிலையும் கண்ணாடியள் குத்தி போட்டுது காலும் அடிபட்டிருக்கு அவ்வளவுதான் இப்ப டொக்ரர் உள்ளை பாத்தகொண்டு நிக்கிறார் அவசரபடாதை என்று அவளிற்கு ஆறுதல் சொன்ன அந்த தாதியின் தோள்களில் சாய்ந்தபடி குழந்தையை போல விம்மியழ தொடங்கி விட்டாள். அவள்யார்?? அவள் ஏன் அழுகிறாள்?? அவளிற்கும் கோணேசிற்கும் என்ன சம்பந்தம்??? பார்ப்போம். கோணெசின் கிராமமான அச்சுவேலிதான் அவளின் சொந்த கிராமமும் எனவே கோணேசை அவளிற்கு பல வருடங்களாக படிக்கும் காலங்களில் இருந்தே தெரியும் அந்த வைத்தியசாலையில் அவளும் ஒரு தாதியாக வேலை செய்கிறாள்.

அவள் கொணேசை பலவருடங்களாக காதலிக்கிறாள். கோணேஸ் புலிகள் இயக்கத்தில் இணைந்து பயிற்சிகள் முடித்து விட்டு வேறு இடங்களில் அவனது பணிகளை முடித்துவிட்டு அவனது சொந்த கிராமத்திற்கு திரும்பி வந்தபோதுதான் அவள் கோணேசிடம் தனது காதலை தெரிவித்திருந்தாள்.கோணேஸ் தனது நிலையை விளக்கி அவளது காதலை மறுத்து அவளிடம் பேசுவதையே நிறுத்திவிட்டான். ஆனாலும் அவள் விடுவதாய் இல்லை அவனை சுத்தி சுத்தியே வந்தாள் இதுதான் இவளிற்கும் கோணேசிற்கும் உள்ள தொடர்பு. கோணேஸ் அந்த வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து வைத்தியரிடம் விசேட அனுமதி பெற்று தனது பொறுப்பின்கீழ் இரவு பகலாய் கோணேசை கவனித்துவந்தாள்.

மறுநாள் கொணேசை பார்க்க ஒரு போராளி சென்றபொழுது அவள் கோணேசின் காயங்களை சுத்தம் செய்து மருந்து கட்டிகொண்டிருந்தாள். சென்ற போராளி கோணேசை நலம் விசாரித்துவிட்டு அவனிற்கு தேவையானவற்றை விசாரித்து கொண்டே அருகிலிருந்த மேசையை பார்த்தான். ஒரு சாப்பாட்டுபெட்டி இருந்ததை கவனித்தவன் கோணேசை பார்த்து அட நான் சாப்பாடு வாங்கி தரத்தான் வந்தனான் பிறகென்ன உனக்கு யாரோ கொண்டந்து தந்திட்டினம் என்றவும். அவள் கோபமாக யாரோ இல்லை நான் தான் கொண்டுவந்தனான் ஆனால் உங்கடை சினேதனுக்கு பசி இல்லையாம் நான் குடுத்தா சாப்பிட மாட்டாராம் என்றவும் அந்த போராளி ஓ பசி இல்லையாமே சரி என்ன சாப்பாடு எனறவாறு சாப்பாட்டு பெட்டியை திறந்து பாத்த்தவன்.

ம்.......புட்டும் முட்டை கத்தரிக்காய் எலாம் பொரிச்சு போட்டிருக்குவாசம் அந்தமாதிரியிருக்கு சரி உனக்கு வேண்டாம் எண்டா ஏன் வீணா கொட்டுவான் நானே சாப்பிடறன் எண்றவாறுஅந்த போராளி அதை சாப்பிட தொடங்கவும் மருந்து கட்டி முடிந்ததும் அவள் கோபமாக கவனம் சாப்பாட்டு பெட்டியையும் சேத்து விழுங்கிடாமல் அதை கழுவிதந்திட்டு போங்கோ என்றவாறு அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.அவள் போனதும் கட்டிலில் இருந்த போராளியை எட்டிஉதைந்த கோணேஸ் நான் பசிகொதியிலை இருக்கிறன் நீ ரசிச்சு சாப்பிடுறியா? கெதியா போய் சாப்பாடு கட்டிகொண்டுவா என்று என்று சொல்லவும் சிரித்தவாறே உனக்கு குடுத்துவைச்சது அவ்வளவும்தான் சரி நான் போய் சாப்பாடு கட்டிகொண்டு வாறன் எனறவாறே

அந்த போராளி வெளியே சென்று சாப்பாடு எடுத்து கொண்டு திரும்பி வருகையில் வழிமறித்த அவள் என்ன சாப்பாடு கட்டிகொண்டு பொறிங்கள் போலை நாங்கள் ஆசையா செய்து குடுத்தா அவரக்கு பிடிக்காது கடையிலை சாப்பிடட்டும் அப்பதான் கொழுப்பு குறையும் எனறபடி கையில் வைத்திருந்த ஒரு பையை அவனிடம் கொடுத்து. அண்டைக்கு அவர் காயப்படேக்கை அவர் போட்டிருந்த சேட்டு கிழிஞ்சுபோச்சுது ஒரே ரத்தமும் அதை எறிஞ்சாச்சு அதாலை அவர் அவர் நெடுக விரும்பி போடுற சிவப்பிலை செக்(கட்டம்) போட்ட சேட் ஒண்டு வாங்கினனான் நான் குடுத்தா வாங்க மாட்டார் அதாலை நீங்களே இதை அவரிட்டை குடுத்து விடுங்கோ என்று அவனிடம் நீட்டினாள்.

சிறிது யோசித்த அந்த போராளி சரி தாங்கோ குடுக்கிறன் எனறவாறு வாங்கி கொண்டு போனவன். கோணேசிடம் சாப்பாட்டை கொடுத்துவிட்டு டேய் இந்தா உனக்கொரு சேட்டும் வாங்கினனான் போட்டுபார் என்று அந்த சேட்டை நீட்டினான்.அவனை நிமிர்ந்து பார்த்த கோணேஸ் நீ எனக்கு இப்ப சேட்டுவாங்கினனி இதை என்னை நம்பசொல்லுறாய்?? எனக்கு தெரியும் யார் வாங்கி தந்திரு்பினம் எண்டு பேசாமல் அவையிட்டையே அதை கொண்டு போய் குடுத்திட்டு காம்பிலை என்ரை உடுப்பு பையிலை ஒரு சேட்டும் சாரமும் எடுத்துகொண்டுவாஎன்று அந்த போராளி அனுப்பிவைத்தான்.அந்த போராளியும் திரும்ப அவளிடமே அந்த சேட்டை கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

நான்கு நாட்கள் கழித்து 20.05.87 அன்று வழைமை போல விடிந்த காலை 7.மணியளவில் இலக்கம்3 என்று அடைமெழியில் அழைக்கப்படும் ஒட்கப்புலம் புலிகளின் முகாமின் நடைபேசியில்(வோக்கி ரோக்கி) பலாலி தொண்டைமானாறு வீதியில் வழளாய் என்கிற கிராமத்தின் காவல் கடைமையில் இருந்த ஒரு போராளியின் அழைப்பு

நம்பர்3..... நம்பர் 3... குட்டி......... ஓவர்.........

குட்டி.... குட்டி .......நம்பர் 3....சொல்லுங்கோ ஓவர்.......

தொண்டைமானாறிலை இருந்து வந்த ஆமி குறூப் ஒண்டு ஒரு அம்பது பேரளவிலை றோட்டை விட்டு கீழை இறங்கிது என்ன செய்ய ஒவர்.......

வடிவா பாருங்கோ திரும்பி றோட்டிலை ஏறி பலாலி பக்கம் போனால் பேசாமல் விடுங்கோ கூடுதலா உள்ளை இறங்கினா உதவிக்கு மற்ற சென்றிலை உள்ளவையையும் எடுத்து அடியுங்கோ நாங்கள் உடைனை வாறம் உடைனைக்குடைனை தொடர்பிலை இருங்கோ ஓவர்.....

என்று வோக்கியில் முகாமிலிருந்த போராளி கதைத்துகொண்டே மற்றைய போராளிகளிற்கு அறிவித்தல் கொடத்ததும் சில வினாடிகளிலேயெ அனைத்து போராளிகளும் ஆயுதங்களுடன் ஒரு யுத்தத்திற்கு தயாராய் வாகனங்களில் பாய்ந்து ஏறவும் வாகனங்கள் வளளாய் பகுதிக்கு செல்வதற்காக அச்சுவேலி சந்தியை நோக்கி விரைந்தன.அவர்கள் புறப்பட்டதுமே வழளாய் பக்கமிருந்து துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்டன. இராணுவம் குடியிருப்பு பகுதிகள் நோக்கி முன்னேற தொடங்கியதால் அங்கு காவல் கடைமையில் நின்ற போராளிகள் தாக்குதலை தொடங்கிவிட்டிருந்தனர்.

போராளிகளின் வாகனங்கள் அச்சுவேலி சந்தியை அண்மித்து கொண்டிருக்கவும் எதிரே வந்த ஒருவரின் சைக்கிளில் கொணேஸ் தனது முகாம் நோக்கி வந்துகொண்டிருந்தான்.கோணேச
கண்ட போராளிகள் வாகனத்தை நிறுத்தவும் ஒரு போராளி கோணேசை பார்த்து எங்கை போறாய் உன்னை யார் ஆஸ்பத்திரியை விட்டு வர சொன்னது என்று கடிந்து கொள்ளவும். அவன் போராளிகளிடம் துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டது அதுதான் தான் வெளிக்கிட்டு வந்தனான் என்றவன் விபரம் அறிந்து கொண்டதும் தானும் வருவதாக அடம் பிடித்து வாகனத்தில் ஏறிக்கொண்டான்.

வாகனங்கள் வளளாய்கிராமத்தில் நுளைந்து கொண்டிருக்கும் போதே இராணுவம் உள்நுளைந்து விட்டதை உணர்ந்த மக்கள்அங்கிருந்து வெளியெறிகொண்டிருந்தனர். பொதமக்களை பாதுகாப்பாக அச்சு வேலி சந்தியை தாண்டி போகும்படியும் தாங்கள் அறிவிக்கும் வரை யாரும் திரும்ப வரவேண்டாம் என அறிவுறித்தியபடி போராளிகள் மறைவாக தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு வளளாய் தோட்டவெளிகளை நோக்கி முன்னேறுகின்றனர்.

தாங்கள் ஒரு பொறிக்குள் அகப்பட்டு விட்டோம் என்று உணர்ந்த இராணுவத்தினர் பலாலியில் இருந்தும் தொண்டை மானாற்றில் இருந்தும் மேலதிக உதவிகள் கிடைக்கும் வரை தோட்டங்களில் புகுந்து நன்றாக உருமறைப்பு செய்து கொண்டு பதுங்கிவிட்டிரந்தனர். அங்கு வந்த பொராளிகளிற்கு இராணுவம் எங்கு மறைந்திருக்கின்றது என்று கண்டு பிடிப்பது சிரமமாகவும் இருந்த அதேவேளை அந்த இடம் ஒரு சிக்கலான பகுதி காரணம் அனைத்து வளங்களையும் கொண்ட பலாலித்தளம் ஒரு பக்கமாகவும் தொண்டைமானாறு முகாமை மறுபக்கமாகவும் கடற்கரையையும் கொண்ட ஒரு பகுதி எனவே இராணுவத்திற்கு வேண்டிய அனைத்து உதவிகளும் சுலபமாக கிடைக்கும் எனவே குறைந்தளவு நேரத்தில் எதிரிக்கு கூடதலான இழப்பை ஏற்படுத்தி அந்த இடத்தை விட்டு அகற்றாவிட்டால் நேரம் செல்ல செல்ல கள நிலை பாதகமாக அமையும்

எனவே போராளிகள் விரைந்து தோட்டங்களினுடாக பதுங்கியவாறு முன்னேறிகொண்டிருக்கவும் ஒரு இராணுவத்தினனின் துப்பாக்கி சட சடத்தது துப்பாக்கி குண்டொன்று ஒரு போராளியின் நெற்றியை உரசிசெல்ல சிறிய காயத்தடன் அந்த போராளி அவ்விடத்திலிரந்து அகற்றபட்டு சண்டை தொடங்கியது. எதிர் பார்த்ததை போலவே பலாலிமகாமிலிருந்து நான்கு உலங்குவானுர்திகளும் மூன்று குண்டு வீச்சு விமானங்களும் உதவிக்கு வர பலாலியில் இருந்தும் தொண்டைமானாற்றில் இருந்தும் அச்சு வேலி சந்தியை இலக்கு வைத்து எறிகணை களும் சீறி வர தொடங்கின.அதே போல பலாலி முகாமிலிருந்து மேலதிகமாக சுமார் இருநுறுபடையினரளவில் சுற்றிவழைப்பில் சிக்குபட்ட படையினரை மீட்க முன்னேற தொடங்கிருந்தனர். அவர்களை எதிர்த்து மறிப்பு சண்டையையும் போராளிகள் தொடுத்திருந்தனர்.

நேரம் செல்ல செல்ல சண்டை உக்கிரமடைந்தது நேரம் மதியத்தை தாண்டியும் இராணுவத்தினரால் தங்கள் இரண்டு பெரிய இராணுவ முகாம்களிற்கு சில கிலோமீற்றர்கள் தொலைவிலேயே சிக்குப்பட்டுள்ள தங்கள் சகஇராணுவத்தை மீட்கமுடியாத நிலையில் தொண்டைமானாற்றில் இருந்தும் மேலதிகமா இருனூறு பேரளவில் அச்சுவேலி சந்தியை நோக்கி முன்னேற தொடங்கினர். இதேவேளை உலங்கு வானுர்திகள் மற்றும் எறிகணைகள் அச்சுவேலி பிரதான வீதிகளை நோக்கி தாக்குதலை தொடுத்து போராளிகளிற்கு மேலதிக வழங்கல்கள் உதவிகள் வருவதை தடைசெய்த கொண்டிருந்தன.

அதேநேரம் போராளிகளிடம் இருந்த ஒரேயொரு விமான எதிர்ப்பு துப்பாக்கியான 50 கலிபரும் விமானதாக்குதலிற்கு உள்ளாகி அதனை இயக்கிய போராளிகளும் காயங்களிற்குள்ளாகி யுத்தகளத்திலிருந்து அப்புறபடத்தபடவும் தொண்டைமானாற்றிலிருந்து மேலதிக இராணுவத்தினரின் முன்னேற்றம் என்பன இராணுவத்தை முற்கைக்குள் வைத்திருந்த போராளிகள் முற்றுகைக்குள் உள்ளாகும் நிலை அதே நேரம் இராணுவம் இந்த சண்டையை திசை திருப்பும் முயற்சியாக பலாலியிலிருந்து தெற்கு பக்கமாக கட்டுவன் மற்றும் குப்பிளான் பக்கமாகவும் ஒரு முன்னேற்றத்தை ஆரம்பிக்க அந்த பகுதிகளில் போராளிகளின் எதிர் தாக்குதல்களை அன்றை யாழ் மாவட்ட தளபதி லெப்.கெணல்.ராதா வழிநடத்திகொண்டிருந்தார்.

அப்போது தான் வளளாய் தோட்டவெளியில் நடந்தகொண்டிரந்த சண்டையில் கோணேசின் துப்பாக்கியும் எதிரிகளை தேடி தேடி இயங்கி கொண்டிருந்தவேளை தான் கவனித்தான் ஒரு பூவரச மரத்திற்கு அருகுவரம்பில் நிலையெடுத்து இருந்த இரு இராணுவத்தினரிடமிருந்து ஒரு பதில் தாக்குதலும் வரவில்லையென்பதை . அவனிற்கு புரிந்து விட்டது அந்த இராணுவத்தினரிடம் துப்பாக்கி இரவைகள் முடிந்துவிட்டிருக்கும் என நினைத்தவன். அருகிலிரந்த போராளியை பார்த்து சொன்னான் டேய் அங்கை பார் பூவரசிற்கு பக்கத்திலை படுத்திருக்கிஆமிகாரரிட்டை ரவுண்ஸ் இல்லை போலை திருப்பி அடிக்காமல் படுத்திருக்கிறாங்கள் அவங்களை உயிரோடை பிடிப்பம் என்றவன் மற்றைய இரு போராளிகளிடம் நீங்கள் அவங்களை குறி வைச்சபடி இருங்கொ நான் எழும்பிபோய் பிடிச்சுகொண்டு வாறன் என்றவன்

மறைவில் இருந்து எழுந்து அந்த அந்த இராணுவத்தினரை நோக்கி சரண்டர் என்று கத்தியவாறு கைகளை ஆட்டினான் சில வினாடிகளின் பின் ஒரு இராணுவத்தினன் மெதுவாக ஒரு கையை உயர்த்தி சரணடைவதற்கான அறிகுறியை காட்டினான்.

கொணேஸ் தன்னுடைய கைகளை மீண்டும் அவர்களை நோக்கி ஆட்டிவிட்டு மெதுவாக அவர்களை நொக்கி பதுங்கிய படி முன்னேறுகிறான் மற்றை இரு போராளிகளும் அந்த இராணுவத்தினர் மறைந்திருந்த பகுதியை நோக்கி குறிவைத்தபடி கோணெசிடம் டேய் கவனம் ஓரளவுதூரத்திலை போனதும் அவங்களை வெளியாலை வரச்சொல்லு நீ கிட்ட போகாதைஎன எச்சரிக்க ஓமென்றவன் முன்னேறி அவர்களை அண்மித்ததும் அவர்களை வெளியெ வர சொல்லி கத்தி கைகளை காட்டினான்.அதை வேறு பக்கங்களில் பதுங்கியிருந்த இராணுவத்தினர் கவனித்து விட கோணெசை நோக்கி சர மாரியாக சுட்டார்கள்

கோணேசும் வேகமாக பாய்ந்து சென்று அந்த இராணுவத்தினர் நிலையெடுத்து மறைந்திருந்த பகுதிக்குள் பாய்ந்து பதுங்கி கொள்ளவும் கீழேயிருந்த இராணுவத்தினரிடம் இருந்து தகவல் அனுப்பபட்டிரக்கவேண்டும் அந்த பூவரசு மரம் இருந்த இடத்தை நோக்கி வேகமாக இரண்டு உலங்கு வானுர்திகள் நெருங்கி இரண்டும் நான்கு செல்களை ஏவின அவை வெடித்து அந்த இடம் ஒரே புகையும் தூசியுமாய் எழுந்து அடங்கிபோனது அந்த இடத்திலிருந்து கொணேசின் சத்தமோ அல்லது மற்றைய இரு இராணுவத்தினரின் சத்தமோ வரவில்லை. முவருமே இறந்து போய்விட்டனர்.

இதே நேரம் பாலியிலிருந்து முன்னெறிய இராணுவத்தினரும் அவ்விடத்தை நெருங்க அங்கு கள நிலைமையும் போராளிகளிற்கு உதவிகள் கிடைக்காமல் இராணுவத்திற்கு சாதகமாக மாறிக்கொண்டிருந்தது எனவே அவசரமாக போராளிகள் தங்கள் குழுவை மறுசீரமைத்து இருக்கின்ற குறைந்தளவு வசதிகளை பகிர்ந்து மீண்டும் ஒரு மூர்க்கமான தாக்குதலை தொடுத்து கோணேசின் உடலை எப்படியாவது எடுத்துகொண்டு சண்டையை அத்துடன் முடிவுக்கு கொண்டுவர எண்ணினர் அதன்படி மீண்டும் மூர்கமாக நானுறிற்கும் மேற்பட்ட இராணுவத்துடன் ஆகாய மற்றும் எறிகணை தாக்குதல்களிற்கு முகம் கொடுத்தபடி அறுபதிற்கும் குறைவான போராளிகளே அந்த சண்டையில் ஈடுபட்டிருந்தனர்.

சுமார் பிற்பகல் ஒரு மணியளவில் கோணேசின் உடலை மீட்ட பொராளிகள் சண்டையை நிறுத்தி பத்தைமேனி இடைக்காட்டு பகுதிக்கு பின்நகர்ந்து தங்கள் பாதுகாப்பு அரணமைக்க தங்கள் இறந்த மற்றும் காயப்பட்ட இராணுத்தினரை எடுத்து கொண்டு தங்கள் முகாம்களிற்கு திரும்பினார்கள்.அன்றைய சண்டையில் பன்னிரண்டு இராணுவத்தினர் கொல்லபட்டிருந்தனர். அதே நேரம் மறுபக்கம் குப்பிளான் சமாதி கோயிலடியில் லெப். கேணல் ராதாவும் இறந்து போனதாக வந்த செய்தியுடன் தனது விடுதலைக்காய் போராடிய இரண்டு போராளிகளை இழந்து விட்ட சோகத்தில் தமிழீழ தாயும் அன்றைய பொழுதை இருள் போர்வையை போர்த்திகொண்டு உறங்கி போனாள்.

மறுநாள் அச்சுவேலியிலிருந்த கோணேசின் வீட்டில் அவனது இறுதி சடங்குகள் நடந்து கொண்டிருந்தது அவளும் செய்திகேட்டு கையில் ஒரு பையுடன் அழுதபடி ஓடிவந்தாள் அங்கிருந்த ஒரு போராளியிடம் அய்யோ அண்ணை கடைசியாவாவது இந்த சேட்டை அவருக்கு போட்டுவிடுங்கோ என்று சொல்லி அவள் வாங்கி வைத்திருந்த அந்த சிவப்பு செக் சேட்டை கொடுத்து விட்டு அங்கேயே அழுதபடி நின்றிருந்தாள்.

கோணேசிற்கு அந்த சேட் அணிவிக்கபட்டு அதுவரை விடுதலை தீயாய் ஒளிர்ந்தவன் வல்லை சந்தியிலிருந்த மயானத்தில் தீயுடன் தீயாய் போனான். மறுநாள் அந்த ஒட்டகபுல புலிகளின் முகாமில் கோணேசின் உடுப்பு பையை எடுத்து பாத்த ஒரு போராளி அதில் கோணேசின் நாட்குறிப்பை எடுத்து புரட்டிப்பார்த்தான் அதில் கோணேஸ் அவளை நினைத்து எழுதிய கவிதைகளும் சில சினிமா பாடல்களும் கடிதங்கள் என்று எழுதியிருந்தான் அவனிற்குள்ளும் காதல் இருந்திருக்கிறது ஆனால் அவன் அதை காட்டிகொள்ளாமலேயே கரைந்து போய்விட்டான்.எம் தேசத்தின் விடுதலைக்காய் விதையாகி போன பல்லாயிரம் மாவீரர்களினுன் கொணேசும் வளளாயின் சிவந்த செம் மண்ணினை மேலும் தன் குருதியால் சிவப்பாக்கி போனான் அவனிற்கும் எமது வணக்கங்கள்.

பயோடேற்றா

1:57 PM, Posted by sathiri, 3 Comments



பயோடேற்றா

பெயர். ( பி)றாஜேஸ் பாலா
வயது. அறைளை பேந்தவயது
தொழில் . ஓய்வுபெற்ற தாதி
உபதொழில். ஓயாத புலியெதிர்ப்பு
விரும்புவது. அடிக்கடி ஊடகங்களில் பெயர் அடிபடுவதை
விரும்பாதது. உள்ளாடைகள் அணிவதை
பொழுது போக்கு. கட்டுரை கீறுவது.பெண்ணியம்பற்றி கும்மியடிப்பது.
நண்பர்கள். கிழக்கின் வெள்ளியும். வெள்ளிக்கு பிடித்த கள்ளரும்.
எதிரிகள். அவரின் வாயேதான்
நீண்டகாலக்கனவு. புலம்பெயர் தேசத்து புலியெதிர்ப்பாளர்களிற்கு தலைமை தாங்குவது.
அண்மைக்காலக்கனவு. பிள்ளையானின் பி.ஏ ஆவது.
சாதனை . கனடாவிற்கு போய் கறுப்பியை சந்தித்தது
சோதனை.லண்டனிலேயே இருக்கிற நிர்மலா ராஜசிங்கம்.
படிப்பது.தேனீ
பிடித்தவர். ஜெமினி(நடிகர்அல்ல)
பிடித்த விழையாட்டு. கபடி(இதில்தான் காலைவாரலாம்)
பிடித்த வீரவிழையாட்டு.கறிச்சட்டியடி
பிடித்த பாடல்.இனிமை நிறைந்த உலகம் இருக்கு இதிலை உனக்கு கவலைஎதுக்கு(படம் நினைத்தாலே இனிக்கும்)

பஞ்ச் டயலாக்.. சிக்ஸ்ரிதான் ஆனாலும் செக்சி

புலம்பல். நானும் நாலுபேருக்கு தலைமை தாங்கலாமெண்டு நினைச்சு புலியெதிர்ப்பை தெரியாத்தனமாய் தொட்டுப்போட்டு தொடரவும் முடியேல்லை. விடவும் முடியேல்லை.புலிளுக்கு ஒரேயொரு தலைமைதான். ஆனால் புலியை எதிக்கிறவை எல்லாருமே தாதான் தலைவரெண்டுறாங்கள்.இதுகளுக்கெல்லாம் நான் தலைமை தாங்கிறது நடக்கிற காரியமா??நாசமாய்போக..


என் இனிய சொந்த பந்தங்களே அடுத்ததாய் யாருடைய சுய விபரம் வருமெண்டு ஆவலாய் இருப்பீங்கள். (பி)றாஜேஸ் ஆச்சியின்ரை விபரத்திலையே இரண்டு பெண்களின்ரை பெயர் எழுதியிருக்கிறன் அதிலை யாராயிருக்குமெண்டு பூவா தலையா போட்டு பாத்து தலையை குழப்பிக்கொண்டிருங்கோ அடுத்த இதழில் சந்திக்கும்வரை அன்புடன் சாத்திரி.

தேவதை..தேவன்....பிசாசு

1:52 PM, Posted by sathiri, No Comment

தேவதை..தேவன்....பிசாசு

நிழலாடும் நினைவுகள்.
சாத்திரி ஒரு பேப்பர்

நீங்கள் யாராவது தேவதையைப் பார்த்திருக்கிறீர்களா??
நான் பார்த்திருக்கிறேன்.பழகியிருகிறேன். ஆகா சாத்திரி தன்ரை காதல்கதை ஏதோ சொல்லவாறார் எண்டு யோசிக்கிறீங்கள் விளங்குது. இது என்னுடைய காதல்கதை இல்லை.ஆனால் உண்மையிலேயே எனக்கொரு தேவதையைத்தெரியும்.மனிசனுக்க மண்டையிலை ஏதும் அடிபட்டிட்டுதோ என்கிற உங்களது சந்தேகமும் விளங்குது .அதனாலை என்னுடைய தேவதையைப் பற்றி சொல்லுறன்.
இந்த தேவதைகள் எல்லா மதக்கதைகளிலும். புராதன புராணக்கதைகளிலும் ஒரு முக்கிய இடத்தினை பிடித்தவர்கள்.இவயள் சரியான வடிவான நல்லவையள். பூமியில் யாராவது எங்கையாவது கஸ்ரப்பட்டாலும் வானத்திலையிருந்து இறங்கி ஓடிப்போய் உதவுவினம் .வரம்கொடுப்பினம் .இவையிட்டை மந்திர சக்தி இருக்கும். எங்களது கற்பனையின்படி இவையள் வெள்ளை உடுப்புத்தான் போடுவினம். தலையிலை கிரீடம் கையிலை மந்திரக்கோல் வைச்சிருப்பினம்..பாரதிராஜாவி ன்ரை படங்களிலை வாற கனவுப்பாடல்களில கதாநாயகிக்குப் பின்னால் ஆடிவரும் தேவதையளும் வெள்ளை உடையிலை சிலோ மோசனில் ஓடிவந்து இதனை உறுதி செய்திருக்கினம்.. இவை அனைத்தும்தான் ஒரு தேவதையின் அம்சங்கள் என்றால். எனக்கும் ஒரு தேவதையைத் தெரியும்.அவர்பெயர் செரீன். இவர் அழகான கிறீஸ்த்தவத்தேவதை.தூய வெள்ளை சீருடை தலையில் வெள்ளை கிரீடம் (தொப்பி) கையிலைமுதலுதவி மருந்துப்பெட்டி. தேவதையின்ரை கையிலை மருந்துப்பெட்டியா என்று ?? என்றுயோசிக்காதையுங்கோ. என்னுடைய தேவதை செரீன் ஒரு மருத்துவத்தாதி.எங்கடை மற்றது பக்கத்து ஊரிலை எங்கையாவது யாருக்காவது அவசர மருத்துவ உதவி தேவையென்றால் உடனடியாக எல்லோருமே உச்சரிக்கும் மந்திரச் சொல் செரீன்தான். இரவுபகலென்று பாராமல் கூப்பிட்டஉடனேயே தன்னுடைய ம(ந்திர)ருந்துப் பெட்டியுடன் புறப்பட்டு விடுவார்.
................................................................................
.
நீங்கள் வானத்து தேவர்களைப்பற்றி கதைகளில் படித்திருப்பீங்கள். ஆனால் ஊரிலை நீங்களும் இந்தத் தேவனை பார்த்திருப்பீங்கள் கதைத்திருப்பீங்கள். குறைந்தபட்சம் இவனைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீங்கள்.நாம் பாத்துப் பழகியிருக்கிறேன். மெலிந்த நெடிய உருவம் . 80 களின் ஆரம்பத்தில் பழைய றலி சைக்கிள்தான் அவனது வாகனம்.யாழ்குடாநாட்டின் அத்தனை குட்டிக்கிராமங்களிலும் அவன் சுற்றித்திரிவான்.அத்தனை ஊர்மக்களிற்கும் அவனைத்தெரியும் .அத்தனை ஊர்மக்களையும் அவனிற்கும் தெரியும்.உலகப்புகழ்பெற்ற மேனாலிசாவின் சிரிப்பிற்கு இன்றுவரை எத்தனைபேர் எத்தனை அர்த்தங்கள் கற்பிக்கிறார்களோ. அதேபோலவே அவனுடைய தலையை மெதுவாய் சரித்து சிரிக்கும் சிரிப்பிற்கும் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லாம். துயர்.மகிழ்ச்சி.வேதனை .கோபம்.என்று எல்லாத்துக்கும் அந்தச்சிரிப்பால்தான் வெளிப்படுத்துவான்.அவன் பெயர் திலீபன்.
................................................................................
....
நீங்கள் யாராவது பிசாசை பார்த்திருக்கிறீர்களா?? நான் பார்த்திருக்கிறேன் பேச விருப்பமில்லாவிட்டாலும் சிலநேரங்களில் பேசியிருக்கிறேன்.அது ஒரு கம்யூனிசம் பேசுகின்ற கெட்ட பிசாசு . அது சந்தியில்வந்து அடிக்கடி சொல்லும் "இவங்கள் சரியான விசரர் ரஸ்யாவையோ சீனாவையோ ஆதரிச்சு போனால்தான் அவையிட்டை உதவிகேட்டு எங்கடை பிரச்சனையை தீர்க்கலாம்.ஆனால் சீனாக்காரனின்ரை தத்துவமும் சரியில்லை ரஸ்யாகாரனின்ரை தத்துவம்தான்சரியானது.நான் ரசியாக் காரனோடை கதைச்சு எப்பிடியும் எங்கடை பிரச்னையை முடிக்கிறன்.மாக்சிட்டை இருந்து எப்பிடி லெனின் ரஸ்யாவுக்கு கொண்டு போனாரோ அதை அப்பிடியே நான் இஞ்சை கொண்டுவந்து காட்டுறன்.உவன் திலீபன் சொல்லறான் தாங்கள் மக்களோடை சேந்து போராடி தமிழீழம் எடுக்கப்போகினமாம்.உது நடக்கிற காரியமோ??"" சுற்றி நின்றவர்கள் எதுவும் புரியாமல் தலையை சொறிந்தபடி போய்கொண்டிருப்பர்
...........................................................
ஒருநாள் மானிப்பாய் வீதியில் உருந்துளியில் வேகமாய் போய்க்கொண்டிருந்த எனக்கு யாரோ நல்லாய் தெரிஞ்ச ஒருவரை கடந்ததுபோல ஒரு உணர்வு திடீரென நிறுத்தி திரும்பிப் பார்த்தேன். தேவதைதான் " என்ன செரீன் அக்கா எப்பிடிச்சுகம் ?? அம்மா எப்பிடியிருக்கிறா?? """என்றேன். " எட நீயே கண்டு கனகாலம். நாங்கள் நல்லாயிருக்கிறம். ஆனால் நாட்டு நிமையை நினைச்சால்தான் கவலையாய் கிக்டக்கிது. திலீபன் வேறை உண்ணவிதரம் இருக்கிது.ஒவ்வொருநாளும் வேலை முடிய போய் பாத்திட்டுத்தான் வாறனான்.இண்டையோடை நாலாவது நாளாகப்போகுது கவலையாக்கிடக்கு. இப்பவும் நல்லூரடிக்குத்தான் போறன். இந்தியா திலீபனின்ரை போராட்டத்தை கணக்கிலை எடுக்கும் எண்டு நீ நினைக்கிறியோடா???என்று கண்கள் கலங்க என்னிடம் கேட்டவருக்கு " மிகப்பெரிய சனநாயகநாடு .அகிம்சையை முதலாவதா மதிக்கிற நாடு எண்டெல்லாம் சொல்லினம்.பொறுத்திருந்து பாப்பம். திலீபனுக்கு ஒண்டும் நடக்காது கவலைப்படாமல் போட்டுவாங்கோ. என்றவும். "" அந்தோனியார்மேலை சத்தியமாய் சொல்லுறன் திலீபனுக்கு ஏதாவது நடந்தால் உவங்கள் நல்லாயிருக்கமாட்டாங்கள்"" என்றுவிட்டு சைக்கிளை மிதித்தபடி போய்விட்ர்.
..........................................
கம்யூனிசப்பிசாசு அன்றுமாலையும் சந்தியில் வந்துநின்று சொன்னது"" இவன் திலீபனுக்கு தேவையில்லாத வேலை இன்னும் இரண்டு நாளைக்கு இருந்து பாத்திட்டு எழும்பிடுவான். ஏனெண்டால் இந்தியா பெரிய வல்லரசுநாடு. அதுக்குப்பின்னாலை என்ரை ரஸ்யா உதவியாய் இருக்கிது. இப்பிடி சாப்பிடாமல் இருக்கிறது. ஆமியை றோட்டாலை திரியவிடாமல் சனங்கள் பாதையை மறிக்கிறதெல்லாம் அவங்களுக்கு கோவம்வரப்பண்ணும். பேசாமல் இந்தியா சொல்லுறபடி கேட்டால் எங்களுக்கு ஏதோ பாத்து செய்வாங்கள்.அதைவிட்டிட்டு அவங்களுக்கு கோவத்தை வரப்பண்ணினால் அவங்கள் கண்ணை மூடிமுளிக்கிறதுக்குள்ளை இவையளை இல்லாமல்பண்ணிப்போடுவாங்கள
" என்று தன்னுடைய வியாக்கியானத்தை தொடங்க அங்கு நின்றவர்கள் கோபமாய் பிசாசை அடிக்கப்போக பிசாசு அங்கிருந்து ஓடிப்போய் பதுங்கிக்கொண்டது..
.......................................................
எங்கள் தேவன் தேவலோகத்திற்கு திரும்பிப்போய்விட்டான்."திலீபன் அழைப்பது சாவையா இந்த சின்னவயதில் அதுதேவையா???தமிழீழம் எங்கும் ஒலிபெருக்கிகளில் இந்தப்பாடலுடன் திலீபனிற்கு அஞ்சலி நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தன. தமிழ்மக்கள் அனைவரினது கண்களிலும் கோபத்தையும் துக்கத்தையும் கலந்த கலைவையை மட்டுமே காண முடிந்தது.இந்திய இராணுவத்திற்கு கற்கள் செருப்பு என்று கையில் கிடைத்ததையெல்லாம்எடுத்து எறியத்தொடங்கிவிட்டார்கள்.எகள் மண்ணில் ஒருநாள் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று திலீபன் கண்ட கனவை அவன் தன்னுடைய மரணத்தின் மூலம் தொடக்கிவைத்துவிட்டுப்போயருந்தான்.
..............................................
தமிழீழத்தின் காட்சிகள் வேகமாக மாறியது புலிகளிற்கும் இந்திய இராணுவத்திற்கும் போர்வெடித்து யாழ்குடாவெங்கும் இந்தியஇராணுவம் ஆக்கிரமித்துவிட்டிருந்தது .அதுவரை பதுங்கியிருந்த பிசாசும் மெதுவாய் வெளியேவந்து அருகில் இருந்த கந்தரோடை இந்தியனாமி முகாமில் போய் கை குலுக்கியபடி " சேர் நீங்கள் ஊர்முளுக்கப்பிடிச்சது சந்தோசம் புலியளின்ரை கதை முடிஞ்சு போச்சுது. ஒரு புலியும் ஊருக்குள்ளை இல்லை அப்பிடி யாரவது வந்தாலும் நான் உங்களுக்கு வந்து உடைனை சொல்லுறன்.ஆனால் இஞ்சை ஒரு நேஸ்(தாதி) களவாய் போய் காயமடைஞ்ச புலியளுக்கு மருந்து கட்டுறாவாம். இப்போதைக்கு இவ்வளவுதான். ஆனால் இனி அடிக்கடிவருவன்
.................................................
தேவதை அன்னிய அரக்கர்களால் பிடிக்கப்பட்டாள். அவளது சிறகுகள் ஒடிக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டு.அவளன் வெள்ளையுடை அந்தச் செஞ்சட்டைக்கார பிசாசின் காட்டிக்கொடுப்பால் இரத்தத்தில் தோய்ந்து சிவப்பாகிப்போன நிலையில். வீதியோரத்து வயலில் அந்திரான் சுடலைக்கருகில் அனாதைப்பிணமாய்கிடந்தாள்.அழுபடியே அந்தஊர்மக்கள் ஒன்றுகூடி அந்தச்சுடலையில் எரித்தார்கள். என்னுடைய கிறீஸ்த்தவ தேவதை இந்து முறைப்படி எரிக்கப்பட்டு அவளும் தேவலோகம் போய்விட்டாள்.
........................................
சில நாட்கள் கழித்து உடுவில் பகுதியில் ஒரு வாசகசாலையில் புகுந்து பத்திரிகைகளைப்புரட்டினேன். உதயன் பத்திரிகையில் முதற்பக்கத்தில் ஒரு செய்தி. ""யாழ்மாவட்டத்தின் ரஸ்ய சார்பு கொமினிச அமைப்பாளரான விஜயானந்தன் சுட்டுக்கொலை."" அந்தக்கொமினிச பிசாசிற்கு குழையடிக்கப்பட்டு விட்டது.எனக்குத்தெரியும் நிச்சயமாக அவன் நரகலோகம்தான் போயிருப்பான். ஆனால் இன்று புலம்பெயர்ந்த தேசங்களிலும் கொமினிசம் பேசியபடி சில பிசாசுகள் உலவியபடிதான் இருக்கின்றன.இவைகள் குழையடிக்கப்படுவது எப்போ????????
...............................................................................

பயோடேற்ரா

3:09 PM, Posted by sathiri, No Comment




பயோடேற்ரா


பெயர். போல் பொய்நேசன்
வயது. எட்டுக்கழுதை வயசு
தொழில். யாருக்குத்தெரியும்
பொழுது போக்கு. அனைத்து தமிழர் நிகழ்வுகளிலும் பங்குகொள்ளுதல்
நினைப்பு. இங்கிலாந்தின் பிரதமர்
பிழைப்பு. உதவி மேயர்
நண்பர்கள். இலங்கையரசின் புலனாய்வுத்துறையும்.ஒட்டுக்குழு உறுப்பினர்களும்.
ரசிப்பது. மாற்றான் தோட்டத்து மல்லிகையை
ருசிப்பது. ஓசியிலை எது கிடைச்சாலும்.
பிடித்த பொருட்கள். மேடையும் மைக்கும்.
பிடித்த பாடல். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் மனது மயங்கியென்ன....(படம் மன்மதலீலை)
பிடித்த விலங்கு. விலாங்கு
பிடிக்காதது.. திருமணம்
படிப்பது தேசம்.லண்டன்குரல்.உதயன். மற்றது என்னை புளுகிற ஊடகங்கள்.
வெடிப்பது(புளுகுவது) கோடண்பிறவுனோடை கோப்பி குடிச்சனான்.ஜேர்ச் புஸ்சோடை யூஸ் குடிச்சனான்.
கனவு. எம்பியாவது.
கற்பனை இங்கிலாந்து தமிழரெல்லாமே எனக்குப் பின்னாலைதான்


இவருடைய பஞ்ச் டயலாக். நான் நாலுஇடத்திலை நக்கிறதெண்டு முடிவெடுத்திட்டால் என்பேச்சை நானே கேக்கமாட்டன்.

அடு்த்த இதழில் (பி)றாஜேஸ்வரி பாலாவின் பயேடேற்ராவுடன் சந்திகும்வரை அன்புடன் சாத்திரி.

அமெரிக்கா சென்ற ராஜபக்சாவிற்கு வெத்திலை மடிச்சுக் கொடுக்கும் தமிழ்ப்பெ(பு)ண்ணு

1:34 PM, Posted by sathiri, 4 Comments




நீங்களும் செய்து பாக்கலாம்

12:21 AM, Posted by sathiri, No Comment


நீங்களும் செய்து பாக்கலாம்
சாத்திரி(ஒரு பேப்பர்)


வணக்கம் வணக்கம் மகாசனங்களே கோடைகாலத்து தும்படி ஒரு மாதிரி முடிஞ்சு மீண்டும் நூற்றி ஓராவது ஒரு பேப்பரிலை உங்களை சந்திக்கிறதிலை சந்தேசம். இந்தமுறை வழைமைபோல கதை எழுதாமல் உங்களுக்கு சமையல் முறை ஒண்டு சொல்லப்போறன். அதைப்படிச்சிட்டு நீங்களும் செய்து பாருங்கோ.என்னுடையை சமையல்த்தெய்வம் கிறேஸ் அக்காவை மனதிலை நினைச்சு தொடங்குறன்.

சரி தயாரா??

தேவையான பொருட்கள்
1)கூகிழ் தேடி
2)விக்கி பீடியா தகவல்
3)கூகிழ் வரைபடம்
4)தமிழ்நெற்.புதினம் பதிவு போன்ற சில செய்தித்தளங்கள்
5)கொஞ்சம் பொதுவான தற்கால உலக அரசியல் பற்றிய அறிவு (இதற்காக நீங்கள் எங்கும் தேடி அலையத் தேவையில்லை இடைக்கிடை சி.என்.என். பி்.பி.சி. போன்றவற்ரை பாத்தாலே போதும்.)
6)ஒரு தமிழ் அகராதி

தயார்ப்படுத்த வேண்டியவை
1)முதலில் உங்கள் கணணி மற்றும் அச்சு இயந்திரத்தையும் இயக்கி சிறிது நேரம் சூடாக விடவும்.

2) கணணி சூடாகி விட்டதா?? இப்பொழுது தமிழ் நெற் அல்லது புதினம் பதிவு போன்ற செய்தித் தளங்களை திறந்து இன்றைய செய்திகளைப் படியுங்கள்.

3) இப்பொழுது ஏதோ ஒரு செய்தியைப் பார்த்ததும் உங்கள் மூளையில் ஒரு மின்குமிழ்(பல்ப்பு) விட்டு விட்டு எரியத் தொடங்கும்.(அது நிச்சயமாக ஒரு தாக்குதல் செய்தியாகத்தானிருக்கும்)

4)உங்களிற்கு பல்ப்பு எரிய வைத்த அந்தச் செய்தியை ஒரு கடதாசியில் குறித்து வைத்துக் கொள்ளவும்.

இனி செய்முறை (இதுதான் சரியான கஸ்ரமானது எனவே எதைப்பற்றியும் யோசிக்காமல் செய்யவும்)
முதலில் சூடாகிய உங்கள் கணணியில் உங்களிற்கு பல்ப்பு எரிய வைத்த செய்தி(உதாரணமாக கடைசியாக வவுனியா ஜோசப் படைமுகாம் மீதான விமானத்தாக்குதல்) நடந்த இடத்தின் ஊரின் பெயரை கூகிழ் வரை படத்தில் சிறிதளவு போடவும்.இப்பொழுது அது நன்றாக வந்து விட்டதா. அடுத்ததாக விக்கிபீடியாவி்ல் சிறிதளவு கலந்து மேலதிக மணம் குணம் நிறைந்த தவவல்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.அவை புலிகளின் விமானம் எப்படி எந்தப் பாதையால் வவுனியா வந்தடைந்தது என்பதனை விரிவாக சேர்க்க வரை படத்த்திலும் தேடலாம். அல்லது உங்களிற்கு ஊரில் பேருந்து நடத்துனராக அதாவது (பஸ் கொண்டக்டர்) இருந்த அனுபவம் போதும்.அதாவது சில ஊர்களின் பெயரை வரிசையாக போடவும்.உதாரணமாக யாழ்ப்பாணம். அஞ்சுசந்தி.ஆனைக்கோட்டை. மானிப்பாய்.சண்டிலிப்பாய்.சங்
கானை.சித்தங்கேணி.வடலியடைப்பு
.
பண்டத்தெரிப்பு.மாதகல் .சில்லாலை ஏறு எண்டு பஸ்கொண்டக்ரர் சொல்லுறமாதிரி .கிளிநெச்சியிலை இருந்து வவுனியா வரை படஉதவியுடன்.சில ஊர்களின்ரை பெயரை வரிசையாய் போடலாம்.இதில் தமிழ் அகராதியில் இருந்தும் சில சொற்களைச்சேர்த்து நன்றாகக் கலக்கவும்.அத்துடன் இந்தத் தாக்குதலிற்கு என்னென்ன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டிருக்கும் என்று சில ஆயுதங்களின் பெயரும் சில இராணுவச் சொற்களையும் சேர்த்தால் சுவையை அதிகரிக்கலாம். இறுதியாக அடுத்த தாக்குதல் எங்கே எப்பொழுது நடக்கும் என்றொரு ஊகத்தினையும் மேலே தூவிவிடுங்கள். இப்பொழுது சுடச்சுட சுவையான சமையல் தயார். இதனை நீங்கள் அச்செடுத்தோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ இணையத்தளங்களிற்கும் பத்திரிகைகளிற்கும் பரிமாறலாம்.


ஜயையோ.......சத்தியமாய் நான் சமையல்குறிப்புத்தான் எழுதத் தொடங்கினனான். எழுதிமுடிச்சுப்போட்டு கடைசியாப்பாத்தால் அரசியல் இராணுவ ஆய்வு மாதிரி வந்திட்டுது.இப்ப எங்கடையாக்கள் பலர் அரசியல் இராணுவ ஆய்வு செய்யிறம் எண்டு எழுதிறது சமையல் குறிப்புகள் மாதிரி இருக்கிறதாலை அதுகளைப் படிச்சு குழம்பிப் போய் சமையல் குறிப்பு எழுத வந்த நானும் குழம்பி அரசியல் ஆய்வு செய்யிறதெப்பிடி எண்டு எழுதிப்போட்டன். சரி மினக்கெட்டு எழுதிப்போட்டன் இனி என்ன செய்யிறது படிக்கவேண்டியது உங்கடை தலைவிதி. அதனாலை இதையும் படியுங்கோ அடுத்த தடைவை உண்மையாவே கூழ் காச்சிறது எப்பிடியெண்டு செய்முறையோடை வாறன். என்னுடைய இந்தச் சமையல் முறையைப்பார்த்து யாராவது இராணுவ அரசியல் ஆய்வாளர்கள் மனம்நொந்திருப்பின் அவர்களிற்கு என்னுடைய வருத்தத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

12:20 AM, Posted by sathiri, No Comment




நீங்களும் செய்து பாக்கலாம்
சாத்திரி(ஒரு பேப்பர்)


வணக்கம் வணக்கம் மகாசனங்களே கோடைகாலத்து தும்படி ஒரு மாதிரி முடிஞ்சு மீண்டும் நூற்றி ஓராவது ஒரு பேப்பரிலை உங்களை சந்திக்கிறதிலை சந்தேசம். இந்தமுறை வழைமைபோல கதை எழுதாமல் உங்களுக்கு சமையல் முறை ஒண்டு சொல்லப்போறன். அதைப்படிச்சிட்டு நீங்களும் செய்து பாருங்கோ.என்னுடையை சமையல்த்தெய்வம் கிறேஸ் அக்காவை மனதிலை நினைச்சு தொடங்குறன்.

சரி தயாரா??

தேவையான பொருட்கள்
1)கூகிழ் தேடி
2)விக்கி பீடியா தகவல்
3)கூகிழ் வரைபடம்
4)தமிழ்நெற்.புதினம் பதிவு போன்ற சில செய்தித்தளங்கள்
5)கொஞ்சம் பொதுவான தற்கால உலக அரசியல் பற்றிய அறிவு (இதற்காக நீங்கள் எங்கும் தேடி அலையத் தேவையில்லை இடைக்கிடை சி.என்.என். பி்.பி.சி. போன்றவற்ரை பாத்தாலே போதும்.)
6)ஒரு தமிழ் அகராதி

தயார்ப்படுத்த வேண்டியவை
1)முதலில் உங்கள் கணணி மற்றும் அச்சு இயந்திரத்தையும் இயக்கி சிறிது நேரம் சூடாக விடவும்.

2) கணணி சூடாகி விட்டதா?? இப்பொழுது தமிழ் நெற் அல்லது புதினம் பதிவு போன்ற செய்தித் தளங்களை திறந்து இன்றைய செய்திகளைப் படியுங்கள்.

3) இப்பொழுது ஏதோ ஒரு செய்தியைப் பார்த்ததும் உங்கள் மூளையில் ஒரு மின்குமிழ்(பல்ப்பு) விட்டு விட்டு எரியத் தொடங்கும்.(அது நிச்சயமாக ஒரு தாக்குதல் செய்தியாகத்தானிருக்கும்)

4)உங்களிற்கு பல்ப்பு எரிய வைத்த அந்தச் செய்தியை ஒரு கடதாசியில் குறித்து வைத்துக் கொள்ளவும்.

இனி செய்முறை (இதுதான் சரியான கஸ்ரமானது எனவே எதைப்பற்றியும் யோசிக்காமல் செய்யவும்)
முதலில் சூடாகிய உங்கள் கணணியில் உங்களிற்கு பல்ப்பு எரிய வைத்த செய்தி(உதாரணமாக கடைசியாக வவுனியா ஜோசப் படைமுகாம் மீதான விமானத்தாக்குதல்) நடந்த இடத்தின் ஊரின் பெயரை கூகிழ் வரை படத்தில் சிறிதளவு போடவும்.இப்பொழுது அது நன்றாக வந்து விட்டதா. அடுத்ததாக விக்கிபீடியாவி்ல் சிறிதளவு கலந்து மேலதிக மணம் குணம் நிறைந்த தவவல்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.அவை புலிகளின் விமானம் எப்படி எந்தப் பாதையால் வவுனியா வந்தடைந்தது என்பதனை விரிவாக சேர்க்க வரை படத்த்திலும் தேடலாம். அல்லது உங்களிற்கு ஊரில் பேருந்து நடத்துனராக அதாவது (பஸ் கொண்டக்டர்) இருந்த அனுபவம் போதும்.அதாவது சில ஊர்களின் பெயரை வரிசையாக போடவும்.உதாரணமாக யாழ்ப்பாணம். அஞ்சுசந்தி.ஆனைக்கோட்டை. மானிப்பாய்.சண்டிலிப்பாய்.சங்
கானை.சித்தங்கேணி.வடலியடைப்பு
.
பண்டத்தெரிப்பு.மாதகல் .சில்லாலை ஏறு எண்டு பஸ்கொண்டக்ரர் சொல்லுறமாதிரி .கிளிநெச்சியிலை இருந்து வவுனியா வரை படஉதவியுடன்.சில ஊர்களின்ரை பெயரை வரிசையாய் போடலாம்.இதில் தமிழ் அகராதியில் இருந்தும் சில சொற்களைச்சேர்த்து நன்றாகக் கலக்கவும்.அத்துடன் இந்தத் தாக்குதலிற்கு என்னென்ன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டிருக்கும் என்று சில ஆயுதங்களின் பெயரும் சில இராணுவச் சொற்களையும் சேர்த்தால் சுவையை அதிகரிக்கலாம். இறுதியாக அடுத்த தாக்குதல் எங்கே எப்பொழுது நடக்கும் என்றொரு ஊகத்தினையும் மேலே தூவிவிடுங்கள். இப்பொழுது சுடச்சுட சுவையான சமையல் தயார். இதனை நீங்கள் அச்செடுத்தோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ இணையத்தளங்களிற்கும் பத்திரிகைகளிற்கும் பரிமாறலாம்.


ஜயையோ.......சத்தியமாய் நான் சமையல்குறிப்புத்தான் எழுதத் தொடங்கினனான். எழுதிமுடிச்சுப்போட்டு கடைசியாப்பாத்தால் அரசியல் இராணுவ ஆய்வு மாதிரி வந்திட்டுது.இப்ப எங்கடையாக்கள் பலர் அரசியல் இராணுவ ஆய்வு செய்யிறம் எண்டு எழுதிறது சமையல் குறிப்புகள் மாதிரி இருக்கிறதாலை அதுகளைப் படிச்சு குழம்பிப் போய் சமையல் குறிப்பு எழுத வந்த நானும் குழம்பி அரசியல் ஆய்வு செய்யிறதெப்பிடி எண்டு எழுதிப்போட்டன். சரி மினக்கெட்டு எழுதிப்போட்டன் இனி என்ன செய்யிறது படிக்கவேண்டியது உங்கடை தலைவிதி. அதனாலை இதையும் படியுங்கோ அடுத்த தடைவை உண்மையாவே கூழ் காச்சிறது எப்பிடியெண்டு செய்முறையோடை வாறன்.

சாதனை சாதனை

10:51 AM, Posted by sathiri, No Comment

சாதனை சாதனை

சாதனை . சாதனை . மாபெரும் உலக சாதனை இருநநூறு மணித்தியாலங்கள் இடைவிடாது நடனமாடுகிறார்.அடாது மழை பெய்தாலென்ன. விடாது புயல் அடித்தாலென்ன.கொழுத்தும் வெய்யிலடித்தாலும் கொண்ட கொள்கை மாறாது குறித்த நேரம்வரை ஆடி உலக சாதனையை நிலை நாட்டுவார். வாருங்கள் வந்து உங்கள் ஆதரவினை வாரி வழங்குங்கள்..... என்ன சாத்திரி இதுவரை எழுதிக்கிழிச்சது காணாதெண்டு இப்ப புசிசா ஆடிக்கிழிக்கபோறாராக்கும் அதுவும் உலக சாதனையாம் எண்டிற உங்கள் அனுதாபப் பார்வை விழங்கினாலும் . இது நான் சாதனை நிகழ்த்தேல்லை இந்த அறிவிப்புக்கள் யாழில் எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் காரில் ஒரு ஸ்பீக்கரைக் கட்டி ஊர்ஊராய் சொல்லிக்கொண்டு திரிவினம்.இந்த சாதனை விசயமும் குனியா .மேனியா போலை ஒரு வியாதிமாதிரி பரவிஊருக்கு ஒரு இளைஞராவது சாதனை நிகழ்த்தப்போறன் எண்டு வெளிக்கிட்ட காலம். யாழ்குடாவிலை இந்த சாதனை நிகழ்த்திறதை தொடக்கி வைத்தவர் என்று பார்த்தால் வல்வெட்டித்துறையை சேர்ந்த ஆனந்தன் என்பவர் 1975ம் ஆண்டு மன்னாரிலிருந்து பாக்கு நீரிணையைக்கடந்து இந்தியாவின் தமிழ்நாட்டு தனுஸ்கோடி கரையைத்தொட்டு மீண்டும் மன்னாரை வந்தடைந்து ஒரு சாதனையை நிகழ்த்தினார்.அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து வெவ்வேறை சாதனைகள் என்று மொத்தமாக ஏழு சாதனைகளை செய்து ஊலகசாதனைப்புத்தகமான கின்னசில் இடம்பிடித்தார்.

கடைசியாய் பிரான்ஸ் இங்கிலாந்துக்கிடையிலான கால்வாயை கடந்து சாதனை செய்ய முற்பட்டபொழுது அந்தச்சாதனையாளன் இறந்து போனார்.இந்தச் சாதனையாளன் தொடக்கி வைத்ததுதான் பிறகு ஊருக்கொருத்தராய் சாதனை செய்யிறம் எண்டு வெளிக்கிட்டவை.தொடர்ந்து கைதட்டி சாதனை . தொடர்ந்து நடனமாடி சாதனை . சைக்கிளோட்டிறது.தலைகீழாய் நடக்கிறது என்று ஆளாளுக்கு வெளிக்கிட்டிச்சினம். ஆனால் மப்பிலை தலைகீழாய் நடந்து சாதனை செய்தவையளும் இருக்கினம்.ஆனால் அதெல்லாம் கின்னசிலை சேர்க்கமாட்டாங்கள்.சரி ஆனந்தனுக்கு அடுத்தபடியாய் கனக்க சாதனை செய்யவெளிக்கிட்டவர் எண்டு பாத்தால்.யாழ்ப்பாணம் பொம்மை வெளியை சேந்த நசீர் எண்டிற தமிழ்முஸ்லிம் ஒருத்தர்.இவர் யாழ்ப்பாணம் முத்தவெளியிலை ஒரு கண்ணாடிக் கூட்டுக்குள்ளை பல விசப்பாம்புகளோடை இருந்து சாதனை செய்யிறாராம் எண்டு கேள்விப்பட்டு நானும் சைக்கிளை எடுத்து மிதிச்சுக்கொண்டு முத்தவெளிக்கு ஓடிப்போய் பாத்தன்.

ஒரு கண்ணாடிக கூட்டுக்குள்ளை சில பாம்புகள் பாவம் அடிச்ச கோரவெய்யில் வெக்கை தாங்காமல் சரியான சாப்பாடும் இல்லைப்போலை மூலைக்கு ஒண்டாய் சுருண்டு போய்கிடந்திதுகள் நடுவிலை நசீர் ஒரு கதிரையை போட்டிட்டு அவரும் வெக்கை தாங்க ஏலாமல் ஒரு விசிறியாலை விசிக்கினபடி இருந்தார்.நசீரும் ஏதோ பெரிய அனகொண்டா மாதிரி மலைப்பாம்புகளை கழுத்திலை சுத்திக்கொண்டு நாலைஞ்சு நாகபாம்பு அவரைச்சுத்தி படமெடுத்தபடி நிக்குமெண்டு நினைச்சு ஓடிப்போன எனக்கு ஏமாற்றம்தான்.ஆனாலும் படமெடுத்தவை அது பாம்பு இல்லை யாழ்ப்பாண ஈழநாடு பத்திரிகையிலையிருந்து வந்த படப்பிடிப்பாளர். படமெடுத்து அது அடுத்தநாள் பேப்பரிலை செய்தியாவும் வந்தது. அடுத்தாய் ஒருநாள் றோட்டாலை காரிலை ஸ்பீக்கரை கட்டி சாதனை உலகசாதனை சங்கானையில் அரைப்பனை உயரத்தில் அந்தரத்தில் ஆடி சாதனை செய்கிறார் வாருங்கள் வந்து பாருங்கள் எண்டு ஒருத்தர் அலறிக்கொண்டு போனார். சங்கானையிலை அரைப்பனையிலை ஆடினால் அது சங்கானை சாதனையல்லோ இவரென்ன உலகசாதனையெண்டுறார்.சிலநேரம் ஆடுறவருக்கு சங்கானைதான் உலகமோ ?? எதுக்கும் ஒருக்கால் போய் பாப்பம் எண்டு நினைச்சு சங்கானைக்கு சைக்கிளை மிதிச்சன் சங்கானை பிள்ளைச்சுண்டு மைதானத்தடியிலை பாட்டுகேட்டிது. அங்கைதான் உலகசாதனை நடக்குதாக்கும் எண்டு நினைச்சு உள்ளை போனால் ஒரு பனையை அரைவாசியளவில் தறித்து அதிலை இரண்டு ஸ்பீக்கர் கட்டி எம்.ஜி.ஆரின் வெற்றிய நாளை சரித்திரம் சொல்லும் எண்டு பாட்டுபோய்க்கொண்டிருக்க அதுக்கும் மேலை ஒரு பலகையை மேடைபோல பொருத்தி அதுக்குமேலை ஒருத்தர் எம்.ஜி.ஆரின் பாட்டுக்கு கையை காலை ஆட்டினபடி நிண்டார்.அதை ஒரு பெரிய கூட்டமே ஆவெண்டு அண்ணாந்து பாத்தபடி நிண்டிச்சினம்.

நானும் கொஞ்ச நேரம் அண்ணாந்து பாத்து கழுத்து நோவெடுக்க கீழை குனிஞ்சு பக்கத்திலை நிண்ட ஒருத்தரிட்டை இவர் எத்தினை மணித்தியலம் ஆடப்போறார் எண்டு கேட்டன்.அதுக்கு அவரும் தம்பி வெளிநாடு ஒண்டிலை யாரோ எட்டுநாள் ஆடிசாதனை செய்தவங்களாம் . அதை முறியடிக்க இவர் பத்துநாள் ஆடுறதாய் முடிவெடுத்திருக்கிறார்.எண்டார்.வெளிநாடெண்டால் எந்த நாடு எண்டு திருப்பிக் கேட்டன் அவரும் தாடையை சொறிஞ்சபடி ரஸ்யாவே அமெரிக்காவே சரியாத்தெரியேல்லை ஆனால் ஆரோ ஆடினவங்களாம் எண்டார்.ஆனால் அந்த நேரம் எனக்கு உந்த உலகஅறிவு பெரிசா இருக்காதததாலை அமெரிக்காவிலையோ ரஸ்யாவிலையோ ஒருத்தரும் அரைப்பனையிலை ஆடினதாய் நான் கேள்விப்படேல்லை அதாலை சரி நம்ம ஊர்காரன் ஒருத்தன் அந்தச் சாதனையை முறியடிக்கப்போறான் எண்டுசந்தோசப்பட்டுக்கொண்டிருக்க. பக்கத்திலை இருந்த வேறை இரண்டு பேர் அண்ணாந்து பாத்தபடி இன்னொரு ஆராச்சியிலை ஈடுபட்டுக்கொண்டிருந்திச்சினம். அது என்னவெண்டால்.பனையை முழுதாய் தறிக்கிறதெண்டால் சுலபம். ஆனால் பாதியிலை தறிச்சிருக்கிறாங்கள் உண்மையிலை கெட்டிக்காரர். இதையும் உலக சாதனையிலை சேர்க்கவேணுமெண்டு கதைச்சுக்கொண்டு நிண்டிச்சினம்.எனக்கும் அது ஆச்சரியமாத்தான் இருந்தது அப்பதான் அடிப்பனையை உத்துப்பாத்தன். பாதியாய் தறிச்ச பனங்குத்தியை கீழை கிடங்கு கிண்டி தாட்டிருந்தது. ஆடுறவர் சாப்பிட மட்டும் நேரமெடுத்து உண்மையிலேயே தொடர்ந்து பத்துநாள் ஆடுவாரா இல்லாட்டி இரவு பன்னிரண்டு மணியளவிலை பாட்டையும் நிப்பாட்டிப்போட்டு எல்லாரும் படுக்கப் போனால்பிறகு இவரும் பனையாலை இறங்கி படுக்கப்போடுவாரா??எண்டு யாரையாவது கேக்க நினைச்சாலும் எதுக்கு அடுத்த ஊருக்கு வந்து அனியாயமாய் அடிவாங்குவானெண்டு நினைச்சுக்கொண்டு அங்கை ஆவெண்டு அண்ணாந்து பாத்துக்ககொண்டிருந்த சனங்களும் அதை பாக்க பக்கத்து ஊரிலை இருந்து வேலை மினக்கெட்டு போன என்னை மாதிரி அக்கள் இருக்கும் மட்டும் இப்பிடி சோதனையான சாதனையள் நடக்கத்தான் செய்யுமெண்டு நினைச்சபடி ஊருக்கு வந்திட்டன்.


ஒருநாள் நாங்கள் வழைமைபோலை கோயிலடி மண்டபத்திலை கச்சான் கடலை வாங்கி சாப்பிட்டபடி அரட்டையடிச்சுக்கொண்டிருக்கேக்குள்ளை ஏதோ கதையிலை எங்களுக்குள்ளை ஒரு பந்தயம் வந்திட்டுது அது என்னவெண்டால் யார் அதிகளவான கச்சான் கடைலை சாப்பிடுறது எண்டதுதான் பந்தயம். அதிலை நானும் இன்னொரு நண்பனுக்குமிடையிலை போட்டிவந்திட்டுது நண்பன் தான் 3 கிலோ கச்சான் சாப்பிடுவன் எண்டான் நான் ஏதோ ஒரு வேகத்திலை 5 கிலோ சாப்பிடுவன் எண்டிட்டன்.உடைனையே எல்லாரும் சேந்து என்னை பப்பாவிலை ஏத்திவிட்டு அப்பிடி நான் 5 கிலோ கச்சான் சாப்பட்டு சாதனை செய்தால் நாங்கள் மாலை நேரத்திலை மருதடிச்சந்தியிலை இருக்கிற குமார் கடையிலை குடிக்கிற பிளேன்ரீயும் வடையும் ஒரு மாதத்துக்கு எனக்கான செலவு தங்களுடையது எண்டு முடிவெடுத்திட்டாங்கள். உடைனையே சந்தர்ப்பம் காத்திருந்த என்ரை உயிர் நண்பன் இருள்அழகன் எல்லாரிட்டையும் காசு சேர்த்து ஓடிப்போய் கச்சான் கடைக்காறியிட்டை விசயத்தை சொல்லி 5 கிலோ கச்சானை நிறுத்துத் தரச்சொல்லி கேட்கவும் . கச்சான் கடைக்காறிக்கு ஒரே புழுகம் இன்னும் தேவையெண்டால் கேளுங்கோ உடைனை சுடச்சுட வறுத்துத்தாறன் எண்டு சொல்லி 5 கிலோ கச்சானை நிறுத்து. மொத்தமாய் கச்சான் வாங்கினதுக்காக மேலதிகமாய் இலவசமாய் இன்னும் இரண்டு கை கச்சானையும் அள்ளிப்போட்டு குடுத்துவிட்டாள்.

இருள் அழகன் கச்சானை கொண்டுவந்து எனக்கு முன்னால் கொட்டினதுமே எனக்கு அடிவயித்திலை ஒரு இலேசான மாற்றம் தெரிஞ்சிது.ஒரு மாதிரி சமாளிச்சுக்கொண்டு ஒரு நிபந்தனையை வைச்சன் அதாவது கச்சான் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் எனக்கு பிளேன்சோடா வாங்கித்தரவேணும் இதுதான் நிபந்தனை அதுக்கும் எல்லாரும் தலையாட்ட.எல்லாரும் கச்சானை உடைச்சு உள்ளங்கையிலை வைச்சு தேச்சு தோலை ஊதி ஊதி என்ரை கையிலை தர பிளேன் சோடாவை குடிச்சபடி என்ரை கச்சான் தின்னும் உலக சாதனை ஆரம்பமானது.கோயிருக்கு கும்பிட வந்தவையள் கூட கொஞ்ச நேரம் மடத்தடியிலை நிண்டு என்ரை உலக சாதனையை ரசிச்சு பாத்திட்டு "" இவன் ஏற்கனவே பித்தம் பிடிச்ச ஆள் மாதிரி இதுக்குள்ளை கச்சானை திண்டு இன்னும் பித்தம் தலைக்கேறி விசராக்கப்போகுது"" எண்டு வாயார வாழ்த்திவிட்டுப்போனார்கள்.இரண்டு கிலோ தாண்டியதுமே வயித்துக்குள்ளை வாயுக்குமிழிகள் ஓடிவிழையாட ஆரம்பிச்சது.மூன்றாவது கிலோவைத் தொட்டதும் முட்டிமோதிக்கொண்டிருந்த வாயுபகவான் வழிகிடைத்த இடத்தால் டர்ர்ர்ர்...................டர்ர்ர்ர்.......................என்று வெளியேறத்தொடங்கவே நானும் காற்றோட்டமாய் வயற்கரைப்பக்கமாய் சரிந்திருந்தபடியே மிச்ச சாதனையை தொடர்ந்தேன்.பிளேன் சோடா குடித்த வாயு வாயால் ஏவறையாய்(ஏப்பமாய்) வெளியேறிக்கொண்டிருந்தது.நலாவது கிலோவை கஸ்ரப்பட்டு அனுப்பிக்கொண்டிருக்க வயிற்ரை பிரட்டி சத்தி(வாந்தி) வாற மாதிரி இருக்கவே .

நண்பர்களிடம் போட்டி விதியில் சின்ன மாற்றம் செய்து சத்தி எடுத்திட்டு தொடந்து சாப்பிடலாமா எண்டு கேட்டுப்பாத்தன். அப்பிடியெல்லாம் செய்யமுடியாது அப்பிடிச்செய்தால் பந்தயத்தில் தோத்துப்போனதாக தீர்மானம் கொண்டுவருவோமெண்டு மிரட்டினார்கள். இவங்டை பெரிய ஜ.நா. சபைத்தீர்மானம் என்று நினைத்தபடி அடுத்த பிடி கடைலையை வரியல் போட்டேன் அவ்வளவுதான் உவ்வாய்ய்ய்க்........எண்டு ஏதோ அணை உடைஞ்சு வெள்ளம் வந்த மாதிரி சத்தி(வாந்தி) வந்து அந்த வெள்ளத்திலை எனக்கு முன்னாலை இருந்த நண்பர்கள் எல்லாரும் நனைஞ்சு போச்சினம். பிறகென்ன என்னைத் திட்டியபடியே கொயில் கிணத்திலை எல்லாரும் குளிச்சிட்டு மடத்தையும் கழுவிசுத்தம் செய்துபோட்டு போட்டினம். அண்டைக்கு கடைலை சாப்பிடுற போட்டியிலை தோத்துப்போனாலும் இண்டைக்கு வெளிநாட்டிலை இருந்தபடி கணணியிலை கடலை போடுறதிலை உலக சாதனை நிகழ்த்தியே தீருவது எண்டு உறுதியாய் இருக்கிறன்

தமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது.-

3:54 AM, Posted by sathiri, No Comment

தமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது.-

சாந்தி ரமேஷ் வவுனியன் -

'ஈழத்தழிழர்களின் வலியை பதிவு செய்வேன்" பருத்திவீரன் இயக்குனர் அமீர் ஆவேசம் என அண்மையில் செய்திகள் படித்தோhம். அமீரின் ஆவேசம் என்ன என்பது பற்றி அவரது உரையைக் கேட்டபின் பின்தான் உண்மை உறைத்தது. ஒரு உண்மையான கலைஞனின் ஆதங்கம் அமீரின் உரையில் வெளிப்பட்டிருக்கிறதேயன்றி அது ஆவேசமல்ல. யதார்த்த வாழ்வை பிரதிபலித்த பருத்தீவீரனை நுணுநுணுக கவிதையாகப் பதிந்திருக்கும் அமீரின் கவிதைக் கண்களுக்குள் உப்புச்சப்பில்லாத எதையோ சினிமா என்று டென்மார்க்கிலிருந்து தமிழகம் சென்று பணத்தை விசிறி பாடல்காட்சிப் படம் காட்டியிருக்கிறார் கி.செ.துரையென்கின்ற கி.செல்லத்துரை.சினிமா என்ற பெயரில் பல லட்சம் டெனிஷ் குரோணர்களை ஏற்கனவே 'பூ(ஈ)க்கள்" என்று கத்;தியும் துவக்கும் காட்டி எமது தொலைக்காட்சிகளும் தென்னிந்தியப் பெரும்பான்மைப் படங்கள் போடும் கனவுலக ஆட்டத்தையுமே புதுமையான பூக்கள் என்று பெயரிட்டு கொசுக்களைப் படம் காட்டிய கி.செல்லத்துரை அவர்கள் திரும்பவும் பல லட்சம் டெனிஷ் குரோணர்களை கொட்டி தனது மகனை கதாநாயகனாக்கி 'இளம்புயல்" என்ற பெயரில் திரைப்படம் என்று ஒன்றைத் தயாரித்திருக்கின்றார். இப்படத்தின் பாடல் வெளியீட்டினை கடந்த வெள்ளி 25.07.08 அன்று சென்னையில் நிகழ்த்தியுமிருக்கிறார்.

எம்மவர் சினிமா என இதற்குப் பெயரிட்டு எம்மவர்களுக்கான சினிமா இதுதான் என தமிழகத்தில் போய் நின்று வீரவிளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த உரையைக் கேட்கின்ற ஒவ்வொரு ஈழத்தவனும் நாக்கைப்பிடுங்கி (இவர்களுக்காக நாக்கைப் பிடுங்குவது அதிகம்தான்) சாகலாம் போலத்தானிருக்கும். இல்லை எங்கள் கால்களில் இருப்பதைக் கழற்றி எங்கள் முகத்தில் நாங்களே அடிக்கத் தான் தோன்றுகிறது. போதாமைக்கு ஈழத்தழிழர் இங்கிருந்தே (அதாவது இந்தியாவிலிருந்தே) ஈழத்துக்குப் போனோம் , இங்கிருந்து போர்வீரர்களாகப் போனவர்களின் வம்சமே இன்று போராடுகின்றது என அருளுரை வழங்கியிருக்கிறார். ஈழத்தமிழினம் இலங்கையின் பூர்வீகக்குடிகள் என்பதும் எங்களுக்கான தனித்துவம் பண்பாடு கலாசாரம் மொழி உள்ளது என்பதும் எமது பூர்வீக நிலத்தை கொள்ளையிடும் சிங்களர்களுடன் நடக்கும் தமிழீழ விடுதலைப்போரின் வலிகளும் துயர்களும் டென்மார்க் வந்ததுடன் கி.செல்லத்துரைக்கு மறந்துவிட்டதா அல்லது ஞாபகப்பதிவில் மங்கிவிட்டதா ? சிங்கள இராணுவத்தின் கொலைப்பட்டியலில் குடும்பத்திலிருந்து 6பேரை கொடுத்துவிட்டு டென்மார்க் போனேன் என உருக்க உரை வழங்கியவருக்கு உண்மையில் ஈழத்தமிழரின் ஊற்று எங்கே தோற்று எங்கேயென்பது புரியாமல் கேவலக்கெட்ட ஒரு சினிமாவுக்காக எங்கள் இன மானத்தையே தமிழகத்தி;ல் போய் நின்று விற்றுவிட்ட வெங்காயச் சினிமா இயக்குனர் திலகம் கி.செ.துரையென்றால் மிகையில்லை.


குடும்பத்தில் ஆறுபேரை இலங்கை இராணுவத்திற்கு பலி கொடுத்தவருக்கு அந்த வலியிருந்திருப்பின் இப்படியான வார்த்தைகளைச் சொல்ல மனம் ஒப்புமா ? யாரோ சிந்தும் குருதியில் தங்களை வளர்க்கும் துரோகத்தை கி.செல்லத்துரையால் தான் செய்ய முடியும்.அதுமட்டுமல்ல தமிழ்சினிமாவில் இருக்கின்றவர்கள் இலங்கையிலே ஓர் இனப்போர் ஏன் நடக்கின்றது என்று கேட்டால் அதற்கு சிங்கள அரசு காரணமல்ல அதற்கு தமிழ் சினிமாதான் காரணம் என்பதைத் தமிழகத்தில் இருக்கின்ற சினிமாக்கலைஞர்கள் அறிந்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. என்கிறார் இந்த அறிவுசீவி. தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் உட்பட சினிமாத்துறை சார்ந்த எம்மில் நேசமுள்ளவர்கள் ஈழத்தமிழினம் அதன் போராட்டம் என்ன என்பதைப் புரிந்து எங்களுக்கான பலம் தமிழகத்தில் பெருகியிருக்கிறது. இந்நிலையில் தனது சுய விளம்பரத்துக்காகவும் சொந்த இலாபத்துக்காகவும் கதையளக்கும் இவரிடமிருந்து ஈழத்தமிழர்களோ தமிழகத் தமிழர்களோ கற்க எதுவுமில்லை. தமிழக சினிமாவைப் பார்த்துத்தான் தமிழீழ விடுதலைப்போராட்டமே நடப்பதாக ஒரு மாயையான கனவை தமிழகக் கலைஞர்கள் மத்தியில் உரைத்த கி.செல்லத்துரையின் உதவாத சினிமாவை உலகம் முழுவதிலும் புறக்கணிக்கப் போகின்றது தமிழினம்.


இதுவரை தமிழீழ விடுதலைப்போரில் இறந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களின் தியாகங்களும் இந்த விளக்கம் கெட்ட கி.செ.துரை காற்றாய்,கடலாய்,பெயர் சொல்லாமல் ஊர் சொல்லாமல் உயர்ந்த லட்சியத்துக்காய் தங்கள் இளைய உயிர்களை உதிர்த்த மாவீரர்களின் தியாகங்களெல்லாம் வெங்காயச் சினிமாவின் தாக்கம் என்கிறாரா ? தமிழக சினிமாக்களில் தலைவர்களின் பின்னால் நூறுபேர் நின்று தலைவர் வாழ்க தலைவர் வாழ்க என கி.செல்லத்துரைக்கும் கோஷம் போடுவார்கள் என்று எண்ணியோ என்னவோ சிவாஜி கணேசனின் 'மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்" பாடலில் பாதிப்பு கி.செல்லத்துரையை தலையில் முடியைக் கூட உதிர்த்துவிட்டதாக உணர்ச்சி விழிம்பில் நின்று துடித்திருக்கிறார். அப்போ சினிமாவைப் பார்த்துத்தான் தங்கைக்கு வாழ்வமைத்துக் கொடுத்தாரா ? அப்போ சுய சிந்தனையே இவரிடம் இல்லையா ? எல்லாம் சினிமாவின் வழிநடநத்தல்தானா ? தன்னை ஒரு தமிழ் ஆசிரியானாக கலைஞனாக அறிமுகமாக்கிய மனிதரின் மூளை மண்டலமே சினிமாவின் இயக்குதலா ? வயது முதிர மனித உடலிலும் மனத்திலும் மாற்றங்கள் நிகழ்வது போல முடியுதிர்வும் இயற்கை. ஆனால் புலம் பெயர் நாடுகளில் இளவயதிலே நரையும் வழுக்கையும் பலருக்கு வந்துவிடுகிறது. காரணம் எமது இளைஞர்கள் ஒன்று இரண்டு மூன்று வேலைகளென்று செய்து உழைத்து தங்கள் தலைகளை விமான ஓடுபாதை நிலைக்கு வர வைத்துவிடுகிறார்கள். இப்படியான உழைப்பாழிகளின் பணத்தை இந்த மனிதர் தனது உதவாச் சினமாவுக்கு முதலீடாகவும் மாற்றுகிறார்.


ஈழத்தில் எத்தனையே தேவைகள் நிறைந்து கிடக்கிறது. நாளும் பசியிலும் குண்டுவீச்சு விமானங்களின் தாக்குதலிலும் ஆட்லறி வீச்சுகளிலும் பிணங்களாக எம்மினம் நாளும் சாகிறது. அந்த மண்ணுக்காக அந்த மக்களுக்காக இந்தப் பணத்தை உதவினால் எத்தனையே நல்லவை எங்கள் மண்ணில் நடக்கும். மனமிருப்போரிடம் பணமில்லை பணமிருப்போனிடம் கொடுக்கும் மனமில்லை. வீணாக தனது குடும்ப விளம்பரத்துக்காக எத்தனை கோடிகளையும் செலவு செய்யத் தயாராக இந்த ஈழத்தமிழன். (ஈழத்தமிழருக்கே இழிவு)அமீர் போன்றவர்கள் தமிழகசினிமாவை கதாநாயகப்பிடியிலிருந்து மீட்க போராட ஈழத்தவர்களின் பெயரைச் சொல்லி ஒரு சதத்துக்கும் பயனில்லாத ஓடிப்பிடித்து விளையாடும் கனவுப்படம் காட்டும் கி.செல்லத்துரை அமீர் போன்ற இயக்குனர்களுக்கு உதவினால் கூட குறைந்த செலவில் நிறைந்தவொரு சினிமாவை தருவார்கள். நல்லதொரு சினிமாவுக்கான தளமாக தனது பொருளாதார வளத்தை பயன்படுத்தினால் எம்மவர்களே சிறந்த சினிமாவை எடுப்பார்கள். ஈழத்து இளைஞன் சோமிதரன் அண்மையில் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 'எரியும் நினைவுகள்" என்ற ஆவணப்படத்தைத் தந்திருக்கிறான்.


சோமிதரன் செய்திருப்பது ஈழத்தமிழனத்தின் ஒரு வரலாற்று ஆவணம். யாழ் நூலக எரிப்பின் நினைவுகளை எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் ஆவணமாக்க அரும்பாடுபட்டு உழைத்திருக்கிறான். ஆயினும் இந்த இளைஞனது முயற்சிக்கு வீணாக இறைக்கும் பணத்தில் ஒரு பங்கைக் கொடுத்து உதவியிருப்பின் 'எரியும் நினைவுகள்" போல எத்தனையோ நினைவுகளை சோமிதரனும் சோமிதரன் போன்ற திறமையாளர்களும் தருவார்கள். மிகுந்த நெருக்கடிக்குள் சிறந்த தொழில்நுட்ப வசதியற்ற வன்னிக்குள்ளிருந்து வெளியான போராளிக்கலைஞர்களின் திரைப்படங்கள் எத்தனையோ அவையே எங்கள் ஈழத்து சினிமாவின் ஊற்றான ஆணிவேர்கள். இவையெல்லாம் தமிழக சினிமாவிலிருந்து பிறந்தவையல்ல எங்கள் கலை எங்கள் கண்களுக்குள்ளிருந்து எங்கள் மனிதர்களுக்குள்ளிருந்து பிறந்தவை. இதை விலைபேச டென்மார்க்கிலிருந்து புறப்பட்டு ஈழத்தமிழர் போராட்டமானது இந்தியா சினிhவிலிருந்து பிறந்ததென கதைவிடும் கி.செல்லத்துரையின் 'இளம் புயல்" தமிழர் வாழும் எந்த தேசத்திலும் திரையிட அனுமதிக்கக் கூடாது. தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். 30 ஆண்டுக்கு மேலாக ஈழத்தமிழர் படும் துயரை ஒற்றை வரிக்குள் ஒளித்து எங்கள் வாழ்வின் வலியை சாதாரண சினிமாவுக்கு ஒப்பாக்கிய இந்த கி.செல்லத்துரையின் இரண்டாவது படமான 'இளம் புயல்" அனைத்துத் தமிழர்களும் புறந்தள்ளி சிறந்த படைப்புக்களை ஊக்குவிக்க வேண்டும். இறுதியாக , பணத்துக்காக தமிழகக்கலைஞர்களின் தமிழக சினிமா உலகின் படைப்புக்களை திருடி வலைப்பதிவேற்றி பல்லாயிரம் டெனிஸ்குரோணர்களை இலாபமாகப் பெறுகிறார் கி.செல்லத்துரை.

இவரது மேற்பார்வையில் இயங்கும் பல இணையத்தளங்கள் திரைக்கு வந்ததும் வராததுமாக திரைப்படங்களை திருடி தனது சுய வருவாயைப் பெருக்கிக் கொள்கின்ற பெருச்சாளி. இத்தகைய இழிவான தொழில் செய்யும் கி.செல்லத்துரை மீதும் அவரது குழு மீதும் தமிழக சினிமாவுலகம் நடவடிக்கையெடுக்க வேண்டும். ஒரு திரைப்படத்தை எவ்வளவோ செலவுகளின் மத்தியில் தமிழகத் தயாரிப்பாளர்கள் வெளியிட வீட்டுக்குள் இணைய இணைப்பும் இணைய வழங்கலுக்கான வசதியையும் பெற்று உங்கள் முதுகிலேயே சவாரி செய்யும் இந்தத் துரோகத்தனத்தை இந்தியத் திரையுலகம் இனங்காண வேண்டும். இறுதியாக ஈழத்தமிழர்கள் இத்தகைய வெளியிடுகளைப் புறக்கணிப்போம். சிறந்த படைப்புக்களை வரவேற்போம். ஈழம் தமிழகம் என்று பிரித்துப் பார்க்காமல் தமிழகத்திலிருந்து வெளிவரும் சிறந்த சினிமாக்களையும் வரவேற்போம். பருத்திவீரனைத் தந்த அமீர் , ஆணிவேரைத் தந்த ஜான் போன்ற இயக்குனர்களை வரவேற்போம். 'பூக்கள்" 'இளம்புயல்" என்று ஆக்களை ஏமாற்றும் கி.செல்லத்துரையிடமிருந்து சிறந்த படைப்புக்கள் கிடைக்குமாயின் அதை ஊக்குவிக்கவும் தயாராகவுள்ளோம். கி.செல்லத்துரை நீங்கள் தயாரா ? அல்லது இந்த விமர்சனத்திற்கு எதிர்ப்பாட்டுப்பாட உங்கள் பிழைகளை மறைக்க புனைபெயர்களைத் தேடுவீர்களா ? அல்லது பூக்கள் நாயகர்களை அனுப்பி துப்பாக்கியால் சுடுவீர்களா ? எதுவாயினும் வாருங்கள். கருத்தை கருத்தால் வெல்வோம். சிறந்த கலைப்படையல்களைப் படைப்போம்.

மாயாவி

7:01 AM, Posted by sathiri, 2 Comments

மாயாவி

ஒரு பேப்பரிற்காக சாத்திரி

மாயாவி எண்டதும் சின்ன வயதிலை படிச்ச சித்திரக்கதை மாயாவிவேதாளன் கதை பலபேருக்கு ஞாபத்துக்கு வரும். ஆனால் இது சித்திரக்கதையில்லை ஊரிலை நடந்தகதை. முந்தி ஊரிலை காலத்துக்குக்காலம் மர்ம மனிதர். இல்லாட்டி மாயாவி மனிதர் உலாவுவினம். இல்லாட்டி உலாவுறகதை (வதந்தி) அடிக்கடி அடிபடும்.கதையளைக்கேட்டாலே ஒருவித மர்மம் நிறைஞ்ச ஒரு பரபரப்பாத்தான் இந்த மர்மமனிசனின்ரை கதை ஊரிலை கதைப்பினம்.கதையைக் கேட்டால் ஏதோ திகில் நிறைஞ்ச ஒரு இங்கிலிஸ் படம் பாத்தமாதிரி இருக்கும்.பெரும்பாலும் இந்தமாயாவி மனிசர் தோட்டங்களிலை விழைச்சல் இல்லாட்டி அருவிவெட்டு(நெல்லு வெட்டு)காலங்களிலைதான் அதிகமாய் உலாவுவினம்.அப்பிடித்தான் எங்கடை ஊரிலையும் திடீரெண்டு மர்ம மனிசனின்ரை கதை அடிபடத்தொங்கிச்சுது.அந்த மனுசனுக்கு உடம்பெல்லாம் முள்ளு முள்ளாய் இருக்குமாம்.

யாராவது பிடிக்கப்போனால் முள்ளம்பண்டி மாதிரி முள்ளு சிலிர்த்து பிடிக்கிறவரை குத்திப்போடும். இப்பிடி ஒருகதை. ஆளை பிடிக்க ஏலாதாம் பிடிச்சால் வழுக்கிக்கொண்டு ஓடிடுவானாம்.உடம்பு வழுக்கிற மாதிரி இருக்காம். சிலநேரம் திடீரெண்டு மறைஞ்சிடுவானாம்.இப்பிடி ஒருகதை . அதுக்கும் மேலைபோய் சிலநேரம் ஆகாயத்திலை எழும்பி பறக்கத்தொடங்கிடுவானாம். இருட்டுக்குள்ளை அவனின்ரை கண்கள் பச்சைக்கலரிலை மின்னுமாம்.இப்பிடி ஆளாளுக்கு அவிட்டு விட்டு வதந்தி ஊரெல்லாம் பரவி. ஊர்ச்சனத்துக்கெல்லாம் பயம்தொட்டிட்டுது. இரவிலை வெளியாலை போறதையும் சனம் குறைச்சுப்போட்டுது.

இரவு கள்ளடிக்க தனியப்போறவை கூட பொழுதுசாயமுதலே போத்தில்லை வாங்கியந்து வீட்டிலை வைச்சு அடிக்கத்தொடங்கிட்டினம்.அது மட்டுமில்லை இரவிலை தோட்டக்காவலுக்கு போறவையள் இரவு செக்கன்சோ (9 மணி கடைசிக் காட்சி ) படம் பாக்கப்போற வாலிபக்கூட்டங்களும் போகாமல் விட்டிட்டினம்.அந்த மர்ம மனிசனை சிலபேர் இரவிலைபாத்தும் இருக்கினம் ஆனால் ஆக்களைக் கண்டதும் அவன் எப்பிடியோ திடீரெண்டு இருட்டுக்குள்ளை மறைஞ்சிடுறான். அது வயற்கரை வைரவர்தான் உலாவுறார் பயப்பிடாதைங்கோ அப்பிடி யாரும் கண்டால் ஒரு தேவாரத்தை சொல்லுங்கோ ஒண்டும் நடக்காது எண்டு ஊருக்குள்ளை சில பழசுகளின்ரை புராணம். அதே நேரம் ஊருக்குள்ளை களவும் போகத்தொடங்கிட்டுது.சரி வைரவர்தான் இரவிலை உலாவுறாரெண்டால் கடவுள் ஏன்களவெடுக்கவேணும் எண்டொரு குளப்பம்.இந்த மர்ம மனிசன் திரியிறதை சாட்டா பயன்படுத்தி வேறை யாரோ களவுக்கு வெளிக்கிட்டினமோ எண்டும் இல்லை அந்த மர்ம மனிசன்தான் களவெடுக்கிறானோ எண்டும் சந்தேகம்.இப்பிடியான குளப்பத்திலை ஒருநாளிரவு வெள்ளரித் தோட்டத்துக்கு காவலுக்கு படுத்திருந்த வைத்திலிங்கத்தார் ஏதோ சத்தம் கேட்டு எழும்பி ரோச்லைற்றடிச்சு பாக்கிறதுக்கிடையிலை மர்மமனிசன் அவருக்கு கண்ணைப்பொத்தி அடிச்சுப்போட்டு ரோச்லைற்ரையும் பறிச்சுக்கொண்டு பறந்திட்டான். பயத்திலை அய்யோ எண்டு கத்திக் கொண்டு ஊருக்குள்ளை ஓடியந்த வைத்திலிங்கத்தார் மயங்கிவிழ. சனமெல்லாம் சேந்து தூக்கிக்கொண்டு போய் சங்கானை ஆஸ்பத்திரியிலை போட்டிச்சினம்.

அடுத்தநாள் ஊர்ச்சனமெல்லாம் ஒட்டுமொத்தமாய் நான்உட்பட சங்கனை ஆஸ்பத்திரியிலைதான் . போனவை எல்லாரும் வைத்திலிங்கத்தாரை வருத்தம் பாக்குறதுக்கில்லை . எல்லாருக்கும் அந்த மர்ம மனுசனை பற்றி அறியிறதுதான் முக்கிய நோக்கம். அவன் எப்பிடியிருப்பான் உயரமா கட்டையா??கறுப்பா சிவப்பா ??இல்லை கலர்கலரா இருப்பானா??உடம்பிலை முள்ளு இருந்ததா?? பறக்கிற செட்டை (இறக்கை)இருந்ததா?? எண்டு ஆளாளுக்கு கேட்ட கேள்வியிலை மயக்கம் தெளிஞ்ச வைத்திலிங்கத்தார் திரும்ப மயங்கிட்டார். எல்லாரும் வெளியாலை போங்கோ அந்தாளுக்கு உங்களாலை விசர் பிடிக்கப்போகுது எண்டு அங்கை நிண்ட நேர்ஸ் மார் சனத்தைக் கலைக்க. அதுக்குள்ளை ஒருத்தன் அய்யோ வைத்திலிங்கத்து விசராம் எண்டு சொல்ல. மர்மமனிசன் அடிச்சு வைத்திலிங்கத்துக்கு பைத்தியமாம் எண்டு புதுசா ஒரு புரளிவேறை உலாவத்தொடங்கிட்டுது.வைத்திலிங்கத்தாருக்கு விழுந்த அடியோடை சனத்துக்கு பயமும் கூடிட்டுது. அதாலை எல்லா வீட்டுக்காரரும் வீகளிலை கத்தி.பொல்லு.வாள்.எண்டு தற்காப்பு ஆயுதங்களை தயார்பண்ணி வீட்டுக் கூரை வேலியளுக்குள்ளை செருகிவைக்கத்தொடங்கினது மட்டுமில்லை. மர்ம மனிசன் வந்தால் மற்றை வீட்டுக்காரரையும் எழுப்புறதுக்கு சிலரின்ரை வீடுகளிலை மணி கூட வாங்கி கட்டித்தொங்க விட்டிருந்தவை. அது மட்டுமில்லை இரவிலை கோயில் மடத்திலை சாமம் வரைக்கும் இருந்து அரட்டையடிக்கிற எங்களுக்கும் நேரத்தோடையே வீட்டுக்கு வரச்சொல்லி வீட்டுக்காரரின்ரை கரைச்சல் தாங்கஏலாமல் நாங்களும் எங்கடை அரட்டை ஆராச்சியளை ஏழு எட்டு மணிகு்குள்ளையே முடிச்சிட்டு வீட்டை போய்விடுவம்.இப்பிடியே சில நாட்களாய் திகிலாய் இருந்த எங்கடை ஊர்க்கதை. மானிப்பாயிலை மர்ம மனிசன் திரியிறானாம் எண்டு மற்றைய ஊர்களுக்கும் பரவி பரபரப்பாய் கதை போய்க்கொண்டிருக்கேக்குள்ளை எங்கடை ஊரிலை கொழும்புக்கு லொறியிலை சாமான்கள் கொண்டுபோய் வியாபாரம் செய்யிற ஒருத்தர் கோயிலடியிலை நிண்ட எங்களிட்டை ஒரு விசயத்தை சொன்னார்.எங்கடை ஊரிலை கட்டையன் எண்டொருத்தன் இருந்தவன். உயரம் குறைவாய் ஆனால் நல்ல உறுதியான உருண்ட உடம்பு.அனின்ரை பெயரை இதிலை எழுதாமல் விசயத்தை எழுதிறன்.

அந்தக் கட்டையன் சாவச்சேரி சந்தையிலை மரக்கறி வித்ததை கண்டனெண்டு அந்த லொறிக்காரர் சொன்னதை கேட்டதும் எங்களுக்கு ஒரு பொறிதட்டிச்சிது.மரக்கறி விக்கிறதுக்கு கட்டையனிட்டை தோட்டம் இல்லை. மரக்கறியை வாங்கி விக்கிறதெண்டாலும் யாழ்ப்பாணத்திலை கிட்டமாய் கனக்க சந்தையள் இருக்கக்கூடியதாய் சாவச்சேரியிலை ஏன் விக்கவேணும் எண்டு யோசிச்சிட்டு கட்டையனை தீவிரமாய் கண்காணிக்கிறதாய் முடிவெடுத்து. வீடுகளிலை கணக்கெடுக்காத ஒரு ஏழெட்டுப்பேர் சேந்து இரவு ஒரு பன்னிரண்டு மணிவரைக்கும் ஆயுதங்களோடை தோட்டங்கள் வயல்பக்கமாய் சுத்திவந்தம்.ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை களவு போய்க்கொண்டுதான் இருந்தது. ஆயுதங்களோடை சுத்தினனாங்கள் எண்டதும் ஏதோ ஏகேயோடை சுத்தினதாய் நினைக்காதையுங்கோ. ஏகேயெல்லாம் நான் எட்ட நிண்டுதான் பாத்திருக்கிறன்.பொல்லுத்தடிகள்.மற்றது கோயில்லை வாழைவெட்டுறதுக்கு வைச்சிருந்த வாள் இதுதான் ஆயுதம்.இரவிரவாய் சுத்தியும் ஒரு பிரயோசனமும் இல்லாததாலை எங்கடை திட்டத்திலை ஒரு மாற்றத்தை செய்து பாத்தம். அதாவது விடியப்பறம்(அதிகாலை) இரண்டுமணிவரைக்கு நித்திரை கொண்டிட்டு இரண்டு மணிக்கு எழும்பி எல்லாப்பெடியளும் ஊருக்குள்ளை சுத்திவாறதெண்டதுதான் அடுத்த திட்டம். ஆனால் இதெல்லாம் எங்கடை வீடுகளுக்குத்தெரியாமல் தான் நடந்தது. எங்கடை மாற்றுத்திட்டத்துக்கு இரண்டாவது நாளே பலன் கிடைச்சிது.மானிப்பாய் நவாலி தோட்டப்பகுதிக்குள்ளை ஒரு உருவத்தை கண்டிட்டம். மெதுவாய் பதுங்கிப்போய் உருவத்தை கிட்ட நெருங்கிப்பாத்தம்.அந்த உருவம் மளமளவெண்டு பயித்தங்காய் பிடுக்கிகொண்டிருக்க. நாங்கள் எல்லாரும் கத்தியபடி ரோச்லைற்றை அடிச்சுக்கொண்டு ஓடிப்போய் பாஞ்சு ஆளைப்பிடிச்சால் நாங்கள் சந்தேகப்பட்டபடி எங்கடை ஊர் கட்டையனேதான்.யாரும் பிடிச்சால் வழுக்கிக்கொண்டு ஓட வசதியாய் உடம்பிலை எண்ணெயைப்பூசியிருந்தான்.அவனை பிடிச்சு கொண்டுவந்து எங்கடை கோயிலடியிலை கரண் கம்பத்திலை கட்டிவைச்சிட்டு அடுத்ததாய் என்ன செய்யலாமெண்டு யோசிச்சம்.

முந்திக் காலங்களிலை ஊரிலை நடக்கிற களவுகள் இல்லாட்டி கள்ளரைப்பிடிச்சால் அதை ஊர் விதானையாரிட்டைதான் பொறுப்புக் குடுக்கிறது வழக்கம். அதுமாதிரி நாங்களும் ஊர்விதானையார் மற்றது ஊர்பெரியாக்களிட்டை கள்ளனை பொறுப்பு குடுக்கலாம் எண்டு நினைச்சு. பிடிச்ச உடைனை நாலைஞ்சு அடியும் போட்டிட்டு அவனை கொண்டு வந்து எங்கடை கோயிலடியிலை இருந்த கரண்டு(மின்கம்பம்)கம்பத்தோட சேர்த்து அவன் இருக்கக்கூடிய வசதியாய் பின்பக்கமாய் கையை கட்டிப்போட்டு இரண்டுபேரை போய் விதானையாரையும் வேறை ஊரிலை பெரியாக்கள் சிலபேரையும் கூட்டிக்கொண்டுவர அனுப்பிப்போட்டு மற்றாக்கள் கட்டையனுக்கு காவல் நிண்டம்.என்ரை நண்பன் இருள்அழகன் வீட்டிலையும் கொடியிலை காயப்போட்டிருந்த உடுப்புகள் களவு போயிருந்தது.அதாலை கட்டிப்போட்டிருக்கிற கட்டையனைப்பாத்ததும் இருள்அழகனுக்கு வீரம் பெருக்கெடுத்து வந்திட்டுது. அதாலை கட்டையனைப்பாத்து டேய் எங்கடை வீட்டிலை காயப்போட்டிருந்த துணியளையும் நீயா களவெடுத்தனி என்று கேட்டபடி கட்டிப்போட்டிருந்த கட்டையனின் கன்னத்தை குறி வைத்து காலால் ஓங்கி அடிச்சான். அடிச்சதுதான் தாமதம் அய்யோ எண்டு கத்தினபடி இருள்அழகன் சுருண்டு விழுந்து கத்தினான். இதென்னடா அடிவாங்கினவன் அப்பியே அசையாமல் இருக்க. அடிச்சவன் ஏன் அய்யேவெண்டு சுருண்டு விழுந்து கத்திறாணென்டு எங்களுக்கு ஒண்டும் விழங்கேல்லை. பிறகுதான் புரிஞ்சுது இருள்அழகன் காலாலை ஒங்கிஅடிக்க அந்த நேரம் கட்டையன் தலையை குனிஞ்சிட்டான் அதாலை இருள்அழகன்ரை கால் கரண்கம்பத்திலை அடிபட்டிருக்கு.அதுவும் கொங்கிறீற் கம்பம் அடிஎப்பிடி இருந்திருக்குமெண்டு யோசிச்சுப்பாருங்கோ.அதுக்கிடையிலை ஊரிலை விதானையாரோடை கொஞ்சப்பெரிய மனுசர்எல்லாரும் நித்திரையாலை எழும்பி கோயிலடிக்கு வந்திட்டினம். இனிவந்தவை சும்மாவே இருப்பினம் எல்லாரும் கட்டையனுக்கு ஆளுக்கொரு அடிபோட . கட்டையன் எங்களைப்பாத்து "ஏன் என்னை கட்டிவைச்சு அடிக்கிறியள் சரியான ஆம்பிளையளாய் இருந்தால் என்னை அவிட்டு விட்டிட்டு யாராவது ஒற்ரைக்கு ஒற்றை தனியஅடிபட வாங்கோ. நான் தோத்திட்டால் உங்கடை தண்டனையை ஏத்துக்கொள்ளுறன்." எண்டு கத்தினான்.

களவெடுத்ததும் இல்லாமல் திமிரைப்பார் எண்டு சில பெருசுகள் புறுபுறுத்தாலும் அடிபட ஒருத்தரும் தயாராய்இல்லை.அப்பதான் என்ரை நண்பனொருவன் கட்டையனை அவிட்டு விடுங்கோ நான் அடிபடத்தயாரெண்டு முன்னுக்கு வந்தான் அவன் கராட்டியிலை கறுப்பு பட்டியும் எடுத்திருந்தவன்.சரியெண்டு நாங்களும் கட்டையனை அவிட்டு விட்டிட்டு ஏதோ வித்தை பாக்கிறதுக்கு நிக்கிறமாதிரி அவை இரண்டு பேரையும் நடுவிலை விட்டு நாங்கள் சுத்திவர நிண்டம்.என்ரை நண்பனும் கையைக் காலை வழைச்சு நெளிச்சு கராட்டி வித்தை எல்லாம் காட்டி தயாராக . கட்டையனும் தன்ரை பங்கிற்கு கையை காலை ஆட்டினவன் திடீரெண்டு சுத்திவர நிண்ட ஒருத்தரை தள்ளிவிழுத்திப்போட்டு வயல்வெளிக்குள்ளாலை இறங்கி ஓடத்தொடக்கிட்டான்.நாங்களும் கலைச்சுப்பாத்தம் அதோடை இருட்டாயும் இருந்தபடியாலை அவனைப்பிடிக்க முடியேல்லை.அதுக்குப் பிறகு கட்டையனை ஊர்ப்பக்கம் காணவேயில்லை.கன காலத்துக்குப் பிறகு ஒருநாள் நான் சைக்கிளிலை போய்க்கொண்டிருக்கேக்குள்ளை எங்கடை ஊரிலை ஒரு இயக்கத்தின்ரை முகாமுக்கு முன்னாலை ஒருதன் குத்திப் போட்டு எறியிற குண்டை கையிலை வைச்சிருந்தபடி என்னை மறிச்சு " தம்பி என்னை ஞாபகம் இருக்குதோ எண்டு கேட்டான். உற்றுப்பாத்தன். அது எங்கடை கட்டையன். பிறகென்ன என்ரை ஏசியா சைக்கிள் ஏறோப்பிளேன் வேகத்திலை அந்த இடத்திலை இருந்து மறைஞ்சிட்டுது.

அநியாயம் ஆனால் உண்மை

6:46 AM, Posted by sathiri, 2 Comments



மேலே படத்தில் தாயாருடன் உள்ள பெண்ணின் பெயர் சமந்தா சிய்லர் வயது 21 .நான் வசிக்கும் நகரத்தில் வசிக்கின்ற ஒரு மாணவி.கடந்தவாரம் எங்கள் பிராந்தியப்பத்திரிகையான (nice matin) இவரது படத்துடன் வந்த செய்தி எங்கள் நகர மக்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்தச் செய்தியினை தேவை கருதி தமிழில் தருகிறேன்.சிய்லர் ஒருநாள் பொழுது போக்காக இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்த பொழுது இணையத்தில் ஒரு விளம்பரத்தினை பார்க்கிறார். அது ஒரு இணையத்தின் மூலமான பயண முகவர் நிலையமொன்றின் ஒரு விழையாட்டு .அதில் வெற்றி பெற்றால் உலகின் பல இடங்களிற்கு ஒரு வார காலம் உல்லாசப் பயணம் போய் வருவதற்கான பயணச் சீட்டும் தங்குவதற்கான விடுதியும் பரிசாக அறிவிக்கப்பட்டு. பரிசு பெற்றால் போவதற்காக தெரிவு செய்வதங்காக சில நாடுகளின் பெயர் விபரங்களும் அதில் இருந்தது. போட்டிக்கான விதி முறைகள் சுலபமானதுதான். அதில் நீங்கள் ஆணா பெண்ணா.முழுப்பெயர் வயது மற்றும் மின்னஞ்சல் முகவரி இவற்றை பதிவு செய்து அனுப்பி விட வேண்டியதுதான்.இதனைப்பார்த்த சிய்லரும் சிலநேரம் அதிஸ்ரம் அடித்தால் இந்தக்கோடை விடுமுறையை குதூகலமாகக்களிக்கலாமென நினைத்து அதில் கேட்டிருந்த விபரங்களை பதிவுசெய்து அனுப்பிவிட்டார்.

ஒரு வாரத்தின் பின்னர் சிய்லருக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.அதனைத் திறந்து பார்த்தவரிற்கு மகிழ்ச்சி அவர் நினைத்தது போலவே கோடை விடுமுறையை கொண்டாட்டமாக களிப்பதற்காக நீங்கள் போட்டியின் பரிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கி஼br />?ீர்கள் என்று அவர் விபரங்கள் அனுப்பிய அந்த பயண முகவர் நிலையம் மின்னஞ்சல் அனுப்பியிருந்தது. அத்துடன்சில ஆசிய மற்றும் தென்அமெரிக்க நாடுகளின் பெயர்ப்பட்டியலைப்போட்டு நீங்கள் செல்ல விரும்பும் ஒரு நாட்டினை தெரிவு செய்யும்படியும் கேட்டிருந்தனர்.சிய்லரும் தாய்லாந்தின் பத்தையா கடற்கரையோரம் கால் நனைக்கும் கனவுகளுடன் தாய்லாந்தினை தெரிவுசெய்து அனுப்பியிருந்தார்.ஆனால் அவருக்கு மீண்டும் ஒரு மின்னஞ்சல் வந்தது அதில் தற்சமயம் தாய்லாந்திற்கான ஒழுங்குகளை எங்களால் செய்யமுடியாமல் உள்ளது எனவே எங்கள் முகவர் ஒருவர் உங்களை நேரடியாக சந்தித்து நீங்கள் பயணம் செய்யக்கூடிய வகையில் மேலும் சில நாடுகளின் பெயர்ப்பட்டியலையும் காண்பித்து மேலதிக விபரங்களையும் தருவாரென்றும் .தொடர்புகொள்ளும்படி அதில் ஒரு கைத்தொலைபேசி இலக்கத்தினை வழங்கியிருந்தனர்.சியலரும் உடனே அந்த இலக்கங்களை அழுத்தினார். மறுமுனையில் ஒரு பிரெஞ்சுக்காரர் அல்லாத ஒரு ஆணின்குரல். தான்தான் அந்த பயணஏற்பாடுகளை செய்பவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு நகரமத்தியில் ஏதாவது ஒரு சிற்றுண்டிச்சாலையில் சந்திக்கலாமென ஒரு நேரமும் ஒதுக்கப்பட்டு ஒரு சிற்றுண்டிச்சாலையில் சந்தித்தனர்.வந்தவரும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தென்அமெரிக்கா நாடுகளான வெனிசுலா.சிலி.பொரு. கொலம்பியா மற்றும்ஆஜென்ரீனா ஆகிய நாடுகளிற்கே தற்சமயம் ஒழுங்குகள் செய்யமுடியுமென்றும் அந்த நாடுகளின் விபரங்கள் சில படங்கள் என்று காடடியபடியே கதைக்கவும்.சிய்லர் ஆஜென்ரீனாவை தெரிவு செய்தார்.

ஆனால் அந்த முகவரோ ஆஜென்ரினாவிற்கு செல்வதற்கு பிறேசில் விமான சேவையிலேயே இடம் இருக்கிறது ஆனால் பிறேசிலில் இருந்து ஆஜென்ரீனாவிற்கான விமானத்திற்காக நீண்ட நேரக்காத்திருப்பு எனவே கொலம்பியாவை தெரிவு செய்யலாம் இங்கிருந்தே நேரடிவிமானத்தில் இலகுவான பயணம்.என்று கதைத்து சிய்லரை அந்த முகவர் சம்மதிக்க வைத்து விட்டார்.பிறகென்ன சில நாட்களில் மீண்டும் சிய்லரை நேரில் அழைத்த அந்த நபர் அவரிற்கான விமானசீட்டும் தயார் என்று கூறி விமானச்சீட்டையும் அவரின் செலவுகளிற்காக ஒரு உறையில் 1000 யுரோ பணத்தையும் கொடுத்து கொலம்பியா போனோ விமான நிலையத்தில் உங்களை எங்கள் முகவர் ஒருவர் வரவேற்று மேலதிக உதவிகளை செய்வாரென்று வழியனுப்பிவைத்தார்.சிய்லரும?? கொலம்பியா போனோ விமானநிலையத்தில் இறங்கியதும் திட்டமிட்டிருந்தபடியே அங்கு ஒரு முகவர் சிய்லரை அழைத்துப்போய் ஒரு விடுதியில் தங்கவைத்து சிய்லரிற்கு ஒருவாரகாலத்திற்கு அவர் சுற்றிப் பார்ப்பதற்காக உதவியாக ஒரு வழிகாட்டியையும் ஏற்பாடு பண்ணிவிட்டு போய் விட்டார்.ஒரு வார காலம் சிய்லரின் பயணம் நன்றாகமுடிந்தது. மீண்டும் பிரான்சிற்கு திரும்பவேண்டிய நாள் வந்தது . கொலம்பியாவில் வரவேற்ற அதே நபரே வழியனுப்பிவைக்க வந்திருந்தார்.ஒரு வாடைகைக்காரில்( taxi ) சிய்லரையும் ஏற்றிக்கொண்டு விமான நிலையம் நோக்கிப் போய்க்கொண்டிருந்த பொழுது ஒரு இடத்தில் அவர்களது வாடைகைக்கார் நின்றுவிட அதில் ஏதோ கோளாறு எனவே வேறொரு வாடைகைக்காரில் போகலாமென இன்னொரு காரில் மாறி விமான நிலையம் வந்தடைந்தனர்.

விமான நிலையத்தின் உள்ளே இடப்பதிவுசெய்யும்( bording ) இடம்வரை சிய்லரின் பொதிகளை கொண்டுவந்து கொடுத்து விட்டு அந்த முகவர் நல்ல பயணமாக அமையட்டும் என்று கூறி விடைபெற்றார். சிய்லரும் தன்னுடைய பொதிகளை பதிவுசெய்து விட்டு தன்னுடைய இருக்கைப் பதிவினைபெற்றுக்கொண்டு புறப்படும் பொழுது ஒரு விமான நிலைய அதிகாரி ஒருவர் வந்து சிய்லரை சில கேள்விகள் கேட்கவேண்டும் ஒரு நிமிடம் ஒத்துழைக்கமுடியுமா எனக் கேட்டுள்ளனர்.சிய்லரும் இது ஏதோ சாதாரண விமான நிலைய சம்பிரதாய விசாரணை என நினைத்து தாராளமாக ஒத்துளைக்கிறென் என்று கூறவும். அவர்கள் விமான நிலையத்தில் இருந்த ஒரு அறைக்கு அழைத்து செல்ல அங்கு கொலம்பிய விமான நிலைய காவல்துறையினரும் சிய்லரின் பயணப்பொதியும் இருந்தது.அங்கிருந்த காவல்துறை அதிகாரி சிய்லரைப்பார்த்து இது உங்கள் பொதிதானே என்று கேட்கவும். சிய்லரும் சாதாரணமாக தன்னுடையதுதான் என ஒத்துக்கொள்ள அவரது பொதியினை காவல்த்துறையினர் திறந்தனர். பொதியை திறந்ததும் செய்லரிற்கு ஆச்சரியம் காரணம் உள்ளே இருந்தவை அவருடைய துணிகள் அல்ல. அதற்கடுத்ததாய் அதிர்ச்சி உள்ளே ஒரு பாசல் அதில் 14 கிலோ நிறையுள்ள கொக்கெயின் போதைமருந்து. சிய்லர் இப்பொழுது போனோ சிறையில் இருக்கிறார். பிரெஞ்சுத் தூதரகம் இவரின் நலன் மற்றும் வழக்குகளை கவனித்து வருகின்றது.ஆனால் பிரான்சில் இது இரண்டாவது சம்பவம். சுமார் மூன்று ஆண்டுகளிற்கு முன்னரும் பாரிஸ் புற நகர்பகுதியில் வசிக்கும் ஒரு மாணவி இதே பாணியில் கொலம்பியாவிற்கு சென்று போதை மருந்துகளுடன் பிடிபட்டு அவர் நேரடிக் குற்றவாளி அல்ல ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்று தெரிந்திருந்தாலும் அவருடைய பயணப்பொதியில் போதை மருந்துகள் இருந்ததற்காக 5 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். எனவே எம்முடைய தமிழ் இளம் சமுதாயமும் காலையும் மாலையும் கணணியிலேயே கடலை போட்டுக்கொண்டு கவிண்டு கிடப்பதால் இதுபோன்ற கணணி விளம்பபரம் மற்றும் விழையாட்டுக்களில் கவனமாக இருக்கவேண்டியே இந்தச் செய்தியை தமிழில் தருகின்றேன் இல்லா விட்டால் களி சாப்பிட்டபடி கம்பி எண்ணப்போறம் எண்டு அடம்பிடிச்சால் உடைனையே கொலம்பியாவிற்கு ஒரு றிக்கற்..எடுங்கோ .............................

பூமாதேவி சிரிக்கிறாள்

4:36 AM, Posted by sathiri, No Comment

பூமாதேவி சிரிக்கிறாள்
ஒரு பேப்பரில்

பூமாதேவி சிரிக்கிறாளா அப்பிடியெண்டால் என்னவெண்டு யோசிக்கிறவைக்கு இப்ப உலகத்திலை நடக்கிற இயற்கை அழிவுகளைத்தான் பூமாதேவி சிரிக்கிறாள் எண்டு எழுதினனான்.சீனாவிலை பூகம்பம் பல்லாயிரம்பேர் மரணம். பர்மாவிலை சூறாவளி இரண்டுலச்சம்பேர் மரணம். அமெரிக்கா கலிபோர்ணியாவிலை காட்டுத்தீ பலநூறுபேர் கருகிக்போச்சினம் எண்டு இந்தமாதம் முழுக்க எல்லா செய்திகளிலையும் பாத்து பாத்து பாதிவாழ்க்கை வெறுத்துப்போச்சுது. அப்ப இன்னமும் பாதி இருக்கிதுதானே எண்டு கேக்கக்கூடாது. அது எங்கடை இனத்தின்ரை இழப்பை பாத்து அந்தப் பாதியும் ஏற்கனவே வெறுத்துப் போச்சுது. அதுதான் மொத்தமாய் வெறுத்துப்போச்சுதே பிறகேன் எங்களை வெறுப்பேத்திறாயெண்டு கேக்கிறவைக்கு......அதுதான் என்ரை நோக்கமே யான்பெற்ற இன்பம் பக்கத்து வீட்டுக்காரனும் பெறவேண்டும் எண்டிறதுதான் என்ரை விருப்பம்


..அதாலை இனி விசயத்துக்கு வாறன். இந்த சுனாமி வந்தால்பிறகு உலகத்தின்ரை வழைமையான காலநிலையிலை பெரிய மாற்றங்கள். இவனுக்கென்ன விசரோ மாறி மாறி வாறதுக்கு பேர்தானே காலநிலையெண்டு வியாக்கியானம் கதைக்கக்கூடாது. காலநிலை மாறி மாறித்தான் வாறது ஆனால் ஒரே சீராய்மாறும். இப்ப எப்பிடியெண்டால் போன வருசம் கோடை தொடங்க முதலே ஜரோப்பா எல்லாம் கெழுத்திற வெய்யில். பூமாதேவி சூடாயிட்டாள் அதாலை அவளை குளிர வைக்கவேணுமெண்டு குட்டி குட்டி தாடி வைச்ச பெரிய பெரிய விஞ்ஞானிமாரெல்லாம் ஒரு இடத்திலை சேர்ந்து காலாட்டினபடி கதைச்சுப்பேசி ஒரு அறிக்கையும் விட்டவை. ஆனால் இந்தவருசம் பாத்தால்நான் ஜரோப்பாவிலை பூமாதேவி மட்டுமில்லை எங்களுக்கும் உச்சிகுளிர்ந்து தடிமன்வாற அளவுக்கு மாசி மாசக் கடைசி மட்டும் பனி கொட்டித் தள்ளிச்சிது.ஆனால் இப்ப ஆனி மாதம்.பிரான்சிலை நான் இருக்கிற நீஸ் எண்டிற கடற்கரை நகரத்திலை சாதாரணமாய் கோர வெய்யில் மண்டையை பிளக்கத்தொடங்கியிருக்கும். சனமெல்லாம் வெக்கை தாங்கமுடியாமல் கடலுக்குள்ளையும் கடற்கரையிலையும் படுத்திருக்க வேண்டிய காலம். ஆனால் இந்தவருசம் நிலைமை தலைகீழ்....;

இரண்டு கிழைமையாய் ஒரே மழையும் குளிருமாய் இருக்கு.என்ரை முதலாளியும் ஒவ்வொரு வருசமும் கோடை தொடங்க. கடற்கரையிலை உள்ள தன்ரை உணவுவிடுதியை திறந்து அதைக்கவனிக்க என்னை அனுப்பிறது வழக்கம். அப்பிடித்தான் இந்தவருசமும் வந்து கடையைத்திறந்து போட்டு காவலிருக்க வெறும் கடற்கரைகாத்துத்தான் கடையுக்கை வருகிது. ஒரு சனத்தையும் காணேல்லை. இண்டைக்கு காத்தாலை கொஞ்சம் வெய்யில் வாறமாதிரி இருந்திச்சிது சனமும் கொஞ்சம் கரையிலை ஊலாவத்தொங்கிச்சிது. இந்த வெள்ளைக்காரருக்கு ஒரு பழக்கம் கொஞ்சம் வெய்யிலைக்கண்டால் காணும் உடைனை கடற்கரையிலை ஓடியந்து உடம்பிலை கிறீமை பூசிப்போட்டு படுத்திடுவாங்கள். என்ணெண்டால் சண்பாத்தெடுத்து எங்கடை பிறவுண் கலருக்கு வாறதுக்காம்.வெள்ளையள் என்ரை நிறத்தை பாத்து நீ குடுத்து வைச்சனியெண்டு பெருமூச்சு விடுவாங்கள். அதுவும் வெள்ளைக்காரியள்....சீ....வேண்டாம
் அங்காலை எழுதமாட்டன் பிறகு பேப்பரிலை என்ரை கதை வந்தஉடைனையே வீட்டிலை என்ரைகதை கந்தலாயிடும்.அதாலை விசயத்துக்கு வாறன் இண்டைக்கும் இப்பிடித்தான் கொஞ்சமாவது வியாபாரம் நடக்குமெண்டு கடற்கரையிலை கதிரை மேசையெல்லாத்தையும் அடுக்கச் சொல்லிப்போட்டு அண்டைக்கு என்ன சாப்பாடு செய்யிறது எண்டு குசினிக்காரரோடை கதைச்சுக்கொண்டு நிக்க திடீரெண்டு பெரிய அலையள் அடிக்கதொடங்கிச்சிது.

அங்கை காவலுக்கு நிண்ட முதலுதவிப்படை சிவப்பு கொடியை ஏத்திப்போட்டு எல்லாரையும் கடற்கரையை விட்டு வெளியாலை வரச்சொல்லி விசிலடிச்சுக்கொண்டிருக்க. சனங்களும் அவசரமாய் துண்டைக்காணேல்லை துணியைக்காணேல்லையெண்டு கடற்கரையை விட்டு ஓடத்தொடங்கிட்டினம். இந்தப் பழமொழி சிலநேரம் இந்த இடத்துக்கு பொருந்தாது ஏணெண்டால் எங்கடை கடற்கரையிலை ஒருதரும் ஒரு துண்டு துணியொண்டும் இல்லாமல்தான் படுத்துக்கிடக்கிறவை. ஆண்களோ பெண்களோ கீழை உள்ளாடை கட்டாயம் போட்டிருக்கவேணுமெண்டு சட்டம் போட்டிருக்கிறபடியாலை இடுப்பிலை றிபன் சைசிலை ஒரு துணிஏதாவது ஒட்டியிருப்பினம்.மேலை ஒண்டும் கிடையாது. என்னைப்பாத்து குடுத்து வைச்ச ஆளய்யா எண்டு உங்கடை மனசுக்குள்ளை மணியடிக்கிற சத்தம் கேக்கிது. ஆனால் எனக்கென்னவோ உதுகளை பாத்துப் பாத்து அலுத்தே போச்சுது. சரி அங்காலை அலையடிக்கிது இதுக்குள்ளை இது வேறையா???? நானும் அடுக்கின கதிரையளை தூக்கிறதுக்கிடையிலை ஒரு நாலைஞ்சு கதிரை அலை கடலிலை ஆடியசைஞ்சு போய்க்கொண்டிந்திச்சிது.

பிறகென்ன எல்லாத்தையும் அடிச்சு மூடிப்போட்டு மற்ற வேலைகாரரையும் வந்தவழியைப்பாத்து போகச்சொல்லிப்போட்டு. அடுத்ததாய் முதலாளிக்கு போனடிச்சு நிலைமையை சொல்லவேணுமெல்லோ ?? அதாலை என்ரை குரலையும் சோகச்செய்தி சொல்லுற நிலைமைக்கு கஸ்ரப்பட்டு மாத்தி ஒருமாதிரி அண்டையான் நிலைமையை ஒரு நேரடி வர்ணனையைபோல சொல்லி கடல் இழுத்துக்கொண்டு போன கதிரையளுக்கும் கண்ணீரஞ்சலி செலுத்திப்போட்டு. முதலாளியிட்டை வாங்கிற சம்பளத்துக்கு ஏதாவது வேலை செய்ய வேணுமெல்லோ அதுதான் இதை எழுதிறன். இதை எழுதேக்குள்ளைதான் யோசிச்சன் என்னதான் விஞ்ஞாமெண்டிறாங்கள் கண்டு பிடிப்பு எண்டிறாங்கள் இயற்கையின் மாற்றத்தை கட்டுப்படுத்த இன்னமும் மனிசராலை முடியேல்லை. பயந்து ஓடத்தான் முடியிது. இப்பிடித்தான் நான் படிச்சுக்கொண்டிருந்த காலத்திலை ஒரு சம்பவம். 1979 ம் ஆண்டு ஸ்கைலாப் எண்டொரு செயலிழந்த விண்வெளிக்கலமெண்டு பூமியை நோக்கி வந்துகொண்டிருந்தது.

அதுவும் இலங்கை இல்லாட்டி இந்தியாவிலைதான் விழப்போகுதெண்டும் விழுகிற இடத்திலை பெரிய பாதிப்பு வருமெண்டும் செய்தியளும் வெளியாகிக்கொண்டிருந்த நேரம். அந்த நேரம் இந்த விண்கலங்கள் இல்லாட்டி இதுபற்றின விஞ்ஞான அறிவுகள் எஙகடை சனத்திட்டை பெரியளவிலை இருக்காத காலகட்டம்;. அப்ப எங்கடை ஊரிலை உள்ளவையெல்லாம் ஸ்கைலாப் விழுந்தால் உலகம் அழிஞ்சிடுமாம் எண்டும் சிலபேர்.. இல்லை உலகத்திலை பாதி அழிஞ்சிடுமாம் எண்டும். சிலபேர் சிறீலங்காவும் இந்தியாவும்தான் அழியுமாம் எண்டும் ஆளாளுக்கு பயப்பிடுறமாதிரி கதை சொல்லிக் கொண்டு திரிஞ்சாங்கள். ஆனால் அதுபற்றின செய்தியளும் தொடர்ச்சியாய் ஊடகங்களிலை வந்துகொண்டிருந்தாலும் வதந்திகளைத்தான் சனம் அதிகமாய் நம்பிச்சினம். சரி உண்மை என்னவெண்டு படிப்பிக்கிற விஞ்ஞான வாத்தியாரிட்டை விளக்கம் கேட்டம். அது ஒரு 79 தொன் நிறையுள்ள விண்கலம். விழுற இடத்திலை தண்ணிவாற அளவு பெரிய பள்ளம் வரலாம் அது விழுற இடத்தைபொறுத்து சேதம் இருக்கும். அதேநேரம் அதிலை இருந்து ஏதாவது இரசாயனக் கதிர்வீச்சுகள் வெளியாலை வந்தால் அது பாதிக்கும் எண்டு விளக்கமும் தந்தார். எங்களுக்கு அந்த நேரம் நெல்லுக்கதிர் மட்டும்தான் தெரியும் இரசாயனக் கதிருகளைப்பற்றி ஒண்டும் தெரியாது.

ஆனால் விளக்கம் சொன்ன வாத்தியார் விஞ்ஞானத்தோடை சமயமும் படிப்பிக்கிறவர் அதலை ஸ்கைலாப் எங்கடை ஊருக்குள்ளை விழக்கூடாதெண்டு பிள்ளையாருக்கு ஒரு நேத்தியும் வையுங்கோடா பெடியள் எண்டிட்டு போட்டார்.இந்தப் பரபரப்பிலை ஒருநாள் " இன்றிரவு ஸ்கைலாப் பூமியை வந்தடையும் ஆனால் அதனை இந்து சமூத்திரப் பிராந்தியத்தில் விழ வைக்க முடியுமென்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் " என்று இலங்கை வானொலி அறிவிச்சிது. இந்த நாசமாய் போன விஞ்ஞானியளாலைதானே இவ்வளவு பிரச்சனையெண்டு நினைச்சபடி பிள்ளையாருக்கு நேத்தியும் வைச்சிட்டு தொடர்ச்சியாய் இலங்கை வானெலியிலை ஸ்கைலாப் பற்றி அடிக்கடி போய்க்கொண்டிருந்த விசேட செய்திகளை கேட்டுக்கொண்டிருந்தன்.அண்டை༢r />??்கு ஊர்சனங்களும் ஏதோ முனியடிச்ச மாதிரி முழுசிக் கொண்டுதான் திரிஞ்சவை.(முனியடிச்சு நீ பாத்திருக்கிறியா எண்டு கேக்கக்கூடாது) அண்டிரவு ஊர்ச்சனங்கள் எல்லாருமே றேடியோக்கு பக்கத்திலை இருந்து ஸ்கைலாப் விழுகிற செய்தியளை கேட்டுக் கெண்டிருக்க ஒரு எட்டுமணியளவிலை ஊருக்குள்ளை திடீரெண்டு பெரிசாய் நெருப்பு பத்தி எரியத் தொங்கிட்டுது.

அக்கம் பக்கத்து சனங்கள் எல்லாம் ஜயோ ஸ்கைலாப் விழுந்திட்டுது அதுவும் எங்கடை ஊருக்குள்ளை விழுந்திட்டு ஊர் அழியப்போகுது பிள்ளையாரே காப்பாத்து எண்டு அலறினபடி வீடுகளை விட்டு ஓடத்தொடங்க. நானும் பயத்திலை என்ன செய்யிறதெண்டு தெரியாமல் நாலைஞ்சு தேவாரத்தை கலந்து றீ மிக்ஸ் பண்ணி சொன்னபடி நிக்க றோட்டிலை சிலபேர் நெருப்பு எங்கடை ஊரிலை இருந்த பிரபல அரசியல் வாதியின்ரை வீட்டு காணிக்கள்ளை இருந்துதான் வருகிது ஸ்கைலாப் அவரின்ரை காணிக்குள்ளைதான் விழுந்திட்டுது எண்டு சொல்லிச்சினம்.இப்பிடி அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருக்க வெளியாலை இருந்து வீட்டை ஓடியந்த அண்ணன் சொன்னான் ஒருத்தரும்பயப்பிடாதையுங்கோ அது ஸ்லாப் இல்லை வேறை ஏதோ எரியிது போய் றேடியோவை கேழுங்கோ ஸ்கைலாப் இன்னும் விழேல்லை எண்டு சொல்லத்தான் எங்கடை வீட்டுக்காரர் எல்லாரும் திரும்ப வீட்டுக்குள்ளை ஓடிவந்து றேடியோவை கேட்டால் ஸ்கைலாப் இன்னமும் இந்து சமூத்திரத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது.கொஞ்ச நேரத்தாலைதான் விசயம் தெரிஞ்சது.

79 களிலை ஆயுதப் போராட்டம் தொடங்கியிருந்த காலம் ஊரிலை பொலிஸ்காரர் இல்லாட்டி இலங்கையரசாங்கத்துக்கு வால்பிடிக்கிறவைக்கு இளைஞர்கள் தாக்குதல் நடத்த தொடங்கியிருந்த நேரம். அதுமாதிரித்தான் எங்கடை ஊரிலை அந்த அரசியல்வாதியும் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின்ரை முக்கியமான ஒருத்தர். அவருக்கு ஏதாவது செய்யவேணும் எண்டு நினைச்ச என்ரை அண்ணணும் அவரின்ரை சினேதங்களும் சேந்து ஸ்கைலாப் விழுறதை சாட்டாய் வைச்சு அவரின்ரை பெரிய வளவுக்கு வேலியடைக்க பறிச்சு வைச்சிருந்த பனையோலையளை கொழுத்தியிருக்கினம். அது எங்கடை ஊர்காரரையும் பயப்பிடுத்தி என்னையும் தேவாரத்தை றீ மிக்ஸ் பண்ண வைச்சிட்டுது. கடற்கரையிலை தொடங்கி ஸ்கைலாப்பிலை வந்து காவேலையை கொழுத்தி கதையை முடிச்சிட்டான் . பாவி முதல்லை உன்ரை கதையை முடிக்கவேணும் எண்டு திட்டினபடியே இருங்கள் அடுத்த பேப்பரில் சந்திக்கிறேன் நன்றி.

பெரியாருக்கு அரோகரா

9:24 AM, Posted by sathiri, No Comment


நாடகத்தினை கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்http://www.tamilnews24.com/twr/audio/sathiri/avalam14.smil


அன்புள்ள கறுப்பி நாயே

8:18 AM, Posted by sathiri, 2 Comments


தொடர்ந்து என்ரை கதையையே எழுதிக் கொண்டு வாறதாலை இந்தமுறை ஒரு நாய்க்கதை எழுதப்போறன்.எல்லாம் ஒண்டுதான் எண்டு முணுமுணுக்காமல் படியுங்கோ ஏணெண்டால் இது 80 களிலை ஊரிலை நான் வளர்த்த நாயின்ரை கதைதான். நாங்கள் வளர்த்த நாய் வயசு போய் செத்துப்போயிருந்த நேரம் என்ரை நண்பன் இருள்அழகனின்ரை வீட்டு நாய் நாலைஞ்சு குட்டிபோட்டிருந்தது.நான் அதிலை ஒரு நரைநிற கடுவன் ஒண்டையும் கறுப்பு பெட்டைக்குட்டி ஒண்டையும் தூக்கிக் கொண்டு வந்திட்டன்.இப்ப அதுகளுக்கு பேர் வைக்க வேணுமெல்லோ??.வீட்டிலை ஆளாளுக்கு ஒவ்வொரு பெயரை சொல்லிச்சினம். அதே நேரம் என்ரை தங்கச்சி.. நாயளின்ரை நிறத்தையே பெயராவைப்பம் எண்டிட்டு நரையனுக்கு பிறவ்ணி எண்டும் கறுப்பு குட்டிக்கு பிளக்கி எண்டும் வைப்பம் எண்டாள்.அவளின்ரை யோசினை எனக்கு பிடிச்சிருந்தாலும் நாங்கள் ஆர் தமிழரல்லோ அதாலை எனக்கு இங்கிலிசிலை பேர் வைக்கிறது பிடிக்கேல்லை அதை அப்பிடியே தமிழிலையே நரையன் எண்டும் கறுப்பி எண்டும் பேர் வைச்சு பக்கத்து வீடு இருள்அழகனின்ரை வீடு எண்டதாலை தாய் நாய் தேடிவந்து குட்டியை கவ்விக்கொண்டு போகாமல் இருக்க அதுளை எங்கடை வீட்டு தண்ணித்தொட்டிக்குள்ளை வைச்சு பால்குடுத்து வளத்தன்.இரண்டும் நல்லா வளந்து சாப்பிட தொடங்கத்தான் நரையனுக்கு ஏதோ ஒரு வருத்தம் பிடிச்சிட்டுது.என்னத்தை சாப்பிட்டாலும் மெலிஞ்படிதான் இருந்திச்சிது.

 ஆனால் கறுப்பி மினுமினுவெண்டு கொழுத்து வளந்துகொண்டிருந்தது. நரையனுக்கு சாப்பாடு பால் எல்லாம் கூடுதலாய்குடுத்தும் பாத்தன் ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. அந்தநேரம் நரையனை அமெரிக்காவுக்கு கொண்டுபோய் வைத்தியம் பாக்கிற அளவுக்கு என்னட்டை வசதி இல்லாததாலை பக்கத்திலை சண்டிலிப்பாயிலை இருந்த அரசாங்க மிருக வைத்திரிட்டை கொண்டு போய் காட்டினன்.அங்கை சுமணா எண்டு எனக்கு தெரிஞ்ச அக்கா ஒராள்தான் வைத்தியராய் இருந்தவா.

அவாவும் நரையனை பிடிச்சுப்பாத்திட்டு சாப்பாட்டோடை கலந்து குடு எண்டுசில விற்றமின் குளிசையளை எழுதித்தந்து விட்டார். நானும் அந்த விற்மின் குழிசையளையும் வாங்கி குடுத்தும் பாத்தன் ஒரு மாற்றமும் இல்லை.ஆனால் நரையனுக்கு எந்த நேரமும் சாப்பாடு தேவைப்பட்டது. சாப்பாட்டோடை யாரையாவது கண்டாலே காணும் உடைனை அவதிப்பட்டு அவைக்கு மேலை பாய்ஞ்சு பறிச்சுப்போடும். ஒருக்கால் சோறு போடப்போன அம்மாவை சோறு போடமுதலே அவதிப்பட்டு சோத்தோடை சேத்து அம்மாவின்ரை கையையும் கடிச்சுப்போட்டுது. அதுமட்டுமில்லை சாப்பாட்டுக்காக பக்கத்து வீடுகளுக்குள்ளையும் நுளையத் தொடங்க நரையனை எந்த நேரமும் கட்டிப்போட்டிட்டு சாப்பாட்டை தட்டிலை போட்டு தூர நிண்டு தட்டை தள்ளிவிட வேண்டிய நிலைமைக்கு வந்திட்டுது. ஆனால் அது எந்த நேரமும் சாப்பாட்டுக்கு அவதிப்படுறதாலை அதுக்கு அவதி எண்டிற பட்டத்தை குடுத்துஎல்லாரும் அவதி நரையன் எண்டு கூப்பிடத் தொடங்கிட்டினம்.சாப்பாடு போட்டு அலுத்துப்போன அம்மாவோ என்னட்டை" டேய் இந்த நாயைக் கட்டி சாப்பாடு போட்டநேரம் ஒரு யானையை கட்டிசாப்பாடு போட்டிருக்கலாம் பேசாமல் எங்கையாவது கொண்டு போய் விட்டிட்டுவாடா "எண்டு சொன்னாலும் எனக்கு நரையனை விடமனசு வரேல்லை.

ஆனால் நரையனுக்கோ வலை ஆட்டக்கூட பலமில்லாமல் மெலிஞ்சு போய்விட்டது.அதை திருப்பவும் தூக்கிக் கொண்டு மிருகவைத்தியர் சுமணாக்காவிட்டை போனன்.அவாவும் நரையனைப்பாத்திட்டு அம்மா சொன்மாதிரியே எங்கையாவது கொண்டுபோய் விடு எண்டு சொல்லவும் எனக்கு வந்த கோபத்திலை அவாவைப் பாத்து " நீங்கள் உண்மையா மிருகவைத்தியர் தானோ இல்லாட்டி கொழும்பிலை போய் கோழி வளப்புப் பற்றி படிச்சுப்போட்டு இஞ்சைவந்து மிருக வைத்தியர் எண்டுசொல்லிக் கொண்டு திரியிறீங்களோ எண்டு கேட்டிட்டன்.அவாவும் கோவத்தோடை தம்பி இந்த வருத்தத்துக்கு யாழ்ப்பாணத்திலை மருந்துவசதி இல்லை கொழும்பிலைதான் அதுவும் ஸ்பெசலாய் சொல்லி எடுப்பிக்கவேணும் வேணுமெண்டால் மருந்து ஊசிமருந்துகளின்ரை பேரை எழுதித்தாறன் கொழும்பிலை போய் வாங்கிக் கொண்டு வா. நான் அந்த ஊசியளை போட்டு விடுறன் எண்டு சொல்லி ஒரு கடுதாசியிலை விறுவிறெண்டு கொஞ்ச மருந்துகளின்ரை பேரை கிறுக்கி கையிலை தந்துபோட்டு இனி உன்ரை நாயோடை இஞ்சை வாறதெண்டால் இந்த மருந்துகளோடை வா இல்லாட்டி இந்தப் பக்கம் வராதை எண்டு சொல்லி அனுப்பி "இல்லை" கலைச்சு விட்டிட்டா.அந்தநேரம் மனுசருக்கு வருத்தம் வந்தாலே விக்சை தடவிப்போட்டு கொத்தமல்லியை அவிச்சு குடிச்சுப்போட்டு போத்து மூடிக்கொண்டு படுத்திடுவினம்.இதுக்கை நான் என்ரை நாய் நரையனுக்கு கொழும்பிலை இருந்து மருந்து எடுத்து ஊசி போட்டு இதெல்லாம் நடக்கிற காரியமோ ?? எண்டு நினைச்சபடி வீட்டை போறதுக்கு சண்டிலிப்பாய் சந்தியை கடக்கேக்குள்ளைதான் அவரின்ரை ஞாபகம் வந்திச்சுது.

அவர்தான் சண்டிலிப்பாய் சீரணி நாகம்மாள்(நாகபூசணியம்மன்) கோயிலடியிலை இருக்கிற சாமியார்.இவரைப் பற்றி ஒரு தனிப் பதிவே எழுதலாம் ஆனால் இப்ப அவரைப் பற்றின கொஞ்ச விளக்கத்தோடை கதையை தொடருறன். இவர் குள்ளமாய் பெரிய வண்டியோடை இடுப்பிலை காவி. நடு மண்டையிலை அள்ளிமுடிஞ்ச சடாமுடி . நாலைஞ்சு ஊருத்திராச்சம் மாலை சிவப்புக் கண்களோடை சின்னப்பிள்ளையள் பாத்தால் பயப்பிடுற ஒரு தோற்றம். இவர் கன காலம் இமயமலையிலை போய் தவமிருந்திட்டு வந்தவர் எண்டு ஊரிலை கதைப்பினம். ஆனால் உண்மையிலை இமய மலையிலைதான் போய் தவமிருந்தாரோ இல்லாட்டி திருகோணமலையிலை போய் கொஞ்சக்காலம் ஆரும் சொந்தக் காரர் வீட்டிலை நிண்டிட்டு வந்தாரோ எண்டு உண்மை பொய் தெரியாது.ஆனால் எங்களுக்கு சின்னிலை ஏதாவது காச்சல் வருத்தம் வந்தால் அப்பா எங்களை அந்தச்சாமியாரிட்டை கூட்டிக்கொண்டு போனல் அவரும் விபூதியை மந்திரிச்சு பூசிப்போட்டு கையிலை ஒரு நூலும் கட்டிவிடுவார்.அதுக்காக மருந்து எடுக்காமல் விடுறதில்லை மருந்தும் எடுக்கிறதுதான். எங்களை மாதிரி ஊரிலையும் கனபேர் அவரிலை நம்பிக்கை.சரி சாமியாராவது என்ரை நரையனை கைவிட மாட்டாரெண்டு நினைச்சு அவரிட்டைப்போய் நரையனைக் காட்டி விசயத்தை சொன்னன் அவரும் யோசிச்சுப்போட்டு கொஞ்ச விபூதியை எடுத்து ஏதோ முணுமுணுத்துப் போட்டு நரையனுக்கு மேலை எறிஞ்சுபோட்டு போ எல்லாம் சரி வருமெண்டு அனுப்பிவிட்டார்.நானும் வீட்டை போய் நரையனை சங்கிலியிலை கட்டாமல் அப்பிடியே விட்டிட்டன். அடுத்தநாள் காத்தாலை நரையன் வீட்டு மரவள்ளித் தோட்டத்துக்கை செத்துப்போய் கிடந்திச்சிது.கவலையோடை அதை எடுத்து வளவுக்குள்ளை தாட்டுப்போட்டு அந்த இடத்திலை ஒரு நெல்லி மரத்தையும் நட்டுட்டுப்போட்டு அதோடை நரையனின்ரை கதையும் முடிஞ்சு போச்சுது. என்னடா கறுப்பி நாயே எண்டு தலைப்பை போட்டிட்டு நரையனைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறன் எண்டுதானே நினைக்கிறீங்கள். இனி கறுப்பிக்கு வாறன்.

கறுப்பிதான் வீட்டிலை செல்லப் பிள்ளை அதோடை நல்ல புத்திசாலி நாங்கள் கதைக்கிறதெல்லாம் பெரும்பாலும் அதுக்கு விளங்கும் சொல்லுறதை செய்யும்.நாங்கள் பள்ளிக் கூடம் போகேக்கை சைக்கிளுக்கு பின்னாலையே பிரதான வீதி வரைக்கும் ஓடியந்து நாங்கள் மறையும் வரைக்கும் அங்கை நிண்டு பாத்திட்டு வீட்டை ஓடிடும். ஆனால் ஒருநாள் கூட பிரதான வீதிக்கு வராது.அதே மாதிரி மத்தியானம் நாங்கள் பள்ளியாலை வீட்டை வாற நேரத்துக்கு சரியாய் ஒழுங்கை முகப்பிலை வந்து காவல் நிக்கும்.எங்களிலை உள்ள பாசம் மட்டுமில்லை பள்ளிக் கூடத்திலை தாற விசுக்கோத்திலை நாங்கள் கறுப்பிக்கெண்டு கொஞ்சம் கொண்டு வருவம். கறுப்பிக்கு அதை அந்தரத்திலை எறிய அது பாய்ஞ்சு பிடிச்சு சாப்பிட்டபடி பின்னாலை ஓடிவரும்.நான் சாப்பிட்டிட்டு முத்தத்திலை இருக்கிற வேப்பமரத்துக்குக் கீழை உள்ள வாங்கிலை கொஞ்சநேரம் ஒரு குட்டி நித்திரை போடுவன் கறுப்பியும் வந்து வாங்குக்கு கீழை படுத்திடும் நான் நித்திரையான நேரம் வீட்டுக்காரரைத் தவிர வேறை ஒருத்தரும் எனக்குக் கிட்ட வரமுடியாது.

அப்பிடி யாரும் வந்தால் பல்லைக் காட்டி உறுமி ஒரு எச்சரிக்கை விடும் அதுக்கு மேலையும் கிட்ட வந்தால் அவ்வளவுதான் அது எங்கை பாஞ்சு எதைக்கவ்வும் எண்டு தெரியாது.நான் வீட்டை விட்டு வெளியேறி இருந்த காலங்களிலை வீட்டுக்கு கடிதம் எழுதேக்குள்ளை கறுப்பியை வடிவாய் கவனியுங்கோ எண்டு ஒரு வசனம் எழுதத் தவறுறேல்லை. அதே மாதிரி நான் வீட்டை போற நாட்களிலை என்னைக் கண்டதும் கறுப்பி எனக்கு மேலை பாய்ஞ்சு எனக்கு நோகாமல் செல்லமாய் உடம்பெல்லாம் கடிச்சு விழையாடும்.இந்தியனாமி காலத்திலை எங்கடை ஊரிலை சண்டை நடக்கேக்குள்ளை பலஊர்நாய்கள் வெடி மற்றது குண்டுச் சத்தத்துக்கு திக்குத் திசை தெரியாமல் ஊரை விட்டே ஓடியிருந்ததுகள். எங்கடை வீட்டிலையும் எல்லாரும் அகதிகளாய் கோயில்லை போய் இருந்த நேரமும் கறுப்பி வீட்டிலையேதான் படுத்திருந்தது. பிறகு இந்தியனாமி எல்லா இடமும் பிடிச்சால் பிறகு எங்கடை ஊரிலை ஒருத்தன் இந்தியனாமியோடை சேந்து புலிகளுக்கு  ஆதரவு குடுத்த மற்றது போராளிகளின்ரை வீட்டுக்காரர் எல்லாருக்கும் பிரச்சனையள் குடுத்துக்கொண்டிருந்தான் . அவன் ஒருநாள்.. அம்மாவும் தங்கச்சியும் தனிய வீட்டிலை இருந்தநேரம் ஆமியொடை எங்கடை வீட்டையும் வந்து ஆயுதம் இருக்கு செக் பண்ணப்போறம் எண்டிட்டு தங்கச்சியின்ரை கையைப் பிடிச்சு இழுக்க இதைப் பார்த்த கறுப்பி பாய்ஞ்சு அவனைக்கடிச்சு குதற தொடங்க இந்தியனாமி ஒருத்தன் துவக்காலை கறுப்பிக்கு அடிக்க. இன்னொரு ஆமியின்ரை துவக்கு குண்டுகள் கறுப்பியை துளைக்க கறுப்பி சுருண்டு விழுந்ததாம். அதோடை அவங்கள் போட்டாங்கள் எண்டு சில நாளுக்கு வீட்டை போன என்னட்டை தங்கச்சி அழுதபடி சொல்லிப்போட்டு வளவுக்குள்ளை ஒரு இடத்தைக் காட்டி இஞ்சைதான் கறுப்பியை தாட்டிட்டு அதிலை ஒரு மாங்கண்டு நட்டிருக்கிறன் எண்டாள்.

சிலநாளுக்குப் பிறகு அந்த அவனை யாரோ மனிப்பாய் அந்தோனியார் கோயிலுக்கு பக்கத்திலை  வைச்சு சுட்டு. அவன் செத்துப்போனான் எண்டு ஊர்சனம் கதைச்சிச்சினம்.கறுப்பியின் ஆத்மாவேதான் அவனைப்பழிவாங்கியிருக்க வேண்டும் எண்டு நினைச்சன். இந்த வருசமும் அந்த மாமரம் நல்லாய் சிலுத்து காச்சிருக்கு ஆனால் சாப்பிடத்தான் நீங்கள் இலலையெண்டு அம்மா சொன்னா .