Navigation


RSS : Articles / Comments


தர்மகுமாரியின் நாட்டியம்.

1:41 PM, Posted by sathiri, No Comment


தர்மகுமாரியின் நாட்டியம்.

அண்மையில் தமிழகத்தினையும் தமிழீழத்தின் கிழக்குப்பகுதிகளையும் தாக்கலாமென்று அச்சப்பட்ட நிசா என்று பெயர் சூட்டப்பட்ட புயல் வலுவிழந்து வங்கக்கடலைத்தாண்டிய செய்தியறிந்து கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்ட அதேவேளை.தமிழகத்தில் தர்மகுமாரி(வயது 58) என்பவர் புதிதாய் ஒரு புயலைக் கிளப்பிவிடவே. தமிழகத்துடன் தமிழீழம் மட்டுமல்ல உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அத்தனைபேரும் கொஞ்சம் அதிர்ந்துபோய்விட்டிருந்தனர்.தமிழகத்திலிருந்து வெளியாகும் குமுதம் ரிப்போட்டரில் இந்தியாவின் இடதுசாரிக்கட்சித் தோழர் மகேந்திரன் மீது தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றினார் என்றும்.

மற்றும் பாலியல் ரீதியான குற்றச் சாட்டுக்களை தெரிவித்த தர்மகுமாரியின் செவ்வியைப்படித்த எனக்கு. ஏற்கனவே இவரைப்பற்றி நான் படித்த சர்ச்சையான ஒரு செய்தி நினைவிற்குவரவே இவரைப்பற்றிய விபரங்களை சேகரிக்கும் தேடலில் இறங்கினேன். தோடலைத் தொடங்கியதுமே குப்பைத் தொட்டியை கிழறத்தொடங்கியது போல் அவரது விபரங்களும் குப்பைகளாகவே வந்துகொண்டிருந்தது. இவர் யாழில் கொக்குவில் கிராமத்தினைச் சேர்ந்தவர்கள்.தந்தை பெயர் முத்துக்குமாரசுவாமி. இவர் முன்னைநாள் புகையிரதத் திணைக்களத்தில் வேலை செய்தவர்.இவரிற்கு ஏழு பெண்களும் மூன்று ஆண்களுமாக பத்துப்பிள்ளைகள்.அவர்களின் பெயர்கள். ஆண்கள் . ஆனந்தகுமார்.சிவகுமார்.ஸ்கந்தகுமார்.(கண்ணன்)பெண்கள். ஜெயகுமாரி.சாந்தகுமாரி. விஜயகுமாரி. அருண்குமாரி. சந்திரகுமாரி.சுகந்தகுமாரி.தர்மகுமாரி. இப்பொழுது இவர்களில்.ஆனந்தகுமார் என்பவர்மட்டும் ஒரு சிங்களப்பெண்ணை மணமுடித்து தென்னாபிரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.மற்றையவர்கள் அனைவருமே இங்கிலாந்தில் வசித்து வருகின்றார்கள்.தர்மகுமாரியும் நாகலிங்கம் என்கிற கணக்காளரை திருமணம் செய்து கொண்டு தென்னாபிரிக்காவில் குடியேறியிருந்தார்

. இருவரிற்கும்.தர்சினி.சிவாந்தினி.பிரியாந்தினி. என்று மூன்று பெண்பிள்ளைகளும் பிறந்தது. இவர்களும் பிள்ளைகளை தமிழர் கலை கலாச்சார முறைப்படியும் கல்விகற்கவைப்பதென முடிவெடுத்து நாகலிங்ககம் தர்மகுமாரியையும் பிள்ளைகளையும் 96ம் ஆண்டு தமிழ்நாட்டில் கொண்டு போய் விட்டு விட்டு மாதா மாதம் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்.இப்படிஇருக்கும் பொழுதுதான் இவர்களின் குடும்ப நண்பரான வைத்தியர் ஒருவருடன் தர்மகுமாரிக்கு(வயது 58) முதற்தொடர்பு ஏற்பட்டு அது கணவரிற்கும் தெரியவரவே இவர்கள் இருவரிற்குமிடையில் பிரச்சனைகள் தொடங்கிவிட்டிருந்தது.இந்த வைத்தியர் இப்பொழுது கனடாவில் ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.இப்படியே தொர்ச்சியாக தமிழ் நாட்டில் இருந்த இடங்களிலெல்லாம் பல ஆண்களுடன் தொடர்புகள் பிரச்சனைகள் என்று பட்டியல் நீளுகின்றது.இவர் கொஞ்சம் வசதியான திருமணமான ஆண்களையே குறிவைத்து தொடர்புகளை ஏற்படுத்திவிட்டு பின்னர் அவர்களது மனைவிகளிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டி கறப்பதை கறந்து விடுவது. இவரது பாணியாக இருந்திருக்கிறது.அதுமட்டுமல்ல இவரால் குற்றம் சாட்டப்பட்ட மகேந்திரனின் ஊரான தஞ்சாவூரை சேர்ந்த ஒருவருடனும் தொடர்பு ஏற்பட்டு .

அந்த நபரின் மனைவி மகேந்திரன் அவர்களிடமே பிரச்னையை தீர்த்து வைக்கும்படி போன விடயமும் நடந்துள்ளது. இவையெல்லாம் இப்படியிருக்க தர்மகுமாரியால் குற்றம் சாட்டப்பட்டவரான இடதுசாரித்தோழர் மகேந்திரனுடன் தொடர்பு கொண்டு விபரங்களைகேட்டபொழுது அவர் சொன்னார் தர்மகுமாரி தனக்குத் தெரிந்த ஒருவரின் சிபாரிசுடன் என்னைச் சந்தித்திருந்தார் அவரது பிள்ளைகளின் படிப்பிற்காக பாடசாலையில் சேர்ப்பதற்காகவும் தங்குமிடவசதிகளிற்காகவும் சில உதவிகளை செய்து கொடுத்தேன் அவ்வளவுதான். அதன் பின்னர் இரண்டாயிரமாம் ஆண்டு தான் ஒரு வீடு வாங்க விரும்புவதாகவும் அதற்குரிய பணம் தன்னிடம் இருப்பதாகவும் தனக்கு விசாபிரச்சனை இருப்பதாலும் வெளிநாட்டவர் என்பதாலும் வீடு வாங்குவதில் சிக்கல் இருப்பதால் தனக்கு நம்பிக்கையான ஒருவரை அறிமுகம் செய்து உதவும்படி கேட்டிருந்தார்.

நான் அரசியல் பொதுவாழ்வில் இருப்பதால் இது போன்ற பணவிவகாரங்களில் தலையிடவிரும்பாமல் மறுத்துவிட்டேன்.அதன்பின்னர் 2001 ம் ஆண்டின் பின்னர் நான் அவரை சந்திக்கவேயில்லையென்றார்.தர்மகுமாரியின் தந்தையான முத்துக்குமாரசுவாமி அவர்கள் தற்சமயம் இலண்டனில் ஒரு முதியோர்காப்பகத்தில் இருக்கின்றார். நடந்த சம்பவங்கள் தொடர்பாக அவரது கருத்தினைக் கேட்கலாமென தொடர்பு கொண்ட பொழுது அவர் தான் இப்பொழுது எதுவும் சொல்லக்கூடிய நிலையில் இல்லையென தெரிவித்து விட்டார்.அதே போல அவரது சகோதரர்களும் தங்களிற்கும் தர்மகுமாரிக்கும் இப்பொழுது எவ்வித தொடர்புகளும் கிடையாது எனவே எதுவும் சொல்ல விரும்பவில்லையென தெரிவித்து விட்டனர்.ஆனால் தர்மகுமாரி தென்னாபிரிக்காவில் தன்னுடைய முத்த மகளான தர்சினியின் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு தென்னாபிக்காவின் இலங்கைத் தூதரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்த பொழுது தென்னாபிரிக்காவில் பல தமிழ் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து இலங்கைத் தூதருக்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் நடத்தியிருந்தனர்.தென்னாபிரிக்காவிலும் இந்தியாவிலும் இவர் இலங்கைத்தூதரகத்துடன் நல்லதொரு தொடர்பினை கொண்டிருந்தவராக உள்ளார்.

எனவேதான் தமிழ்நாட்டில் இன்று ஈழத்தமிழருக்கு ஆதரவு என்பது பெரும் தீயாகப்பரவி தமிழ் நாடு மட்டுமல்ல இந்தியாவின் மற்றைய மானிலங்களிலும் தொற்றிக் கொண்டிருக்கும் இந்த வேளை அந்த ஆதரவுத் தீயை பற்றவைப்பதற்காக முதல் தீக்குச்சியை உரசிப் போட்வர்களின் முக்கியமான ஒருவராகக் கருதப்படும் இடதுசாரித் தோழர் மகேந்திரன் மீது திடீரென இப்படியொரு பாலியல் பணமோசடி என்று ஒரு நாட்டியத்தினை தர்மகுமாரி அரங்கேற்றியிருப்பதன் பின்னணியில் இலங்கைத் தூதரகத்தின் கைகள் தர்மகுமாரியை தழுவிக் கொடுத்திருக்கும் என்பது சந்தேகமில்லை. அது மட்டுமில்லை இலங்கைத் தூதரகத்துடன்: இணைந்து தன்னுடைய கட்சியில் உள்வர்களும் இதற்கு உடந்தை என்கிறார் மகேந்திரன்.எல்லாம் சரி இப்படியொரு பாலியல் குற்றச் சாட்டென்று எழுந்திருக்கின்றதே வழைமை போல ஏதாவதொரு இந்து மடம் அல்லது சாமியாரின் பெயர் அடிபடவில்லையே என்கிற குறையையும் தர்மகுமாரியே தீர்த்து வைத்துள்ளார்.இவர் அண்மைக்காலமாக கோயமுத்தூர் அருகே பேரூரில் சாந்தலிங்க சுவாமிகள் என்பரால் நடாத்தப்படும் பேரூர் மடத்திலேயே தங்கியிருந்து தஞ்சைப் பல்கலைகழகத்தில் அஞ்சல்வழி சைவ சித்தாந்தம் படித்ததாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் விசா பிரச்சனையை தீர்ப்பதற்காகவே இவர் தஞ்சைப் பல்கலைகழகத்தில் சேர்ந்ததாககூறப்படுகின்றது.அந்த மடத்திலும் பல ஆண்தொடர்புகளால் பிரச்சனைகள் எழுந்துள்ளதாக அந்த மடத்தின் உறுப்பினர்கள் சொல்கிறார்கள்.தன்னுடைய மகளிற்கு பரதநாட்டியம் பழக்குவதற்காக தமிழநாடு சென்றதாக தமிழ்நாட்டு பத்திரிகைகளிற்கு பேட்டியளித்த தர்மகுமாரி தானே ஒரு பாலியல் நாட்டியத்தினை அரங்கேற்றி விட்டு தற்சமயம் தென்னாபிரிக்காவிற்கு திரும்பிச் சென்று அங்கு உள்ள ஒரு இந்து மடத்தில் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No Comment