Thursday, February 26, 2009

தற்கொடை தந்த தமிழகத்து உறவுகளிற்காக

தற்கொடை தந்த தமிழகத்து உறவுகளின் ஆன்மா சாந்தியடைய வேண்டி ஜெர்மனியில் சிறப்பு வழிபாடும் திருப்பலியும் ..

பெரிதாய்
பார்ப்பதற்கு அழுத்தி பார்க்கவும்

புலிகளும் அரசும் பேசவேண்டும் அமெரிக்கா அவசரக்கோரிக்கை

இலங்கையில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரி ரொபேர்ட் உட் கூறுகையில், அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்துவதற்கு இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இலங்கையில் நிலவும் மனித அவல நிலைதான் எங்களுடைய முக்கியமான கவலையாகும். போர் காரணமாக உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த மக்களின் நிலைமை எங்களை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது. மோதல்களில் சிக்கிக் கொள்ளும் அப்பாவி மக்கள் குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

இனப்பிரச்சனைக்கு இராணுவ ரீதியாக முடிவு காணப்பட முடியாது. இதற்கு அரசியல் ரீதியாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு அமெரிக்கா சமரச முயற்சியில் ஈடுபடுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நாங்கள் அந்தப் பணிக்காக கோரப்பட வில்லை.

அதே சமயம் இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும். போரை நிறுத்தி அரசியல் தீர்வு காண்பதற்கான பணிகளை இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் தான் மேற்கொள்ள வேண்டும் என்றார்.


நன்றி வீரகேசரி

ராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய கடிதம்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இந்தியா 10.10.87 ம் ஆண்டு யுத்தப் பிரகடனம் செய்ததை தெடர்ந்து அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு பிரபாகரனால் எழுதப்பட்ட முதலாவது கடிதம்...


தலைமைச்செயலகம்
தமிழீழ விடுதலைப்புலிகள்
யாழ்ப்பாணம்.
12.10.1987


கனம் ராஜீவ்காந்தி அவர்கள்
இந்தியப்பிரதமர்
புதுடில்லி

கனம் பிரதம மந்திரி அவர்களே
யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள மிகவும் ஆபத்தான பாரதூரமான நிலைமையை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
இந்திய அமைதி காக்கும் படைகள் விடுதலைப்புலிகள் மீது போர்ப்பிரகடனம் செய்து இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. தற்பாதுகாப்பிற்காகவும் எமது போராளிகளையும் பொதுமக்களையும் காப்பதற்காக நாம் இந்தியா மற்றும் சிறீலங்கா இராணுவங்களை நாம் எதிர்த்து போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.

மக்கள் ஆதரவு பெற்ற விடுதலை இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கம் மீது இந்திய அரசு யுத்தம் தொடுத்துள்ளதால் எமது மக்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளனர்.விடுதலைப்புலிகள் இயக்கம் மீது பிரகடனப் படுத்தப்பட்டுள்ள இந்தப்போரானது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படைகளையே மீறுவதாக அமைந்துள்ளது. எமது மக்களின் கருத்தும் அதுவாகும்.

இந்தியப் படைகளும் சிறீலங்கா இராணுவமும் கூட்டாக சேர்ந்து மேற்கொண்டுள்ள இந்த இராணுவ நடவடிக்கை மூலம் பொதுமக்களிற்கு பெரும் உயிர்ச்சசேதம் ஏற்படும் பேராபத்து உருவாகியுள்ளது.இதனால் எழும் பாரதூரமான விளைவுகளிற்கு இந்திய அரசே பொறுப்பேற்கவேண்டும்.

இந்திய மக்கள் மீது எமக்குள்ள நல்லறவின் அடிப்ப்டையிலும் சமாதானமும் நல்லெண்ணமும் பேணப்படும் அவசியத்தை முன்னிட்டும் இராணுவ நடவடிக்கைகளை உடன் கைவிடும்படி இந்திய அமைதிப்படையை பணிக்குமாறு நான் உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வே.பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப்புலிகள்

--------------------------------------------------------------------------------------------------
அன்ரன் பாலசிங்கம் எழுதிய போரும் சமாதானமும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. அன்றும் புலிகளின் வேண்டு கோள்களை ராஜீவ் காந்தி எவ்வளவு உதாசீனம் செய்தாரென்பதனை காலத்தின் தேவை கருதி இங்கு இணைக்கிறேன் . மேலும் கடிதங்கள் இணைக்கப்படும்.

Sunday, February 22, 2009

தமிழகத்தில் முட்டை வியாபாரிகளிற்கும் கோழிகளிற்கும் தடை

தமிழகத்தில் முட்டை வியாபாரிகளிற்கும் கோழிகளிற்கும் தடை

அண்மையில் சென்னை உயர் நீதி மன்றத்தில் வைத்து முட்டையடி வாங்கிய பெரு மதிப்பிறகுரிய சு..சுவாமி அவர்கள்.தமிழகத்தில் முட்டை வியாபாரிகளிற்கும் கோழிகளிற்கும் தடை கொண்டுவரவேண்டும் என்று ஒரு மனுவை அதே சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக அறியமுடிகிறது. அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது. அண்மையில் என்மீது நடாத்தப்பட்ட முட்டையடித்தாக்குதல் உலகத்திலேயே மிக மோசமான வன்முறைத்தாக்குதலாகும். இப்படியான தாக்குதல்களை புலிகளும் அவர்களிடம் பணம்வாங்குபவர்களினாலும்தான் செய்யமுடியும்.எனவே என்மீது நடாத்தப்பட்ட மனிதாபிமானமற்ற மேசமான வன்முறைத்தாக்குதலை ஜ.நா சபையும் ஜரோப்பிய யூனியனும் இன்னமும் கண்டிக்காதது எனக்கு பெரும் கவலையளிக்கின்றது.அதே நேரம் இந்த மாபெரும் சதியை புலிகளும் அவர்களிற்கு ஆதரவான தமிழகத்து முட்டை வியாபாரிகளும் அதற்கு உடந்தையாக கோழிகளும் இணைந்தே திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் எழுத்துவடிவிலும் சி.டி யாகவும் சிக்கியுள்ளது. கோழிகளும் வேண்டுமென்றே கூழ் முட்டையிட்ட சதியும் அம்பலமாகியுள்ளது. சமயம் வரும்பொழுது நான் அதனை வெளியிடுவேன்.இவாளுகளெல்லாம்(முட்டை வியாபாரிகள்) அவாளுக்கு (புலிகளிற்கு ) விலைபோய் விட்டது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத கருணாநிதியின் அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டுமென கேட்டுகொள்வதோடு தமிழகத்தில் இனி கோழிகள் முட்டையிடக்கூடாதென தடையுத்தரவு வழங்கவேண்டுமென்றும் நீதிபதியை கேட்டுக்கொள்கிறேன்.

கற்பனைதான் ஆனாலும் சுப்பிரமணிய சுவாமி இப்படியொரு மனுவை தாக்கல் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஈழத்தில் சகோதர யுத்தம்

ஈழத்தில் சகோதர யுத்தம்
பாகம் ஒன்று.

ஒவ்வொரு தடைவையும் ஈழத்தமிழர் பிரச்னையின் பொழுது தன்னுடைய இயலாமையை மறைத்துக்கொள்ள கருணாநிதியால் பாவிக்கப்படும் ஒரு வசனம் சகோதர யுத்தம் என்கிற வசனம்தான். அதாவது விடுதலைப்புலிகள் செய்த சதோதர யுத்தத்தினால்தான் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைமைக்கு காரணம் என்பது போலவே அவரது கருத்துக்கள் அமைந்திருக்கும் அது மட்டுமல்ல இன்னமும் தமிழகத்து தமிழர்களும் ஏன் தமிழகத்தின் பிரபல பத்திகைகள் கூட புலிகள்தான் வேண்டுமென்றே மற்றைய சகோதர இயக்கங்களை அழித்து விட்டனர் என்கிற ஒரு தவறான கருத்தையே கொண்டிருப்பதையும் காணலாம். சகோதர யுத்தம்உண்மையில் என்ன நடந்தது என்பதனை தமிழகத்து உறவுகளிற்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் இளையசமூதாயத்தினரிற்கும் முடிந்தளவு புரிய வைப்பதே என்னுடைய இந்தக்கட்டுரையாகும்.

சகோதர யுத்தம் பற்றி விரிவாக எழுதுவதானால் பல பக்கங்கள் தேவை எனவே சுருக்கமாக இரண்டு பாகங்களாக எழுத முயற்சிக்கிறேன். புலிகள் அமைப்பிலிருந்து முரண்பாடுகள் காரணமாக அதன் மத்திய குழுவிலிருந்து உமா மகேஸ்வரன் வெளியேற்றப்பட்டதும்.பின்னர் அவர் புதியபாதை என்னும் குழுவின் தலைவர் சுந்தரத்துடன் இணைந்து புளொட்(P.L.O.T )என்னும் அமைப்பினை தொடங்கி அதற்கு தலைவரான பின்னர். தமிழ்நாடு பாண்டிபஜாரில் பிரபாகரனிற்கும் உமா மகேஸ்வரனிற்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமே அன்றைய காலகட்டத்தில் பெரியதொரு சகோதர யுத்தமாகக் கருதப்பட்டது.

ஆனால் அந்தச் சம்பவம்தான் இந்திய மத்திய அரசிற்கு ஈழவிடுதலைப்போராட்டஇயக்கங்களுடனான தொடர்புகள் அமையவும் காரணமாயிருந்தது.ஆனால் காலப்போக்கில் புளொட் அமைப்பில் ஏற்பட்ட உள் முரண்பாடுகளினால் அந்தஇயக்கதினர் தாங்களே ஒருவரையொருவர் அடித்துக்கொண்டும் அழித்துக்கொண்டும் இறுதியாய் புளொட் உறுப்பனராலேயே அதன் தலைவர் உமாமகேஸ்வரனும் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் கருணாநிதியும் வேறுசிலரும் சகோதர யுத்தம் என்று சொல்லிக்கொண்டிருப்பது ரெலோ(T.E.L.O )இயக்கத்தினை புலிகள் தடைசெய்ததனையே . இந்தியா உதவியும் பயிற்சியும் கொடுத்து வளர்த்த இயக்கங்களில் புலிகள் இந்தியா எமக்கு தமிழீழம் பெற்றுத்தரும் என்று கண்மூடித்தனமாக நம்பவில்லை அதேபோல இந்தியாவும் புலிகள் தாங்கள் சொல்வதெற்க்கெல்லாம் பிரபாகரன் தலையாட்டுவார் என்று நம்பவுமில்லை.இதனால் புலிகளிற்கும் இந்திய உளவுத்துறைக்கும் ஆரம்பகாலங்களிலிருந்தே ஒருவித பனிப்போர் நடந்துகொண்டேயிருந்தது.அதே நேரம் பிரபாகரளை தங்கள் தலையாட்டிப்பொம்மையாக்கியே தீருவது என்று கங்கணம்கட்டிக்கொண்டு இந்தியாவிலிருந்த புலிகளின் பயிற்சி முகாம்களை பலவந்தமாக மூடியும்.ஆயுதங்களை பறித்தும். புலிகளின் தொலைத்தொடர்பு கருவிகளை பறித்தும்.அன்ரன் பலசிங்கத்தை நாடு கடத்தியும் தொடர்ந்து பலவித நெருக்கடிகளை கொடுத்துவந்தனர்.

ஆனால் றோ அதிகாரிகள் எள் என்றதும் எண்ணெயாகி அவர்கள் உச்சந்தலையிலே உருகிவழிந்த ரெலோ தலைவரிற்கு வேண்டிய வசதிகளை றோ அதிகாரிகள் செய்தது மட்டுமல்ல . எண்பதுகளில் தமிழ்சினிமாவில் உச்சத்திலிருந்த இரண்டு பிரபல நடிகைகளையும் கொடுத்து மாமாவேலையும் செய்தனர். அதில் ஒருவர் இப்பொழுதும் சின்னத்திரையில் வில்லியாக வந்து பயமுறுத்திக்கொண்டிருக்கிறார். மற்றவர் காணாமல் போய்விட்டார்.இப்படி சிறீசபாரத்தினத்தை தங்கள் பிடிக்குள்ளேயே வைத்திருந்துகொண்டு தமிழீழத்திலும் புலிகள் அமைப்பிற்கு றோ அமைப்பு நெருக்கடிகளை கொடுக்கத்தொடங்கியது.இப்படி இந்தியாவின் செல்லப்பிள்ளையாய் மாறிவிட்ட சிறீசபாரத்தினத்தின் போக்கு பிடிக்காமல் ரெலோ அமைப்பின் முக்கிய இராணுவத்தளபதியாக இருந்த தாஸ் என்பவர் இயக்கத்திலிருந்து பிரிந்து போய்விடுவதென முடிவெடுத்தபொழுது அவரையும் அவரது முக்கியமான நண்பர்கள் 5 பேரையும் பேச்சுவார்த்தை நடத்தலாம் வாருங்களென்று அழைத்து யாழ் வைத்திய சாலையில் வைத்து சுட்டுக்கொன்றார்கள். அதே நேரம் புலிகளை எப்படியாவது வம்புச்சண்டைக்கிழுத்து புலிகளை அழித்துவிடும் றோவின் திட்டத்திற்கு சரியான சந்தர்ப்பம் பார்த்து ரெலோவும் ஈழத்தில் தாவடிப்பகுதியில் தமிழ்பாராழுமன்ற உறுப்பினர்களாகிய ஆலால சுந்தரம். மற்றும் தர்மலிங்கம் ஆகியோரை சுட்டுகொன்று விட்டு அதனை புலிகள் செய்தார்கள் என்று பிரச்சராப்படுத்தியது.

தொடச்சியாய் பலகொள்ளைகளை நடத்திக்கொண்டிருந்த (முக்கியமாக வாகனக்கொள்ளைகள்) ரெலோ உறுப்பினர்களிற்கு இடைஞ்சலாயிருந்த இரவு நேரக்காவல் கடைமையில் ரோந்து வரும் புலிகள் அமைப்பினரை கடத்துவது. துன்புறுத்துவது என்று தொடருந்துகொண்டிருந்ததபொழுது அவர்கள் எதிர்பார்த்த சர்ந்தர்ப்பமும் வந்தது. .......86 ம் ஆண்டு புலிகளிற்கும் இலங்கைக் கடற்படைக்கும் நடந்த ஒரு மோதலில் புலிகளின் தளபதியாகவிருந்த அருணாவும் வேறு சிலரும் இறந்து போய்விட்ட செய்தியறிந்து (அருணா அந்தத் தாக்குதலில் இறந்திருக்கவில்லையன்பது பின்னர்தெரியவந்தது) பொதுமக்கள் யாழ்குடாவெங்கும் வாழை தோரணம் கட்டி இறந்த போராளிகளின் உருவப்படங்களிற்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தார்கள். அருணாவின் ஊரான கல்வியங்காடுதான் சிறீசபாரத்தினத்தின் ஊருமாகும்.

கல்வியங்காட்டிலும் மக்கள் தோரணங்கள் கட்டி அருணாவின் உருவப்படங்களை வைந்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தவேளை அங்கு வந்த ரெலோ உறுப்பினர்கள் தோரணங்களை அறுத்தெறிந்து உருவப்படங்களையும் கிழித்தெறிந்து பொது மக்களையும் தாக்கியபொழுது அந்த இடத்திற்கு சென்று அவற்றை தடுக்க முயன்ற புலிஉறுப்பினர்களான முரளி என்பவரையும் மூத்த உறுப்பினரான பசீர்காக்காவையும் பலவந்தமாய் அடித்து இழுத்துச்சென்று தங்கள் முகாமில் அடைத்துவிட்டார்கள். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுது சிறீசபாரத்தினம் அதேகல்வியங்காட்டிலுள்ள முகாமில்தான் இருந்தார். முரளியையும் காக்காவையும் அடைத்து வைத்து விட்டு அவர்களை மீட்க எப்படியும் புலிகள் தாக்குதலிற்கு தயாராக வருவார்கள் அவர்கள் மீது தாக்குதலை தொங்கி அப்படியே தொடர்ச்சியாய் புலிகளை அழித்துவிடலாமென்கிற திட்டத்துடன் ரெலோ அமைப்பினர் தாக்குதலிற்கு தயாரான நிலையிலேயே இருந்தனர். ஊர் நிமைமைகள் அன்றைய புலிகளின் யாழ் மாவட்ட தளபதியான கிட்டு உடனடியாக தலைமைக்கு தெரியப்படுத்தபட்டு முரளியையும் காக்காவையும் ஒரு தாக்குல் மூலம் மீட்கலாமா அல்லது பேச்சுவார்த்தைமூலம் தீர்க்கலாமா என ஆலோசனை கேட்டிருந்தார்.

பிரபாகரனும் நிலைமைய சிக்கலாக்கமால் பேசித்தீர்க்கலாமென்கிற முடிவுடன் பேச்சு வார்த்தைக்கு கிட்டுவை அனுப்பாமல் அப்பொழுது தமிழ்நாட்டின் மதுரை மாவட்ட புலிகளின் அலவலகத்திலிருந்த மூத்த உறுப்பினரும் சிறீசபாரத்தினத்திற்கு நன்கு பழக்கமான லிங்கத்தினை சிறீசபாரத்தினத்துடன் பேசுவதற்காக அனுப்பிவைத்தார். காரணம் கிட்டுகொஞ்சம் கோபக்காரர்.இப்படியான சந்தர்ப்பங்களில் அமைதியாகப்பேசமாட்டார். ஆனால் லிங்கம் எப்படிப்பட்ட சிக்கலான நிலைமையிலும் கோபப்படாமல் அமைதியாக பேசிகோபத்திலிருப்பவர்களையும் அமைதியாக்கி விடுவார். அதனால்தான் அவரிற்கு புலிகளின் மதுரை அலுவலகத்தினை நிருவகிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அவசரமாக மாதகலில் வந்திறங்கிய லிங்கம் மேலும் இருவரை அழைத்தகொண்டு ஆயுதங்கள் எதுவுமின்றி கல்வியங்காட்டில் சிறீசபாரத்தினம் இருந்த முகாமிற்கு சென்று அங்கு தன்னை அறிமுகப்படுத்தி சிறீயுடன் கதைக்கவேண்டும் எனகேட்டதுமே லிங்கத்தை நோக்கி துப்பாக்கி சடசடத்தது. லிங்கம் அந்தவிடத்திலேயே இறந்துபோக அவருடன் கூடசென்றவர்களால் லிங்கம் கொல்லப்பட்ட செய்தி கிட்டுவிற்கு அறிவிக்கப்பட்டது.

அதற்கு மேலும் ரெலோவுடன் பேசிப்பயனில்லையென்று தெரிந்துகொண்ட புலிகள் அதிரடியாக ரெலோவின்மீது தாக்குதலைத் தொடுத்து அவர்களால் அடைத்து வைக்கப்பட்டிருந்த முரளியையும் பசீர் காக்காவையும் மீட்டு இறுதியாய் சிறீசபாரத்தினமும் கொல்லப்பட்டதுடன் ரெலோவின் ஆதிக்கம் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இங்கு புலிகள் அமைப்பினரைப்போலவே ஆட்பலத்திலும் ஆயுதபலத்திலும் சமமாய் இருந்தவர்கள் எனக்கருதப்பட்ட ரெலோ அமைப்பு புலிகளால் சுலபமாக அழிக்கபட்டதற்கு என்ன காரணங்களென பார்த்தால்.

ரெலோ வினால் கொல்லப்பட்ட லிங்கம் அம்மான்

1)ரெலோ அமைப்பு தனக்கு பின்புலத்தில் இந்தியா இருக்கின்றதென்கிற தைரியத்தில் தன்னுடைய சக்தியை அளவுக்கு மீறியதாக கற்பனை செய்து கொண்டதனாலும் . அவர்களது அடாவடித்தனங்கள் அதிகரித்தமையாலும்.உதாரணமாக யாழ்குடாநாட்டில் ஒரு வீட்டிலாவது ஒரு வாகனம் உருப்படியாய் நிற்க முடியாது முக்கியமாய் மோட்டார்சைக்கிள்கள். அவற்றை உடனேயே கடத்திக்கொண்டு போய்விடுவார்கள் அவற்றை தமிழ்நாடுவரை கொண்டு சென்று அங்கு பெரும்பணக்காரர்களிற்கு விற்றுவிடுவார்கள். அடுத்தது தொடர்ச்சியாய் பல கொள்ளைகள். இதனால் மக்கள் மனங்களிலிருந்து அன்னியப்படத்தொடங்கினார்கள்.

2) புலிகளுடனான மோதலை வழிநடத்த சரியான அனுபவமுள்ள ஒரு வழிகாட்டி இல்லாததும் ஒருகாரணம். அவர்களிடமிருந்த தாக்குதல்களை வழிநடத்துவதில் சிறந்தவர்களான தாஸ் மற்றும் காளியையும் அவர்களே யாழ்வைத்திய சாலையில் வைத்து சுட்டுக்கொன்று தாங்களே தங்கள் தலையில் மண்ணள்ளிப்போட்டுக்கொண்டனர்.அது மட்டுமல்ல அதந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் நடாத்திய ஊர்வலத்திலும் பகிரங்கமாக கண்மூடித்தனமாக சுட்டதிலும் ஒருவர் இறந்து போனது மக்களிற்கு ரெலோ மீதான கோபத்தினை அதிகரித்திருந்தது.

3) புலிகளிடம் இருந்த அளவு ஆயுத ஆட்பலம் இருந்திருந்தாலும் ரெலோ அமைப்பிடம் தொலைத்தொடர்பு வசதிகள் இருக்கவில்லை . அதனால் அவர்களால் உடனுக்குடன் தலைமைக்கும் மற்றவர்களிற்குமிடையினாலான செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியாமல் பல குழுக்களாக தனித்துப்போயிருந்தனர்.

4)புலிகளுடனான சண்டை தொடங்கியதும் அதனை முன்னின்று வழிநடத்தாமல் தான் எப்படியாவது தப்பித்து தமிழ்நாட்டிற்கு ஓடிவிட்டால் போதுமென்கிற நினைப்பில் சிறீ சபாரத்தினம் தலைமறைவாகியதும் மற்றைய ரெலோ அமைப்பினரிற்கு ஒரு சலிப்பை கொடுத்தது. அவர்களும் தாங்களும் ஆயுதங்களை போட்டு விட்டு எப்படியாவது தப்பியோடி விடலாமென முடிவெடுத்து ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் புளொட் இயக்க முகாம்களில் ஓடி ஒழிந்து கொண்டது.

5) எல்லாவற்றிற்கும் மேலாக அன்றைய காலகட்டத்தில் புலிகளும் ரெலோவும் இராணுவ ரீதியில் சமபலத்துடன் இருந்ததாகவே பலரும் எண்ணினர். ஆனால் ரொலோ அமைப்போ தாங்கள் புலிகளைவிட பலமாக இருப்பதாகவே எண்ணினர். அவர்களின் இந்த எண்ணம்தான் புலிகளை தொடர்ச்சியாய் வலுச்சண்டைக்கு இழுக்கக் காரணமாயிருந்தது. ஆனால் புலிகள் ஆரம்பம் முதற்கொண்டு இன்று வரை தங்கள் முழுமையான ஆயுத இராணுவபலம் இதுதானென்று வெளியில் காட்டிக்கொண்டதேயில்லை. அதுமட்டுமல்ல புலிகளின் யுத்தஅனுபவங்களும் அவர்களின் ஆன்ம பலமும்தான் வழைமைபோல ரெலோவுடனான யுத்தத்திலும் வெற்றிபெறவைத்தது.

எனவே எடுத்ததற்கெல்லாம் மகாபாரதத்திலும் பகவத்கீதையிலும் உதாரணம் காட்டுபவர்கள்.புலிகளின் இந்த யுத்தத்தையும் சகோதர யுத்தமல்ல தர்மயுத்தம் என்று ஏற்க மறுப்பது பகிடியாய்தான் இருக்கின்றது.அன்று நடந்ததும் தர்மத்திற்கான யுத்தம்தான்.


அடுத்ததாக ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கதுடனான மோதலை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.....

சென்னை..காவல்த்துறையின் காட்டு மிராண்டித்தனம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் பத்திக்கைகளுக்கு விடுத்துள்ள அறிக்கை.
சென்னை உயர் நிதி மன்றத்தில் காவல் துறையினர் நுழைந்து காட்டுமிரண்டித்தனமானத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். இது வரை தமிழக வரலாற்றில் கேட்டறியாதவாறு உயர்நீதி மன்றத்தில், கொலைவெறியுடன் காவல்துறை தாக்குதல் நடத்தியுள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இலங்கை தமிழ் மக்களின் உயிர்காக்கும் போராட்டத்தில் தமிழகம் பெதும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததுதான். இதில் மாநிலம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து, முன்னணியில் நின்று போராடி வரும் பின்னணியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
சுப்பிரமணியசாமியின் மீதான முட்டை வீசிய வழக்கில், கைது செய்வதற்கு நீதிமன்ற வளாகத்திற்கு வந்த சிறப்புக் காவல்துறையிடம் சம்மந்தப்பட்ட வழக்கறிஞர்கள் தாங்களே முன் வந்து கைதான நிலையில் இந்த கொடிய நிகழ்ச்சி நடந்துள்ளது. ஆராய்ந்து பார்த்தால், நடந்துள்ள இந்த தாக்குதல் எதிர்பாராமல் நடந்ததாகத் தெயவில்லை. காவல்துறை தாக்கியதில் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஒருவர் தாக்கப்பட்டதாகத் தெகிறது. வழக்கறிஞர்களின் மண்டை உடைபட்டு ரத்தம் கொட்டுவதை ஊடகங்கள் திரையிட்டு காட்டுகின்றனர். நீதிமன்றத்திற்குள் புகுந்து இந்த தாக்குதலை காவல் துறை நடத்தியுள்ளது. வழக்கறிஞர்கள் பெரும் எண்ணிக்கையில் படுகாயமடைந்துள்ளார்கள். நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்களும் பெண் ஊழியர்களும் காயப்பட்டுள்ளார்கள். 100 க்கும் அதிகமான கார்களும் இரு சக்கர வாகனங்களும் காவல்துறையால் தகர்க்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் இந்த காட்டுமிரண்டிததனமான நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன், காவல்துறையின் மீது உய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்..


Tuesday, February 17, 2009

எல்லாமே புலிகள்தான்....

ஈழத்தில் ஆயுதவிடுதலைப்போர் தொடங்கிய காலத்தில் இலங்கையரசிற்கு எதிரான உணர்ச்சி வேகத்தில் ஈழத்தில் 33 போராட்ட இயக்கங்கள் தொடங்கப்பட்டது. ஆனால் அவை எல்லாமே அன்றைய காகட்டத்தில் இந்தியாவிலும் ஏன் தமிழ் நாட்டிலும் புலிகள் என்றே அழைக்கப்பட்டனர். அதனாலேயோ தமிழகத்தில் புலிகள் அமைப்பு பல சங்கடங்களை சந்தித்தது. அப்படி தொடங்கிய இயக்கங்களின் பெயர்களை எனது நினைவில் வந்தவற்றை இங்கு தருகிறேன்.

1)தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்.( P.L.O.T )தலைவர் உமாமகேஸ்வரன். வறுத்தலைவிளான் யாழ்ப்பாணம்
2)தமிழீழ விடுதலை இயக்கம் (T.E.L.O )தலைவர் சிறீ சபாரத்தினம். கல்வியங்காடு யாழ்ப்பாணம்.
3)ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி '(E.P.R.L.F. )தலைவர் பத்மநாபா .காங்கேசன்துறை யாழ்ப்பாணம்.
4)தமிழீழ விடுதலைப்புலிகள்(L.T.T.E ) தலைவர் பிரபாகரன்.வல்வெட்டித்துறை .யாழ்ப்பாணம்.
5)ஈழமக்கள் புரட்சிகர மாணவர் இயக்கம்( E.R.O.S. ) அமைப்பாளர் இரட்ணசபாபதி. இணுவில் யாழ்ப்பாணம்.

மேலேயுள்ள இயக்கங்கள் தான் ஆரம்பகாலத்தின் முதல் முக்கிய குழுக்களாகவும் இந்தியாவிடம் பயிற்சி மற்றும் உதவிகள் பெற்றதும். மற்றும் வேறு வெளிநாட்டு விடுதலைப்போராட்ட அமைப்புக்களிடம் தொடர்புகளையும் பயிற்சிகளையும் கொண்டிருந்த இயக்கங்களும் ஆகும். அவைகளை 84ம் ஆண்டளவில் உறுப்பினர் தொகைகளை அடிப்படையாக வைத்து வரிசைப்படுத்தியுள்ளேன். இனி மற்றையவை.


6)தமிழீழ இராணுவம்.( T.E.A ) தலைவர். மகேஸ்வரன்.புங்குடுதீவு.யாழ்ப்பாணம்.
7)தமிழீழ விடுதலை இராணுவம்.(T.E.L.A ) தலைவர் ஒபறோய் தேவன். கோண்டாவில்.யாழ்ப்பாணம்.
8)தமழீழ விடுதலை இராணுவம் 7 ( 7.T.E.L.A ) இராஜன். ஊர்பெயர் தெரியாது.யாழ்ப்பாணம்.இது T.E.L.A. இயக்கத்திலிருந்து 7 பேர் பிரிந்து போய் தொடங்கியது.
9)தமிழீழ விடுதலை அமைப்பு.( T.E.L.E )தலைவர்.ஜெகன்.அராலி .யாழ்ப்பாணம்.
10)தமிழீழ தேசிய விடுதலை முன்னணி(N.L.F.T )தலைவர்.விசுவானந்த தேவன். கல்லுவம் .யாழ்ப்பாணம்.
11)மக்கள் தேசிய விடுதலை முன்னணி(P.L.F.T)
12)தமிழர் பேரவை
13) R.A(செம்படை)
14) C.A(நாகபடை)
15)R.E.N.A
16)R.E.L.E
17)T.E.N.A
18)புதியபாதை. .(தலைவர் பெயர் சுந்தரம்.யாழ். மூளாய்)
19)R.E.L.O
20)தீப்பொறி
21)T.E.D.F(தமிழீழ பாதுகாப்புப்படை)
22)T.P.S.O.(தமிழ் மக்கள் பாதுகாப்பு அமைப்பு
23)T.E.E.F.(தமிழீழ கழுகுகள் முன்னணி)
24)T.E.C. (தமிழீழக் கொமாண்டோக்கள்)
25.)E.F.(கழுகுப்படை)
26) S.R.S.F (சமூகப் புரட்சிப்படை)
27) தமிழ் மாணவர் பேரவை . இது 1970 ம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆரம்பத்தில் அரசியல் ரீதியான போராட்டஙகளையே நடாத்தியது. பின்னர் இந்த அமைப்பும் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு ஆயுதப்போராட்டமே தீர்வு என முடிவெடுத்தனர். இதன் அமைப்பாளர்.சத்தியசீலன்.உரும்பிராய் யாழ்ப்பாணம்.

மேலும் ஆறு இயக்கங்களின் பெயர் எனக்கு நினைவில் இல்லை.. யாருக்காவது நினைவிலிருந்தால் தெரிவியுங்கள்.

இனி தமிழ் மற்றும் தமிழீழம் என்கிற பெயர்களை வைத்துக்கொண்டு இலங்கை மற்றும் இந்திய அரசுகளிற்கு தொண்டு செய்வதற்காகவே அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புக்கள்.
1.E.P.D.P........ ஈ.பி.ஆர்.எல்.எவ்..அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற டக்லஸ் தேவானந்தாவினை வைத்து புலிகளிற்கு எதிராக அன்றைய இலங்கை அதிபர் பிரேமதாசாவினால் உருவாக்கப்பட்டது.
2. 3 STAR........இந்தியப்படை இலங்கையில் கால் வைத்ததும். இந்தியாவில் அகதி முகாம்களில் தங்கியிருந்தபுலிகள் தவிர்ந்ந மற்றைய இயக்க உறுப்பினர்களை இணைத்து புலிகளிற்கு எதிராக தொடங்கப்பட்ட முதல் ஒட்டுக்குழு.
3.E.N.D.L.F..........இந்திய அதிகாரிகள் .3 ஸ்ரார் ஆயுதக்குழுவினை விரிவாக்கம் செய்து அதனை அரசியல் கட்சியாக்கி பெயர்மாற்றம் செய்து ஒரு போலியான தேர்தலை நடாத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த அமைப்பு.
4.T.M.V.P. இது இலங்கை இந்திய கூட்டுச்சதியால் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த கருணாவால் தொடங்கப்பட்டது. இப்பொழுது இதற்கு யார் தலைவர் என்பதில் பிரச்சனை. எனவே இதிலிருந்து இன்னொரு ஒட்டுக்குழு உருவானாலும் உருவாகலாம்.

Monday, February 16, 2009

அடிவாங்காமல் தப்பித்தான்..சோ..(மாரி) ராமசாமி


பாஜக மூத்த தலைவரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடியின் புத்தக வெளியீட்டு விழா சென்னை நாரதகான சபாவில் நடந்தது.
குஜராத்தில் நரேந்திரமோடி எழுதிய புத்தகம் தமிழில் ‘கல்வியே கற்பகத்தரு’ என்று மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.இந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு நரேந்திரமோடி, துக்ளக் ஆசிரியர் சோ உட்பட பலரும் வந்திருந்தனர்.

சோ இப்புத்தக வெளியீட்டு விழாவில் பேசும் போது கொஞ்சமும் இவ்விழாவுக்கு சம்பந்தம் இல்லாமல் ஈழப்பிரச்சனை பற்றி பேசினார்.

இலங்கை பிரச்சனையில் தமிழக பிஜேபியினருக்கு புதுப்பாசம் வந்திருக்கிறது. இந்த விசயத்தை பற்றி பேச எனக்கு சரியான இடம் அமையவில்லை. இந்த மேடைதான் அதற்கு சரியான வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இதை பயன்படுத்திக்கொண்டு பேசுகிறேன்.

பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று காஷ்மீர் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் குண்டுகள் வீசி தாக்குகிறது. அதைப்போய் ஏன் குண்டு வீசுகிறீர்கள் என்று கேட்க முடியுமா? அப்படித்தான்...இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை ராணுவம் போரிடுகிறது. அதை நிறுத்துங்கள் என்று சொல்லமுடியாது. எப்படித்தான் சொல்ல முடியும்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இலங்கை பிரச்சனை குறித்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருகிறார். அதே போல் தான் நானும் எனது இந்த கருத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறேன்..

தமிழக பிஜேபியினர்தான் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இல்லை என்று சோ ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்க, தமிழில் பேசு என்று பிஜேபியினர் எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.தொடர்ந்து சோ ஆங்கிலத்திலேயே பேச, புத்தக சம்பந்தமா மட்டும் பேசு, சம்பந்தம் இல்லாம இலங்கை பிரச்சனை பற்றி பேசாதே என்று பிஜேபியினர் எதிர்ப்புக்குரல் கொடுத்துக்கொண்டே இருந்தனர்.

சோ பேச்சை நிறுத்தாமல் நான் இப்போதும் சொல்கிறேன் எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேன்’ என்று பேசினார். கடைசியில் எதிர்ப்புக்குரல் வலுக்கவும், பிஜேபியினர் எழுந்து நின்று கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் நன்றி,வணக்கம் என்று உரையை முடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார்.

இதனால் அரங்கத்தில் பெரும் சலசலப்பு உண்டானது.


நரேந்திர மோடி பேசும் போது சோ பேச்சைப் பற்றியும், அதனால் எழுந்த சலசலப்பு பற்றியும் எதுவும் பேசவில்லை. தனது புத்தகத்தைப் பற்றியும் தனது ஆட்சியின் சாதனைகள் பற்றியும் மட்டும் பேசிவிட்டு அமர்ந்துவிட்டார்.

நன்றி நக்கீரன்

இன்போசிஸ் நாராயணமூர்த்திக்கு


ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி அரசுக்கு தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக பொறுப்பேற்றிருக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்திக்கு எதிராக கண்டனப் போராட்டம்.

நாள்: பிப்ரவரி 17

நேரம்: காலை 7.30 மணி

இடம்: இன்போசிஸ் நிறுவனம் எதிரில், பழைய மகாபலிபுரம் சாலை, சோழிங்கநல்லூர், சென்னை.

தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்களே, தமிழின உணர்வாளர்களே, திரண்டு வாருங்கள்...

Saturday, February 14, 2009

நக்கீரன் மீசையை முறுக்குவாரா???ராஜபக்சவிற்காக மளிப்பாரா??

மிரட்டும் ராஜபக்சே தூதுவருக்கு நக்கீரன் சவால்




கொத்துக் குண்டுகள் வீசப்பட்டு, கொத்துக் கொத்தாகப் பறிக்கப்படுகின்றன ஈழத்தமிழர்களின் உயிர்கள். இலங்கை அரசால் பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்கு நம்பி வந்த ஒருசில தமிழர்களும் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். அங்குள்ள மருத்துவமனைகளிலும் தாக்குதல் நடைபெறுவதை சர்வதேச செஞ்சிலுவை சங்கமே அம்பலப்படுத்தியுள்ளது. ராணுவக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பகுதியில் மருத்துவமனைகள்-தொண்டு நிறுவனங்களின் முகாம்கள் இருந்தாலும் அதனையும் தாக்குவோம் எனக் கொக்கரிக்கிறார் இலங்கை ராணுவத்தின் செயலாளரும் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்சே. அமெரிக்கா- இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர்கள், இந்தியா, நார்வே, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் நாடுகள், ஐ.நா.சபை என அனைத்துத் தரப்பிலிருந்தும் போர் நிறுத்தம் வலியுறுத்தப்பட்டாலும் அத்தனையையும் புறக்கணித்துவிட்டு கொடூர யுத்தத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தமிழர்கள் இன அழிப்புச் செய்யப்படுவதை தடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் தாய்த்தமிழகத்தினர். வரலாற்று வழியாகவும், புவியியல் ரீதியாகவும் தங்களின் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களுக்காக தாய்த்தமிழகத்தினரால் செய்ய முடிந்ததெல்லாம் ஆதரவுக்குரல் எழுப்புவது மட்டும்தான். அந்தக் குரலைப் பதிவுசெய்வது பத்திரி கைகளின் தார்மீக கடமை. தமிழ் மக்களின் இதயத்துடிப்பாக விளங்கும் நக்கீரன் அந்தக் கடமையிலிருந்து இம்மியளவும் விலகாமல் தனது பணியைச் செய்துவருகிறது. அதன் சிறு பகுதிதான் பிப்ரவரி 11 -2009 தேதியிட்ட இதழின் அட்டையில் இடம்பெற்றிருந்த, "ராஜபக்சே நாசமா போவான்-சபிக்கும் தமிழகம்' என்ற செய்திக் கட்டுரை.



சென்னை லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் தமிழக மக்கள் வெளிப்படுத்திய அடிமனதின் குரல்தான் அந்தக் கட்டுரையின் தலைப்பு. ராஜபக்சே தொடர்பாக அவர்கள் வெளிப்படுத்தியுள்ள இன்னும் பல தீவிரமான கருத்துகளை பிரசுரிப்புத்தன்மை கருதித் தவிர்த்திருந்தோம். ராஜபக்சேவை தமிழகம் எப்படி பார்க்கிறது என்பதன் அடையாளமாக அட் டைப்படமும் (காண்க) வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், சென்னையில் உள்ள ஜனநாயக சோஷலிச (!) ஸ்ரீலங்கா குடியரசின் துணை உயர் ஸ்தானிகர் பி.எம். அம்சா நமது நக்கீர னுக்கு ஓர் ஓலை அனுப்பியிருக்கிறார்.

பிப்ரவரி 11 தேதியிடப்பட்ட அந்தக் கடிதத்தில், "அதிமேதகு ராஜபக்சே அவர்களை தரக்குறைவாக உருவகப்படுத்தி பிரசுரித்ததன் மூலம் தங்களுடைய இதழ் இலங்கை மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியது மட்டுமல்லாமல், அவர் வகிக்கும் உயர் பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளது' என தெரிவித்திருப்பதுடன், "இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டுமென்றும், அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் சட்டரீதியாக இவ்விஷயத்தை அணுகப்போவதாகவும்' தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை துணை தூதரகத்தின் உயர் ஸ்தானிகரான அம்சா, இந்திய பத்திரிகை ஒன்றிற்கு விடுத்திருக்கும் மிரட்டலாகவே இந்தக் கடிதம் அமைந்துள்ளது. இருநாடுகளின் நட்புறவுக்கான பணியில் ஈடுபடவேண்டிய துணைத்தூதர், தனது அதிகாரவரம்பை மீறி பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவதும் மிரட்டுவதும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. அதிகாரத்தின் மிரட்டலுக்கு நக்கீரன் ஒருபோதும் பணிந்ததில்லை என்பதே அதன் 21 ஆண்டுகால வரலாறு. துணை தூதரின் மிரட்டல் எமக்கு கால்தூசு. சட்டரீதியான நடவடிக்கை என்கிறாரே, எங்கே வழக் குத் தொடரப் போகிறார்? உள்ளூர் நீதிமன்றத்திலா? உலக நீதிமன்றத் திலா? எங்கே இருந்தாலும் "வழக்கே வா' என வரவேற்கிறது நக்கீரன்.



போரை நிறுத்தச் சொன்ன ஒரே பாவத்திற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனையும் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் மிலிபேண்டையும் விடுதலைப்புலிகள் போல சித்தரித்து இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடந்ததே, அது அவர்களின் பதவிக்கு செய்யப்பட்ட மரியாதையா? அவமரியாதையா? அந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு கொடுத்த சிங்கள அரசை எந்த நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றுவது? எங்கள் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்களை கொன்றொழிக்கும் ராஜபக்சேவின் கழுத்தில் கபால மாலை அணிவிக்காமல் கரன்சி மாலையா அணிவிப்பார்கள் தமிழ் மக்கள்! அவர்களின் உணர்வைத்தான் நக்கீரன் வெளிப்படுத்தியிருக் கிறது.

நாங்கள் வெளியிட்ட செய்தியும் அட்டைப் படமும் ராஜபக்சேவின் பதவிக்கு இழுக்கு என நினைத்தால் ராஜபக் சேவின் அரசாங்கம் வழக்குத் தொடுக்கட் டும். எதிர்கொள் கிறோம். தூதருக்கு ஏன் இந்த மிரட்டல் வேலை? இதே பாணி யில் அவர் யாரை, யாரையெல்லாம் மிரட்டியிருக்கிறார் என்பதை அறிவோம். இப்போது நக்கீரனை நோக்கிப் பாய்ந்திருக்கிறார்.

சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் தனது வரம்புக்குமீறி என்னென்ன செயல்பாடுகளை செய்து வருகிறது, என்னென்ன மாதிரியான ரகசிய வேலைகளையும் கீழ்த்தரமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்பதையெல்லாம் சர்வதேச சமுதாயத்தின் முன் அம்பலப்படுத்து வதற்கு இந்த வழக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றே நக்கீரன் கருதுகிறது. தமிழினத்தைக் கொன்றொழிக்கும் இலங்கை அதிபரை பற்றிய செய்தியை வெளியிட்டதற்காக நக்கீரன் ஒருபோதும் மன்னிப்பு கேட்காது. சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயார் என அறைகூவல் விடுக்கிறோம்.

தூதரா, ஒற்றரா என இனம் பிரிக்க முடியாதவகையில் செயல்பட்டுக்கொண்டி ருக்கும் இலங்கை துணை தூதரகத்தின் உயர் ஸ்தானிகர் அம்சாவின் நடவடிக் கைகள் இந்திய அரசுக்கு எதிராகவும் தமிழினத்திற்கு எதிராகவும் இருப்பதை அரசியல் தலைவர்கள், பொதுநல அமைப் பினர், மனித உரிமை ஆர்வலர்கள், நேர்மை யான பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதே நக்கீரனின் வேண்டுகோளாகும்.

-ஆசிரியர்
நக்கீரன்

Friday, February 13, 2009

ஜெனீவா.ஜ.நா சபை முன்னால் ஒரு தமிழர் தீக்குளித்தார்.

சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலின் முன்பாக திடீரென நேற்று வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இளைஞர் தீக்குளித்துள்ளார்.சம்பவ இடத்துக்கு விரைந்த சுவிஸ் காவல்துறையினர் இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டார் .லண்டனில் இருந்து வந்த இந்த இளைஞரின் பெயர் முருகதாஸ் எனவும் இவரிற்கு ௩௮ வயது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இவர், 4-5 பக்கங்களுக்கு தாயக பிரச்சினை தொடர்பாகவும் .உடனடியாக ஜ.நா சபை இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டும் என்றும். ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தீக்குளித்துள்ளார்.

Thursday, February 12, 2009

ஆயுதங்களை கீழே போட முடியாது.




புலிகளிற்கும் இலங்கையரசிற்கும் நடந்த சமாதான பேச்சு வார்தை கால்த்தின் பொழுது 2002 ம் ஆண்டு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சொன்னதே இன்றைய நிலைமையும்.

Wednesday, February 11, 2009

நீங்கள் பலவீனமான தமிழரா ??இதை பார்க்காதீர்கள்..



நீங்கள் பலவீனமான தமிழரா ??இதை பார்க்காதீர்கள்..



இதுதான் தமிழனின் இன்றை நிலைமை. தமிழகத்து உறவே இனிவரும் தேர்தலிற்கு உன்னை தயார்படுத்திக்கொள்..

Tuesday, February 10, 2009

புலிகளே ஆயுதங்களை கீழே போடுங்கள்.



புலிகளே ஆயுதங்களை கீழே போடுங்கள். போட்டுவிட்டு அரசியல் ரீதியில் போராடுங்கள் என்று இந்தியாவிற்கு பால்க்குடம் தூக்கியுள்ள இலங்கைக்கான முன்னைநாள் சமாதானத்துதுவர் ஏரிக்கொல்கைம் கூறியுள்ளார். அதாவது ஈழத்தமிழரை 1905 ம் அண்டிற்கு திரும்பச்சொல்கிறார். ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டம் 1905 ம் ஆண்டு அரசியல் போராட்டமாக உருவெடுத்து கிட்டத்தட்ட 1983 வரை 78 ஆண்டுகள்வரை தொடர்ந்தது் அதன்பின்னர்தான் முற்று முழுதாக ஆயுதப்போராட்டம் முனைப்புப் பெற்றது.இப்பொழுது மீண்டும் 1905 ம் ஆண்டிற்கு போகச்சொல்கிறார் இவர்.

Sunday, February 08, 2009

மலேசியா.. எரிந்துவிட்ட இன்னொரு உறவு



இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற வலியுறுத்தி மலேசியாவில் இலங்கைத் தமிழர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோரி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.



தமிழ்நாட்டில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத் தைச் சேர்ந்த முத்துக்குமார், பள்ளப் பட்டிரவி, சீர்காழி ரவிச்சந்திரன் ஆகியோர் தீக்குளித்து உயிரிழந்தனர்.

இதே போல மலேசியாவில் வசித்து வந்த இலங்கை தமிழரான ராஜா என்ற 27 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்திருக்கிறார். ராஜாவின் உடலுக்கு அருகே ஒரு பெரிய டைரி, பணப்பை, தீப்பெட்டி, மேலும் ஒரு பை ஆகியவற்றை போலீசார் மீட்டனர். கருகிய நிலையில் உயிரிழந்த ராஜாவின் உடலை சிரம்பான் துவாங்கு ஜபார் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

போலீசார் மீட்ட அவரது டைரியில், நீண்டகடிதம் ஒன்றை அவர் எழுதி வைத்திருக்கிறார். இலங்கையில் பிறந்த நான் பிழைப்பு தேடி மலேசியா வந்தேன். இங்கு எனக்கு நல்லவேலை கிடைத்தது. காலையில் கார் கழுவும் வேலையும், மாலையில் சீன ஓட்டல் ஒன்றிலும் வேலை செய்து வந்தேன். இதன் மூலம் 1200 வெள்ளி (மலேசிய நாணயம்) வருமானம் கிடைத்து வருகிறது.

இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம், உடனடி பேச்சு வார்த்தை ஆகியவற்றை வலியுறுத்தி நான் தீக்குளிக்கிறேன். அப்பாவி தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ அமெரிக்க புதிய அதிபர் ஒபாமா உடனடியாக இலங்கை சென்று போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும். அவருடன் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி, நார்வே சமாதான தூதர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் செல்ல வேண்டும்.

இந்த டைரியை வைகோவிடம் கொடுக்கவும். எனது கோரிக்கைகளை எல்லாம் வைகோ நிறைவேற்ற வேண்டும். இப்படிக்கு ராஜா என்று அந்த டைரியில் அவர் எழுதியிருந்தார்.

உயிரிழந்த ராஜா இரவு நேரத்தில் கோட்டை முனீஸ்வரர் ஆலயத்துக்கு வந்து இலங்கை அரசால் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை சோகமான குரலில் கூறி கவலைபடுவாராம். இதை அந்த பகுதியில் உள்ள மக்கள் கூறி, இறந்த ராஜாவுக்காக அனுதாபப்பட்டனர்.

இலங்கை கடற்படையின் பீரங்கிப் படகு மூழ்கடிக்கப்பட்டுள்ளது



டோறா அதிவேகப் பீரங்கிப் படகு ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 கடற்படையினர் பலியாகியுள்ளனர். தாக்குதலின் போது மற்றொரு டோறா முற்றாகச் சேதமாக்கப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணியளவில் முல்லைத்தீவில் கடற்பரப்பிலிருந்து 52 கடல்மைல் தொலைவில் நின்ற சிறீலங்காக் கடற்படையினரின் சுப்பர் டோறாப் பீரங்கிப் படகே கடற் கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதன்போது பீரங்கிப் படகில் உள்ள 15 கடற்படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்த சமநேரத்தில் மற்றொரு சுப்பர் டோறாப் பீரங்கிப் படகு மீது கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் அப்படகு முற்றாகச் சேதமடைந்துள்ளது.

இன்றைய தாக்குதலில் இரு கடற்கரும்புலிகளும், நான்கு கடற்புலிகளுமாக 6 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

Saturday, February 07, 2009

காந்..தீ..குளிர்காயும் சோனியா




இன்றும் இன்னொரு ரவிச்சந்திரன் என்கிற தமிழகத்து உறவு தன்னை காந்தியத்தின் பெயரால் கரியாக்கிக் கொண்டது.இனியாவது நிறுத்து தமிழா ..நீ கொழுத்திக்கொள்ளப் பிறந்தவனல்ல. இன்னும் எத்தனைபேர்கள்தான் இப்படியே தீக்குளித்துக்கொண்டிருக்கப்போகின்றீர்கள் நீங்கள் உங்களை கொழுத்திய நெருப்பில் டெல்லி குளிர்காய்ந்து கொண்டிருக்கப்போகின்றதே தவிர உங்கள் தீயை அணைக்கப்பேவதில்லை ..ஏன் தமிழனையே அணைத்துக்கொள்ளப் போவதுமில்லை.இதுவரை 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட பொழுது எதவுமே செய்யாமல் இலங்கைக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுத்த டெல்லியா இனிநீங்கள் கொழுத்திக் கொண்டதற்காக விழி சிவக்கப் போகின்றது.காந்தி ஒருதடைவைதான் கோட்சேயினால் கொல்லப்பட்டார். ஆனால் காங்கிரஸ் காரர்களால் பலதடைவை கொல்லப்பட்டு விட்டார்.தீக்குளிப்பதையும் விசம் குடிப்பதையும் நிறுத்தி விட்டு அடுத்ததை யோசி ..கயவர் காங்கிரஸ் கூட்டம் அடுத்த ஆட்சிக்கட்டிலில் மீண்டும் படுக்கவிடாமல் என்ன செய்யலாமென்பதை யோசி....

Friday, February 06, 2009

புலிகளின்முதல் விமானம்

அபி அப்பா என்றொரு பதிவர். அவர் பல விடயங்களை நல்ல நகைச்சுவையாகப்பதிவார். அவரது நகைச்சுவை பதிவுகளை நானும் படித்து சிரிப்பதுண்டு அப்படித்தான் .எப்போதும் போடும் நாய் இன்னிக்கு போடலை.என்றொரு பதிவிட்டிருந்தார் நானும் ஏதோ நகைச்சுவைப்பதிவாகவே இருக்குமென நினைத்து உள்ளே போய் பார்த்தால் அங்கு அவரது பதிவில் ஈழத்து இயக்கங்களில் ஒன்றாகவிருந்த ரெலோ என்கிற இயக்கத்தின் இரண்டு விமானங்களை புலிகள் குண்டு வைத்து தகர்த்தனர் என்கிற ஒரு தவறான கருத்தினையும் எழுதிப்பதிவிட்டிருந்தார். அதற்கான பதிலினை நான் அவரது பதிவிலேயே இட்டிருந்தாலும்.மேலும் இதுபோன்ற தவறான தகவல்கள் அதனைப்படித்தவர்கள் மனங்களில் பதிந்து போகாமல் இருக்கவே புலிகள் முதலில் செய்த விமானம் பற்றிய விபரத்தினையும். ரெலோ அமைப்பு விமானங்கள் செய்யும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லையென்பதனையும் தெளிவு படுத்தவே எனது இந்தப்பதிவாகும்.

1985 ம் ஆண்டளவில் திம்புப்பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த காலத்தில் யாழ் குடாநாட்டின் அப்போதைய புலிகளின் தளபதியாக இருந்த கிட்டு தலைமையில் யாழ் குடாநாடு முதன் முதலாக புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியாகியது. வடக்கு கிழக்கின் மிகுதிப் பகுதிகளெல்லாம் இலங்கையரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. (ஏன் மற்றைய இயக்கங்கள் காவலுக்கு நிக்கவில்லையாவென யாராவது அனானியாக வந்து பதிவு போடாமல் தங்கள் அடையாளத்துடன் வந்து பதிவிட்டால் அதற்கான பதில் தரப்படும்)இந்தக் காலகட்டத்தில் புலிகள் அமைப்பு யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் தங்கள் ஆயுதத் தொழிற்சாலைகளை உருவாக்கி ஆயுதங்களையும் செய்யத் தொடங்கியிருந்தனர்.அவற்றினுள் முக்கியமான பெரியதொரு ஆயுதத் தொழிற்சாலைதான் எனது கிராமமான மானிப்பாயில் இருந்த தொழிற்சாலை. அங்கு அப்பையா அண்ணை என்கிற புலிகளின் மூத்த உறுப்பினரின் கண்காணிப்பில் அந்தத் தொழிற்சாலை இயங்கி வந்தது. (அவரைப் பற்றிய பதிவு) அவருடன் நானும் பலகாலங்கள் இணைந்து அந்த தொழிற்சாலையில் பணியாற்றியிருக்கிறேன்.இங்கு புலிகளிற்கு வேண்டிய கண்ணி வெடிகள் புலிகளின் சொந்தத்தயாரிப்பான எறிகணைகள்(மோட்டார் செல்கள்) எல்லாம் இங்கு தயாரிக்கப்படும்.

அதே நேரம் அப்பையா அண்ணையும் இராணுவத்திறகெதிராக பயன்படுத்தககூடியதாய் புதிது புதிதாய் ஏதாவது வெடிபொருட்கள். இராணுவ வாகனங்கள் என்று செய்ய முயற்சிப்பார். அப்படியான ஒரு முயற்சிதான் புலிகளிற்காக விமானம் செய்யும் முயற்சியும்.அன்றைய காலகட்டத்தில் உள்ளுர் தொழில் நுட்பத்தில் இலகுவாய் உருக்கக்கூடிய அலுமினியத்தில்தான் விமானம் வடிவமைக்கப்பட்டது. அதற்கான தொழில் நுட்ப வேலைகளை கண்ணாடி வாசுவும் (அவரைப்பற்றிய பதிவு) றஞ்சன் என்கிற ஒரு பொறியியலாளரும். பாலா என்பவருமே செய்வார்கள். அந்தத் தொழிற்சாலைக்கு வேண்டிய வெடி பொருட்கள் மற்றும் உபகரணங்களை வினியோகிக்கும் பொறுப்பு குட்டி சிறியிடம் இருந்தது. நிதி மற்றும் அங்கு பணியாற்றுபவர்களிற்கான உணவு வழங்குதல்என்பனவற்றிற்கு மானிப்பாய் பகுதியின் அன்றைய அரசியல் பொறுப்பாளராக இருந்த மயூரன் பொறுப்பாக இருந்தார்..ஆரம்பத்தில் ஜெர்மனிய நிறுவனமான வொக்ஸ் வாகன் கேவர் காரின் இயந்திரத்தினைத்தான் விமானத்திற்கு பொருத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் இரண்டு 125.சி சி ஊருந்துளியின் (மோர்டார் சைக்கிள்) இயந்திரத்தினையும் பயன்படுத்தி விமானத்தினை பறக்கவைக்கும் முயற்சிகள் நடந்தது.தயார் செய்த விமானத்தினை எடுத்துச்செல்ல இலகுவாக அதன் இறக்கைப்பகுதிகளை களற்றியெடுத்து உழவுஇயந்திரத்தில் கல்லுண்டாய் வெளிக்கு கொண்டுபோவோம். கல்லுண்டாய் வெளியென்பது மானிப்பாய்க்கும் அராலிக்குமிடையில் உள்ளதொரு பரந்தவெளி இங்கு விமானம் ஓடுவதற்கு வசதியாக வளைவுகளற்ற நேரான ஒரு வீதி உண்டு. அந்த வீதியில் விமானத்தினை மீண்டும் பொருத்தி பறப்பதற்கான முயற்சிகள் நடைபெறும்.அனேகமாக வாசு அல்லது பாலாதான் விமானத்தினை உள்ளிருந்து இயக்குவார்கள்.இதே நேரம் யாழ் பண்ணைக்கடலில் விழுந்த இலங்கை இராணுவத்தின் உலங்கு வானூர்தி ஒன்று மீனவர் ஒருவரின் வலையில் அகப்பட அதனையும் கட்டியிழுத்து வந்து அதன் இயந்திரப்பகுதியை பிரித்தெடுத்து இயக்கும் முயற்சிகளும் நடந்தது. ஆனால் அந்த இயந்திரம் பலகாலம் கடல்நீரில் கிடந்ததால் பலனேதும் கிடைக்கவில்லை.

இப்படி விமானம் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கையில் கண்ணாடி வாசுவும் றஞ்சனும் நாவற்குழி முகாம்தாக்குதல் முயற்சியில் இறந்து போனாலும் விமானம் செய்யும் முயற்சி இந்தியப்படையின் வருகையும் அவர்களுடனான புலிகளின் யுத்தம் தொடங்கியதையிட்டு இந்திய உலங்குவானூர்திகள் மானிப்பாயிலிருந்த ஆயுதத் தொழிற்சாலை மீது உந்துகணை(றொக்கற்)தாக்குதல் நடத்தியதில் அந்த தொழிற்சாலையுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு விமானங்களும் அழிக்கப்பட்டதுடன். புலிகளின் விமானம் செய்யும் முயற்சி தறகாலிகமாக ஒரு ஓய்விற்கு வந்திருந்தது. இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் ஆரம்பகால விமானத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்த எவரும் இல்லாத நிலையில் மீண்டும் லெப்.கேணல் சங்கரண்ணாவின் முயற்சியும் வெளிநாடுகளில் விமானத்தெழில் நுட்பமும் வானோடிகளாகவும் பயிற்சி பெற்ற சில இளைஞர்களின் முயற்சியும்தான் இன்றைய புலிகளின் விமானங்கள். அவைபற்றிய முழு விபரங்கள் அதற்குரிய காலம் வரும்பொழுது பதிவாகும்.இதுவே புலிகள் அமைப்பின் விமானத்தயாரிப்பின் முயற்சிகளாகும்.

ஆனால் 1985ம் ஆண்டு அழிக்கப்பட்டு விட்ட ரெலோ இயக்கம் விமானம் செய்வதானால் அதே யாழ்குடாநாட்டில்தான் செய்திருக்கவேண்டும். ஏனெனில் இந்தியாவில் செய்யமுடியாது அப்படியொரு முயற்சியை இந்திய அரசு விரும்பாது. அப்படி யாழ்குடாநாட்டில் செய்திருந்தாலும் விமானம் பறப்பு முயற்சிகளை மேற்கொள்வதங்கு உகந்ததாக நேரான பாதையும் மரங்கள் வீடுகளற்றதொரு வெளியான இடம் யாழ் குடாவில் மூன்றுதானிருந்தது அதில் ஒன்று வல்லைவெளி இங்கு அருகிலேயே தொண்டைமானாறு இராணுவ முகாம் இருந்ததாலும் மற்றும் இந்தவீதி வடமராட்சியையும் தென்மராட்சியையும் இணைக்கும் முக்கியமானதொரு வீதி என்பதால் வாகனப்போக்குவரத்துக்கள் அதிகம். எனவே இங்கு விமானத்தை பரீட்சிக்கமுடியாது. அடுத்தது கோப்பாய் சாவகச்சேரி வீதியில் வரும் கோப்பாய் வெளி இதற்கருகிலும் நாவற்குழி இராணுவ முகாம் இருந்தது. அடுத்ததாக புலிகள் விமானத்தினை பரீட்சித்த கல்லுண்டாய் வெளியாகும். இங்கும் ரொலே எவ்வித விமானப் பறப்பு முயற்சியும் மேற்கொள்ளவில்லை..அப்படியானால் ரெலோ விமானத்தை எங்கு செய்தது எங்கு பரீட்சித்தது??? அப்படியானால் ரெலோ விமானவடிவில் கடதாசியில் பட்டம் செய்து விட்டுப்பார்த்திருக்கலாம்.

அதனை புலிகள் குண்டு வைத்து எல்லாம் தகர்க்கத்தேவையில்லை கையாலேயே கிழித்தெறிந்திருக்கலாம்.அட எதுக்கு இவ்வளவு சிரமப்படுவான் ரெலோவின் ஆரம்பகால உறுப்பினரும் தற்போதைய ரெலோ அமைப்பின் தலைவராகவும் பாராழுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் செல்வம் அடைக்கலநாதனின் மின்னஞ்சலை இங்கு இணைக்கிறேன் - selvamtelo@yahoo.com அவரிடமே கேட்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.இதற்கு மேலும் யாராவது வந்து ரெலோ செய்த விமானத்தை புலிகள் குண்டு வைத்து தகர்த்தனர் என்று அடம்பிடித்தால் என்லை முடியலை முடியலை

மேலதிகமாக சில விபரங்கள். அன்றைய காலகட்டத்தில் மானிப்பாய் ஆயுதத்தெழிற்சாலையில் நான் பழகிய போராளிகளான. முத்து.முகுந்தன்.வெள்ளைப்பிறேம்.கொன்னைப்பிறேம்.பாரத்.சுபாஸ்.சுதா. ஆகியோர் இந்திய இராணுவத்துடனான மேதலில் இறந்துவிட்டார்கள்.குட்டி சிறி கிட்டுவுடன் வங்கக்கடலில்வைத்து இந்தியக் கடற்படையால் கொல்லப்பட்டான்.அந்த முகாமை நிருவகித்த அப்பையா அண்ணை யாழ் இடப்பெயர்வின்பொழுது ஈ.பி.டி.பியினரால் கடத்திக்கொண்டுபோய் கொல்லப்பட்டார்.மானிப்பாய் அரசியல்துறை பொறுப்பாளராயிருந்த மயூரன் மற்றும் பாலா கண்ணன் சத்தியா .ஆகியோர் வெளிநாடுகளில் வசிக்கின்றார்கள்.

சிறீலங்காவின் புதிய தேசியக்கொடி

சிறீலங்காவின் புதிய தேசியக்கொடி

Thursday, February 05, 2009

அபி அப்பா வைத்த குண்டு

சில வாரங்களிற்கு முன்னர் சக வலைப்பதிவாளர் சஞ்சய் என்பவர் புலிகள் தமிழ்நாடு மீனம்பாக்கம் விமானநிலையத்தில் குண்டு வைத்தார்கள் என்றொரு குண்டினை வைத்தார் அதற்கான விபரங்களுடன் அதனை புலிகள் வைக்கவில்லையென்று ஆதாரங்களுடன் எழுதியிருந்தேன். அடுத்ததாய் அபி அப்பா இன்று புதியதொரு குண்டினை போட்டிருக்கிறார்.இங்கு
அதாவது முன்னர் ஈழபோராட்டக்குழுவாக இருந்த சிறீ சபாரத்தினம் தலைமையிலானதும் முழுக்க முழுக்க இந்திய றோவின் கைக்கூலியாக செயற்பட்ட ரெலோ இரண்டு விமானம் செய்ததாம் அதனை புலிகள் குண்டு வைத்து தகர்த்தனராம். இனி இப்படி யார் யார் குண்டு வைக்கப் போகினமோ??? எல்லம் இந்திய அரசிற்குத்தான் வெளிச்சம்.

ஈழத்தமிழர் இதயங்களை நக்கிவிட்டார் கருணாநிதி




இலங்கைப் பிரச்னைக்காக தி.மு.க., பதவி விலகுவதை ஈழத் தமிழர்களே விரும்பவில்லை' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அதற்கு அவர் ஆதாரமாக சொல்வது ஒட்டு மொத்த ஈழத்தமிழனினத்தின் எழுச்சியையும்.உணர்வுகளையும் உரிமைகளையும் ஒட்டுமொத்தமாய் சிங்களத்தின் காலில் அடகுவைத்து பதவிசுகம் அனுபவித்த தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கத்தின் மனைவியும் தொலைபேசியில் கதைத்தாராம்.அடுத்ததாய் இந்திய அரசிற்கு விலைபோய் இந்திய உளவுத்துறையுடன் சேர்ந்து ஈழத்தில் இளைஞர்கள் தொடங்கிய ஆயுதப்போராட்டத்தினை சிதைத்து ஒருவருடன் ஒருவரை மேதவிட்டு பல ஈழத்து இயக்கங்களினதும் இளைஞர்களினதும் அழிவிற்கு காரணமாயிருந்த சந்திர காசன் கடிதமெழுதியதையுமே கருணாநி காரணமாய் காட்டியிருக்கிறார்.ஒட்டுமொத்த றழத்தமிழருமே மற்ந்துபோய் இன்றைய இளையசமூதாயத்தினர்களிற்கே இவர்களை யாரென்று தெரியா இருவர் சொன்னதை கருணாநிதியோ ஏதோ ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் பிரதி நிதிகள் சொல்லிவிட்டதைப்போல சொல்லியிருப்பதைப்பார்த்தால். இது அரசியல் சாணக்கியமல்ல இது அரசியல் சா..நக்கித்தனம்....

தேவையா??இது..

கையில் காந்தி புத்தகத்துடன் காங்கிரஸ் கட்சிக்காரரனின் உண்ணாவிரதம். தேவையா??இது..



கையில் காந்தி புத்தகத்துடன் பாலமுருகன் என்கிற காங்கிரஸ்காரர் சேலத்தில் ஈழத்தமிழர்களிற்காக உண்ணாவிதரம் இருக்கிறார் என்கிற செய்திறை படித்ததும் சிரிக்கிறதா அழுகிறதா எனறு தோன்றவில்லை.காந்தியென்றால் யாரென்றும் உண்ணா விரதம் என்றால் என்னவென்றும் கேட்கிற காங்கிர்காரர்கள் இன்று இருக்கிறார்கள். அல்லது காந்தி சோனியா காந்தியின் பாட்டன் இத்தாலியில் பிறந்து இந்திய சுததந்திரத்திறகாக போராடியவர் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவற்கில்லை.இப்படியான காங்கிரஸ்கட்சியிடம் ஒரு காங்கிரஸ் காரர் உண்ணா விரதப்போராட்டம் நடத்துவதில் எவ்வித பிரயேசனமம் கிடையாது. எனவே தமிழ்நாட்டுத் தமிழர்கள் இனியாவது இவ்விதம் மென்முறை போராட்டங்களை கைவிட்டு பிரயோசனமாக ஏதாவது சிந்தித்து செயல்படுங்கள்

Wednesday, February 04, 2009

தமிழகத்து தமிழர்களே ஈழத்தமிழனிற்கு ஏற்பட்ட நிலை உங்களிற்கும் வேண்டாம் விழித்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டு உறவுகளே ஈழத்துத் தமிழர் போராட்டம் தொடங்கப்பட்ட ஆரம்ப காலகட்டங்களையே இன்றைய தமிழக நிலைமைகள் நினைவு படுத்துகின்றது. தமிழனின் உரிமைகோரி உண்ணாவிரதம் . ஆர்ப்பாட்டம் . கறுப்புக்கொடி காட்டுதல்.கடையடைப்பு. வேலைநிறுத்தம். இப்படி 58 ம் ஆண்டுகளில் தொடங்கிய ஈழத்தமிழனின் போராட்டங்கள் அனைத்தையும் இலங்கையரசு மதிக்காமல் தொடர்ந்தும் தட்டிக்கழித்தும் அவற்றை அடக்க வன்முறையை கையிலெடுத்ததனாலும்தான் ஈழத் தமிழன் தானும் வன்முறையை கையிலெடுப்பதைத் தவிரவேறு வழியில்லையென நினைத்து பல குழுக்களாக தொடங்கிய வன்முறைப்போராட்டம் இன்று பிரபாகரன் தலைமையில் முனைப்புப் பெற்று நிற்கிறது.அதே போல இன்றைய தமிழகத்து நிலைமைகளும் இருக்கின்றது தமிழர்களது தொடர்ச்சியான வன்முறையற்ற தங்களை தாங்களே வருத்திக் கொள்கின்ற அனைத்துப் போராட்டங்களும் ஆட்சியாளர்களால் அலட்சியப்படுத்தியும் அவற்றை அடக்குமுகமாக ஆட்சியாளர்களால் வன்முறையும் மேற்கொள்கப்பட்டு வருகின்றது.முத்துக்குமார் போன்றவர்களின் தமிழகத்து தமிழனின் எந்தவொரு உணர்வும் மத்திய அரசால் கவனத்திலெடுக்கப்படுவதாக இல்லை.ஏன் கவனத்திலெடுக்கப்படுவதாக பாசாங்கிற்கு ஒரு அறிக்கைகூட வெளியிடவில்லை என்பது தமிழகத்தை இந்திய மத்திய அரசு அற்பமாக நினைக்கின்றது என்பது புலனாகின்றது.எனவே காலப்போக்கில் இலங்கையரசு எப்படி ஈழத்தமிழனை கொஞ்சம் கொஞ்சமாக ஒடுக்கத் தொடங்கியதோ அதேபோன்றதொரு நிலைமையே தமிழகத்து தமிழரிற்கும் எற்படுமென்பது உண்மை.தற்சமயம் வெளியான செய்திகளின்படி இலங்கை விமானப்படைக்கு தாம்பரம் விமானப்படை முகாமில் பயிற்சியளிக்கப்பட்ட கசிந்ததை தொடர்ந்து இலங்கை விமானப்படையினரை வெளியேற்றச் சொல்லி தமிழக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததை தொடர்ந்து அவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டு விட்டனர் என்று அவசர அவசரமாக கருணாநிதி ஒரு அறிக்கையையும் விட்டு விட்டு இலங்கை விமானப்படையினர் பெங்களுரில் உள்ள விமானப்படை முகாமில் தங்கியிருப்பதாக செய்திகள் வெளி வருகின்றது. தமிழர்களே நிங்கள் என்னவேண்டுமானாலும் கத்துங்கள் நாங்கள் நினைத்ததைத்தான் செய்வோம் என்று ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். தமிழகத்து தமிழர்களே ஈழத்தமிழனிற்கு ஏற்பட்ட நிலை உங்களிற்கும் வேண்டாம் விழித்துக் கொள்ளுங்கள்.

சுப்பிரமணிய சுவாமிகண்டு பிடித்துவிட்டார் முத்துக்குமார் கொலைசெய்யப்பட்டாராம்

இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

முத்துக்குமாரின் மரணம் தற்கொலையா? கொலையா? என்ற சந்தேகம் எங்களுக்கு வந்திருக்கிறது. முத்துக்குமாரிடம், தீக்குளிக்க முன்வா. நாங்கள் உன்னை தடுத்து விடுவோம் என்று சிலர் அவருக்கு வாக்குறுதி கொடுத்ததாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

முத்துக்குமார் எழுதியதாக வெளியான நான்கு பக்க கடிதம் விடுதலைப்புலிகள் தொடர்பாளர் எழுதியது போல இருக்கிறது. அது நம்நாட்டு தமிழ் அல்ல, இலங்கை தமிழ் போல இருக்கிறது.

அவரது மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அவர் கொலை செய்யப்பட்டார் என்றால், அதன் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றும் கண்டுபிடிக்க வேண்டும்.

பந்த் நடத்துவது தேசத்துரோக முடிவு. அதனை வாபஸ் பெற வேண்டும். அப்படி பந்து நடத்தும் தலைவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

http://www.paristamil.com/tamilnews/?p=26388

Monday, February 02, 2009

இந்திய தமிழ் பத்திரிகைகளிற்கு ஒரு பகிரங்க மன்றாட்டம்.

இந்திய தமிழ் பத்திரிகைகளிற்கு ஒரு பகிரங்க மன்றாட்டம்.

இந்திய தமிழ் பத்திரிகையாளர்களே உங்களிற்கு ஒரு ஈழத்து தமிழ் பத்திரிகையாளனின் வணக்கங்கள்.
முதலில் இன்று ஈழத்தமிழனின் துயரையும் துன்பத்தினையும் போராட்ட வாழ்வினையும் நீங்கள் பதிவாக்கி தமிழ்நாடு இந்தியா மற்றும் உலகத்தமிழர்களிடமும் செய்திகளாக கொண்டு சென்று சேர்ப்பதற்காக முதலில் கோடி நன்றிகள் ஏனெனில் சில வருடங்களிற்கு முன்னர் ஈழத்தமிழனின் இன்னல் பற்றி ஒரு வரிச்செய்தயாவது இந்திய பிரபல தமிழ் பத்திரிகைகளில் வராதா??என ஏங்கிய பல்லாயிரம் ஈழத்தமிழனில் நானும் ஒருவன்.அதே வேளை இந்திய பிரபல பத்திரிகைகளில் ஈழத்தமிழர்அவலத்தினையும் போராட்டத்தினையும் கொச்சைப்படுத்தியும் கிண்டல் பண்ணி கேலிச்சித்திரங்கள்(காட்ரூன்) போட்டும் மகிழ்ந்து விழையாடியபோதும் மனவேதனையடைந்து அதற்காக கடிதங்கள் எழுதியனுப்பி அக்கடிதங்கள் பத்திரிகையில் வராதா என எதிர்பார்த்து ஏமாந்திருந்த வேளையில் மீண்டும் ஈழத்தமிழர் வலிகளை பதிவாக்கும் உங்களிடம் ஒரு அன்பான மன்றாட்டமான வேண்டுகோள். என்னவெனில் எங்கள் நியாயமான போராட்டங்களையும் எங்கள் வலிகளையும் எடுத்துச்சொல்லும் நீங்கள் வெறும் பரபரப்பிற்காகவும் உங்கள் பத்திரிகை விற்பனைக்கவும் தயவு செய்து கற்பனைகளை செய்தியாக்காதீர்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் தவறான உங்கள் செய்திகள் எங்கள் வாழ்வாதாரபோராட்டத்தினையே கேள்விக்குறியாக்கிவிடும் அபாயம் உள்ளது. உதாரணமாக சமீபத்தில் வெளியான புலிகளிற்கு வன்னியில் ஆயுதம் வந்திறங்கியது. பத்தாயிரம் பேர் தற்கொலைப்படையாகத்தயார்..அவர்களிற்கு பெல்ற்குண்டுகள் தயார்..என்கிற செய்திகள் வன்னியில் சிக்கித் தவிக்கும் அப்பாவிப் பொதுமக்களிற்கு எதிர்மறையான விழைவுகளே ஏற்படுத்தும்.எனவே தயவு செய்து இப்படி ஒரு இனத்தின் வாழ்வாதார போராட்டத்தின் மீது உங்கள் வியாபாரத்தினை எதிர்பார்க்காதீர்கள் நன்றி

Sunday, February 01, 2009

இந்திய இராணுவம் வழிகாட்டியது இலங்கை இராணுவம் கொல்கிறது

இன்றும் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த வைத்திய சாலையின்மீது இலங்கை இராணும் மேற்கொண்ட தாக்குதலில் பல தமிழ் நோயாளிகள் கொல்லப்பட்டதாக சர்வதே செஞ்சிலுவைச்சங்கம் அறிவித்துள்ளது.அதனை சர்வதேச ஊடகங்களும் உறுதி செய்துள்ளன

http://edition.cnn.com/2009/WORLD/asiapcf/02/01/sri.lanka.fighting/

http://news.bbc.co.uk/2/hi/south_asia/7863538.stm

1987ம் ஆண்டு முதன் முதலில் இந்திய இராணுவம் யாழ்வைத்திய சாலையின் மீது படுகொலைகளை நிகழ்த்தியது யாவரும் அறிந்ததே அதே போல இன்றும் வன்னியில் இந்திய இராணும் நிலைகொண்டுள்ள காலகட்டத்தில் மீண்டும் வைத்திய சாலைகள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றது

இதே வேளை ஜேர்மன் மற்றும் சுவிஸ் நாட்டு தூதரக அதிகாரிகளையும் பி.பி.சி ஊடகத்தினையும் சிறீலங்காவிலிருந்து வெளியேற்றப் போவதாக இலங்கையரசு மிரட்டியுள்ளது

முத்துக்குமாரிற்கு பாரீசில் 3000த்திற்கும் மேற்பட்ட மக்கள் அஞ்சலி





"வீரத்தமிழ்மகன்" முத்துக்குமார் வைத்த தீயில் பிரான்ஸ் இளையோர்கள். 3000ற்கு அதிகமான மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்.

பிரான்சில் தமிழ் இளையோர் அமைப்பினரால் கவனயீர்ப்புப்போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது. இளையோர் அமைப்பினரால் நான்காவது கிழமையாக நேற்று 31.01.09 முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உணர்வுடன் பங்கேற்றுள்ளனர்.