இந்திய தமிழ் பத்திரிகைகளிற்கு ஒரு பகிரங்க மன்றாட்டம்.
இந்திய தமிழ் பத்திரிகையாளர்களே உங்களிற்கு ஒரு ஈழத்து தமிழ் பத்திரிகையாளனின் வணக்கங்கள்.
முதலில் இன்று ஈழத்தமிழனின் துயரையும் துன்பத்தினையும் போராட்ட வாழ்வினையும் நீங்கள் பதிவாக்கி தமிழ்நாடு இந்தியா மற்றும் உலகத்தமிழர்களிடமும் செய்திகளாக கொண்டு சென்று சேர்ப்பதற்காக முதலில் கோடி நன்றிகள் ஏனெனில் சில வருடங்களிற்கு முன்னர் ஈழத்தமிழனின் இன்னல் பற்றி ஒரு வரிச்செய்தயாவது இந்திய பிரபல தமிழ் பத்திரிகைகளில் வராதா??என ஏங்கிய பல்லாயிரம் ஈழத்தமிழனில் நானும் ஒருவன்.அதே வேளை இந்திய பிரபல பத்திரிகைகளில் ஈழத்தமிழர்அவலத்தினையும் போராட்டத்தினையும் கொச்சைப்படுத்தியும் கிண்டல் பண்ணி கேலிச்சித்திரங்கள்(காட்ரூன்) போட்டும் மகிழ்ந்து விழையாடியபோதும் மனவேதனையடைந்து அதற்காக கடிதங்கள் எழுதியனுப்பி அக்கடிதங்கள் பத்திரிகையில் வராதா என எதிர்பார்த்து ஏமாந்திருந்த வேளையில் மீண்டும் ஈழத்தமிழர் வலிகளை பதிவாக்கும் உங்களிடம் ஒரு அன்பான மன்றாட்டமான வேண்டுகோள். என்னவெனில் எங்கள் நியாயமான போராட்டங்களையும் எங்கள் வலிகளையும் எடுத்துச்சொல்லும் நீங்கள் வெறும் பரபரப்பிற்காகவும் உங்கள் பத்திரிகை விற்பனைக்கவும் தயவு செய்து கற்பனைகளை செய்தியாக்காதீர்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் தவறான உங்கள் செய்திகள் எங்கள் வாழ்வாதாரபோராட்டத்தினையே கேள்விக்குறியாக்கிவிடும் அபாயம் உள்ளது. உதாரணமாக சமீபத்தில் வெளியான புலிகளிற்கு வன்னியில் ஆயுதம் வந்திறங்கியது. பத்தாயிரம் பேர் தற்கொலைப்படையாகத்தயார்..அவர்களிற்கு பெல்ற்குண்டுகள் தயார்..என்கிற செய்திகள் வன்னியில் சிக்கித் தவிக்கும் அப்பாவிப் பொதுமக்களிற்கு எதிர்மறையான விழைவுகளே ஏற்படுத்தும்.எனவே தயவு செய்து இப்படி ஒரு இனத்தின் வாழ்வாதார போராட்டத்தின் மீது உங்கள் வியாபாரத்தினை எதிர்பார்க்காதீர்கள் நன்றி
ஐய்யா சாத்திரி அவர்களே, என்ன நடக்குது வன்னியில? புலிகள் என்ன செய்யுறாங்க? இங்க எங்களுக்கு தூக்கமே வரமாட்டேங்குது? நல்ல சேதி வருமா வராதா?
ReplyDeleteஅருமை சிறீ
ReplyDeleteஉங்கள் வேண்டுகோள்
ஒரு வேண்டுகோள் மட்டுமல்ல ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கட்டும். முதலில் இவர்கள் தமிழ்நாட்டிலுள்ள அகதிகளை மனிதர்களாக நடத்தட்டும். அதைச் செய்தாலே பெரும் புண்ணியம்.
அல்லல்படும் அகதி - இங்கல்ல இன்னொரு நாட்டில்
//"இந்திய தமிழ் பத்திரிகைகளிற்கு ஒரு பகிரங்க மன்றாட்டம்."//
ReplyDeleteஅதென்னவோ போங்க, இந்தியாவுக்கும் உங்களுக்கும் ஏழாம் பொருத்தமாவே போயிருச்சு.
//சக்திவேல் @ 3:37 PM
ReplyDeleteஐய்யா சாத்திரி அவர்களே, என்ன நடக்குது வன்னியில? புலிகள் என்ன செய்யுறாங்க? இங்க எங்களுக்கு தூக்கமே வரமாட்டேங்குது? நல்ல சேதி வருமா வராதா?//
தற்சமயம் இந்தியாவின் இராணுவ உதவியுடனும் ஆனோசனைகளுடனும் இலங்கை இராணுவம் தமிழர்களை மட்டுமே குறிவைத்து அழித்துகொண்டிருக்கின்றது அவ்வளவுதான் நடக்கிறது
//Anonymous Anonymous said...
ReplyDeleteஅருமை சிறீ
உங்கள் வேண்டுகோள்
ஒரு வேண்டுகோள் மட்டுமல்ல ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கட்டும். முதலில் இவர்கள் தமிழ்நாட்டிலுள்ள அகதிகளை மனிதர்களாக நடத்தட்டும். அதைச் செய்தாலே பெரும் புண்ணியம்.
அல்லல்படும் அகதி - இங்கல்ல இன்னொரு நாட்டில்//
பத்திரிகையாளர்கள் வியாபரத்தினை பெருக்குவது அவர்களது தனிப்பட்ட விடயம். ஆனால் அதையே அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தின் மீதான இலாபமாக செய்வதுதான் வேதனை
//தவறான உங்கள் செய்திகள் எங்கள் வாழ்வாதாரபோராட்டத்தினையே கேள்விக்குறியாக்கிவிடும் அபாயம் உள்ளது//
ReplyDeleteநன்றாக சொன்னீர்கள் சாத்திரியார்.
எரியிற வீட்டிலை சுருட்டு பத்தும் சனம்தான் அதிகம். தமிழ் மக்களது உண்மையான வலியையும் உணர்வுகளையும் யாரும் பார்ப்பதில்லை.