தமிழகத்தில் முட்டை வியாபாரிகளிற்கும் கோழிகளிற்கும் தடை
அண்மையில் சென்னை உயர் நீதி மன்றத்தில் வைத்து முட்டையடி வாங்கிய பெரு மதிப்பிறகுரிய சு..சுவாமி அவர்கள்.தமிழகத்தில் முட்டை வியாபாரிகளிற்கும் கோழிகளிற்கும் தடை கொண்டுவரவேண்டும் என்று ஒரு மனுவை அதே சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக அறியமுடிகிறது. அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது. அண்மையில் என்மீது நடாத்தப்பட்ட முட்டையடித்தாக்குதல் உலகத்திலேயே மிக மோசமான வன்முறைத்தாக்குதலாகும். இப்படியான தாக்குதல்களை புலிகளும் அவர்களிடம் பணம்வாங்குபவர்களினாலும்தான் செய்யமுடியும்.எனவே என்மீது நடாத்தப்பட்ட மனிதாபிமானமற்ற மேசமான வன்முறைத்தாக்குதலை ஜ.நா சபையும் ஜரோப்பிய யூனியனும் இன்னமும் கண்டிக்காதது எனக்கு பெரும் கவலையளிக்கின்றது.அதே நேரம் இந்த மாபெரும் சதியை புலிகளும் அவர்களிற்கு ஆதரவான தமிழகத்து முட்டை வியாபாரிகளும் அதற்கு உடந்தையாக கோழிகளும் இணைந்தே திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் எழுத்துவடிவிலும் சி.டி யாகவும் சிக்கியுள்ளது. கோழிகளும் வேண்டுமென்றே கூழ் முட்டையிட்ட சதியும் அம்பலமாகியுள்ளது. சமயம் வரும்பொழுது நான் அதனை வெளியிடுவேன்.இவாளுகளெல்லாம்(முட்டை வியாபாரிகள்) அவாளுக்கு (புலிகளிற்கு ) விலைபோய் விட்டது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத கருணாநிதியின் அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டுமென கேட்டுகொள்வதோடு தமிழகத்தில் இனி கோழிகள் முட்டையிடக்கூடாதென தடையுத்தரவு வழங்கவேண்டுமென்றும் நீதிபதியை கேட்டுக்கொள்கிறேன்.
கற்பனைதான் ஆனாலும் சுப்பிரமணிய சுவாமி இப்படியொரு மனுவை தாக்கல் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
No comments:
Post a Comment