Sunday, February 22, 2009

ஈழத்தில் சகோதர யுத்தம்

ஈழத்தில் சகோதர யுத்தம்
பாகம் ஒன்று.

ஒவ்வொரு தடைவையும் ஈழத்தமிழர் பிரச்னையின் பொழுது தன்னுடைய இயலாமையை மறைத்துக்கொள்ள கருணாநிதியால் பாவிக்கப்படும் ஒரு வசனம் சகோதர யுத்தம் என்கிற வசனம்தான். அதாவது விடுதலைப்புலிகள் செய்த சதோதர யுத்தத்தினால்தான் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைமைக்கு காரணம் என்பது போலவே அவரது கருத்துக்கள் அமைந்திருக்கும் அது மட்டுமல்ல இன்னமும் தமிழகத்து தமிழர்களும் ஏன் தமிழகத்தின் பிரபல பத்திகைகள் கூட புலிகள்தான் வேண்டுமென்றே மற்றைய சகோதர இயக்கங்களை அழித்து விட்டனர் என்கிற ஒரு தவறான கருத்தையே கொண்டிருப்பதையும் காணலாம். சகோதர யுத்தம்உண்மையில் என்ன நடந்தது என்பதனை தமிழகத்து உறவுகளிற்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் இளையசமூதாயத்தினரிற்கும் முடிந்தளவு புரிய வைப்பதே என்னுடைய இந்தக்கட்டுரையாகும்.

சகோதர யுத்தம் பற்றி விரிவாக எழுதுவதானால் பல பக்கங்கள் தேவை எனவே சுருக்கமாக இரண்டு பாகங்களாக எழுத முயற்சிக்கிறேன். புலிகள் அமைப்பிலிருந்து முரண்பாடுகள் காரணமாக அதன் மத்திய குழுவிலிருந்து உமா மகேஸ்வரன் வெளியேற்றப்பட்டதும்.பின்னர் அவர் புதியபாதை என்னும் குழுவின் தலைவர் சுந்தரத்துடன் இணைந்து புளொட்(P.L.O.T )என்னும் அமைப்பினை தொடங்கி அதற்கு தலைவரான பின்னர். தமிழ்நாடு பாண்டிபஜாரில் பிரபாகரனிற்கும் உமா மகேஸ்வரனிற்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமே அன்றைய காலகட்டத்தில் பெரியதொரு சகோதர யுத்தமாகக் கருதப்பட்டது.

ஆனால் அந்தச் சம்பவம்தான் இந்திய மத்திய அரசிற்கு ஈழவிடுதலைப்போராட்டஇயக்கங்களுடனான தொடர்புகள் அமையவும் காரணமாயிருந்தது.ஆனால் காலப்போக்கில் புளொட் அமைப்பில் ஏற்பட்ட உள் முரண்பாடுகளினால் அந்தஇயக்கதினர் தாங்களே ஒருவரையொருவர் அடித்துக்கொண்டும் அழித்துக்கொண்டும் இறுதியாய் புளொட் உறுப்பனராலேயே அதன் தலைவர் உமாமகேஸ்வரனும் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் கருணாநிதியும் வேறுசிலரும் சகோதர யுத்தம் என்று சொல்லிக்கொண்டிருப்பது ரெலோ(T.E.L.O )இயக்கத்தினை புலிகள் தடைசெய்ததனையே . இந்தியா உதவியும் பயிற்சியும் கொடுத்து வளர்த்த இயக்கங்களில் புலிகள் இந்தியா எமக்கு தமிழீழம் பெற்றுத்தரும் என்று கண்மூடித்தனமாக நம்பவில்லை அதேபோல இந்தியாவும் புலிகள் தாங்கள் சொல்வதெற்க்கெல்லாம் பிரபாகரன் தலையாட்டுவார் என்று நம்பவுமில்லை.இதனால் புலிகளிற்கும் இந்திய உளவுத்துறைக்கும் ஆரம்பகாலங்களிலிருந்தே ஒருவித பனிப்போர் நடந்துகொண்டேயிருந்தது.அதே நேரம் பிரபாகரளை தங்கள் தலையாட்டிப்பொம்மையாக்கியே தீருவது என்று கங்கணம்கட்டிக்கொண்டு இந்தியாவிலிருந்த புலிகளின் பயிற்சி முகாம்களை பலவந்தமாக மூடியும்.ஆயுதங்களை பறித்தும். புலிகளின் தொலைத்தொடர்பு கருவிகளை பறித்தும்.அன்ரன் பலசிங்கத்தை நாடு கடத்தியும் தொடர்ந்து பலவித நெருக்கடிகளை கொடுத்துவந்தனர்.

ஆனால் றோ அதிகாரிகள் எள் என்றதும் எண்ணெயாகி அவர்கள் உச்சந்தலையிலே உருகிவழிந்த ரெலோ தலைவரிற்கு வேண்டிய வசதிகளை றோ அதிகாரிகள் செய்தது மட்டுமல்ல . எண்பதுகளில் தமிழ்சினிமாவில் உச்சத்திலிருந்த இரண்டு பிரபல நடிகைகளையும் கொடுத்து மாமாவேலையும் செய்தனர். அதில் ஒருவர் இப்பொழுதும் சின்னத்திரையில் வில்லியாக வந்து பயமுறுத்திக்கொண்டிருக்கிறார். மற்றவர் காணாமல் போய்விட்டார்.இப்படி சிறீசபாரத்தினத்தை தங்கள் பிடிக்குள்ளேயே வைத்திருந்துகொண்டு தமிழீழத்திலும் புலிகள் அமைப்பிற்கு றோ அமைப்பு நெருக்கடிகளை கொடுக்கத்தொடங்கியது.இப்படி இந்தியாவின் செல்லப்பிள்ளையாய் மாறிவிட்ட சிறீசபாரத்தினத்தின் போக்கு பிடிக்காமல் ரெலோ அமைப்பின் முக்கிய இராணுவத்தளபதியாக இருந்த தாஸ் என்பவர் இயக்கத்திலிருந்து பிரிந்து போய்விடுவதென முடிவெடுத்தபொழுது அவரையும் அவரது முக்கியமான நண்பர்கள் 5 பேரையும் பேச்சுவார்த்தை நடத்தலாம் வாருங்களென்று அழைத்து யாழ் வைத்திய சாலையில் வைத்து சுட்டுக்கொன்றார்கள். அதே நேரம் புலிகளை எப்படியாவது வம்புச்சண்டைக்கிழுத்து புலிகளை அழித்துவிடும் றோவின் திட்டத்திற்கு சரியான சந்தர்ப்பம் பார்த்து ரெலோவும் ஈழத்தில் தாவடிப்பகுதியில் தமிழ்பாராழுமன்ற உறுப்பினர்களாகிய ஆலால சுந்தரம். மற்றும் தர்மலிங்கம் ஆகியோரை சுட்டுகொன்று விட்டு அதனை புலிகள் செய்தார்கள் என்று பிரச்சராப்படுத்தியது.

தொடச்சியாய் பலகொள்ளைகளை நடத்திக்கொண்டிருந்த (முக்கியமாக வாகனக்கொள்ளைகள்) ரெலோ உறுப்பினர்களிற்கு இடைஞ்சலாயிருந்த இரவு நேரக்காவல் கடைமையில் ரோந்து வரும் புலிகள் அமைப்பினரை கடத்துவது. துன்புறுத்துவது என்று தொடருந்துகொண்டிருந்ததபொழுது அவர்கள் எதிர்பார்த்த சர்ந்தர்ப்பமும் வந்தது. .......86 ம் ஆண்டு புலிகளிற்கும் இலங்கைக் கடற்படைக்கும் நடந்த ஒரு மோதலில் புலிகளின் தளபதியாகவிருந்த அருணாவும் வேறு சிலரும் இறந்து போய்விட்ட செய்தியறிந்து (அருணா அந்தத் தாக்குதலில் இறந்திருக்கவில்லையன்பது பின்னர்தெரியவந்தது) பொதுமக்கள் யாழ்குடாவெங்கும் வாழை தோரணம் கட்டி இறந்த போராளிகளின் உருவப்படங்களிற்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தார்கள். அருணாவின் ஊரான கல்வியங்காடுதான் சிறீசபாரத்தினத்தின் ஊருமாகும்.

கல்வியங்காட்டிலும் மக்கள் தோரணங்கள் கட்டி அருணாவின் உருவப்படங்களை வைந்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தவேளை அங்கு வந்த ரெலோ உறுப்பினர்கள் தோரணங்களை அறுத்தெறிந்து உருவப்படங்களையும் கிழித்தெறிந்து பொது மக்களையும் தாக்கியபொழுது அந்த இடத்திற்கு சென்று அவற்றை தடுக்க முயன்ற புலிஉறுப்பினர்களான முரளி என்பவரையும் மூத்த உறுப்பினரான பசீர்காக்காவையும் பலவந்தமாய் அடித்து இழுத்துச்சென்று தங்கள் முகாமில் அடைத்துவிட்டார்கள். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுது சிறீசபாரத்தினம் அதேகல்வியங்காட்டிலுள்ள முகாமில்தான் இருந்தார். முரளியையும் காக்காவையும் அடைத்து வைத்து விட்டு அவர்களை மீட்க எப்படியும் புலிகள் தாக்குதலிற்கு தயாராக வருவார்கள் அவர்கள் மீது தாக்குதலை தொங்கி அப்படியே தொடர்ச்சியாய் புலிகளை அழித்துவிடலாமென்கிற திட்டத்துடன் ரெலோ அமைப்பினர் தாக்குதலிற்கு தயாரான நிலையிலேயே இருந்தனர். ஊர் நிமைமைகள் அன்றைய புலிகளின் யாழ் மாவட்ட தளபதியான கிட்டு உடனடியாக தலைமைக்கு தெரியப்படுத்தபட்டு முரளியையும் காக்காவையும் ஒரு தாக்குல் மூலம் மீட்கலாமா அல்லது பேச்சுவார்த்தைமூலம் தீர்க்கலாமா என ஆலோசனை கேட்டிருந்தார்.

பிரபாகரனும் நிலைமைய சிக்கலாக்கமால் பேசித்தீர்க்கலாமென்கிற முடிவுடன் பேச்சு வார்த்தைக்கு கிட்டுவை அனுப்பாமல் அப்பொழுது தமிழ்நாட்டின் மதுரை மாவட்ட புலிகளின் அலவலகத்திலிருந்த மூத்த உறுப்பினரும் சிறீசபாரத்தினத்திற்கு நன்கு பழக்கமான லிங்கத்தினை சிறீசபாரத்தினத்துடன் பேசுவதற்காக அனுப்பிவைத்தார். காரணம் கிட்டுகொஞ்சம் கோபக்காரர்.இப்படியான சந்தர்ப்பங்களில் அமைதியாகப்பேசமாட்டார். ஆனால் லிங்கம் எப்படிப்பட்ட சிக்கலான நிலைமையிலும் கோபப்படாமல் அமைதியாக பேசிகோபத்திலிருப்பவர்களையும் அமைதியாக்கி விடுவார். அதனால்தான் அவரிற்கு புலிகளின் மதுரை அலுவலகத்தினை நிருவகிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அவசரமாக மாதகலில் வந்திறங்கிய லிங்கம் மேலும் இருவரை அழைத்தகொண்டு ஆயுதங்கள் எதுவுமின்றி கல்வியங்காட்டில் சிறீசபாரத்தினம் இருந்த முகாமிற்கு சென்று அங்கு தன்னை அறிமுகப்படுத்தி சிறீயுடன் கதைக்கவேண்டும் எனகேட்டதுமே லிங்கத்தை நோக்கி துப்பாக்கி சடசடத்தது. லிங்கம் அந்தவிடத்திலேயே இறந்துபோக அவருடன் கூடசென்றவர்களால் லிங்கம் கொல்லப்பட்ட செய்தி கிட்டுவிற்கு அறிவிக்கப்பட்டது.

அதற்கு மேலும் ரெலோவுடன் பேசிப்பயனில்லையென்று தெரிந்துகொண்ட புலிகள் அதிரடியாக ரெலோவின்மீது தாக்குதலைத் தொடுத்து அவர்களால் அடைத்து வைக்கப்பட்டிருந்த முரளியையும் பசீர் காக்காவையும் மீட்டு இறுதியாய் சிறீசபாரத்தினமும் கொல்லப்பட்டதுடன் ரெலோவின் ஆதிக்கம் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இங்கு புலிகள் அமைப்பினரைப்போலவே ஆட்பலத்திலும் ஆயுதபலத்திலும் சமமாய் இருந்தவர்கள் எனக்கருதப்பட்ட ரெலோ அமைப்பு புலிகளால் சுலபமாக அழிக்கபட்டதற்கு என்ன காரணங்களென பார்த்தால்.

ரெலோ வினால் கொல்லப்பட்ட லிங்கம் அம்மான்

1)ரெலோ அமைப்பு தனக்கு பின்புலத்தில் இந்தியா இருக்கின்றதென்கிற தைரியத்தில் தன்னுடைய சக்தியை அளவுக்கு மீறியதாக கற்பனை செய்து கொண்டதனாலும் . அவர்களது அடாவடித்தனங்கள் அதிகரித்தமையாலும்.உதாரணமாக யாழ்குடாநாட்டில் ஒரு வீட்டிலாவது ஒரு வாகனம் உருப்படியாய் நிற்க முடியாது முக்கியமாய் மோட்டார்சைக்கிள்கள். அவற்றை உடனேயே கடத்திக்கொண்டு போய்விடுவார்கள் அவற்றை தமிழ்நாடுவரை கொண்டு சென்று அங்கு பெரும்பணக்காரர்களிற்கு விற்றுவிடுவார்கள். அடுத்தது தொடர்ச்சியாய் பல கொள்ளைகள். இதனால் மக்கள் மனங்களிலிருந்து அன்னியப்படத்தொடங்கினார்கள்.

2) புலிகளுடனான மோதலை வழிநடத்த சரியான அனுபவமுள்ள ஒரு வழிகாட்டி இல்லாததும் ஒருகாரணம். அவர்களிடமிருந்த தாக்குதல்களை வழிநடத்துவதில் சிறந்தவர்களான தாஸ் மற்றும் காளியையும் அவர்களே யாழ்வைத்திய சாலையில் வைத்து சுட்டுக்கொன்று தாங்களே தங்கள் தலையில் மண்ணள்ளிப்போட்டுக்கொண்டனர்.அது மட்டுமல்ல அதந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் நடாத்திய ஊர்வலத்திலும் பகிரங்கமாக கண்மூடித்தனமாக சுட்டதிலும் ஒருவர் இறந்து போனது மக்களிற்கு ரெலோ மீதான கோபத்தினை அதிகரித்திருந்தது.

3) புலிகளிடம் இருந்த அளவு ஆயுத ஆட்பலம் இருந்திருந்தாலும் ரெலோ அமைப்பிடம் தொலைத்தொடர்பு வசதிகள் இருக்கவில்லை . அதனால் அவர்களால் உடனுக்குடன் தலைமைக்கும் மற்றவர்களிற்குமிடையினாலான செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியாமல் பல குழுக்களாக தனித்துப்போயிருந்தனர்.

4)புலிகளுடனான சண்டை தொடங்கியதும் அதனை முன்னின்று வழிநடத்தாமல் தான் எப்படியாவது தப்பித்து தமிழ்நாட்டிற்கு ஓடிவிட்டால் போதுமென்கிற நினைப்பில் சிறீ சபாரத்தினம் தலைமறைவாகியதும் மற்றைய ரெலோ அமைப்பினரிற்கு ஒரு சலிப்பை கொடுத்தது. அவர்களும் தாங்களும் ஆயுதங்களை போட்டு விட்டு எப்படியாவது தப்பியோடி விடலாமென முடிவெடுத்து ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் புளொட் இயக்க முகாம்களில் ஓடி ஒழிந்து கொண்டது.

5) எல்லாவற்றிற்கும் மேலாக அன்றைய காலகட்டத்தில் புலிகளும் ரெலோவும் இராணுவ ரீதியில் சமபலத்துடன் இருந்ததாகவே பலரும் எண்ணினர். ஆனால் ரொலோ அமைப்போ தாங்கள் புலிகளைவிட பலமாக இருப்பதாகவே எண்ணினர். அவர்களின் இந்த எண்ணம்தான் புலிகளை தொடர்ச்சியாய் வலுச்சண்டைக்கு இழுக்கக் காரணமாயிருந்தது. ஆனால் புலிகள் ஆரம்பம் முதற்கொண்டு இன்று வரை தங்கள் முழுமையான ஆயுத இராணுவபலம் இதுதானென்று வெளியில் காட்டிக்கொண்டதேயில்லை. அதுமட்டுமல்ல புலிகளின் யுத்தஅனுபவங்களும் அவர்களின் ஆன்ம பலமும்தான் வழைமைபோல ரெலோவுடனான யுத்தத்திலும் வெற்றிபெறவைத்தது.

எனவே எடுத்ததற்கெல்லாம் மகாபாரதத்திலும் பகவத்கீதையிலும் உதாரணம் காட்டுபவர்கள்.புலிகளின் இந்த யுத்தத்தையும் சகோதர யுத்தமல்ல தர்மயுத்தம் என்று ஏற்க மறுப்பது பகிடியாய்தான் இருக்கின்றது.அன்று நடந்ததும் தர்மத்திற்கான யுத்தம்தான்.

அடுத்ததாக ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கதுடனான மோதலை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.....

26 comments:

  1. Anonymous2:21 AM

    ரொம்ப முக்கியம்

    ReplyDelete
  2. நான் தற்ப்போது ஒரு சுருக்கமான ஈழ வரலாற்றை சேகரித்து வருகிறேன். உங்கள் பதிவை படித்தேன், பலரின் குழப்பம் தீர்க்கும் அரு மருந்து எனலாம்..
    உங்கள் சேவையை தொடருங்கள்..

    ReplyDelete
  3. Anonymous4:37 AM

    புலிகள் பல விஷயங்களுக்கு சரியான முறையில் விளக்கம் கொடுக்காததாலும், கருத்தியல் தளத்தில் பலவீனமானதாக இருந்ததாலும், பேரினவாதிகளும் விடுதலைக்கு எதிரானோரும் கதை புனைந்து இதையெ திரும்பத்திரும்பத் சொல்லி, பல பொய்களை உண்மை போல் உலாவ விட்டு உள்ளனர். இன்னமும் மாற்றுக் கருத்து அறிவுக் கொழுந்துகளோடு பேசப் போனால் ராஜினி திரணகம என்று ஆரம்பித்து வருவார்கள். எப்படி மக்ஸ் முல்லார் சமஸ்கிருதம் தாம் உலக முதல் மொழி என்று தவறாக ஒரு கருத்தியலை விட்டு செல்ல, அதையே பின்பற்றிக் கொண்டு இன்னும் சில உலக இரண்டாந்தர மொழியியல் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை அடிக்கிக் கொண்டு உளறிவருவது போல, மாற்றுக் கருத்துக் கண்மனிகள் அத்திவாரமே டான்ஸ் ஆடும் ஒரு அபத்தக் கருத்துக்களோடு வருவது இன்னும் நகைச்சுவை ('பில்டிங் ஸ்ராங்கு தான் ஆனா பேஸ்மென்ட்டு மட்டும் வீக்கு'). தொடர்க உங்கள் பணி! ஆனால் இப்போது எம்மோடு இணைந்திருக்கும் இயக்கங்களைப் அதிகம் புண்படுத்தாதவாறு எழுதுங்கள்! பழையவற்றைக் கிளறி எம் நிகழ்கால ஒற்றுமையைப் குழப்பாது இருந்தால் சரி!

    ReplyDelete
  4. /தமிழர் நேசன் @ 4:11 AM
    நான் தற்ப்போது ஒரு சுருக்கமான ஈழ வரலாற்றை சேகரித்து வருகிறேன். உங்கள் பதிவை படித்தேன், பலரின் குழப்பம் தீர்க்கும் அரு மருந்து எனலாம்..
    உங்கள் சேவையை தொடருங்கள்..//
    நன்றிகள் என்னுடைய வலைப்பூவில் பழைய பதிவுகளையும் பாருங்கள் உங்களிற்கு சேகரிப்பிற்கு உதவியாய் இருக்கும்

    ReplyDelete
  5. //Anonymous said...தொடர்க உங்கள் பணி! ஆனால் இப்போது எம்மோடு இணைந்திருக்கும் இயக்கங்களைப் அதிகம் புண்படுத்தாதவாறு எழுதுங்கள்! பழையவற்றைக் கிளறி எம் நிகழ்கால ஒற்றுமையைப் குழப்பாது இருந்தால் சரி!//

    உங்கள் கருத்திற்களிற்கு நன்றிகள் அடுத்தபாகத்தில் இப்பொழுது எம்மோடு இணைந்திருக்கும் இயக்கங்கள் பற்றியும் அவர்களது புரிதல்கள் பற்றியும் எழுதஇருக்கிகிறேன்.

    ReplyDelete
  6. பலரது குழப்பத்தையும் குதப்பலையும் இக்கட்டுரை நிச்சயம் தீர்த்து வைக்கும். சகோதர யுத்தம் சகோதர யுத்தமென்று இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து உழறும் பெருச்சாளிகளுக்குப் புரியும்படியான பதிவு.

    ReplyDelete
  7. Anonymous1:01 PM

    புலிகளைத் தங்கள் வலையில் விழுத்த முடியாத றோ பெண்களை குறிப்பாக சினிமா நட்சத்திரங்களைக் காட்டி மற்றக்குழுக்களை தனது காலில் வைத்துக்கொண்டது.
    இதற்குப் பலியானவர்களில் ஒருவர் சபாரத்தினம்.

    ReplyDelete
  8. Anonymous5:46 PM

    சியாம் அண்ணா

    இந்த போட்டி அமைப்புக்களில் தோற்றத்தில் இந்திய புலநாய்வு அமைப்பின் பங்கு இருந்தாலும் இந்த போட்டி அமைப்புக்களை வளர்த்து RAW வின் நிகள்ச்சி நிரலுக்கு ஆதரவு கொடுத்த கலைஞர் கருணாநிதியின் பங்கையும் உங்களின் எழுத்து வன்மையால் விளக்கமாக சொல்ல முடியுமா...??

    ReplyDelete
  9. //tamil24.blogspot.com @ 12:39 PM

    பலரது குழப்பத்தையும் குதப்பலையும் இக்கட்டுரை நிச்சயம் தீர்த்து வைக்கும். சகோதர யுத்தம் சகோதர யுத்தமென்று இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து உழறும் பெருச்சாளிகளுக்குப் புரியும்படியான பதிவு.//
    பலருடைய குளப்பங்களிற்கும் கேள்விகளிற்குமான என்னுடைய ஒரு சிறு முயற்சிதான் இது நன்றி

    ReplyDelete
  10. Anonymous11:35 PM

    கருணாநிதிக்கு தான் நம்ம ஒற்றுமை பிடிக்கல்லை என்றால் உங்களுக்குமா?!

    கண்ணை மூடிட்டு உலகம் இரண்டது என்று சொல்வது கருணாநிதி போன்றவர்களின் வழமை.

    கூட இருந்த வை.கோ வையே, தம்பி, தனயன் என்று அழைத்த அவரையே, தன்னை புலிகளோடு சேர்ந்து கொல்ல சதி செய்கிறார் என்று துப்புக்கெட்ட தனமா கதை அளந்தவர் கருணாநிதி.

    அந்த கேடுகெட்ட மனிசனுக்காக ஒரு பதிவு.

    உண்மையை தெரிஞ்சு இவை என்ன செய்து போடுவினம். அல்லது உண்மை தெரியாமலா இப்படிக் கதைக்கினம்.

    தூங்கிறவன எழுப்பலாம். நடிக்கிறவனை எழுப்பவே முடியாது.

    இருந்தாலும் ஒரு வரலாற்றுப் பதிவுக்காக இதை எழுதுவதை வரவேற்கலாம்.

    எதிர்காலத்தில் தவறுகள் திருத்தப்பட பாடமாகவும் இவை அமையட்டும்.

    ReplyDelete
  11. Anonymous8:42 AM

    ஆரம்பத்தில் எல்லா விடுதலை அமைப்புக்களுக்குமே ஈழமக்கள் சம ஆதரவு கொடுத்து வந்தார்கள். எனது வீட்டிலுருந்து கூட எந்த இயக்கப் பெடியள் சாப்பாடு உட்பட என்;ன ஆதரவு கேட்டாலும் கொடுத்து வந்தார்கள். பிற்பாடு அராலியில் என்று நினைக்கிறேன் சக தோழர்களுக்கு அஞ்சலி அறிவிப்பு ஒட்டப் போன இரு விடுதலைப்புலிகளை புளொட்காரர் கொன்று புதைத்தனர். ஈபிஆர்எல்எப் எனது வீட்டுக்
    கதவை உடைத்து ஆயுதங்களுடன் திருட வந்தது. டெலோ வாகனங்களைக் கடத்திச்

    சென்றது. இப்படியாக அவர்கள் மக்கள் ஆதரவை தாங்களே இழந்தார்கள். இதன் பின்னர் புலிகள் அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்த போது மக்கள் அவர்களைத் தடுக்கவில்லை.

    -சின்னக்கா

    ReplyDelete
  12. //தயா. @ 5:46 PM

    சியாம் அண்ணா

    இந்த போட்டி அமைப்புக்களில் தோற்றத்தில் இந்திய புலநாய்வு அமைப்பின் பங்கு இருந்தாலும் இந்த போட்டி அமைப்புக்களை வளர்த்து RAW வின் நிகள்ச்சி நிரலுக்கு ஆதரவு கொடுத்த கலைஞர் கருணாநிதியின் பங்கையும் உங்களின் எழுத்து வன்மையால் விளக்கமாக சொல்ல முடியுமா...??//
    தயா அடேல் எழுதிய விடுதலை வேட்கை புத்தகத்தில்ஓரளவு எழுதியுள்ளார் அடுத்த பாகத்தில் முடிந்தளவு எழுதுகிறேன்

    ReplyDelete
  13. //ஆரம்பத்தில் எல்லா விடுதலை அமைப்புக்களுக்குமே ஈழமக்கள் சம ஆதரவு கொடுத்து வந்தார்கள். எனது வீட்டிலுருந்து கூட எந்த இயக்கப் பெடியள் சாப்பாடு உட்பட என்;ன ஆதரவு கேட்டாலும் கொடுத்து வந்தார்கள். பிற்பாடு அராலியில் என்று நினைக்கிறேன் சக தோழர்களுக்கு அஞ்சலி அறிவிப்பு ஒட்டப் போன இரு விடுதலைப்புலிகளை புளொட்காரர் கொன்று புதைத்தனர். ஈபிஆர்எல்எப் எனது வீட்டுக்
    கதவை உடைத்து ஆயுதங்களுடன் திருட வந்தது. டெலோ வாகனங்களைக் கடத்திச்

    சென்றது. இப்படியாக அவர்கள் மக்கள் ஆதரவை தாங்களே இழந்தார்கள். இதன் பின்னர் புலிகள் அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்த போது மக்கள் அவர்களைத் தடுக்கவில்லை.

    -சின்னக்கா//

    சின்னக்கா 6 புலிஉறுப்பினர்களை புளொட் காரர் கொன்று புதைத்தது அராலி இல்லை அது சுளிபுரத்திற்கு அருகில் இருக்கும் பனிப்புலம் என்கிற இடம். 6 புலி உறுப்பினர்களையும் இரண்டு பொதுமக்களுமாக 8 பேரை கொன்று புதைத்திருந்தனர்.

    ReplyDelete
  14. Anonymous11:01 AM

    உந்த மாற்று இயக்கங்கள் செய்த துரோகங்களை தமிழ் மக்களால் மறக்க முடியாது. இந்திய இராணுவத்துடன் இணைந்து செய்தவை இலங்கை இராணுவத்துடன் சேந்து செய்தவையென ஏராளம்.

    ReplyDelete
  15. Anonymous11:04 AM

    ஆரம்பத்துில் இயக்கங்கள் எல்லாம் மகளுக்காகவே என்று வந்தார்கள் பிறகு வந்தவழி மாறி றோவின் காலில் வீழ்ந்து கொள்கையும் பற்றம் துறந்து நளினியுடனும் ராதாவுடனும் பாதம்பணிந்தனர்.

    ReplyDelete
  16. //Anonymous @ 11:04 AM
    ஆரம்பத்துில் இயக்கங்கள் எல்லாம் மகளுக்காகவே என்று வந்தார்கள் பிறகு வந்தவழி மாறி றோவின் காலில் வீழ்ந்து கொள்கையும் பற்றம் துறந்து நளினியுடனும் ராதாவுடனும் பாதம்பணிந்தனர்.
    //
    அனானி மக்களாவது மண்ணாங்கட்டியாவது ராதாவும் நளினியையும்விட வேறென்ன வேண்டும்.

    ReplyDelete
  17. //Anonymous @ 11:35 PM

    கருணாநிதிக்கு தான் நம்ம ஒற்றுமை பிடிக்கல்லை என்றால் உங்களுக்குமா?!

    கண்ணை மூடிட்டு உலகம் இரண்டது என்று சொல்வது கருணாநிதி போன்றவர்களின் வழமை.

    கூட இருந்த வை.கோ வையே, தம்பி, தனயன் என்று அழைத்த அவரையே, தன்னை புலிகளோடு சேர்ந்து கொல்ல சதி செய்கிறார் என்று துப்புக்கெட்ட தனமா கதை அளந்தவர் கருணாநிதி.

    அந்த கேடுகெட்ட மனிசனுக்காக ஒரு பதிவு.

    உண்மையை தெரிஞ்சு இவை என்ன செய்து போடுவினம். அல்லது உண்மை தெரியாமலா இப்படிக் கதைக்கினம்.

    தூங்கிறவன எழுப்பலாம். நடிக்கிறவனை எழுப்பவே முடியாது.

    இருந்தாலும் ஒரு வரலாற்றுப் பதிவுக்காக இதை எழுதுவதை வரவேற்கலாம்.

    எதிர்காலத்தில் தவறுகள் திருத்தப்பட பாடமாகவும் இவை அமையட்டும்.//
    நாங்கள் என்னத்தைத்தான் எழுதினாலும் கருணாநிதி கீறல் விழுந்த சி.டி மாதிரித்தானே இருக்கிறார்.அவர் அதை மாத்தமாட்டார். தமிழகத்து மக்கள் மாறிவருகிறார்கள்.

    ReplyDelete
  18. Anonymous11:06 AM

    சாத்திரியார்
    ஊரில சந்தியில நிண்டு வம்பளக்கும் சொறியர் வரிசையில் நீங்களும் ஒருத்தர் போல
    வரலாறு எழுதுபவர்க்கே சொந்தம்..அது போல நீரும் நல்லா விளாசியிருக்கிறீர்..ஆரும் பொம்பிளையளுக்கு தான் உந்த வெடி வேலை செய்யும்..டெலோக்கு அடிக்க திம்பு பேச்சு முடிந்து ஈ. என். எல். எப் என்ட அமைப்பை இந்தியா உருவாக்கின உடனேயே பிரபாகரன் எடுத்த முடிவு. அதுவும் மற்ற இயக்கங்களான ஈ.பி.ஆர்.எல்.எப்- ஈரோஸ் மாதிரி அமைப்பில முதல் கை வச்சா டெலோ கட்டாயம் புலிக்கு அடிக்கும் என்டதனால தான் முதலிலேயே டெலோவில கை வச்சவை புலிகள். பிறகு சொல்லுறதெல்லாம் சும்மா புலுடா. புலி இந்தியா உருவாக்கின ஈ. என். எல். எப் என்ட அமைப்பை அளிக்கத்தான் டெலோவை அளித்தால் சுகம் என்டு முதலில டெலோக்கு அடிச்சது.

    நல்ல வேளை டெலோ இதுக்கு தயாரா இருக்கேல. முதல்லையே திட்டம் போட்டிருந்தால் புலி அன்டைக்கு "வரலாறாக"ப் போயிருக்கும். அதால தான் டெலோ திருப்பி அடிக்காமல் விட்டது. பிறகு நீர் சொல்லுற மாதிரி தாஸ் காளி இல்லாதது தான் டெலோ அடிபட ஏலாமல் போனதென்டால் இருந்த மற்றப் பொடியள் எல்லாம் என்ன முருங்கக்காயே வச்சிருந்தவை? அந்தக் காலத்தில புலி வாளிக்குள்ளே குண்டு வச்சு அமத்திப்போட்டு ஒடி சனம் தான் ஆமிக்காரனிட்ட அடி வாங்குறது. (இப்பவும் அது தானே நடக்குது). டெலோ தான் முதலில இராணுவ முகாமுக்கை புகுந்து அடிச்சுக் காட்டின வீரன் கள். பிறகு தான் புலி புகுந்து அடிக்கப் பழகினவை. அப்பிடிப் பட்ட ஒரு இயக்கத்தை புலி அழிச்சது எவ்வளவு பெரிய முட்டாள் தனம். அதை உம்மைப்போலை ஒரு பச்சோந்தி நியாயப் படுத்துறது அதை விட முட்டாள் தனம்.

    கருணாநிதி சொல்லுற சகோதரப் படுகொலை ஒப்பரோய் தேவன் பத்மநாபா அமுதலிங்கம் ஏன் புலிக்குள்ளேயே எத்தின பேர்? தனிய டெலோ மாத்திரம் இல்லை. ஆக புலி செய்தால் எல்லாம் சரி என்டு சொல்லுற உம்மைப் போல சொறியர்கள் தமிழ் இனத்தில இருக்கும் வரை எங்கட சனத்திற்கு விடிவு இல்லை.

    அதை விடக் கேவலம் நீர் பொம்பிளைத் தொடர்பு எண்டு மற்ற இயக்கத் தலைவர்களை கொச்சப்படுத்துறது தான். புலித் தலைவர் எம்.ஜி. ஆருக்கு கோமணம் தோச்சு அவரின்ட வைப்பாட்டியளுக்கும் கச்சை கழுவின கதை உமக்கு தெரியாது போல. ஏன் கனக்க? தலைவர் என்னண்டு கலியாணம் செய்தவர்? கட்டாயக் கலியாணம் தானே? பாலசிங்கத்தார் விஸ்கி இல்லாட்டி அசைய மாட்டார். அதெல்லாம் அவரவர் சொந்த விருப்பங்கள்.

    ஆனால் சாத்திரி பிழையை செய்து போட்டு பிறகு சரி எண்டு வக்காலத்து வாங்க பிழையான வரலாறுகளை எழுதி நியாயப் படுத்தாதேங்கோ. இண்டைக்கு அவங்கள் (டெலோ) இதெல்லாம் மறந்து புலியோட (கருணாவே எதிர்த்து நிக்கேக்க) ஒத்து நிக்கிறது எவ்வளவு பெருந்தன்மை? புலி தோற்றாலும் விட்டுக் கொடுக்காமல் மின்டு குடுத்து நிக்கிறாங்கள். இன்டைக்கு கூட்டமைப்பில புலிக்காக கதைக்கிறது அவங்கட எம்பிமார் தானே. புலியெண்டா இப்பிடிச் செய்யுமே? நீர் இண்டைக்கும் அவங்களின்ட்ட தலைவரை பற்றி உப்பிடி எழுதினால் அது முறையோ?

    நான் சும்மா பொதுவாத்தான் கேக்கிறன். நீரெல்லாம் ஒரு மனிசரே? கருணாநிதிக்கு ஊம்ப நீர் உப்பிடி எழுதினால் நாளைக்கு அவங்கள் றோவோட மாறினால் என்ன செய்யிறது?

    ReplyDelete
  19. //Anonymous @ 11:06 AM

    ஜயா அனானி நான் நடந்த விடயத்தைத்தான் எழுதியிருக்கிறேன் இன்றைய ரொலோ தலைமையை பற்றியல்ல ..அது பற்றி அடுத்த பதிவில் எழுதுவேன் இன்னமும் ஆடே அறுக்கவில்லை அதுக்கிடையிலை நீர் ஏன் அதுதான் வேணுமெண்டு அடம்பிடிக்கிறீர் . அடுத்ததாய் நீர் யாரெண்டு தைரியமாய் சொந்தப் பெயரில் வந்தால் நான் தாராளமாய் விளக்கம் தரத்தயார் .முகவரி இல்லாதவருக்கெல்லாம் என்னால் கடிதம் போட முடியாது.

    ReplyDelete
  20. Anonymous9:13 PM

    mani bahrian pie.. part 2 qikily

    ReplyDelete
  21. Anonymous12:45 PM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  22. Anonymous12:46 PM

    புலிகள் பல விஷயங்களுக்கு சரியான முறையில் விளக்கம் கொடுக்காததாலும், கருத்தியல் தளத்தில் பலவீனமானதாக இருந்ததாலும், பேரினவாதிகளும் விடுதலைக்கு எதிரானோரும் கதை புனைந்து இதையெ திரும்பத்திரும்பத் சொல்லி, பல பொய்களை உண்மை போல் உலாவ விட்டு உள்ளனர். இதுதான் உண்மை.

    ReplyDelete
  23. Anonymous12:47 PM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  24. புலிகள் பல விஷயங்களுக்கு சரியான முறையில் விளக்கம் கொடுக்காததாலும், கருத்தியல் தளத்தில் பலவீனமானதாக இருந்ததாலும், பேரினவாதிகளும் விடுதலைக்கு எதிரானோரும் கதை புனைந்து இதையெ திரும்பத்திரும்பத் சொல்லி, பல பொய்களை உண்மை போல் உலாவ விட்டு உள்ளனர். இதுதான் உண்மை.

    ReplyDelete
  25. Anonymous12:55 PM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  26. stupids11:31 PM

    eppa eppapa neegalam thiruntha poreega? 100 pakathuku adicha epdi padikirathu.. ungalukellam arive kidayatha?? eppa pathalum pulampal thana?

    ReplyDelete