Sunday, November 27, 2011

தலைவணங்குகிறேன் அண்ணை

இன்று என் வீட்டுத் தோட்டத்திலேயே மாவீரர்களிற்காக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினேன்


மண்ணிற்காகவும் மாவீரர்களிற்காகவும்  மரணித்த தலைவனிற்றும் ஆயிரமாயிரம் மாவீர்களிற்கும்.மக்களிற்கும் அஞ்சலிகள்.


அன்றைய காலத்தில்
அனைவரிற்கும் தம்பி
அடுத்து வந்தவர்களிற்கெல்லாம்
அண்ணன்.
அன்பான கணவன்
அற்புதமான தந்தை
அலையாய் எழுந்த தமிழினத்திற்கு
தலைவன்.
தன்மானத்தை விற்றவர்களின்
தலை வலி
எதிரிக்கு எட்டாத சூரியன்
சுற்றியிருந்த சுயநலக்கூட்டத்திற்கு
புகழ்பாடும் கடவுள்.
தமிழினத்தின்
குறியீடு
தலைவணங்குகிறேன்
அண்ணை

1 comment:

  1. Anonymous6:51 PM

    நீங்கள்  இயக்கமாகவும், ஒரு பத்திரிகையாளராவும் கடைசி வரை விசுவாசமுள்ளவராக இருக்கிறீர்கள் என்று புரிகிறது. எனக்கு அரசியல் பெரிதாக தெரியாது. ஆனால் உங்கள் உண்மை சம்பவங்களை வாசிக்கும் போது கொஞ்சம் புரிகிறது. இவற்றை பல மொழிகளில் புத்தகமாக வெளியிடுங்கள். வரலாறு அழிய கூடாது. நீங்கள் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறீர்கள். அப்ப அவர் உண்மையில் உயிருடன் இல்லையா. பதில் எதிர்பார்க்கிறன்.

    ReplyDelete