Thursday, February 05, 2009

அபி அப்பா வைத்த குண்டு

சில வாரங்களிற்கு முன்னர் சக வலைப்பதிவாளர் சஞ்சய் என்பவர் புலிகள் தமிழ்நாடு மீனம்பாக்கம் விமானநிலையத்தில் குண்டு வைத்தார்கள் என்றொரு குண்டினை வைத்தார் அதற்கான விபரங்களுடன் அதனை புலிகள் வைக்கவில்லையென்று ஆதாரங்களுடன் எழுதியிருந்தேன். அடுத்ததாய் அபி அப்பா இன்று புதியதொரு குண்டினை போட்டிருக்கிறார்.இங்கு
அதாவது முன்னர் ஈழபோராட்டக்குழுவாக இருந்த சிறீ சபாரத்தினம் தலைமையிலானதும் முழுக்க முழுக்க இந்திய றோவின் கைக்கூலியாக செயற்பட்ட ரெலோ இரண்டு விமானம் செய்ததாம் அதனை புலிகள் குண்டு வைத்து தகர்த்தனராம். இனி இப்படி யார் யார் குண்டு வைக்கப் போகினமோ??? எல்லம் இந்திய அரசிற்குத்தான் வெளிச்சம்.

5 comments:

  1. Anonymous3:07 PM

    விடுதலை புலிகளை பிடிக்காது என்பது நூற்றில் ஒருவருக்கும் குறைவே. ஆனால் அந்த ஒருவருக்கும் குறைவானவர் பேசும், பேச்சு இருக்கிறதே என்னமோ எல்லாருமே புலிகளை வெறுக்கிற மாதிரி எழுதுவது.

    தமிழகத்தில் எந்த பள்ளி, கல்லூரி மாணவர்களை கேட்டு பாருங்கள் தெரியும் விடுதலை புலிகளை பற்றி, பிரபாகரனை பற்றி.

    இந்த புறம்போக்குகள், பாப்பான், தினமலம் சொல்வதை எல்லாம் கண்டு கொள்ளதிர்கள்.

    ReplyDelete
  2. அவர் சொன்னது உண்மை தான். அந்த விமானத்தில் ஒன்றின் படம் இங்கே http://www.uberreview.com/wp-content/uploads/2006/09/paper%20plane%20table.jpg

    இது மட்டுமா?

    கருணா செய்த கப்பல் செய்திருக்கார். பிள்ளையான் விண்கலம் அனுப்பியிருக்கார். சங்கரியார் செய்த ஏவுகணை விட்டிருக்கார். கருணாநிதி ஈழத்தமிழர்களுக்காக நிலாவில் மஞ்சள் துண்டு போட்டு இடம் பிடிச்சு வச்சிருக்கார்.

    ReplyDelete
  3. Anonymous4:43 PM

    அபியப்பாவின் காமடிகள்ன்னு புச்தகம் போட்டு விடுங்கள் சாத்திரி... என்ன இருந்தாலும் நானும் விமானம் செய்தேன் என்பது கொஞ்சம் ஓவரா இல்லே...

    ReplyDelete
  4. Anonymous6:09 PM

    அபி அப்பா கருணாநிதியோட அடிவருடி. அவர் அப்படித்தான் எழுதுவார். அவருக்கெல்லாம் போய் பதிவு போடதீங்க. எனது பார்வையில் டோண்டுவும், அபி அப்பாவும் ஒண்ணுதான்!

    ReplyDelete
  5. Anonymous12:10 AM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete