Sunday, September 03, 2006

ஈழபோராட்டத்தில் எனது (பொய்) சாட்சியம் பாகம் 5

புலோலி வங்கி கொள்ளை 1976ம் ஆண்டுவைகாசி மாதம் நிகழ்த்தபட்டது இந்த வங்கி இலங்கை மக்கள் வங்கியின் ஒரு கிராமிய கிளையாகும். இது தமிழ் இளைஞர் பேரவை செயலிழந்த பின்னர் தமிழீழ விடுதலை இயக்கம் என்று தொடங்கியவர்களாலேயே நிகழத்தபட்டதாகும். இஇந்த கொள்ளையை நடத்தியவர்களின் நோக்கம் அந்த கால கட்டத்தில் சிறீ லங்கா காவல் துறை மற்றும் புலனாய்வு தறையினரால் தேடபட்டும் மற்றும் சந்தேக வளையத்திழல் இருந்த இளுஞர்கள் தங்கள் வீடுகளில் இருந்து இடம் மாறியும் தலை மறைவு வாழ்க்கையும் மேற்கொண்டிருந்த படியால் அவர்களது அன்றாட செலவுகளையும் மற்றும் ஆயுத பொராட்டம் நடத்த ஆயுதங்கள் வெடி மருந்துகள் வாங்கவும் இந்த கொள்ளையை திட்டமிட்டனர் ஆனால் கொள்ளை நடந்ததின் பின்னர் நடந்த சம்பவங்களோ வேறானவை.

இந்த கொள்ளை சம்பவம் நடந்த நேரம் துரையப்பா கொலை வழக்கில் சந்தேகத்தின் பெயரில் புஸ்பராசா வெலிக்கடை சிறையில் இருந்தார். ஆனால் இந்த கொள்ளையை கென்ஸ் மோகன் சந்திர மேகன் தங்கமகேந்திரன் கோவைநந்தன் போனறவர்களால் நிகழ்த்தப்பட்டது. இந்த கொள்ளைக்கான திட்டத்தை தீட்டி அதை பொறுப்பெடுத்து நிறைவேற்றியவர்களிலுள் முக்கியமானவர்கள் தங்க மகேந்திரனும் சந்திர மோகனுமே.இதில் தங்க மகேந்திரன் திருகோணமலையை சேர்ந்தவர் இவர் யாழ்ப்பாணத்திலேயே தனது நண்பர்கள் வீடுகளில் அந்த நேரம் வசித்து வந்தார் இந்த கொள்ளை சம்பவத்தை திட்டமிட்ட காலங்களில் புஸ்பராசா குடும்பத்தினருடன் நல்ல உறவை கொண்டிருந்த காரணத்தால் அவர் புஸ்பராசா வீட்டிலேயே அந்த காலகட்டங்களில் வசித்தார்.

இவர்கள் திட்டமிட்டபடி கொள்ளை சம்பவம் மிகவும் கன கச்சிதமாக நிறைவேற்றபட்டது .வங்கியிலிருந்து சுமார் ஆறுலட்சம் பெறுமதியான நகைகளும் இரண்டு இலட்சம் பெறுமதியான பணமும் கொள்ளையிட பட்டதாக செய்திகள் வெளிவந்தன . அதேநேரம் அந்த வங்கியின் முகாமையாளராக பாலகுமார் அவர்களே இருந்தார். (ஈரோஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பிற்கு பின்னாளில் பொறுப்பாயிருந்தவர் இப்பொழுது புலிகள் அமைப்புடன் இணைந்து செயல் படுகிறார்) இந்த கொள்ளையில் பால குமாரிற்கும் தொடர்புகள் இருப்பதாக சந்தேகத்தின் பெயரில் கைதாகி பின்னர் விடுதலையானார். 76ம் ஆண்டு எட்டு இலட்சம் என்பது மிக பெரிய தொகையாகும்.

ஆனால் அந்த கொள்ளையைதிட்டமிட்டு கச்சிதமாக செய்து முடித்தவர்களிற்கு கொள்ளையிட்ட பணம் நகைகளை எங்கே கொண்டு போய் பாதுகாப்பாய் பதுக்குவது அந்த பெருந்தொகையான நகைகளை எப்படி விற்று பணமாக மாற்றுவது அதற்கடுத்த படியாக என்ன செய்வது என்கிற திட்டம் எதுவும் இருக்கவில்லை. அதே நேரம் கொள்ளை நடந்து முடிந்ததும் எப்படியும் காவல் துறையும் புலனாய்வு பிரிவினரும் ஏற்கனவே சந்தேக வளையத்தில் இருக்கும் இளைஞர்களை வளைத்து பிடிப்பார்கள் என்கிற காரணத்தால் எல்லோரும் தங்கள் தற்போதைய செலவிற்கு மட்டும் கொஞ்சம் பணத்தை எடுத்து கொண்டு மிகுதி பணம் நகைகளை எங்காவது சில காலம் மறைத்து வைத்து விட்டு சிறிது காலம் தலைமறைவாய் இருந்து விட்டு கொஞ்சம் காவல் துறையின் கெடுபிடி குறைந்ததும் அடுத்ததை யோசிக்கலாம் என்று நினைத்துதங்க மகேந்திரனின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு தனித்தனியாக பிரிந்து சென்று விட தங்க மகேந்திரனும் தனக்கு நம்பிக்கையான புஸ்பராசா வீட்டில் அந்த பணம் நகைகளை கொண்டு மறைத்து விட்டு அவரும் தலைமறைவாகி விட்டார்.

மறு நாள் இலங்கையின் எல்லா பத்திரிகைகளிலும் பரபரப்பு செய்தியாக வங்கி கொள்ளை செய்திதான் முதல் இடத்தில் இடம்பிடித்தது. வழைமை போல காவல்துறையும் புலனாய்வு துறையும் தங்கள் நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர்.அந்த காலகட்டத்தில்புலனாய்வு பிரிவிலும் காவல் தறையிலும் தமிழர்கள் அதிகமாக இருந்த கால கட்டம் . எனவே இந்த வங்கி கொள்ளையை பிடிப்பதற்கான அதிகாரியாய் இங்ஸ்பெக்ரர் பத்மநாதன் தலைமையில் ஒரு குழு அமைக்கபட்டு யாழில் பிரபலமான நகைகடைகள் மற்றும் அடைவுகடைகள் என்பன யாராவது நகைகள் விற்கிறார்களா? என்று கண்காணித்தும் சந்தேகத்தின் பெயரில் பலர்கைது செய்து விசாரிக்கபட்டுகொண்டும் இருந்தனர்.

ஆனால் அவர்களிற்கு சரியான ஆதாரம் எதவும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவர்களதுசந்தேகமும் விசாரணைகளும் அன்றை காலகட்டத்தில் அரசிற்கு எதிராய் இருந்தஇளைஞர்கள் மீதே இருந்ததாலும் பாலகுமாரிடமும் காவல் துறையின் தீவிர விசாரணைகள் தடந்ததாலும். தங்கள் மீது காவல் துறையின் சந்தேகம் விழுந்து விட்டதை உணர்ந்த தங்க மகேந்திரன் தாங்கள் எந்த நேரமும் கைது செய்யபடாலாம் என்று நினைத்ததால் புஸ்பராசா வீட்டிலிருந்த நகைகளை பாதுகாப்பாக வேறிடம் மாற்ற திட்டம் தீட்டினார் ஆனால் அந்த கொள்ளையை நடத்தியவர்களிற்கு அந்த நேரம் இந்தியாவுடனான தொடர்புகள் ஏதும் இருக்காத காரணத்தால் அவர்களிற்கு இந்தியாவிற்கு தப்பிசெல்லும் யோசனை தோன்றவில்லை எனவே மற்றைய மாவட்டங்களில் அவ்வளவு நகைகளை கொண்டு சென்று விற்க முடியாது பிடிபட்டு விடவார்கள்.

எனவே கொழும்பில் அவர்களிற்கு உறவினர்கள் நண்பர்கள் இருந்ததால் கொழும்பிற்கு கொண்டு போவது என்று முடிவு செய்யபட்டு புஸ்பராசாவின் சகோதரி புஸ்பராணி மூலமாக மூண்று நான்கு தடைவைகளாக சூட்கேசுகளில் துணிகளில் மறைத்து கொழும்பிற்கு இரயில் மூலம் நகைகள் கொண்டு செல்லபட்டது. அங்கு முன்னர் தமிழ் மாணவர் பேரவையிலும் பின்னர் இளைஞர் பேரவையிலும் இருந்த தவராசாவின்(இவர்தான் இன்று ஈ.பி.டி.பி.அமைப்பின் முக்கிய உறுப்பினர் தவராசா)உதவியுடன் களவு பொருளை பொலிஸ்காரன் வீட்டிலேயே ஒளித்து வைத்தால் காவல்துறைக்கு சந்தேகம் வராது என்று சித்தாந்தத்தின் அடிப்டையில் மருதானையில் இருந்த தவராசாவின் காவல் தறையில் இருந்த ஒரு உறவினர் விட்டில் நகைகள் பதுக்கபட்டன.

ஆனால் வேகமாய் புலளாய்வில் இருந்த பத்மநாதன் குழுவினரோ ஒரளவு கொள்ளையரை நெருங்கிவிட்டிருந்தனர். அவர்கள் பரந்தன் இரசாயன் தெரழிற்சாலையில் பொறியியலாளராய் இருந்த தவராசாவின் மூத்த சகோதரன் தங்கராசாவை கைது செய்து விசாரணைக்காய் கொண்டு சென்றதும் அடுத்ததாய் தானும் எந்த நேரமும் கைது செய்ய படலாம் என்று பதறிப்போன தவராசா காவல்துறையிடம் ஓடொடி சென்று தனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை தனக்கு நகைகள் இருக்கிற இடம் தெரியும் காட்டித்தரலாம் ஆனால் அதற்கு மாற்றீடாக சகோதரனை விடுதலை செய்வதோடு தன்னையும் கைது செய்ய வேண்டாம் எனகேட்டு கொண்டு நகைகள் இருந்த இடத்தையும் யாரால் எப்படி எங்கிருந்து கொண்டுவரப்பட்டது

என்றும் விலாவாரியாக சொல்லி காட்டிகொடுத்து விட்டார். நாகரீகமாக சொல்வதானால் அரசுதரப்பு சாட்சியாக மாறிவிட்டார்.பிறகென்ன ஆத்திலை போட்டு குளத்திலை எடுத்தது மாதிரி அடுத்தநாள் பத்திரிகைகளில் புலோலியில் காணாமல் போன நகைகள் மருதானையில் மீட்கப்பட்டது என்று தலைப்பு செய்திகளில் வெளிவந்தது.அதுமட்டுமல்ல அந்த கொள்ளையில் சம்பந்த பட்ட அனைவரும் பாலகுமாரும் கைதாகி சிறைகளில் அடைக்கபட்டனர்.ஆனாலும் கொள்ளை போன நகைகளில் அரைவாசியே நகைகளே மீட்கப்பட்டது. கொழும்பிற்கு கொண்டுவரும்போது புஸ்பராசாவீட்டிலே கொஞ்சம் காணாமல் போனதாகவும் பின்னர் தவராசாவின் பொறுப்பில் இருந்தசமயம் கொஞ்சம் காணாமல் போனதாகவும் கொள்ளையில் சம்பந்நத பட்டவர்கள்பின்னர் குற்றம் சாட்டினர் .

ஆனால் அதற்கும் தங்களிற்கும் சம்பந்தமில்லை காவல்துறை அதிகாரிகளே பாதியை அள்ளிவிட்டு மீதியை நீதிமனறத்தில் ஒப்படைத்தனர் என்று புஸ்பராசா குடும்பத்தினரும் தவராசாவும் தங்கள் மீதான குற்றசாட்டை மறுத்தனர்.ஆனால் இங்கு யார் எவ்வளவு எடுத்தனர் என்று ஆராய்வது இந்த கட்டுரையின் நோக்கம் இல்லையென்பதால் அடுத்த தொடரில் புஸ்பராசா தனது புத்தகத்திலும் மற்றும் புலத்திலும் மாற்று கருத்தாளர்கள் என்று தங்களை இனங்காட்டுபவர்களும் இன்னொரு முக்கிய கொலைசம்பவத்தையும் திருப்ப திருப்ப புலியின் வாலில் கட்டிவிட துடிக்கின்றனர் அது யாழ்பல்கலை கழக விரிவுரையாளர் ரயனி திரணகம. எனவே அடுத்த பாகத்தில் ரயனியையும் திரணகமவையும் பார்ப்போம்....................._________________விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்

3 comments:

  1. சாத்திரியார் நடந்ததை சொல்கிறீர்கள், நன்றாக இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள்.
    பின்னூட்ட இடுகையில் பதிவினை முன்னுக்கு வரும் ஒழுங்கினை செய்தால் மேலும் உறவுகள் படித்துக்கொள்ள ஏதுவாக அமையும். கட்டுரைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி. ஈழபாரதி

    விரைவில் ஆவன செய்கின்றேன். நேரப் பிரச்சனை தான் ஆளைக் கொல்கின்றது!

    ReplyDelete
  3. http://www.blogger.com/login-comment.do

    ReplyDelete