Monday, May 04, 2009

உடன் பிறப்பே..




சூடு பிடித்துள்ள இந்திய தேர்தல் மற்றைய மானிலங்களை விட தமிழ்நாட்டு தேர்தல்களம் வழைமையை விட சற்று அதிகமாகவே சூடாகக்காணப்படுகின்றது..காரணம் ராஜீவ்காந்தியின் மரணத்திற்கு பின்னர் மீண்டும் பெரியதொரு ஈழத்தமிழ் ஆதரவும்.. அதே நேரம் மீண்டும் தனித்தமிழீழம் என்கிற பேச்சுக்கள் தேர்தல் பிரச்சார மேடைகளில் பகிரங்கமாக அரசியல்வாதிகளால் உச்சரிக்கப்படுகின்றது.ஈழத்தமிழர் மீதான அனுதாபம் என்பது கட்சி அரசியலைத்தாண்டி அனைத்துக்கட்சித் தொண்டர்களிடமும் தமிழர் என்கிற உணர்வால் ஒன்றுபட்டே நிற்கின்றது..ஆனால் அண்மைக்காலமாக சில தி.மு.க.தொண்டர்களிற்கு ஈழத்தமிழ் ஆதரவு என்பது ஒரு சங்கடமான நிலையை தோற்றுவித்துள்ளது.காரணம் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் கருத்துக்கள் ..கட்டுரைகள்.. இணையத்தளங்களின் விவாத மற்றும் பின்னூட்டங்கள் என்பன கருணாநிதிமீதான வெறுப்புணர்வின் வெளிப்பாடாகவே இருக்கின்றது..இதனால் தி.மு.க ஆதரவாளர்களோ தங்கள் தலைவர் மீது புலம்பெயர் தமிழர்கள் புழுதிவாரி இறைக்கிறார்கள் என்று குறைப்பட்டுக்கொள்வது மட்டுமல்ல.. தமிழீழம் என்று சொல்லி விட்டதால் ஜெயலலிதா உடைனேயே உங்களிற்கு தமிழீழத்தினை ராஜபக்சாவிடமிருந்து புடுங்கித்தரவா போகிறார்.. பொறுத்திருங்கள் அவர் உங்களிற்கெதிராக அடுத்த பல்டியடிப்பார் அப்போ பார்த்துக்கொள்கிறோம்.. என்கிறார்கள்..

முதலில் ஒரு விடயத்தினை தி.மு.க. உறவுகள் புரிந்கொள்ளவேண்டும் ஈழத்தமிழர்கள் கருணாநிதியை குறைப்பட்டுக்கொள்வதால் உடைனேயே அவர்கள் எல்லோரும் ஜெயலலிதாவின் விசிறியாகிவிட்டார்கள் என்று அர்த்தம் கொள்ளும் அபத்தத்தினை செய்யாதீர்கள்..தமிழ்நாட்டில் இப்பொழுது தோன்றியுள்ள ஈழத்தமிழர் ஆதரவு என்கிற தீக்குச்சியை இடதுசாரிகள்தான் உரசினார்கள் அது தனிப்பட்ட முறையில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களினதும் தமிழகத்து இடதுசாரித்தோழர்களினதும் நட்புக்களினால் ஏற்பட்ட கலந்துரையாடல்களினாலும் நெடுமாறன் அவர்களின் முயற்சியாலுமே அது ஆரம்பமானது....அதற்கு வழைமைபோல திருமாவும்..ராமதாசும் ஆதரவு கொடுத்தனர்..பிறகு இவர்களிற்கு ஆதரவாக அரசியல் கணக்கினை கூட்டிக்கழித்து ஜெயலலிதா ஒரு அறிக்கை விடப்போக இங்கேதான் விவகாரம் சூடு பிடிக்கத்தொடங்கியது.. கருணாநிதியும் அனைத்துக்கட்சிக்கூட்டம்.. பதவி விலகல்..உண்ணாவிரதம்..மனிதச்சங்கிலி.. தந்தியடிப்பு..டெல்லிபயணம்.. அறிக்கைகள் ..என்று இப்படியான காட்சிகளெல்லாம் ஈழத்தமிழனின் உயிர்போகும் கதறல்களை பின்னணி இசையாக்கி அரங்கேறிக்கொண்டிருந்தது இவைகளை நான் புதிதாய் இங்கு எழுதிக்கொண்டிருக்கத்தேவையில்லை..அவை இந்த உலகமே அறிந்ததுதான்....

இவற்றையெல்லாம் முன்நின்று நடாத்தியது யாரோ ஊர்க்கோடியில் உண்டு உறங்கி உழன்றுகொன்றிருந்த ஒருவர் அல்ல.. ஒரு மானிலத்தின் அதிகாரத்துடனான சக்திவாய்ந்த முதலமைச்சரால்.. அப்பொழுதெல்லாம் எப்படியாவது யுத்தம் நின்று உயிர்ப்பலிகள் நிறுத்தப்படும் என்கிற நம்பிக்கையினை தமிழின் தொண்டன் தமிழினத்தின் தலைவன் என்று சொல்லிக்கொள்கிற கருணாநிதி மீது ஈழத்தமிழர்கள் அளவிற்கதிகமாகவே வைத்துவிட்டனர்..ஆனால் இந்திய ஆழும்கட்சியுடனான நட்பு அவர்களின் ஈழத்தமிழர் விவகாரத்தின் மீதான பார்வை.. இந்திய உளவுத்துறையினரின் ஆலேசனைகள்..இந்திய வெளிவிவகார மற்றும் உள்விவகார அமைச்சர்களினுடனான தொடர் சந்திப்புக்கள்.. அவர்களின் கருத்துக்கள் அனைத்தையும் உடனுக்குடன் பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு மானில முதலமைச்சரால் இந்தியாவால் இலங்கை யுத்தத்தினை நிறுத்த முடியாது என்று திடமாகத்தெரிந்தும்.. சிலமணிநேர உண்ணாவிரதம் ஒன்றினை நடாத்திவிட்டு.. ஈழத்தில் யுத்தமும் முடிவடைந்து விட்டது என்று ஒரு அறிக்கையும் விட்டு ஈழத்தமிழினம் அவர்மீது வைத்திருந்த இறுதி நம்பிக்கையையும் துடைத்தெறிந்துவிட்டார்.கருணாநிதியின் யுத்தம் முடிந்துவிட்டது என்கிற அறிக்கையினை பத்திரிகையில் படித்துவிட்டு நம்புகின்ற நூற்றாண்டில் இன்றைய உலகம் இல்லை என்பதனை அந்த அரசியல் சாணக்கியரிற்கு தெரியாமல் போனது சோகம்தான்..அவரின் அந்த அறிக்கையை படித்தபொழுது தமிழகத்து அரசியல் வாதிகள் கோமாளிகள் என்று சிறீலங்காவின் இராணுவத்தளபதி சொன்ன வார்த்தைகள்தான் நினைவிற்கு வந்து தொலைத்தது.. .

இப்படியான ஈழத்தமிழனின் ஏமாற்றங்கள்தான் தனித்தமிழீழம் என்று அதிரடி அறிக்கைவிட்ட ஜெயலலிதா மீதான எதிர்பார்ப்பாக மாறியிருக்கின்றது.. ஏனெனில் நெடிய பாலைவனத்தில் கொடிய வெய்யிலில் கால்வலிக்க நடந்தகொண்டிருக்கும் ஈழத்தமிழனிற்கு தூரத்தே தெரியும் ஒற்றை மரமாய் தெரிகிறார் ஜெயலலிதா.. அது ஆலமரமா?? அத்தி மரமா என்கிற கவலையெல்லாம் அவனிற்கில்லை..காரணம் அவனிற்கு தெரியும் அது இளைப்பாறும் இடமே தவிர அவனது இலக்கு அதுவல்ல..அவரும் தேர்தலில் வென்றதும்.. ஈழமா?? அது எங்கேயிருக்கிறது என்று கேட்கலாம்.. ஏனென்றால் அரசியல்வாதிகளின் பேச்சுக்களிலும் தேர்தல் வாங்குறுதிகளிலும் அதிகம் பாதிக்கப்பட்ட இனம் ஈழத்தமிழினம் என்பதால் எமக்கு அதன் அனுபவங்கள் அதிகமே...1976ம் ஆண்டே எமது அரசியல்வாதிகள் தமிழீழத்தனியரசு என்று வட்டுக்கோட்டையில் முழங்கியபோது எங்கள் கட்டைவிரலைக்கீறி இரத்தத்திலகமிட்டு எங்கள் ஒட்டுமொத்த நம்பிக்கைகளையும் வாக்குகளாக அள்ளிக்கொடுத்து வழியெங்கும் கூடிநின்று கொண்டாடி கொழும்பிற்கு வழியனுப்பிவைத்துவிட்டு.. தமிழீழத்தனியசின் எல்லைகளை கரித்துண்டால் கோயில் மடங்களிலும் மதவுகளிலும் கீறி வைத்துவிட்டு கொழும்பிற்கு போனவர்களின் வருகையையும் எம்மை மறந்து ஆ வென்று பார்தபடி இருக்கவே.. வாய்க்குள் புகுந்த இலையான் எங்கள் நினைவுகளை மீண்டும் கொண்டுவந்ததால்...

கொழும்பிற்கு போனவர்களை காணாமல் கலங்கினாலும் சிலநேரம் தமிழீழத்தனியரசை தவணை முறையிலை வாங்குகின்றார்களாக்கும்.. அதுதான் காலதாமதமாகிது... என்று நினைத்து ..அமிர்தலிங்கம் ஜயா வட்டுக்கோட்டை தீர்மானத்தின்படி தமிழீழத்தனியரசு வாங்கியாச்சுதா?? அது வாங்க காலதாமதமானாலும் பரவாயில்லை தனியரசிற்கு வேண்டிய அரியாசனம்...கொடி..குடை.. ஆலவட்டம் இவற்றையாவது முதலில் வாங்கியனுப்பிவிட்டால்.. அவற்றைப்பார்தாவது சந்தோசப்படுவம் என்று தந்திகளும் அடித்தோம்..அப்பொழுது எங்கள் ஜயாவிற்கு தமிழே மறந்துபோயிருந்தது..வட்டுக்கோட்டையை படிக்கத்தெரியாமல் வட்டக்கொட்டையா???வட் இஸ் திஸ் நான்சன்ஸ் என்றபடி தந்தியையும் தமிழீழத்தனியரசையும் சேர்த்தே குப்பைக்கூடையில் எறிந்தபொழுதுதான் எங்கள் ஊர்களில் உள்ள புளிய மரங்கள் மட்டுமல்ல... வேலி பூவரசு மரங்கள்கூட போதிமரமாகி ஈழத்தமிழர்களிற்கெல்லாம் வேண்டிய ஞானம் கிடைத்து விட்டது..எனவே தமிழகத்து உறவுகளே நாங்கள் எதை இழந்தாலும் உங்களை உங்களின் உண்மையான உணர்வுகளை எமக்காக உயிர்கொடுக்கும் உன்னதமான தியாகங்களை என்றென்றும் மறவோம்.. மதிப்போம்.. எனவே இந்தியாவில் இக்கட்டான காலகட்டங்களிலெல்லாம் அரசியல்வாதிகள் திரும்பியும் பாராத வேளைகளில் எங்களிற்கு உதவியவர்கள் நீங்களே..எங்கள் உண்மையான உடன்பிறப்புக்கள் நீங்களே.... பதவி என்பது தோழில் உள்ள துண்டுபோல என்று கூறிக்கொண்டே பதவிக்காக அந்தத் துண்டினால் முகத்தை மூடிக்கொண்டு அம்மணமாய் நிற்கும் அரசியல் தலைவர்களல்ல.

.நன்றி..

24 comments:

  1. Anonymous2:07 PM

    //ருணாநிதியின் யுத்தம் முடிந்துவிட்டது என்கிற அறிக்கையினை பத்திரிகையில் படித்துவிட்டு நம்புகின்ற நூற்றாண்டில் இன்றைய உலகம் இல்லை என்பதனை அந்த அரசியல் சாணக்கியரிற்கு தெரியாமல் போனது சோகம்தான்..அவரின் அந்த அறிக்கையை படித்தபொழுது தமிழகத்து அரசியல் வாதிகள் கோமாளிகள் என்று சிறீலங்காவின் இராணுவத்தளபதி சொன்ன வார்த்தைகள்தான் நினைவிற்கு வந்து தொலைத்தது.. .

    இப்படியான ஈழத்தமிழனின் ஏமாற்றங்கள்தான் தனித்தமிழீழம் என்று அதிரடி அறிக்கைவிட்ட ஜெயலலிதா மீதான எதிர்பார்ப்பாக மாறியிருக்கின்றது//

    இரண்டுமே காமெடி தான் அதென்ன ஜெயலலிதாவின் காமெடியை மட்டும் நம்புவது

    ReplyDelete
  2. அனானி கடைசி வரிகளை மீண்டும் ஒரு முறை படியுங்கள்..

    ReplyDelete
  3. உங்களுடைய பதிவின் கருத்துக்களுடன் ஒத்துப் போகும் அதே வேளையில், ஜெ'வைப் பற்றி

    //ஈழத்தமிழனிற்கு தூரத்தே தெரியும் ஒற்றை மரமாய் தெரிகிறார் ஜெயலலிதா.. அது ஆலமரமா?? அத்தி மரமா என்கிற கவலையெல்லாம் அவனிற்கில்லை..காரணம் அவனிற்கு தெரியும் அது இளைப்பாறும் இடமே தவிர அவனது இலக்கு அதுவல்ல..அவரும் தேர்தலில் வென்றதும்.. ஈழமா?? அது எங்கேயிருக்கிறது என்று கேட்கலாம்..//

    என சொல்லியுள்ளதை ஏற்க மறுக்கின்றது மனம்.. இது கொலைஞர் ஆதரவாளர்கள் பரப்பும் அவதூறு..

    ஏனெனில், ஜெ தேர்தல் முடிவு வரை எல்லாம் காத்திருந்ததே இல்லை.. !!!! தேர்தல் முடிவுகள் வர வர அமைதிப்படை அம்மாவாசை ராஜராஜ சோழன் ஆன கதையைக் காணலாம்..

    ஒரே ஆறுதல், இந்த தேர்தலில் முத்தமிழையும் விற்ற ஈனத் தலைவனின் முகமூடியை கழற்ற ஜெ உதவியது தான்...

    ReplyDelete
  4. //ஏனெனில் நெடிய பாலைவனத்தில் கொடிய வெய்யிலில் கால்வலிக்க நடந்தகொண்டிருக்கும் ஈழத்தமிழனிற்கு தூரத்தே தெரியும் ஒற்றை மரமாய் தெரிகிறார் ஜெயலலிதா.. அது ஆலமரமா?? அத்தி மரமா என்கிற கவலையெல்லாம் அவனிற்கில்லை..காரணம் அவனிற்கு தெரியும் அது இளைப்பாறும் இடமே தவிர அவனது இலக்கு அதுவல்ல..//

    அருமையான வரிகள்...

    ReplyDelete
  5. Anonymous4:36 PM

    // சாத்திரி said...
    அனானி கடைசி வரிகளை மீண்டும் ஒரு முறை படியுங்கள்..
    //

    ஜெயலலிதாவுக்கு துதி பாட முடிவு செய்து இருப்பதால் கடைசி வரிகள் அதற்கு சப்பைகட்டுவதாகவே இருக்கிறது. எப்படி பொடாவை ஆதரித்த வைகோவை பொடாவினாலேயே ஆப்பு வைத்தாரோ அது மாதிரி உங்களுக்கெல்லாம் ஜெயலலிதா கையாலேயே அப்பும் இருக்கிறது

    ReplyDelete
  6. சாத்திரி நன்றாக புரிந்து கொள்ளுங்கள், ஈழ தமிழர் மட்டும் அல்ல என்னை போன்று உண்மையாக உழைத்த திமுக தொண்டனும் புரிந்து கொண்டான் கருணாநிதியின் கபட வேடத்தை எனவே கண்டிப்பாக திமுக தொண்டன் யாரும் ஈழ எதிர்ப்பு நிலை எடுக்க மாட்டன். சில அல்லக்கைகள் இன்னும் அந்த கபட வேடதாரியை நம்பி கொண்டு இருக்கிறது.

    ReplyDelete
  7. ஈழப்பிரச்சனையில் இந்தியாதான் போரை நடத்துகிறது என்று கூப்பாடு போடும் கம்யுனிஸ்டுகள் கொஞ்சம் கண்ணைதிறந்து பார்த்தால் தேவலை. சீனா தனது அடுத்த இலக்காக இலங்கையை குறிவைத்து செய்யும் எந்த முயற்சிகளும் இந்த சிவப்புக் கொடி க்காரர்களுக்க் தெரியாது.ஏனெனில் சீனா செய்தால் அதி இவர்களுக்கு சீனி மாதிரி, இந்தியா செய்தால் அவர்களுக்கு இள்க்காரம். ஈழப்பிரச்சனையில் இந்தியாவின் இன்றைய நிலைமைக்கு மிக முக்கியமான காரணமான சீனாவையும் பாகிஸ்தானையும் எவரும் குறிப்பிடாதது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  8. எனக்கு என்னவோ ஜெ மேல் நம்பிக்கை இருக்கிறது.

    ReplyDelete
  9. உண்மையான திமுக தொண்டன் எவனுமே இன்றைக்கு ஈழத் தமிழர்களின் திடீர் ஜெயலலிதா பாசம் காரணமாக ஈழ ஆதரவினை விட்டு விட மாட்டார்கள்.

    அதே சமயம் , ஈழத்துக்காக அனேக தியாகங்களைச் செய்த ஒரு கட்சியின் தலைமையை நாயே , பேயே என்று திட்டுவதையெல்லாம் உணர்வுள்ள ஒரு திமுககாரன் கூட பொறுத்துக்கொள்ள மாட்டான்.

    யாரால் இந்த எழுச்சி ஆரம்பிக்கப்பட்டது என்று யோசியுங்கள் நண்பர் சாத்திரி...? கம்யூனிஸ்டுகள் தேர்தல் கூட்டணிக்காக ஒரு உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்கள்.

    அந்த எழுச்சி உருவானது திமுக நடத்திய மனிதச் சங்கிலியால் தான்.

    இன்றைக்கு தான் சொன்ன சொல்லை அடுத்த நொடியே மாற்றிப் பேசும் அதிமுக தலைமையை நம்பி , தங்களை இதுகாறும் ஆதரித்து வந்த திமுக தொண்டர்களை புறக்கணிக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்..

    அதற்கான பலனை அவர்கள் அறுவடை செய்யத்தான் போகிறார்கள்.

    ஈழத்தமிழர்களின் கலைஞர் மேலான வசவுதான் , திமுகவின் மேல் வருத்தம் கொண்டு , அவர்களின் நிலை மேல் கோபம் கொண்டு அமைதியாக இருந்த எம் போன்ற உடன்பிறப்புக்களை மீண்டும் திமுகவிற்கு ஆதரவாக களம் காண வைத்தது.

    ஆனால் அது ஈழத்தமிழர்களுக்கு எதிரானதல்ல. உண்மை நிலையை உணர்ந்ததால்!

    ReplyDelete
  10. நவீன்1:45 AM

    அஸ்குபிஸ்கு

    இலங்கை அமைச்சர்களும் காங்கிரஸ் அமைச்சர்களும் மாறி மாறி வாக்குமுலம் குடுக்கினம் யுத்தம் செய்தது யரர் என்று நீங்கள் கேட்டதில்லையோ? திரும்ப திரும்ப நடிக்காதீங்க

    ReplyDelete
  11. Nilavan1:51 AM

    // இதற்ககிடையில் செல்வி ஜெயலலிதா தானும் தமிழுனர்வுள்ளவள் எனத் உண்ணவிதரமிருந்து தமிழகத்தில் தமிழுனர்வை உசுப்பேற்றிவிட்டு தன்னிலையைஇ மாற்றிக்கொண்டார். தானுன்னவிதரமிருந்த மேடையில் உண்டியல் வைத்து ஈழத்தமிழருக்கென நிதி திரட்டினார். இதையும் விமர்சித்த கலைஞர் மத்திய அரசின் அனுமதியில்லாமல் சேகரிக்கும் நிதியினை இன்னொருநாட்டுக்கு அனுப்ப முடியாதெனவும் முதலமைச்சராக இருந்த ஜெக்கு இது தெரியாதா எனக் கிண்டலடித்தார். எனினும் ஜெ அப்பணத்தினை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்திடம் கையளித்து ஈழத்துக்கு அனுப்பி வைத்தார். இதிலிருந்து ஜெ சொன்னதைச் செய்யக்கூடிய வல்லமையும் வலுவுமுள்ளவர் என்பதை உலகுக்குனர்த்தினார்.//

    ReplyDelete
  12. ஒவ்வொரு ஈழத்தமிழனினதும் உள்ளத்து வரிகள் உங்கள் எழுத்து வரிகளினூடே இதற்கு மேல் நாம் என்னத்த விளக்கம் கொடுத்து!

    ReplyDelete
  13. Amma Kandipaga help pannuvango for Tamil Ezham...

    ReplyDelete
  14. Anonymous7:39 AM

    நீங்க என்ன புடுங்கினாலும் கலைஞரை தோற்கடிக்க முடியாது. ஏற்கனவே முதல் கட்ட பண பட்டுவாடா முடிஞ்சது. 25லிருந்து 30 தொகுதிகள் திமுக கூட்டணிக்கு நிச்சயம்.

    நக்கி பிழைங்கோ நாய்களே

    ReplyDelete
  15. Anonymous8:24 AM

    சாத்திரி அண்ணா! வணக்கம்! தமிழ்நாடு அரசியல் களத்தில் மக்களிடம் எதாவது சொல்லி
    வெற்றி பெற வேண்டும் என்று தான் அனைத்து அரசியல் தலைவர்களும் நினக்கின்றிரர்கள் .ஆனாள் மக்கள் தெளிவா இருக்கிறாங்க தி .மு.க . அணி தோல்வி பெரும் பயத்தில்
    கருணாநிதி செய்த உண்ணாநிலை உங்களுக்கு தெரியும்

    இது மக்கள் இடத்தில் எடுபடவில்லை என்பதை நான் பஹ்ரைன்
    வாழ தமிழ் மக்களிடமே பார்த்துள்ளேன் . இப்போது என கவலை
    எல்லாம் இன அழிப்பை நிகழ்த்தும் சிங்கள பேரின வாத அரசின் மீது
    எந்த நாடும் பொருளாதார தடை விதிக்கவில்லையே என்பது தான் .
    அதற்க்கு காரணம் இந்திய அரசு என்பதை இந்திய குடிமகன ஆன நான் குற்றம் சாட்டுகிறேன் . என மக்களுக்கு அவலத்தை தந்த இந்திய ஆச்சியலருக்கு எங்கள் வாக்கு அளிப்பதன் மூலம் திருப்பி அளிப்போம் ... உங்கள் கட்டுரை மூலம் தெளிவடைந்தேன் .
    நன்றி வணக்கம்
    சுரேஷ் குமார்
    பஹ்ரைன்

    ReplyDelete
  16. ///தங்களை இதுகாறும் ஆதரித்து வந்த திமுக தொண்டர்களை புறக்கணிக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்..///

    ஈழத்தமிழர்கள் தொண்டர்களை புறக்கணித்ததாகச் சொல்லாதீர்கள். அது தவறு.

    தொண்டர்கள் எப்போதும்போல் துணையாகவே உள்ளனர்.

    தலைவர்கள் தாம் தன்னலம், தம் குடும்பநலம் காரணமாக.... (மறுபடியும் தலைவர்களைத் திட்டுவதாகச் சொல்வீர்கள்!)

    ReplyDelete
  17. ஜெயா செய்ததின் ஒரு விகிதமான அளவு கூட நன்மையை கலைஞர் ஈழத்தவருக்கு செய்தது கிடையாது....

    செய்தது எல்லாமே இரண்டகம்..

    கத்தரிக்காய் மலிந்தால் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும்..


    என்ன கலைஞர் இந்த தேர்தலில் தோற்றால் திமுக உடைவதை தவிர்க்க முடியாதது ஆகவே தோண்றுகிறது..

    இந்த தேர்தலில் வெற்றி பெற்று தனது அடுத்த வாரிசை அறிமுக படுத்தி இருந்தால் மட்டுமே திமுக ஆட்ச்சியில் இருக்கும் கட்ச்சி என்பதால் வரும் தலைவருக்கு தலைவணங்கி இருக்கும்.. ஆனால் இப்போ அது சந்தேகம் தான்...

    ஜெயா மட்டும் இந்த தேர்தலில் வெண்றால் கலைஞரின் ஆட்ச்சி கவிழ்வது மட்டும் உறுதி...

    காங்கிரசை நம்பி இருக்கும் கலைஞர் காங்கிரசாலே காலை வாரி விட படும் காலம் வரும்...

    ReplyDelete
  18. நண்பர்களே!

    நான் இங்கு புதியவன்.

    இலங்கை பிரச்சனையில் இந்தியாவின் நிலை என்ன?

    இலங்கையில் அப்பாவி மக்கள் கொள்ளப்படவில்லை என்கிறார்களா?
    எனக்கு தெரிந்து எல்லோரும் (நேற்று ராகுல் காந்தி உள்பட), அது வருத்தப்பட வேண்டிய செயல் என்கிறார்கள், அப்போ எல்லோரும் ஒத்து கொள்கிறார்கள் அங்கு அப்பாவி மக்கள் கொள்ளபடுகிரார்கலென்று. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? எதாவது செய்தார்களா?
    அதாவது அங்கு போய் சண்டை போடவேண்டாம்... அவர்களோடு பேச வேண்டும், கேட்கவில்லைஎன்றால் அவர்களுடான தூதரக உறவு, பொருளாதார தடை ஏற்படுத்தவேண்டு. ஏன் இதுபோன்ற எந்த நடவிடிக்கையும் எடுக்கவில்லை?

    நம் முதல்வர் உண்ணாவிரதம் இருந்தவுடன் போர் நிருத்தமுடுயுமேன்றால், என் இதை முன்னரே செய்யவில்லை?

    நம் முதல்வரின் உண்ணாவிரதம் மத்திய அரசுக்கு எதிரானது அல்ல(இது சிதம்பரம் சொன்னது), பிறகு ஏன் நீங்கள் தலையிட்டு போர் நிறுத்தம் ஏற்பட உதவினீர்கள்?

    அப்பாவி மக்களை கொள்ளும் இலங்கை அரசை பற்றி, நம் முதல்வருக்கு கடிதம் எழுதும் சோனியா அம்மையார், ஏன் அதைபற்றி பேசவே இல்லை?

    அப்பாவி மக்களை கொள்ளும் இலங்கை அரசை பற்றி பாராளுமன்றத்தில் பசிய கனிமொழி, ஏன் மக்கள் மன்றத்தில் பேசுவதில்லை?

    நம் முதல்வர் எந்த கேள்வி கேட்டாலும் ஜெயலலிதாவை மேற்கோள் காட்டியே பேசுகிறாரே, ஏன்?

    ReplyDelete
  19. உங்கள் இந்த இடுகைக்கு நன்றி.ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் ,இன்றைய வன்னி மக்களின் அவல நிலை ,போர்க்களத்திலிருந்து வெளியேறி அகதி முகாம்களில் அடைக்கப் பட்டிருக்கும் தமிழ் மக்களின் மிக மோசமான நிலை , ராணுவக்கட்டுப்பாட்டிலும் கொழும்பிலும் வசிக்கும் தமிழ் மக்களின் சுதந்திரம் இல்லாத அடிமை நிலை போன்ற மிக ஆழமமான காத்திரமான விஷயங்களைப் பற்றி பேச வேண்டிய நாங்கள் இன்று தேர்தல் ஒன்றை மட்டுமே அடிப்ப்டையாகக் கொண்ட விஷயங்களை பேச வேண்டியுள்ளது துரதிஷ்டவசமான விஷயம்தான். ஆனாலும் ஜனநாயக நாட்டில் தமிழக மக்களுக்கு தங்கள் உணர்வை ஆளும் வர்க்கத்துக்கு காட்டக் கூடிய ஒரு கருவி தேர்தல்தான் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.
    நம்பிய தமிழர்களுக்கு கருணாநிதி அவர்கள் ,ஏமாற்றத்தை தந்து விட்டார் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் வந்த விரக்தியால் தான் அவருக்கு எதிராக ஈழத்தமிழர்கள் கருத்துக்கள் கூறியுள்ளார்கள்.
    அதே போல் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் ஈழத்தமிழினம் தமக்கு ஆதரவாக ஒரு முக்கியமான தமிழகத்தலைவர் (,கருணாநிதி அவர்களுக்கு இணையாக இன்று அரசியல் பலம் உள்ளவர் ஜெயலலிதாதான் என்பதில் சந்தேகம் இல்லை.)தமிழீழம் என்ற கோட்பாட்டை ஆதரித்து குரல் கொடுத்ததற்காக நன்றி சொல்கிறார்கள் .ஜெயலலிதா ஏதோ செய்வார் என்று பெரிதாக நம்பிக்கை ஒரு இல்லாவிட்டாலும் ,முன்பு அவர் மோசமான தமிழீழ எதிர்ப்புக் கொள்கையை கொண்டிருந்தவர் என்று தெரிந்திருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் அவரது பேச்சு அரசியல் ராஜதந்திர ரீதியில் தமிழீழம் என்ற கோட்பாட்டுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் என்றே கொள்ள வேண்டும்.
    இந்த தேர்தலையும், பதவிகளையும் விட தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றியும், தமிழர்களின் உயிரும் பெரிது என்பதை தமிழ் உணர்வாளர்கள் மறக்கக் கூடாது.
    இந்த நேரத்தில் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்
    கருணாநிதி அவர்களின் இப்போதைய செயல்பாடுகளின் மீது எங்களுக்கு மனத்தாங்கல் இருக்கலாம் ,ஆனால் அவர் ஒரு முதிர்ந்த அரசியல் தலைவர் ,தமிழ் நாட்டின் முதல்வர் ,பல ஆதராவாளர்களைக் கொண்ட ஒரு பெரிய கட்சியின் தலைவர் ,அதனால் அவரின் கருத்துக்கள் ,செயல்பாடுகளில் எங்களுக்கு முரண்பாடு இருந்தால் அதைக் கண்ணியத்துடனும் ,மரியாதையுடனும்தெரிவிக்க வேண்டும் ,மரியாதை இல்லாத வார்த்தை பிரயோகங்களை தவிர்க்க வேண்டும்.
    அங்கு ஈழத்தில் உயிர்கள் ஒவ்வொரு நிமிடங்களும் போய்க் கொண்டு இருக்கும் போது , அதைத் தடுப்பதற்கு நாங்கள் ஆக்கபூர்வமான செயல்களில் இறங்கி எமது சக்தியை செலவழிக்க வேண்டுமே ஒழிய, சக பதிவர்களைத் திட்டுவதற்கு செலவழித்து வீணாக்க வேண்டாம் .
    இந்த நேரத்தில் தலைவர்கள் எப்படி என்றாலும் ஈழத்தமிழர் மீது இன உணர்வு ,மனிதாபிமான உணர்வு காரணமாக ஆதரவு காட்டும் பெரும்பாலான தமிழ் நாட்டு மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் .
    -வானதி

    ReplyDelete
  20. ஈழத்தமிழர்கள் தொண்டர்களை புறக்கணித்ததாகச் சொல்லாதீர்கள். அது தவறு.

    தொண்டர்கள் எப்போதும்போல் துணையாகவே உள்ளனர். /

    ஆம். தொண்டர்கள் எப்போதும் போல் துணையாகவே உள்ளனர். ஆனால் , கலைஞரின் மேல் காழ்ப்புணர்வு கொண்டு ஈழத்தமிழர்கள் இப்படித் தொடர்ந்து வெறுப்புணர்வை கக்கினால் எப்படி பொறுத்துக்கொள்வார்கள்?

    ReplyDelete
  21. ஈழத்தமிழர்கள் தொண்டர்களை புறக்கணித்ததாகச் சொல்லாதீர்கள். அது தவறு.

    தொண்டர்கள் எப்போதும்போல் துணையாகவே உள்ளனர். /

    ஆம். தொண்டர்கள் எப்போதும் போல் துணையாகவே உள்ளனர். ஆனால் , கலைஞரின் மேல் காழ்ப்புணர்வு கொண்டு ஈழத்தமிழர்கள் இப்படித் தொடர்ந்து வெறுப்புணர்வை கக்கினால் எப்படி பொறுத்துக்கொள்வார்கள்?

    ReplyDelete
  22. அன்பு தம்பி சாத்திரி! அருமையாக அரசியல் பதிவுகள் போடுவாய் இந்த தேர்தல் நேரத்திலே என் நினைக்கிறேன்! இந்த அண்ணனுக்காக கலைஞரை அதிகமா திட்டாம பதிவு போடுப்பா!

    என் தம்பிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. ஜெயா செய்ததின் ஒரு விகிதமான அளவு கூட நன்மையை கலைஞர் ஈழத்தவருக்கு செய்தது கிடையாது....
    /

    அப்படியானால் என்ன எழவுக்கய்யா கலைஞர் ஒன்றுமே செய்யலை கலைஞர் ஒன்றுமே செய்யலை என்று கூப்பாடு போடுறீங்க?

    ஈழத்தாயிடம் சரணடைந்திருக்க வேண்டியதுதானே?

    இதே பதிவை எழுதிய நண்பர் சாத்திரி இந்தியாவே நினைத்தாலும் போரை நிறுத்த முடியாது எண்டும் எழுதுகிறார்.

    அப்படியானால் கலைஞர் போரை நிறுத்தவில்லை என்று அழுது புலம்புவது ஏன்?

    ReplyDelete
  24. //அபி அப்பா @ 7:21 AM

    அன்பு தம்பி சாத்திரி! அருமையாக அரசியல் பதிவுகள் போடுவாய் இந்த தேர்தல் நேரத்திலே என் நினைக்கிறேன்! இந்த அண்ணனுக்காக கலைஞரை அதிகமா திட்டாம பதிவு போடுப்பா!

    என் தம்பிக்கு வாழ்த்துக்கள்!//

    அபி அப்பா ங்கிற அண்ணா எங்காவது ஏதாவது பதிவிலாவது நான் கலைஞரை தனிப்பட்ட ரீதியாக திட்டியிருந்தால்.. அதை அங்கினை வெட்டி இங்கினை கொண்டாந்து ஒட்டி ஏண்டா பயலே இப்பிடி திட்டுறாயெண்டு ஒரு போடு போட்டீங்கன்னா நானும் பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்டிட்டு இந்தப் பக்கமே வராமல் ஓடிடுவேன்.. நன்றி.

    ReplyDelete