அபி அப்பா என்றொரு பதிவர். அவர் பல விடயங்களை நல்ல நகைச்சுவையாகப்பதிவார். அவரது நகைச்சுவை பதிவுகளை நானும் படித்து சிரிப்பதுண்டு அப்படித்தான் .எப்போதும் போடும் நாய் இன்னிக்கு போடலை.என்றொரு பதிவிட்டிருந்தார் நானும் ஏதோ நகைச்சுவைப்பதிவாகவே இருக்குமென நினைத்து உள்ளே போய் பார்த்தால் அங்கு அவரது பதிவில் ஈழத்து இயக்கங்களில் ஒன்றாகவிருந்த ரெலோ என்கிற இயக்கத்தின் இரண்டு விமானங்களை புலிகள் குண்டு வைத்து தகர்த்தனர் என்கிற ஒரு தவறான கருத்தினையும் எழுதிப்பதிவிட்டிருந்தார். அதற்கான பதிலினை நான் அவரது பதிவிலேயே இட்டிருந்தாலும்.மேலும் இதுபோன்ற தவறான தகவல்கள் அதனைப்படித்தவர்கள் மனங்களில் பதிந்து போகாமல் இருக்கவே புலிகள் முதலில் செய்த விமானம் பற்றிய விபரத்தினையும். ரெலோ அமைப்பு விமானங்கள் செய்யும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லையென்பதனையும் தெளிவு படுத்தவே எனது இந்தப்பதிவாகும்.
1985 ம் ஆண்டளவில் திம்புப்பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த காலத்தில் யாழ் குடாநாட்டின் அப்போதைய புலிகளின் தளபதியாக இருந்த கிட்டு தலைமையில் யாழ் குடாநாடு முதன் முதலாக புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியாகியது. வடக்கு கிழக்கின் மிகுதிப் பகுதிகளெல்லாம் இலங்கையரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. (ஏன் மற்றைய இயக்கங்கள் காவலுக்கு நிக்கவில்லையாவென யாராவது அனானியாக வந்து பதிவு போடாமல் தங்கள் அடையாளத்துடன் வந்து பதிவிட்டால் அதற்கான பதில் தரப்படும்)இந்தக் காலகட்டத்தில் புலிகள் அமைப்பு யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் தங்கள் ஆயுதத் தொழிற்சாலைகளை உருவாக்கி ஆயுதங்களையும் செய்யத் தொடங்கியிருந்தனர்.அவற்றினுள் முக்கியமான பெரியதொரு ஆயுதத் தொழிற்சாலைதான் எனது கிராமமான மானிப்பாயில் இருந்த தொழிற்சாலை. அங்கு அப்பையா அண்ணை என்கிற புலிகளின் மூத்த உறுப்பினரின் கண்காணிப்பில் அந்தத் தொழிற்சாலை இயங்கி வந்தது. (அவரைப் பற்றிய பதிவு) அவருடன் நானும் பலகாலங்கள் இணைந்து அந்த தொழிற்சாலையில் பணியாற்றியிருக்கிறேன்.இங்கு புலிகளிற்கு வேண்டிய கண்ணி வெடிகள் புலிகளின் சொந்தத்தயாரிப்பான எறிகணைகள்(மோட்டார் செல்கள்) எல்லாம் இங்கு தயாரிக்கப்படும்.
அதே நேரம் அப்பையா அண்ணையும் இராணுவத்திறகெதிராக பயன்படுத்தககூடியதாய் புதிது புதிதாய் ஏதாவது வெடிபொருட்கள். இராணுவ வாகனங்கள் என்று செய்ய முயற்சிப்பார். அப்படியான ஒரு முயற்சிதான் புலிகளிற்காக விமானம் செய்யும் முயற்சியும்.அன்றைய காலகட்டத்தில் உள்ளுர் தொழில் நுட்பத்தில் இலகுவாய் உருக்கக்கூடிய அலுமினியத்தில்தான் விமானம் வடிவமைக்கப்பட்டது. அதற்கான தொழில் நுட்ப வேலைகளை கண்ணாடி வாசுவும் (அவரைப்பற்றிய பதிவு) றஞ்சன் என்கிற ஒரு பொறியியலாளரும். பாலா என்பவருமே செய்வார்கள். அந்தத் தொழிற்சாலைக்கு வேண்டிய வெடி பொருட்கள் மற்றும் உபகரணங்களை வினியோகிக்கும் பொறுப்பு குட்டி சிறியிடம் இருந்தது. நிதி மற்றும் அங்கு பணியாற்றுபவர்களிற்கான உணவு வழங்குதல்என்பனவற்றிற்கு மானிப்பாய் பகுதியின் அன்றைய அரசியல் பொறுப்பாளராக இருந்த மயூரன் பொறுப்பாக இருந்தார்..ஆரம்பத்தில் ஜெர்மனிய நிறுவனமான வொக்ஸ் வாகன் கேவர் காரின் இயந்திரத்தினைத்தான் விமானத்திற்கு பொருத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் இரண்டு 125.சி சி ஊருந்துளியின் (மோர்டார் சைக்கிள்) இயந்திரத்தினையும் பயன்படுத்தி விமானத்தினை பறக்கவைக்கும் முயற்சிகள் நடந்தது.தயார் செய்த விமானத்தினை எடுத்துச்செல்ல இலகுவாக அதன் இறக்கைப்பகுதிகளை களற்றியெடுத்து உழவுஇயந்திரத்தில் கல்லுண்டாய் வெளிக்கு கொண்டுபோவோம். கல்லுண்டாய் வெளியென்பது மானிப்பாய்க்கும் அராலிக்குமிடையில் உள்ளதொரு பரந்தவெளி இங்கு விமானம் ஓடுவதற்கு வசதியாக வளைவுகளற்ற நேரான ஒரு வீதி உண்டு. அந்த வீதியில் விமானத்தினை மீண்டும் பொருத்தி பறப்பதற்கான முயற்சிகள் நடைபெறும்.அனேகமாக வாசு அல்லது பாலாதான் விமானத்தினை உள்ளிருந்து இயக்குவார்கள்.இதே நேரம் யாழ் பண்ணைக்கடலில் விழுந்த இலங்கை இராணுவத்தின் உலங்கு வானூர்தி ஒன்று மீனவர் ஒருவரின் வலையில் அகப்பட அதனையும் கட்டியிழுத்து வந்து அதன் இயந்திரப்பகுதியை பிரித்தெடுத்து இயக்கும் முயற்சிகளும் நடந்தது. ஆனால் அந்த இயந்திரம் பலகாலம் கடல்நீரில் கிடந்ததால் பலனேதும் கிடைக்கவில்லை.
இப்படி விமானம் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கையில் கண்ணாடி வாசுவும் றஞ்சனும் நாவற்குழி முகாம்தாக்குதல் முயற்சியில் இறந்து போனாலும் விமானம் செய்யும் முயற்சி இந்தியப்படையின் வருகையும் அவர்களுடனான புலிகளின் யுத்தம் தொடங்கியதையிட்டு இந்திய உலங்குவானூர்திகள் மானிப்பாயிலிருந்த ஆயுதத் தொழிற்சாலை மீது உந்துகணை(றொக்கற்)தாக்குதல் நடத்தியதில் அந்த தொழிற்சாலையுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு விமானங்களும் அழிக்கப்பட்டதுடன். புலிகளின் விமானம் செய்யும் முயற்சி தறகாலிகமாக ஒரு ஓய்விற்கு வந்திருந்தது. இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் ஆரம்பகால விமானத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்த எவரும் இல்லாத நிலையில் மீண்டும் லெப்.கேணல் சங்கரண்ணாவின் முயற்சியும் வெளிநாடுகளில் விமானத்தெழில் நுட்பமும் வானோடிகளாகவும் பயிற்சி பெற்ற சில இளைஞர்களின் முயற்சியும்தான் இன்றைய புலிகளின் விமானங்கள். அவைபற்றிய முழு விபரங்கள் அதற்குரிய காலம் வரும்பொழுது பதிவாகும்.இதுவே புலிகள் அமைப்பின் விமானத்தயாரிப்பின் முயற்சிகளாகும்.
ஆனால் 1985ம் ஆண்டு அழிக்கப்பட்டு விட்ட ரெலோ இயக்கம் விமானம் செய்வதானால் அதே யாழ்குடாநாட்டில்தான் செய்திருக்கவேண்டும். ஏனெனில் இந்தியாவில் செய்யமுடியாது அப்படியொரு முயற்சியை இந்திய அரசு விரும்பாது. அப்படி யாழ்குடாநாட்டில் செய்திருந்தாலும் விமானம் பறப்பு முயற்சிகளை மேற்கொள்வதங்கு உகந்ததாக நேரான பாதையும் மரங்கள் வீடுகளற்றதொரு வெளியான இடம் யாழ் குடாவில் மூன்றுதானிருந்தது அதில் ஒன்று வல்லைவெளி இங்கு அருகிலேயே தொண்டைமானாறு இராணுவ முகாம் இருந்ததாலும் மற்றும் இந்தவீதி வடமராட்சியையும் தென்மராட்சியையும் இணைக்கும் முக்கியமானதொரு வீதி என்பதால் வாகனப்போக்குவரத்துக்கள் அதிகம். எனவே இங்கு விமானத்தை பரீட்சிக்கமுடியாது. அடுத்தது கோப்பாய் சாவகச்சேரி வீதியில் வரும் கோப்பாய் வெளி இதற்கருகிலும் நாவற்குழி இராணுவ முகாம் இருந்தது. அடுத்ததாக புலிகள் விமானத்தினை பரீட்சித்த கல்லுண்டாய் வெளியாகும். இங்கும் ரொலே எவ்வித விமானப் பறப்பு முயற்சியும் மேற்கொள்ளவில்லை..அப்படியானால் ரெலோ விமானத்தை எங்கு செய்தது எங்கு பரீட்சித்தது??? அப்படியானால் ரெலோ விமானவடிவில் கடதாசியில் பட்டம் செய்து விட்டுப்பார்த்திருக்கலாம்.
அதனை புலிகள் குண்டு வைத்து எல்லாம் தகர்க்கத்தேவையில்லை கையாலேயே கிழித்தெறிந்திருக்கலாம்.அட எதுக்கு இவ்வளவு சிரமப்படுவான் ரெலோவின் ஆரம்பகால உறுப்பினரும் தற்போதைய ரெலோ அமைப்பின் தலைவராகவும் பாராழுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் செல்வம் அடைக்கலநாதனின் மின்னஞ்சலை இங்கு இணைக்கிறேன் - selvamtelo@yahoo.com அவரிடமே கேட்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.இதற்கு மேலும் யாராவது வந்து ரெலோ செய்த விமானத்தை புலிகள் குண்டு வைத்து தகர்த்தனர் என்று அடம்பிடித்தால் என்லை முடியலை முடியலை
மேலதிகமாக சில விபரங்கள். அன்றைய காலகட்டத்தில் மானிப்பாய் ஆயுதத்தெழிற்சாலையில் நான் பழகிய போராளிகளான. முத்து.முகுந்தன்.வெள்ளைப்பிறேம்.கொன்னைப்பிறேம்.பாரத்.சுபாஸ்.சுதா. ஆகியோர் இந்திய இராணுவத்துடனான மேதலில் இறந்துவிட்டார்கள்.குட்டி சிறி கிட்டுவுடன் வங்கக்கடலில்வைத்து இந்தியக் கடற்படையால் கொல்லப்பட்டான்.அந்த முகாமை நிருவகித்த அப்பையா அண்ணை யாழ் இடப்பெயர்வின்பொழுது ஈ.பி.டி.பியினரால் கடத்திக்கொண்டுபோய் கொல்லப்பட்டார்.மானிப்பாய் அரசியல்துறை பொறுப்பாளராயிருந்த மயூரன் மற்றும் பாலா கண்ணன் சத்தியா .ஆகியோர் வெளிநாடுகளில் வசிக்கின்றார்கள்.
an indian army soldiar's photograph of ltte's plane.
ReplyDeletevisit
my air foce days- pawan
http://www.geocities.com/drnitin_p/album/misc/af2_gen.html
Photograph of ltte's 1st plane
ReplyDeletehttp://www.geocities.com/drnitin_p/album/misc/af2_gen.html
//அதனை புலிகள் குண்டு வைத்து எல்லாம் தகர்க்கத்தேவையில்லை கையாலேயே கிழித்தெறிந்திருக்கலாம்.//
ReplyDeleteசாத்திரி அண்ணையை
வன்மையாகக் கண்டிக்கிறோம். அபிஅப்பாவின் டவுசர இப்படியெல்லாம் அவிழ்க்கக்கூடாது. இந்தியாவில் இருந்துகொண்டு ஈழச்செய்திகளை இந்திய நாளேடுகளின் வழியாகப் படித்து ஈழவரலாற்றைப் புரிந்துகொள்ள முடியாது என்பதை அபிஅப்பா புரிந்துகொண்டால் சரி. டெலோ, தமிழீழப்புலிகளின் சகோத்ர யுத்தம் பற்றிப் பேச நெஞ்சுக்கு நீதி என 4 பாகங்களாக புளுகி வரும் கருனாநிதிக்கும் அவர்தம் குஞ்சிகளுக்கும் அருகதை இல்லை.
இந்த பதிவில் கூட டெலோ இயக்கத்தினரின் மேல் உங்களுக்கு-புலிகளுக்கு- இருக்கும் காண்டு வெளிப்படுகிறது.
ReplyDeleteஉங்கள் எதேச்சதிகாரத்தால் மற்ற எல்லோரையும் அழித்ததுதான் நீங்கள் பலமிழந்து போனதற்கும் காரணம் என்பதை எப்போதாவது உணருங்கள்.
//Anonymous @ 7:06 PM
ReplyDeleteஇந்த பதிவில் கூட டெலோ இயக்கத்தினரின் மேல் உங்களுக்கு-புலிகளுக்கு- இருக்கும் காண்டு வெளிப்படுகிறது.
உங்கள் எதேச்சதிகாரத்தால் மற்ற எல்லோரையும் அழித்ததுதான் நீங்கள் பலமிழந்து போனதற்கும் காரணம் என்பதை எப்போதாவது உணருங்கள்.//
அனானி கருணாநிதியைப்போல நீங்களும் கீறல் விழுந்த சிடி மாதிரிசொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.ஈழத்தமிழ் இயக்கங்களினுள் மோதலை தூண்டி விட்டதே இந்திய றோ அமைப்புத்தான்
//Pot"tea" kadai said...
ReplyDelete//அதனை புலிகள் குண்டு வைத்து எல்லாம் தகர்க்கத்தேவையில்லை கையாலேயே கிழித்தெறிந்திருக்கலாம்.//
சாத்திரி அண்ணையை
வன்மையாகக் கண்டிக்கிறோம். அபிஅப்பாவின் டவுசர இப்படியெல்லாம் அவிழ்க்கக்கூடாது. இந்தியாவில் இருந்துகொண்டு ஈழச்செய்திகளை இந்திய நாளேடுகளின் வழியாகப் படித்து ஈழவரலாற்றைப் புரிந்துகொள்ள முடியாது என்பதை அபிஅப்பா புரிந்துகொண்டால் சரி. டெலோ, தமிழீழப்புலிகளின் சகோத்ர யுத்தம் பற்றிப் பேச நெஞ்சுக்கு நீதி என 4 பாகங்களாக புளுகி வரும் கருனாநிதிக்கும் அவர்தம் குஞ்சிகளுக்கும் அருகதை //
பெட்டிக்கடை நீங்கள் சொன்னது போல தமிழக்து ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை வைத்து தமிழகத்து மக்கள் ஈழப்போராட்ட வரலாற்றினை அறியமுடியாதென்பது உண்மை
சக இந்தியத்தமிழர்களுடன் புலிகள் பற்றி நாங்கள் உரையாடும்போது கூனிக்குறுகும் இடங்கள் இரண்டு.
ReplyDelete1. இராஜீவ் படுகொலை - இதற்கு சமாதானம் சொல்ல ஓரளவு இணையத்தில் தகவல்கள் இருக்கின்றன.
2. சகோதர யுத்தம்- இதைப் பற்றி விரிவாக எழுத முடியுமா? யார் இந்த சபா இரத்தினம், அமிர்தலிங்கம், பத்மநாபா. சத்தியமாக எனக்கு தெரியாது. வரதராஜ பெருமாள் என்று ஒரு நபர் புலிகளால் கொல்லப்பட்டார் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் உயிரோடுதான் இருக்கிறாராமே?
//உமையணன் @ 8:14 AM
ReplyDeleteசக இந்தியத்தமிழர்களுடன் புலிகள் பற்றி நாங்கள் உரையாடும்போது கூனிக்குறுகும் இடங்கள் இரண்டு.
1. இராஜீவ் படுகொலை - இதற்கு சமாதானம் சொல்ல ஓரளவு இணையத்தில் தகவல்கள் இருக்கின்றன.
2. சகோதர யுத்தம்- இதைப் பற்றி விரிவாக எழுத முடியுமா? யார் இந்த சபா இரத்தினம், அமிர்தலிங்கம், பத்மநாபா. சத்தியமாக எனக்கு தெரியாது. வரதராஜ பெருமாள் என்று ஒரு நபர் புலிகளால் கொல்லப்பட்டார் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் உயிரோடுதான் இருக்கிறாராமே?//
உமையணன் ஒன்றை முதலில் புரிந்து கொள்ளுங்கள் இந்தியா ஆரம்பத்தில் ஈழ விடுதலை இயக்கங்களிற்கு பயிற்சியும் உதவிகளும் செய்தது ஈழத்தமிழர்களிற்கு ஈழம் பெற்றுக்கொடுக்க அல்ல..அப்பொழுது இலங்கை அதிபர் ஜே.ஆர் யவர்த்தனாவுடன் அமெரிக்காவும் இஸ்ரவேலும்கொண்டிருந்த அளவுக்கதிகமான நட்புறவுதான் காரணம்.
அதனால் இந்தியாவின் பிராந்திய நலன்கள் எதிரகால இநதியவல்லரசுக்கனவிற்கு ஆப்பாய்அமைந்து விடும் என்பதால் ஈழத்து இளைஞர்களிற்கு ஆயுதத்தை கொடுத்து இலங்கையில் தன்னுடைய ஆதிக்கத்தை அதிகமாக்கி இலங்கையரசை பணிய வைப்பதுதான் முதல் நோக்கம். முதன் முதலில் ஈரோஸ் இயக்கம் தென்னிலங்கையில் நடத்திய குண்டு வெடிப்புக்கள் எல்லாமே றோவின் வழிகாட்டலில்தான் நடந்தது.
இதனை இந்தியாவும் மறுக்காது. ஆரம்பம் முதலே புலிகளிடம் இந்தியாவிற்கு பிடிப்பு இல்லை காரணம் மற்றைய இயக்கத் தலைவர்கள் போல பிரபாகரன் தாங்கள் சொல்வதெற்கெலாம் ஆடமாட்டார் என்பது இந்தியாவிற்கு நன்றாகவே தெரியும்.எனவேதான் இந்தியாவால் புலிகளிற்கு ஆரம்பத்திலிருந்தே நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது.
ஆனால் அன்று தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜீ. ஆர் அவர்கள் புலிகளுடன் நெருக்கமாக இருந்ததும் எம்.ஜீ. ஆரும் புலிகள் விடயத்தில்: மத்திய அரசிற்கு வளைந்து கொடுக்காததால் புலிகளின் மீது மத்திய அரசிற்கு பெரியளவு அழுததத்தினை கொடுக்கமுடியாமல் போனது. அதனால்தான் தன்னுடைய சொற்றபடி தலையாட்டும் மற்றைய இயக்கங்களை வைத்தே புலிகளை அழித்து விட இந்தியா முயன்றது.ரெலோ இயக்கத்தினை புலிகள் அழித்திருக்காவிட்டால் சில வாரங்களிலேயே ரெலோவால் புலிகள் அழிக்கப்பட்டிருப்பார்கள் அதற்கான வேலைகளை ரெலோ தலைவர் சிறீ நேரடியாகவே ஈழத்திற்கு வந்து தொடங்கிவிட்டிருந்தார்.
சிறி சபாரத்தினம் இந்தியாவின் கைப்பொம்மையாக மாறிவிட்டதால் அதனை எதிர்த்த அவரது ரெலோ யாழ்மாவட்ட இராணுவத்தளபதியான தாஸ்சையும் அடுத்த நிலைத்தளபதி காளி மற்றும் அவரது பாதுகாவலர்களளையும் எல்லாமாக 6 பேரை சிறீ சபாரத்தினத்தின் நேரடி உத்தரவின் பெயரில் சுட்டுக்கொன்றார்கள்.அதே போலத்தான் மற்றைய இயக்கங்களும் புலிகளால் தடைசெய்யப்பட்டது. ஆனால் இன்றுஅந்த இயக்கங்களின் அடுத்தகட்டத் தலைவர்களான ரெலோ.செலவம் அடைக்கலநாதன்.ஈ.பி.ஆர்.எல்.எவ். சுரேஸ் பிரேமச்சந்திரன்.
அமிர்தலிங்கத்தின் கூட்டணியன் தலைவர்.சம்பந்தன் ஆகியொர் இன்று இலங்கையரசிற்கொ இந்தியாவிற்கோ விலைபோகாமல் தங்கள் தவறுகளை திருத்தி புலிகளின் தலைமையின் கீழ் அணி திரண்டு நிற்பதால் முன்னர் நடந்தவற்றை மீண்டும் எழுதிக்கொண்டிருப்பதில் பிரயோசம் இல்லை ஆனால் கருணாநிதிதான் அதையே தன்னுடைய இலாபத்திற்காக திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்.
திரு வரதராஜ பெருமாள் இந்தியாவில்(இந்தியா என்றால் தமிழகத்தில் அல்ல, அது தமிழகம் அல்லாத பகுதியைக் குறிக்கிறது) அடைக்கலம் பெற்றுக் கொண்டு தங்கியிருக்கிறார். சமீபத்தில் கூட தில்லி பல்கலைக் கழகத்தில் உரையாற்ற சென்றதாகக் கேள்வி. ராஜீவ்-ஜெய பண்டாரம்(ஜெயலலிதா அல்ல) ஒப்பந்தத்தில் அவரை வைத்து முழு பூசணிக்காயை கட்டுச் சோற்றுக்குள் மறைக்கப் பார்த்ததை அந்த கால கட்டத்தில் அனைவரும் அறிவார்கள். முழு கதையையும் விளக்குவதற்கு ஒரு வாரம் விரிவுரை எடுத்தால் தான் சாத்தியம். சுருக்கமாக விளக்குவதற்கான வழிமுறைகளை முதலில் ஆராய்ந்து கண்டு பிடிக்கவேண்டும்.
ReplyDeleteமற்றபடி தினகரனில் வரும் வைகோ சூடு , ஜெயலலிதா சூடு, கலைஞர் சூடு போன்ற தலைப்புகளைஎல்லாம் பார்த்துவிட்டு எம்.ஜி.யாரை எம்.ஆர்.இராதா சுட்டது போல் இவர்களை சுட்டுவிட்டார்களா என்று ஒரு கணம் அதிச்சியடைந்து திகைப்பதுண்டு.
இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய பொழுது தன்னுடன் ஒட்டிக்கொண்டிருந்த ஒண்டுண்ணிகள் வரதராஜப்பெருமாள் உட்பட பலரை ஒரிசா மானிலத்தில் கொண்டு போய் குடியேற்றிருந்தார்கள். அதிலிருந்து பலர் வெளிநாடுகளிற்கு போய்விட்டார்கள் ஆனால் வரதர் மட்டும் இன்னமும் டெல்லியிலும் ஒரிசாவிலும் சுற்றித்திரிகிறார்.
ReplyDelete