Thursday, January 29, 2009

தமிழகஉறவுகளே தயவுசெய்து தீக்குளிக்காதீர்கள்.

ஈழத்தமிழ் உறவுகளிற்காக அன்றொரு அப்துல் ராவூப் இன்றொரு முத்துக்குமார். இனிய உறவுகளே இனியும் வேண்டாம். அகிம்சையை தேசம் என்கிற இந்தியாவின் போர்வை இன்னொருதரம் கிழிந்து தொங்குகின்றது காந்தி தேசம் என்று கதர்வேட்டிகள் காது கிழியக்கத்திக் கொண்டே காந்தி தன் கைகளாலேயே நெய்து உடுத்தியிருந்த அவரது வேட்டியை உருவி காற்றில் பறக்கவிட்டு பலவருடங்களாகி விட்டது. அன்று ஈழத்தில் அன்னை பூபதி பின்னர் திலீபன் தமிகத்தில் அப்துல் ராவூப் அதற்கிடையில் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் சாலை மறிப்புக்கள். பணிப்புறக்கணிப்புக்கள்.கடையடைப்புக்கள்.இடையிடையே அரசியல் வாதிகளினது அனைத்துக் கட்சி என்றும் தனிக்கட்சி என்றும் சேர்ந்தும் சேராமலும் அறிக்கைகளும். ஆர்ப்பாட்டங்களும்.திருமாவளவனின் உண்ணாவிதரம்.சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிதரம். இறுதியாய் முத்துக்குமார் என்கிற உறவின் உயிர்த்தியாகம். இத்தனையும் அகிம்சை வழியிலான போராட்டங்களே.இவை எவற்றையுமே இந்திய மத்திய தொடர்ந்தும் மத்திய அரசு உதாசீனம் செய்து வருவதால் இதற்கு மேலும் அகிம்சை ரீதியாக போராடுவதால் ஏதாவது பிரயோசனம் கிடைக்குமென்று நினைக்கிறீர்களா?? இனியும் தமிழன் சொல் சபை ஏறுமா??தமிழீழம் மலர்ந்தால் தமிழகமும் பிரிந்து போய்விடும் என்று இத்தனைகாலமும் பூச்சாண்டி காட்டியே ஒரு இனத்தின் விடுதலைப்போரை அடக்கி வந்த இந்திய அரசு. மெல்ல மெல்ல தானாகவே தன் தலையில் மண்ணள்ளிப் போட்டுகொள்ள முடிவு செய்துள்ளது. இனி தமிழ் நாட்டுத் தமிழன் என்ன ஆயுதத்தை கையில் எடுக்கவேண்டுமென்பதை இந்திய அரசே முடிவெடுக்கட்டும்

4 comments:

  1. Anonymous9:53 AM

    ஹலோ? நாங்கலென்ன உங்களை மாதிரி முட்டாள்கள் என்று நினைத்தீர்களா? முத்துக்குமார் போன்ற வெகுளிகளையும், புலிகளிடம் வாங்கிய காசுக்கு மாரடிக்கும் அரசியல்வாதிகளையும் நம்பி மீண்டும் ஏமாறாதீர்கள். தேசப்பற்றுள்ள இலங்கைத் தமிழனாக வாழ்கிற வழியைப்பாருங்கள்.

    ReplyDelete
  2. Anonymous10:47 AM

    //நானும் உணர்ந்தேன். என் குழந்தையின் உடல்நலனில் நீங்கள் காட்டிய அக்கறை மூலம்:)
    //

    போடா நாயே...என்ன மயிரடா தெரியும் உனக்கு எங்கட அவலம் பற்றி

    ReplyDelete
  3. //ஹலோ? நாங்கலென்ன உங்களை மாதிரி முட்டாள்கள் என்று நினைத்தீர்களா? முத்துக்குமார் போன்ற வெகுளிகளையும், புலிகளிடம் வாங்கிய காசுக்கு மாரடிக்கும் அரசியல்வாதிகளையும் நம்பி மீண்டும் ஏமாறாதீர்கள். தேசப்பற்றுள்ள இலங்கைத் தமிழனாக வாழ்கிற வழியைப்பாருங்கள்.//

    வணக்கம் அனானி என்னை முட்டாள் என்று கூறுங்கள் பிரச்சனையில்லை ஆனால் தயவுசெய்து முத்துக்குமாரின் தியாகத்தினை கொச்சைப்படுத்தாதீர்கள்

    ReplyDelete
  4. Anonymous6:22 PM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete