Friday, January 30, 2009

கவிதையொன்று எழுதுங்கள் கலைஞரே

கலைஞரே
காலைப்பிடித்து கெஞ்சுகிறேன்
கவிதையொன்று எழுதுங்கள்
கறுப்புக்கண்ணடிடியுடன்
கரகரத்த குரலால்
கலைஞர் தொலைக்காட்சியில்
கட்டுமரமாவேன் என்றதைப்போல
கவிதையொன்று எழுதுங்கள்

முத்துக்குளிக்கும் மண்ணிலிருந்து
முத்துக்குமாரெனும்
முத்தான உடன்பிறப்பொன்று
முடியாட்சி முற்றத்தில்
முடித்துக்கொண்ட
மூச்சுக்காற்றில்
மு. க. குடும்பத்திற்கு
மூலதனம் தேடாமல்
முடிந்தால் எழுதுங்கள்


2 comments: