Thursday, January 08, 2009

புலிகளின் சித்திரவதை முகாமிலிருந்து தப்பியதாக ரயாகரன் விடும் கரடி

.இதுவரைகாலமும் இவரது எழுத்துக்களை மட்டுமே படித்து இவரை பற்றிய ஒரு கற்பனையை வளர்த்து வைத்திருப்பவர்களிற்கும் இவர்யார் ஏன் புலிகள் கைது செய்தார்கள்.என்ன நடந்தது என்கிற உண்மையையும் எழுதிவிடுகிறேன்.ஈழத்தில் 1983 கலவரத்தின் பின்னர் யாழ் குடாவில் ஊருக்கொரு விடுதலை இயக்கங்கள் தோன்றியது எல்லோருமே அறிவார்கள்.

இரண்டு மூன்று இளைஞர்கள் சேர்ந்து கையில் ஏதாவது ஒரு ஆயுதமோ கொஞ்ச வெடி மருந்தோ கிடைத்துவிட்டால் போதும் தமிழீழம் அல்லது ஈழம் என்று பெயர் வருகிற மாதிரி ஒரு பெயரையும் தெரிவுசெய்து ஒரு இயக்கம் தொடங்கி விடுவார்கள்.இப்படித்தான் நெல்லியடியை சேர்ந்த விஸ்வானந்ததேவன் என்பவரும் இந்த ரயாகரன் மற்றும் வேறு சிலரையும் இணைத்து மார்க்சிய கொள்கைகளுடன் ஒரு இயக்கத்தை தொடங்கினார்.இவரது இயக்கத்தின் பெயர் தமிழ் தேசிய விடுதலை முன்னணி(N.L.F.T). இந்த இயக்கத்தை தொடங்கிய சில காலத்திலேயே விஸ்வானந்ததேவன் காணாமல் போய்விட்டார்.

பின்னர் இவர் இந்தியா செல்கிறபோது கடலில் இலங்கை கடற்படை சுட்டுஇறந்ததாகவும் இவர்களது இயக்கத்தினுள் ஏற்பட்ட உட்பூசலால் ரயாகரனே இவர் இந்தியா செல்கிற விடயத்தை இலங்கை இராணுவத்திற்கு வழங்கியதாகவும் பேச்சு அடிபட்டது.

ஆனால் இதுவரை என்ன நடந்தது என்கிற உண்மை சரிவர தெரியா விட்டாலும் விஸ்வானந்த தேவன் உயிருடன் இல்லை என்பது மட்டும் உண்மை. பின்னர் இந்த இயக்க தலைமைக்காக ராயாகரனிற்கும் மற்றவர்களிற்கும் நடந்த பிரச்சனைகளில் பலர் அதைவிட்டு வெளியேறி போய்விட ராயாகரனும் ஒரு சிலருமே மிஞ்சினார்கள்.பின்னர் 86 களில் யாழ் குடா புலிகளின் கட்டுபாட்டினுள் வந்த பின்னர் அப்போது மிஞ்சியிருந்த இயக்கங்களும் தடை செய்யப்பட்டு அவர்களிடமிருந்த ஆயுதங்கள் களையப்பட்டு அந்த இயக்கங்களால் கொள்ளையடிக்கபட்டிருந்த பொருட்கள் கடத்த பட்ட வானங்கள் என்பனவும் மீட்கபட்டது.

அப்படி ஆயுதங்கள் களையபட்டபோது சிலர் ஆயுதங்களுடன் தலைமறைவாகியிருந்தனர் அவர்கள் அந்த ஆயுதங்களை பாவித்து அவ்வப்போது பல குற்ற செயல்களிலும் ஈடுபட்தால் புலிகள் அப்படியானவர்களை தேடி கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

86ம் ஆண்டளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய கொள்ளை மற்றும் யாழ் கற்றன் நசினல் வங்கிகொள்ளை என்பனவற்றை இந்த இயக்கமே செய்தது அதில் ரயா கரனும் பங்கேற்றிருந்தார்.அப்படித்தான் ராயாகரனும் அவர் சார்ந்திருந்த இயக்கத்தின் ஆயுதங்களை ஒப்படைக்காமல் மறைத்து வைத்திருந்ததாலும் மற்றும் அந்த இயக்கத்தினால் நடாத்தப்பட்ட சில கொள்ளைகளை பற்றியும் புலிகளால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு ஆயுதங்கள் மீட்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.விடுதலையான இவர் இப்பொழுது செய்வது போலவே அன்றும் அய்யோ புலிகள் கொல்ல போகிறார்கள்.புலிகளால் தனது உயிரிற்கு ஆபத்து எனவே புலிகளிடமிருந்து தனது உயிரிற்கு உத்தரவாதம் வாங்கி தரும்படியும் யாழ் பல்கலைகழக ஆசிரியர்களிற்கும் மற்றும் மாணவர் அமைப்பிற்கும் தொடர்ந்து கடிதமெழுதிகொண்டிருந்தார்.

ரயாகரன் பலகலைகழக மாணவனாயிருந்த காரணத்தினால் யாழ் பல்கலைகழக சமூகம் புலிகளிடம் ரயாகரன் சார்பாக பேசி ரயாகரனிற்கு தங்களால் எவ்வித ஆபத்தும் இல்லையென உறுதிமொழி வழங்க கோரினார்கள்.
புலிகளும் அதன்படியே 1987ம் ஆண்டு யூலை மாத ஆரம்பத்தில் (திகதி எனக்குசரியாக ஞாபகத்தில் இல்லை) யாழ் பல்கலை கழக கைலாசபதி அரங்கில் அங்கு கூடியிருந்த ஆசிரிய மாணவர்களின் முன்னால் தாங்கள் சில விசாரணைகளிற்காகவே அவரை கைது செய்ததாகவும் ஆனால் ரயாகரனிற்கு தங்களால் இனிமேல் எவ்வித ஆபத்தும் இல்லைபகிரங்கமாகவே உறுதியளித்தனர். அதன் பின்னர் அந்த மேடையில் தோன்றிய ரயாகரன் புலிகள் தன்னை அடித்து சித்திரவதை செய்தனர் என்று புலிகளை பற்றி திட்டி தீர்த்து விட்டு எவ்வித அச்சுறுத்தலும் இன்றி அங்கிருந்து வெளியேறி பின்னர் யாழிலும் சுதந்திரமாகவேதான் திரிந்தார்.இரயாகரனை புலிகள் கைது செய்ய நினைத்திருந்தால் அவர் மேடையை விட்டு இறங்கியதும் அல்லது வெளியிலேயோ கைது செய்திருக்கமுடியும்.காரணம் பல்கலைகழகத்திற்கு மிக அருகிலேயே புலிகளின்இரண்டு முகாமும் இவரது வீட்டிற்கு அருகில் ஒரு முகாமும் இருந்தது.

அடுத்ததாக பிரான்சில்பொதுத் தேர்தல்களையடுத்து நடந்த கலவரங்களின்போது வாகனங்கள் கொழுத்தப்பட்டது இவரது வீட்டிற்கு அருகிலும் ஒரு வாகனம் கொழுத்தபடவே புலிக்கெதிரான சிந்து எங்கு பாடலாம் என திரிந்த இவரிற்கு சந்து கிடைத்துகிடைத்து விட்டிருந்தது.உடனே புலிகள் தன்னை கொல்ல சதி என்று சுதிபிசகாமல் பாடிவிட்டிருந்தார்.நான் வசிப்பதும் பிரான்ஸ் நாட்டில்தான் அதுமட்டுமல்ல பிரான்சின் பொது தேர்தல்நடந்து முடிந்து கலவரம் நடந்த இரண்டு நாட்களும் நான் பாரிசின் புற நகர் பகுதியான drancy என்கிற இடத்தில் ஒரு நண்பனின் வீட்டில்தான் நின்றிருந்தேன்.

அப்போது பரவலாகவே வாகனங்கள் கொழுத்தபட்டதால் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த என்னுடைய வானத்தை யாரும் கொழுத்திவிட கூடாது என்கிறகவலை வேறு எனக்கு.

இப்படி பொதுவாக நடந்த ஒரு சம்பவத்தை ரயாகரன் உடனே தனக்கு சாதகமாக்கி புலிகள் மீது பழியை போட்டு காவல்துறையினரிடம் முறையீடும் செய்து அதனை செய்தியாக இவரை பேன்றே புலிக்காச்சல் பிடித்தவர்களினால் நடாத்தப்படும் இணைய தளங்களில் செய்தியாகவும் படங்களுடன் வெளியிட்டிருந்தார் இதுவரை பிரெஞ்சு காவத்துறையினரால் ஒரு புலி ஆதரவாளரும் கைது செய்யப்படவில்லை
85 நாட்கள் புலிகள் தன்னை நிர்வாணமாக்கி தலைகீழாய் கட்டித்தூக்கி அடி அடியென்று அடித்து மலசலம் கூட அப்படியே போன நிலையில் நித்திரை கொள்ள விடாமல் நீரும் உணவுமின்றி இருந்த நிலையில் 86 வது நாள் சிறையை உடைத்து தப்பி வந்ததாக இவர் எழுதும் கதை நன்றாகதான் இருக்கிறது.
ஒரு பத்துநாள் சாப்பாடு போடாமல் அடிச்சாலே ஒருதன் செத்திடுவான். ஆனால் இவரது கதைக்கு ஏற்றால் போல் நல்ததொரு பின்னணி இசையும் குடுத்து ஒரு பாட்டும் போட்டு கடைசியில் ஒரு நூறு புலிகளை தாக்கி சுட்டு தள்ளிவிட்டு சிறை மதிலை தாண்டி அகழியில் நீந்தி தப்பி வந்ததாக படமாக தயாரித்தால் இன்னொரு சில்வெஸ்ரர் ஸ்ராலோனின் ரம்போ படம் பாத்தமாதிரி இருக்கும்.மற்றவர் காதிலே பூவைக்கலாம் மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு பூமாலையை கஸ்ரபட்டு கட்டிதொங்க விடலாம் ஆனால் ஒரு பூந்தோட்டத்தையே எப்படிங்க வைக்க முடியும். இது உங்களிற்கே நியாயமா ராயா சார்???...

35 comments:

  1. Anonymous4:07 AM

    oh!

    ReplyDelete
  2. Anonymous4:20 AM

    பல தமிழ் பெண்களை கற்பழித்ததாகவும் ஒரு பழி இவர் மேல் உண்டு அதை விட்டு விட்டீர்களே. கருணா போல் வர நினைத்தவர்.

    ReplyDelete
  3. //உண்மைsaid @ 4:20 AM
    பல தமிழ் பெண்களை கற்பழித்ததாகவும் ஒரு பழி இவர் மேல் உண்டு அதை விட்டு விட்டீர்களே. கருணா போல் வர நினைத்தவர்.//

    அப்படியானகுற்றச்சாட்டுக்கள் நான் அறியவில்லை ஆனால் பல்கலைக்கழகத்தில் பெண்களுடன் வரம்பிற்கு மீறி பகிடிவதை செய்ததற்காக புலிகளால் எச்சரிக்கப்பட்டும் இருந்தார் அது தெரியும்.

    ReplyDelete
  4. Anonymous5:27 AM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. Anonymous7:05 AM

    ஒருவர் பேசும்போதே அவர் பொய் சொல்வதை எளிதில் கண்டுபிடித்துவிடமுடியும்..

    ப்பேப்ப்பேஎ என்று இவர் உளறும்போதே இவர் ஒரு பொய்யர் என்று தெரிந்துகொண்டோம்...

    அதுவும் தெளிவாக விடுதலை செய்யப்பட்டார், ஆயுதங்களோடு சுற்றி திரிந்தார் என்று சொல்லப்படுகிறதே ?

    பாசிசம் என்ற பதத்தை ஆயிரம் முறைக்கு மேல் உபயோகப்படுத்தி வருகிறார், ஆனால் ஒரு பின்னூட்டம் போட்டால் வெளியிடமாட்டேங்குறார்...

    என்னம்ம்போ போங்க...உங்க அரசியல்கள் தான் எனக்கு புரியவே மாட்டேங்குது :)))

    ReplyDelete
  6. Anonymous7:58 AM

    நீங்கள் எழுதியிருப்பது உண்மைதான். நானும் அப்போது அந்த பல்கலைக்கழக மாணவன்தான்.

    ReplyDelete
  7. Anonymous10:00 AM

    /* பல தமிழ் பெண்களை கற்பழித்ததாகவும் ஒரு பழி இவர் மேல் உண்டு.*/

    உண்மைதான் என் ஊரில் இருப்பவர் இவருடன் படித்தவர், அவர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  8. Anonymous2:23 PM

    துர்க்கை அம்மன் கோயில் நகை அடித்தவானா உந்த மக்கள் போராட்டக்காறன் கோயில் நகை அடிப்பதுதான் உவன் மக்கள் போராட்டமா?

    ReplyDelete
  9. Anonymous2:25 PM

    இந்துகோவில் நகையை கொள்ளை அடித்தவன் இந்திய இந்துதுவா கோஸ்டிகளை விமர்சிப்பது விந்தை.

    ReplyDelete
  10. Anonymous2:27 PM

    பல்கலை கழக பகிடிவதையின் போது ஒரு பெண்ணினால் செருப்படி வாங்கிய விடயத்தையும் இணைத்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  11. பல்கலைக்களகத்தில் பெண் யூனியசை ராகிங்( நிக்கரை எல்லாரின் முன்னாலும் கழட்ட சொல்லி) செய்ததிலை கிட்டண்ணையிட்டை அடிவாங்கியவர்களில் உவர் முக்கியமானவர் எண்டு ஒருவர் சொன்னார்.

    ReplyDelete
  12. சாத்திரி எப்படித்தான் பொய்யும் புரளிக் கதைகளும் சொல்லி எழுதினாலும் உண்மை எப்படியோ வெளியே வரும் தானே??? அதான் இப்பவே உண்மையை வெளியே சொல்லிட்டீங்களே... இனி அடங்கிடுவாரா? அல்லது இனியும் ஆடுவாரா???

    ReplyDelete
  13. Anonymous8:19 PM

    எதோ பல அரசு நிறுவனங்களிடம் காசு வாங்கி அஞ்சு பத்து சம்பாதிக்கிறார்.அது புடிக்கவில்லையா உங்களுக்கு? அல்லது பொறாமையா?

    ReplyDelete
  14. Anonymous10:08 PM

    இன்னும் இந்த மானங்கெட்டதுகள் பதிவு போட ஒரு இடங்கிடைத்தது என்று தமிழ்மணத்தை ஒரு கழிவிடமாகப் பயன் படுத்துவதை ஒழிக்க வேண்டும்.
    பின்னூட்டங்களைப் போடத்துப்பில்லாதவர்களுக்கும்,
    பின்னூட்டங்கள் போட்டால் ஓடி ஒளிந்து கொள்வோருக்கும் எழுத்துரிமை என்பது திறந்தவெளியில் மலங்கழிப்பது தான்.

    ReplyDelete
  15. Anonymous12:21 AM

    விபசாரி விபசாரி விபசாரி எண்டும் கற்பழிப்பு கற்பழிப்பு கற்பழிப்பு எண்டும் அவர் ஓயாது எழுதுறதுகளைப் பாக்கும் போது அவர் பெண்ணுடலை பாலியல் நோக்கில் மட்டுமே நோக்குபவர் என்றதை புரிய முடிகிறது.

    ReplyDelete
  16. Anonymous12:34 AM

    (1) அந்த ஒலிப்பதிவில் மாத்தையாவும் உள்ளார். மாத்தையாவிற்கு முன்பே இராயகரன் பொய் சொல்லிவிட்டாரா ?
    (2) இரயாகரனைக் "கைது" செய்து விசாரித்த‌ மாத்தையா, இதைத் தமிமீழ நலனுக்காகத்தான் செய்தாரா ?
    (3) பிரபாகரனால் கொல்லப்பட்ட மாத்தையா துரோகியா ?

    ReplyDelete
  17. //செந்தழல் ரவி @ 7:05 AM

    ஒருவர் பேசும்போதே அவர் பொய் சொல்வதை எளிதில் கண்டுபிடித்துவிடமுடியும்..

    ப்பேப்ப்பேஎ என்று இவர் உளறும்போதே இவர் ஒரு பொய்யர் என்று தெரிந்துகொண்டோம்...

    அதுவும் தெளிவாக விடுதலை செய்யப்பட்டார், ஆயுதங்களோடு சுற்றி திரிந்தார் என்று சொல்லப்படுகிறதே ?

    பாசிசம் என்ற பதத்தை ஆயிரம் முறைக்கு மேல் உபயோகப்படுத்தி வருகிறார், ஆனால் ஒரு பின்னூட்டம் போட்டால் வெளியிடமாட்டேங்குறார்...

    என்னம்ம்போ போங்க...உங்க அரசியல்கள் தான் எனக்கு புரியவே மாட்டேங்குது :)))//

    ரவி இவர் யார் பின்னூட்டம் போட்டாலும் வெளியிடவோ மற்றவர்களது கருத்துக்களையோ கேட்கமாட்டார் அதுதான் இவரது ஜனநாயம். ஆனால் மற்றவர்களது கருத்துக்களையும் மதிப்பவர்கள் பாசிசவாதிகள்.

    ReplyDelete
  18. //மெல்போர்ன் கமல் said...

    சாத்திரி எப்படித்தான் பொய்யும் புரளிக் கதைகளும் சொல்லி எழுதினாலும் உண்மை எப்படியோ வெளியே வரும் தானே??? அதான் இப்பவே உண்மையை வெளியே சொல்லிட்டீங்களே... இனி அடங்கிடுவாரா? அல்லது இனியும் ஆடுவாரா???//

    அவரிற்கு ஒரு நாளைக்காவது புலி பாசிசம் என்று எழுதாவிட்டால் தலையே வெடித்துவிடும்.

    ReplyDelete
  19. //உண்மை said...

    (1) அந்த ஒலிப்பதிவில் மாத்தையாவும் உள்ளார். மாத்தையாவிற்கு முன்பே இராயகரன் பொய் சொல்லிவிட்டாரா ?
    (2) இரயாகரனைக் "கைது" செய்து விசாரித்த‌ மாத்தையா, இதைத் தமிமீழ நலனுக்காகத்தான் செய்தாரா ?
    (3) பிரபாகரனால் கொல்லப்பட்ட மாத்தையா துரோகியா ?//

    இரயாகரனிற்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததே மாத்தையா தமிழீழ நலனிற்கு செய்த துரோகம்தானே

    ReplyDelete
  20. //இரயாகரனிற்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததே மாத்தையா தமிழீழ நலனிற்கு செய்த துரோகம்தானே//

    :)))) :-)))

    ReplyDelete
  21. இவரைப் பற்றி பல விடயங்களை பகிர்ந்துகொண்டதற்க்கு மிக்க நன்றி!
    இது மாதிரி நிறைய உண்மைகளை சொல்லுங்க....அப்போதானே எங்களுக்கெல்லாம் தெரியவரும்.........

    ReplyDelete
  22. Anonymous2:53 AM

    இங்கு பதிவிலும் பின்னூட்டங்களிலும் சொல்லம்பட்டிருப்தை போல இரஜாகரன் பகிடித்தனம் மிக்க ஒரு பாலியல் சீர்கேட்டுக்கார்ராய் இருந்தால் இவருக்கு ஏன் இத்தனை கைதட்டு.? மாத்தையாவுக்கு கூட இவரளவுக்கு வரவேற்பில்லையே?
    இவருக்காக ஏன் மாணவர் குழு சிரம்பஃபடவேண்டும்?
    தொலைந்தான் ஒரு பொறுக்கி என விடவேண்டியதுதானே?

    ReplyDelete
  23. Anonymous3:38 AM

    கற்பழிப்பு, கோவில் கொள்ளை இவனுங்கலாம் தமிழனுக்கு எந்த உதவியும் பண்ண வேண்டாம் சாமி, நாதாரி பயலுக.

    வழக்கம் போல சிங்களத்துக்கே ஜால்ரா அடிக்கட்டும். தமிழன் ஆக இவனுங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.

    ReplyDelete
  24. Anonymous11:55 AM

    /*இங்கு பதிவிலும் பின்னூட்டங்களிலும் சொல்லம்பட்டிருப்தை போல இரஜாகரன் பகிடித்தனம் மிக்க ஒரு பாலியல் சீர்கேட்டுக்கார்ராய் இருந்தால் இவருக்கு ஏன் இத்தனை கைதட்டு.? */

    இதுக்கு வேற விளக்கம் வேணுமாக்கும், இந்த நாதாரி எச்சில் பொறுக்கி தமிழனை அழிக்க என்ன வேணாலும் பன்னுவான். கிராபிக்ஸ்-ல audio, video பண்றது இவனோட கைவந்த கலை.

    ReplyDelete
  25. தம்பி சாத்திரி எப்பிடி மோனை இருக்கிறா??? உவங்கள் செயலிலை ஒன்றையும் காட்டத் தெரியாதவங்கள்?? சும்மா ஒன்றிரண்டு ஊரில இருந்து ஓடி வந்திட்டி தாங்கள் ஏதோ பெரிய சித்திர வதை முகாமில இருந்து தப்பி வந்ததாய்க் கரடி விடுமப்பு,.... உங்களை மாதிரி இளசுகளால தான் உந்த கரடியளைக் கலக்க முடியும்??? நல்லா எழுதுறாய் ராசா??? தொடர்ந்தும் எழுது மோனை??? அப்பப்ப நேரமிருந்தால் என்ர காணியிக்கையும் சொறி என்ர முகாமுக்கையும் வந்திட்டுப் போ மோனை???? என்னப்பு மறந்திடாதை??? அப்ப வரட்டே மோனை??

    ReplyDelete
  26. Anonymous12:12 AM

    நண்பர்களே

    இராயகரன் ஈழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் ம.க.இ.க என்ற பெயரில் மார்க்சியம் பேசும் CPIML(SOC) என்றக்கட்சியின் பொருளாளராக இருந்துகொண்டு தமிழகத்தில் ஈழத்துக்கு எதிரான கருத்துக்களை பரப்பிக்கொண்டுருப்பதையே வேலையாக வைத்துள்ளார். இராயகரனின் இணையதளத்தை பார்ப்பவர்களுக்கு தெளிவாக தெரியும். தமிழகத்திலும் இராயகரன் பற்றிய விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தவேண்டும். அதற்குண்டான வேலைகளையும் ஈழத்தமிழர்கள் செய்ய வேண்டும்,

    ReplyDelete
  27. Anonymous4:25 PM

    enge unngal thalaivar swamigalle?

    ReplyDelete
  28. Anonymous4:27 PM

    where is your leader now?

    ReplyDelete
  29. Anonymous4:36 AM

    நண்பர்களே!
    நீங்கள் சிலபேர் இன்னும் திருந்தவில்லை. கருத்துச் சுதந்திரம் யாவருக்கும் உண்டு. அந்தக் கருத்தின் மீதான கருத்தினை முன்வைக்கும் சுதந்திரமும் அனைவருக்கும் உண்டு. அதற்காக எந்த ஒருவர் மீதுமான களங்கம் சுமத்துவதனை தயவுசெய்து நிறுத்துங்கள். உண்மைநிலை புரியாதோருக்கு நீங்கள் நடத்தும் கபடநாடகம் பற்றிப் புரியாதநிலை உருவாகி அந்த மனிதர்களையும் ஏன் தேவையில்லாமல் குழப்புகின்றீர்கள்.
    உங்களுக்கு மட்டுந்தான் யாழ்-பல்கலைக்கழகம் தெரியும். உங்களுக்கு மட்டுந்தான் தமிழீழப் போராட்டம் பற்றிய வரலாறு தெரியும். எங்களுக்கெல்லாம் தெரியாது அப்படித்தானே?
    கிட்டுவைத் தெரிந்த உங்களுக்கு, அவரின் கால்போனது எப்படி எனத்தெரியாது அப்படித்தானே? அவரின் செயலால், அவரது இயக்கத்தினால், அவரது கால் பிடுங்கப்பட்டதுதானே உண்மை. ஆனால் அவரது இயக்கத்துக்கு எதிரானவர்கள் எனப் பிடிக்கப்பட்டவர்களை எமது தமிழ் உறவுகள் எனப் பாராமல், உண்மை ஏதென்று விளங்காமல் எத்தனைபேரை அவர்கள் சுட்டுத்தள்ளினார்கள். இப்படி எத்தனையோ உதாரணங்கள் உண்டு.
    இதேபோல்த்தான் உண்மைகளையும், எந்தக் கருத்தாக இருந்தாலும் அந்தக் கருத்துகளையும் நீங்கள் சேறடித்து நாறடிக்க முயல்கின்றீர்கள். இந்த வகையில் உங்களிடம் சிறந்த சமூகப் பார்வை இருந்தால் அவற்றினை எழுதுங்கள். அதைவிட்டிட்டு…
    - நாதன்

    ReplyDelete
  30. Anonymous9:48 AM

    //இராயகரன் ஈழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் ம.க.இ.க என்ற பெயரில் மார்க்சியம் பேசும் CPIML(SOC) என்றக்கட்சியின் பொருளாளராக இருந்துகொண்டு தமிழகத்தில் ஈழத்துக்கு எதிரான கருத்துக்களை பரப்பிக்கொண்டுருப்பதையே வேலையாக வைத்துள்ளார்//

    யோவ் அனானி உன்னால் இதை நிரூபிக்க முடியுமா?...

    மகஇக வின் பொருளார்ரர் சீனிவாசன்.
    உன்னைப்போல பேசக்கூடிய ஒரே ஆள் சீபிஎம் காரன்தான் அவன்தான் தமிழுக்கும் தமிழீழத்துக்கும் எதிரியான ஜெவுக்கு கூஜா...
    ஈழ விடுதலைக்காக மக இக வினர் தமிழகம் தழுவிய அளவில் பல போராட்டங்கள் நடத்தியுள்ளனர்
    சந்தேகம் இருப்பவர் இந்த சுட்டிகளை பாருங்கள்

    ReplyDelete
  31. Anonymous9:52 AM

    நான் குறிப்பிட்ட சுட்டி

    ஈழம்: தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் !
    http://vinavu.wordpress.com/2008/11/04/eelam7/

    சீபீஎம் அனானி பதில் சொல்!

    ReplyDelete
  32. Anonymous10:07 AM

    ./இதுக்கு வேற விளக்கம் வேணுமாக்கும், இந்த நாதாரி எச்சில் பொறுக்கி தமிழனை அழிக்க என்ன வேணாலும் பன்னுவான். கிராபிக்ஸ்-ல audio, video பண்றது இவனோட கைவந்த கலை./

    இது என்ன வகையான பதில்...?
    நீங்கள் சொல்வது போலே வைத்துக்கொண்டால் அதற்கு கைதட்டலை புகுத்துவானேன்? அதற்கு பதிலாக எளிமையாக மாத்தையாவின் குரலில் கடத்தினோம் என்று சொல்லவைத்திருக்கலாமே?
    நான் கேட்ட அடுத்த கேள்வி ஏன் மாணவர்கள் இவ்வளவு அக்கறை எடுக்க வேண்டும்
    என்பது..அதற்கும் மொன்னையாக பதிலளிக்காதீர்.

    ReplyDelete
  33. Anonymous11:46 AM

    /கிராபிக்ஸ்-ல audio, video பண்றது இவனோட கைவந்த கலை./
    இது வரை உங்கள் இணையதளங்களில் வந்த படங்கள் எலலாமே கிராபிக்ஸ்-ல audio, video
    மோசடி செய்யபட்டவையா?

    ReplyDelete
  34. Anonymous11:34 AM

    சிங்களத் தலைவர்களிடம் உறவினர்களுக்கு வாங்கிய பதவிக்காக அவர் கதை எழுதுவது பலருக்குத் தெரிந்த இரகசியம்.

    ReplyDelete
  35. Anonymous11:53 AM

    இது வரை உங்கள் இணையதளங்களில் வந்த படங்கள் எலலாமே கிராபிக்ஸ்
    OK.
    பிரபா

    ReplyDelete