Friday, December 19, 2008

கோமாளி யார்?? பெடியன் சஞ்ஞேயா . கோடம்பாக்கமா??

ஈழத்து எதிரிகளும் கோடம் பாக்கத்து கோமாளிகளும் என்று சஞ்சோய் நன்றாகவே கூத்தாடியிருக்கிறார்.அதுவும் தான் ஈழத் தமிழர்களிற்கு எதிரானவர் அல்ல என்பதனை பலமுறை பதிவாக்கியிருக்கிறார். கவனிக்க. எனவே நாங்களும் அவர் ஈழத் தமிழர்களிற்கு எதிராவர் அல்ல என்பதனை நம்பிவிட்டோம்.இலங்கையில் இந்திய இராணுவம் செய்ததை மட்டும் கோமாளிகள் திரும்ப திரும்ப பேசுகிறார்கள் ஆனால் இந்திய எல்லையில் இன்னமும் எதிரிகள் ஊடுவாமல் இரவுபகல் இந்திய இராணும் காக்கிறது என்பது பெருமைதான் ஏதோ ஒரு பகலில் அண்மையில்தான் மும்பையில் ஏதோ சிறியதாய் சரவெடிசத்தம் கேட்டது. அடுத்தாய் அவர் விட்டார் ஒரு சந்ராதேயன் பாருங்க
அது இதுதான்... கே.வி. தங்கபாலு இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருக்கும் போது பிரபாகரன்( அப்போது குழுவில் ஒருவர்.. தலைவர் அல்ல) உள்ளிட்டோர் வந்து சந்தித்தது.. அவர்களை தங்கபாலு இந்திராகாந்தியுடன் அறிமுகப் படுத்தியது.. அப்போது இந்தியத் தமிழர்களுக்கும் சம உரிமை அளிக்க சம்மதமா என்று கேட்டது.. அதற்கு , அபப்டி எல்லாம் முடியாது.. அவர்கள் எங்களுக்கு அடுத்த நிலையில் தான் இருப்பார்கள் என்று சொன்னது.. அதனால் பிறகு பார்க்கலாம் என்று சொல்லி இந்தக் குழுவை இந்திரா புறக்கணித்தது.. இந்தியா நேரடியாக தலை இடாது என்று சொன்னது..பிறகு தமிழக காங்கிரஸின் வற்புறுத்தலால் இவர்களுக்கு ஆயுத பயிற்சிக்கு ஏற்பாடு செய்தது என்று ஏகப்பட்ட உண்மை வரலாறுகள் வெளி வராமலே இருக்கு அண்ணா.. ஆனால் அதை எல்லாம் இப்போ வெளிக் கொண்டு வருவது என்ன பயன்? :) ........ஜயா தங்கபாலு பிரபாகரனை முதன் முதலில் சந்தித்ததே இந்தியா புலிகளின் தெலைதொடர்பு கருவிகளை பறித்த பொழுது பிரபாகரன் உண்ணாவிரம் இருந்தார் பிரபாகரனின் உண்ணா விரதத்தினை முடித்து வைக்க முயற்சித்த பொழுதுதான் சந்தித்தார் அதனை அவரிடமே கேட்கலாம்.அப்பொழுது பிரபாகரன்தான் புலிகளின் தலைவர் அவர் அப்பொழுதும் தலைவர்தான்.அதற்கடுத்ததாய் ஈழத்து போராட்ட குழுக்களிற்கு இந்திய பயிற்சி கொடுத்ததிலிருந்து அதன் எந்த நடவடிக்கைகளிலும் தமிழ் நாட்டு காங்கிரசின் தொடர்புகள் எதுவும் பெரிதாய் இல்லை. அப்படி ஒன்ற நடப்பதே அவர்களிற்கு தெரியாது. ஏனெனில் நானும் அதே இந்திய இராணுவத்திடம்தான் பயிற்சி பெற்றவன். அடுத்தாய் விட்டீர்களே ஒரு சந்திராதேயன் ் அது சூரியனை தொட்டு விட்டது இந்திய வம்சாவளியினரிற்கு சம உரிமை கொடுக்க சம்மதமா என்று புலிகளை கேட்டார்களாம். ?? பேசாமல் ஒரு கதை எழுதவும் . திரைக்கதை வசனம் .பாட்டு . பைட்டு என்று போட்டுத்தாக்கலாம். இலண்டன் ஜங்கரன் இன்ர நசினலை வெளியீட்டு உரிமை எடுக்கசொல்லி கேட்கலாம்.

25 comments:

  1. பைசா பிரயோஜனமில்லாமல் இங்கு தமிழ்நாட்டில் ஏன் உங்களைப்போன்ற வெட்டிக்கும்பல் வீணாக வேத்துக்கூச்சல் போடுறீங்க.

    போய் யாழ்ப்பாணத்திலோ அல்லது கிளிநொச்சியிலோ உங்கள் வீரத்தை ? காட்டுங்கள்.

    அல்லது மூடிக்கொண்டிருங்கள்.

    ReplyDelete
  2. including podian-sanjay all congressmen are the most most comic and pathetic komali's in tamilnadu..

    sanjai careful - ur komanan will also be removed by congressmen one day..

    ReplyDelete
  3. பைசா பிரயோஜனமில்லாமல் இங்கு தமிழ்நாட்டில் ஏன் உங்களைப்போன்ற வெட்டிக்கும்பல் வீணாக வேத்துக்கூச்சல் போடுறீங்க.

    போய் யாழ்ப்பாணத்திலோ அல்லது கிளிநொச்சியிலோ உங்கள் வீரத்தை ? காட்டுங்கள்.

    அல்லது மூடிக்கொண்டிருங்கள்.

    ReplyDelete
  4. நல்லாத்தான் சொல்லுறியள் சாத்திரியார். ஆனால் உந்த ஜந்தறிவு படைச்ச ஜீவன்களுக்கு அது எப்பிடி விளங்கப் போகுது??

    ReplyDelete
  5. Anonymous9:32 AM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. நண்பரே, நான் திடமாக நம்புகிறேன், சஞ்சய் போன்ற நண்பர்களுக்கு விளக்க வேண்டுமென்று - விலக்க வேண்டாமே... (இது மற்ற காங்கிரஸ்காரர்களுக்கானதல்ல!).

    ReplyDelete
  7. அப்படி விளக்கியும் அவர்கள் புரிந்து கொள்ளாமல் செயல்படுவார்களேயானால், நாம் நட்பு சக்தியெது, எதிரிகள் யார் என்பதையும் புரிந்து கொள்ளலாம் :(

    நிச்சயம் சஞ்சய் அப்படியானவராக இருக்க மாட்டார் என்பது என் எண்ணம். அவரும் தமிழர்தானே.

    இதே விஷயங்கள் பல ஊடகங்களில் வந்து விளக்கப்பட்டிருக்கிறது எனச் சொன்னாலும், நாமும் கொஞ்சம் பொறுமையாகச் சொல்லிப் பார்ப்போமே.

    ReplyDelete
  8. ஜ்வோராம் சுந்தர் பலரும் அவரது பதிவில் நடந்த விடயங்களின் பதிவுகளை போட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் அவர் புரிந்து கொள்ள விரும்புபவராகத் தெரியவில்லை புரிந்து கொண்டால் மகிழ்ச்சியே

    ReplyDelete
  9. //sanjai careful - ur komanan will also be removed by congressmen one day..//
    Thanks for ur concern mr.vaakkalan.

    கூட பிறந்தவர்களே எப்போது எதிரி ஆவார்கள் என்று தெரியாத சூழ்நிலையில் யாரோ எப்போதோ கழட்டப் போகும் கோவணத்தை பற்றி இன்று நான் எதற்கு யோசிக்க வேண்டும்? :)

    ReplyDelete
  10. // மெல்போர்ன் கமல் said...

    நல்லாத்தான் சொல்லுறியள் சாத்திரியார். ஆனால் உந்த ஜந்தறிவு படைச்ச ஜீவன்களுக்கு அது எப்பிடி விளங்கப் போகுது??//
    கமல் , விமான நிலையத்தில் குண்டு வைத்தது புலிகள் தான் என்று நான் நினைத்தேன். ஆனால் அது இலங்கயில் வேறு இயக்கம் என கொழுவி வந்து சொல்லும் வரை உங்களால் அதற்கு விளக்கம் தரமுடியவில்லை. சென்னை விமான நிலையத்தில் குண்டு வைதார்களா? என ஓரறிவு கூட இல்லாத ஜந்துவாய் ஆச்சார்யப் பட்ட நீங்கள் ஐந்தறிவுகள் பற்றி கேள்வி எழுப்ப அருகதை அற்றவர்.

    ReplyDelete
  11. // சாத்திரி said...

    ஜ்வோராம் சுந்தர் பலரும் அவரது பதிவில் நடந்த விடயங்களின் பதிவுகளை போட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் அவர் புரிந்து கொள்ள விரும்புபவராகத் தெரியவில்லை புரிந்து கொண்டால் மகிழ்ச்சியே//

    சாத்திரி, அந்த பதிவின் நோக்கம், ஈழ மக்களின் போராட்டத்திற்கு இடையூறு செய்பவர்களை வெளிச்சம் போட்டுக் காட்ட மட்டுமே எழுதியது. ஆனால் எதிர்பார்த்தது போலவே அதற்கு சம்பந்தமே இலலாமல் சிலர் பின்னூட்டம் போட்டு திசை திருப்பிவிட்டார்கள். பதிவை மட்டும் மீண்டும் ஒருமுறை சரியாக படியுங்கள். பிறகு தெரியும் கோமாளிகள் யாரென்று? இல்லை பின்னூட்டத்தை மட்டும் தான் படித்து முந்திரிக் கொட்டை தனமாக பதிவு போடுவேன் என்றால் அதற்கு நான் ஒன்னும் பண்ண முடியாது.

    ReplyDelete
  12. //ஜயா தங்கபாலு பிரபாகரனை முதன் முதலில் சந்தித்ததே இந்தியா புலிகளின் தெலைதொடர்பு கருவிகளை பறித்த பொழுது பிரபாகரன் உண்ணாவிரம் இருந்தார் பிரபாகரனின் உண்ணா விரதத்தினை முடித்து வைக்க முயற்சித்த பொழுதுதான் சந்தித்தார் அதனை அவரிடமே கேட்கலாம்.//

    இது தவறென்று எத்தனை முறை வேண்டுமானாலும் மறுப்பேன். என்னிடம் அந்த தகவலை சொன்னவர் தங்கபாலுவின் நெருங்கிய நண்பர். மிகுந்த மரியாதைக்கு உரியவர்..அவரிடம் அடுத்த முறை பேச வாய்ப்பு கிடைக்கும் போது வருடத்தை நிச்சயம் சொல்கிறேன்.

    ReplyDelete
  13. தலைப்பில் உள்ள எழுத்துப் பிழைகள் எதிர்பாராததா? ஏதேனும் உள்குத்தா? :)

    ReplyDelete
  14. //இந்திய எல்லையில் இன்னமும் எதிரிகள் ஊடுவாமல் இரவுபகல் இந்திய இராணும் காக்கிறது என்பது பெருமைதான் ஏதோ ஒரு பகலில் அண்மையில்தான் மும்பையில் ஏதோ சிறியதாய் சரவெடிசத்தம் கேட்டது.//

    ஒரு பக்கம் கிண்டல்... இன்னொரு பக்கம் கெஞ்சல்.. நல்லா ஆடறாங்கய்யா டப்பாங்குத்து.. :))

    ReplyDelete
  15. sanjay said
    //இது தவறென்று எத்தனை முறை வேண்டுமானாலும் மறுப்பேன். என்னிடம் அந்த தகவலை சொன்னவர் தங்கபாலுவின் நெருங்கிய நண்பர். மிகுந்த மரியாதைக்கு உரியவர்..அவரிடம் அடுத்த முறை பேச வாய்ப்பு கிடைக்கும் போது வருடத்தை நிச்சயம் சொல்கிறேன்.//

    நல்லது சஞ்ஜய் எந்த ஆண்டு சந்தித்தார் அவர்கள் யார் யார் சந்தித்தித்தார்கள் என்கிற விபரத்தினை கேட்டு சொல்லவும் எங்களிற்கும் தகவல் அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும். ஆனால் தற்சமயம் காங்கிரஸ்காரர்கள் கதைப்பதை பார்தால் சிரிப்புத்தான் வருகிறது

    ReplyDelete
  16. //sanjay saidதலைப்பில் உள்ள எழுத்துப் பிழைகள் எதிர்பாராததா? ஏதேனும் உள்குத்தா? :)//

    சஞ்ஜய் பெயரில் எழுத்துப் பழை தவறுதலாகத்தான் வந்தது ஏனெனில் உங்கள் பெயரை பிரெஞ்சு உச்சரிப்பின்படி படித்துவிட்டேன்.

    ReplyDelete
  17. Anonymous12:45 AM

    நண்பரே, நான் திடமாக நம்புகிறேன், சஞ்சய் போன்ற நண்பர்களுக்கு விளக்க வேண்டுமென்று - விலக்க வேண்டாமே... (இது மற்ற காங்கிரஸ்காரர்களுக்கானதல்ல!).

    ///

    உண்மைதான். பொடியன் சஞ்சய் போன்றவர்கள் நாம் சொல்வதை படிக்கவாவது செய்வார்கள். அதனால் உண்மை நிலை கொஞ்சமாவது புரியும். என்னதான் சார்ந்த கட்சிக்கு வக்காலத்து வாங்குவதற்காக பேசினாலும் , மனதளவிலாவது உணர்ந்து கொள்வார்கள்.

    மற்ற கதர்க்காவிகளை எல்லாம் நாம் பொருட்டாகவும் , தமிழர்களாகவும் எடுத்துக்கொள்ளவே வேண்டாம்.

    அவர்கள் டெல்லி தேசியத் தலைமையின் அடிமைகள். அடிமைகள் எப்படி மானமுள்ள தமிழினத்தவர்களாக இருக்க முடியும்?

    இதில் கோடம்பாக்கத்து கோமாளிகள் என்ற கிண்டல் வேறு. இப்போதாவது புரிகிறதா நண்பர்களே , பொன்சேகா எங்கிருந்து உத்வேகத்தைப் பெற்றார் தமிழக அரசியல்வாதிகளைக் கோமாளிகள் என்று சொல்லும் திராணியைப் பெற்றாரென்று?

    இன்றுவரை கண்டித்தார்களா காங்கிரசார்.? இல்லையே !

    ReplyDelete
  18. //sanjay saidஒரு பக்கம் கிண்டல்... இன்னொரு பக்கம் கெஞ்சல்.. நல்லா ஆடறாங்கய்யா டப்பாங்குத்து.. :))//

    sanjay கோடம்பாக்கத்தார் கோமாளிகள் ஈழத்தமிழர் பாவங்கள் என்கிற மாதிரி அதே கிண்டல் அதே கெஞ்சல்.

    ReplyDelete
  19. /ஒரு பக்கம் கிண்டல்... இன்னொரு பக்கம் கெஞ்சல்.. நல்லா ஆடறாங்கய்யா டப்பாங்குத்து.. :))/

    சஞ்சய்.. இதைக் கடுமையாக நான் கண்டிக்கிறேன். இதில் நகைச்சுவையல்ல, குரூரமே தெரிகிறது.

    ReplyDelete
  20. Anonymous1:33 AM

    //சஞ்சய்.. இதைக் கடுமையாக நான் கண்டிக்கிறேன். இதில் நகைச்சுவையல்ல, குரூரமே தெரிகிறது.//

    கீழ்க்கண்ட வரிகளில் உள்ள sarcasmஉம் கீழ்வெட்டுப் பேச்சும் குரூரமும் உங்களுக்குப் புரியாததும் புலப்படாததும் ஆச்சரியம் தான் சுந்தர் சார். இதில் உள்ள குரூரத்தை கண்டுபிடித்து சஞ்சய் வந்து சொல்வதற்கு முன்னரே நீங்கள் பதிவெழுதவரைச் சாடிவிட்டு, அதற்கு பின்னரும் சஞ்சய் அந்த மாதிரி பேசியிருந்தால் சஞ்சயை நீங்கள் குற்றம் சொல்லலாம். நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள்.

    "இந்திய எல்லையில் இன்னமும் எதிரிகள் ஊடுவாமல் இரவுபகல் இந்திய இராணும் காக்கிறது என்பது பெருமைதான் ஏதோ ஒரு பகலில் அண்மையில்தான் மும்பையில் ஏதோ சிறியதாய் சரவெடிசத்தம் கேட்டது."

    இந்தியாவின் உதவி உங்களுக்குத் தனி ஈழம் பெறுவதற்கு மட்டும் தேவை. ஆனால் இந்தியாவின் கஷ்ட காலத்தின் போது கைகொட்டி சிரிக்கும் உங்கள் நல்லெண்ணத்தை இன்னும் இந்திய மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு இந்தியாவிலிருந்தே இந்தியாவிற்கு எதிராகப் பேசும் சில பதர்களும் புரிந்து கொள்ளப்போவதில்லை.

    ReplyDelete
  21. Anonymous1:34 AM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  22. சுந்தர் சார், அந்த வரிகளை சொல்வதர்கு முன் கொஞ்சம் யோசித்தேன். இவர் ஒருவருக்காக சொல்லப் படும் வாக்கியம் மற்றவர்களையும் புண்படுத்தினால் என்ன செய்வதென்று. என் பதிவில் , ப்ராணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பவது பற்றி குறிப்பிட்டதற்கு கொழுவி “ நா தளுதளுக்கிறது” என்று கிண்டல் செய்தார். இங்கு அத்திரி, மும்பை சம்பவத்தை கிண்டல் செய்திருக்கிறார்.

    //"இந்திய எல்லையில் இன்னமும் எதிரிகள் ஊடுவாமல் இரவுபகல் இந்திய இராணும் காக்கிறது என்பது பெருமைதான் ஏதோ ஒரு பகலில் அண்மையில்தான் மும்பையில் ஏதோ சிறியதாய் சரவெடிசத்தம் கேட்டது."//

    இதை 2வது முறை படிக்கும் போது “ சிரியதாய் சரவெடி சத்தம் ” என்பது என்னை கட்டுபடுத்த முடியாமல் செய்துவிட்டது. தன் நாட்டு மக்கள் இறப்பது அவருக்கு சோகம். ஆனால் அடுத்த நாட்டுக்காரன் இறந்தால் அது சரவெடி சத்தமா?

    யார் என்ன சொன்னாலும் சூடு சொரணை இல்லாமலே இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி சுந்தர் சார்? அந்த வார்த்தையை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை?

    இணையத்தில் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். சிலர் ( கவனிக்க : சிலர் ) இந்தியாவை கிண்டல் செய்வதை முழு நேரத் தொழிலாக கொண்டிருக்கிறார்கள். அம்மாதிரி ஆட்களுகெல்லாம் என்னால் அனுதாபப் பட முடியாது. இபப்டி தான் பேச முடியும்.

    என் நாட்டு மக்கள் சாவதை சரவெடி சத்தமாக பார்த்தால் அவர்கள் கேட்கும் உதவியை கெஞ்சலாக பார்க்க நான் ஏன் வருத்த படனும்?

    ReplyDelete
  23. Anonymous3:27 PM

    நல்லாதான் சொல்லுறியள் சாத்திரியார்

    ReplyDelete
  24. பொடியன்-|-SanJai @ 9:25 PM // மெல்போர்ன் கமல் said...

    நல்லாத்தான் சொல்லுறியள் சாத்திரியார். ஆனால் உந்த ஜந்தறிவு படைச்ச ஜீவன்களுக்கு அது எப்பிடி விளங்கப் போகுது??//
    கமல் , விமான நிலையத்தில் குண்டு வைத்தது புலிகள் தான் என்று நான் நினைத்தேன். ஆனால் அது இலங்கயில் வேறு இயக்கம் என கொழுவி வந்து சொல்லும் வரை உங்களால் அதற்கு விளக்கம் தரமுடியவில்லை. சென்னை விமான நிலையத்தில் குண்டு வைதார்களா? என ஓரறிவு கூட இல்லாத ஜந்துவாய் ஆச்சார்யப் பட்ட நீங்கள் ஐந்தறிவுகள் பற்றி கேள்வி எழுப்ப அருகதை அற்றவர்.//

    உங்களுக்குத் தமிழ் தெரியாதா?? நீங்கள் கூறினீர்கள். விமான நிலையத்தில் புலிகள் குண்டு வைத்தார்கள் என்று. அதற்கு நான் உங்களிடம் கேட்ட கேள்வி தான் புலிகள் எப்போது எந்த விமான நிலையத்தில் குண்டு வைத்தார்கள் என்று??? அதற்குப் பதில் சொல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு. அதற்கே பதில் சொல்லத் தெரியாத நீங்கள் அந்தக் கேள்விக்கான விடையை உங்களிடம் கேட்கும் போது அதற்கு விடை சொல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு. இப்படி முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் புதைத்துத் தலை குத்துக்கரணம் அடிப்பீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவேயில்லை.

    இப்போது சொல்லுங்கள் தமிழர் போராடம் பற்றி ஒன்றும் தெரியாமல் கதைக்க்கும் நீங்களா??? நாங்களா போராட்டம் பற்றிக் கதைக்க அருகதையற்றவர்???

    ReplyDelete
  25. பொடியன் யின் பொய் கூறும் விதத்தை உங்களுக்கு அம்பலப்படுத்துவதற்காக இதோ நான் அவருக்கு அளித்த பின்னூட்டங்களும் அதற்கான அவரின் பதில்களும்!

    மெல்போர்ன் கமல் said...
    19 December, 2008 9:27 AM
    பொடியன்-|-SanJai said...
    //தமிழர்களைப் புரிந்து கொள்ளாது, அவர்களது போராட்டத்தைக் கொச்சைப் படுத்திப் பதிவு எழுதும் நீங்கள்//

    கமல், தமிழர்களின் போராட்டத்தை கொச்சை படுத்துபவர்களை தான் நான் குறை சொல்லி இருக்கிறேன். இந்த பதிவில் தமிழர்களின் போராட்டத்தை கொச்சை படுத்தி எழுதி இருக்கும் வார்த்தைகளை எடுத்துக் காட்ட முடியுமா? உடனே திருத்திக் கொள்கிறேன்.

    ''என் பாஷையில் பயங்கரவாதம் என்பது, என் நாட்டுத் தலைவரை வெளிநாட்டு இயக்கம் கொல்வது, என் நாட்டில் வைத்து வெளிநாட்டு விருந்தினர்களை கொல்வது ( பெயர் வேண்டுமா? ), என் நாட்டு விமான நிலையத்தில் குண்டு வைப்பது ஆகியவை தான். இவை அனைத்தையும் பயங்கரவாத விடுதலைபுலிகள் செய்திருக்கிறார்கள்.. உங்களால் மறுக்க முடியுமா?. எனக்கு என் தாய்நாட்டிற்கு பிறகுதான் மற்ற நாடெல்லாம்.//


    பொடியன்-|-SanJai said...
    என் பாஷையில் பயங்கரவாதம் என்பது, என் நாட்டுத் தலைவரை வெளிநாட்டு இயக்கம் கொல்வது, என் நாட்டில் வைத்து வெளிநாட்டு விருந்தினர்களை கொல்வது ( பெயர் வேண்டுமா? ), என் நாட்டு விமான நிலையத்தில் குண்டு வைப்பது ஆகியவை தான். இவை அனைத்தையும் பயங்கரவாத விடுதலைபுலிகள் செய்திருக்கிறார்கள்.. உங்களால் மறுக்க முடியுமா?. எனக்கு என் தாய்நாட்டிற்கு பிறகுதான் மற்ற நாடெல்லாம்.//


    உங்கள் நாட்டு விமான நிலையத்தில் விடுதலைப் புலிகள் எப்போது குண்டு வைத்தார்கள் என்று கூற முடியுமா??? உங்கள் நாட்டு அமைதிப் படையினர் எங்கள் நாட்டில் செய்த நாசகார வேலைகளுக்கு நாங்கள் என்ன பெய்ர் கூற முடியும்????

    மெல்போர்ன் கமல் said...
    வால்பையன் said...
    நல்ல ஆரோக்கியமான விவாதத்தை எதிபார்க்கிறேன்!

    விடுதலைபுலிகள் வேண்டாம் என சொல்லும் சில ஈழதமிழர்களும் இருக்கிறார்கள்.
    அவர்களுக்கு கமலின் பதில் என்ன?

    ஈழதமிழர்களுக்கு தனி நாடே சரியானது என்று நம்பும் பட்சத்தில் அதை உலக நாடுகளுக்கு எடுத்து சொல்லும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது.

    உலக நாடுகள் விடுதலைபுலிகளை தடை செய்யும் அளவுக்கு எடுத்து சென்றது யார்? ஏன்?//

    இந்தளவு வரலாறுகளையும் தெரியாதவர்களாய் இருந்து கொண்டு ஈழம் பற்றிப் பதிவு எழுத உங்களுக்கு என்ன அருகதை உள்ளது நண்பர்களே???

    இவை தான் நான் உங்கள் பதிவில் போட்ட பின்னூட்டங்கள். இப்போது சொல்லுங்கள் நண்பர்களே??? விமானத்தில் புலிகள் குண்டு வைத்தார்கள் என்பது பற்றிப் பொய் கூறும் பதிவரா??? நான அதற்கான விடையை ஆதார பூர்வமாக விளக்க வேண்டும்????


    உங்களுக்குத் தமிழ் தெரியாதா?? நீங்கள் கூறினீர்கள். விமான நிலையத்தில் புலிகள் குண்டு வைத்தார்கள் என்று. அதற்கு நான் உங்களிடம் கேட்ட கேள்வி தான் புலிகள் எப்போது எந்த விமான நிலையத்தில் குண்டு வைத்தார்கள் என்று??? அதற்குப் பதில் சொல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு. அதற்கே பதில் சொல்லத் தெரியாத நீங்கள் அந்தக் கேள்விக்கான விடையை உங்களிடம் கேட்கும் போது அதற்கு விடை சொல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு. இப்படி முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் புதைத்துத் தலை குத்துக்கரணம் அடிப்பீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவேயில்லை. இப்போது சொல்லுங்கள் தமிழர் போராடம் பற்றி ஒன்றும் தெரியாமல் கதைக்க்கும் நீங்களா??? நாங்களா போராட்டம் பற்றிக் கதைக்க அருகதையற்றவர்???

    ReplyDelete