இதயத்து சேகங்களை
இறக்கிவைத்து
சுமக்கும் சுமைகளையும்
சொல்லிட வார்த்தைதேடி
கலைந்துபோகும் என்
கனவுகளை
கலைத்து பிடித்து
கட்டிவைக்க விழையும்
வாலிபன்நான்
வசந்தத்தை அனுபவிக்கும்
வயதில்
வறுமையை தாங்கலாம்
வெறுமையை...........??
முடியவில்லை
வீதியில் வீசப்பட்டடோ
விக்கப்பட்டவனே இல்லை
சொந்தம் சுற்றம்
எல்லாம் உண்டு
உற்றாருக்கும் பெற்றாருக்கும்
உதவி உதவியே
உதிரிபாகங்கள்
தேய்ந்துபோய்
உடலும் மனமும்
சோர்ந்து.....என்
துக்கங்களை
தூக்கம்மட்டும்
அவ்வப்போது
தத்தெடுத்து கொள்ளும்
இதோ என்னை
தத்து கொடுத்துவிட்டேன்
நிதந்தரமாக
மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து ஒன்றுமில்லாமல் போன ஈழத்தமிழர்கள் ஏராளம். நண்பனின் கதையை பகிர்ந்தமைக்கு நன்றிகள்
ReplyDelete