உலக நாடுகளெங்கும் புலம் பெயர்ந்த தமிழர்களால் பல்வேறு நோக்கங்களிற்காய் பல்வேறு பெயர்களில் பல அமைப்புக்கள்தொடங்கபட்டு அவை ஒன்றுக்கொன்றுதொடர்பில்லாமலும் அவர்களிற்குள் ஆயிரம் குழப்பங்கள் குத்துபாடுகள் என்று தொடர்ந்தாலும் அவர்களின் ஆர்வத்தின் அடிப்படையில்முடிந்தவரை தமிழிற்கும் தாய் நிலத்திற்கும் சில சேவைகளையும் சிறு பத்திரிகைகள் மற்றும் சில சஞ்சிகைகள் என்று வெளியிட்டு கொண்டிருந்தபோதும் அவற்றில் பல அமைப்புகள் கால வெள்ளத்தில் கரைந்து காணாமல்போய் விட்ட நிலையில், இன்னும் சில கரைந்து பொய்கொண்டிருக்கும் நேரத்தில் தான் புலம்பெயர் சூழலியே பிறந்து வளர்ந்த மற்றும் சிறு வயதிலெயெ புலம் பெயர்ந்து வந்த இளையோரால் தமிழ் இளையோர் அமைப்பு என்னும் அமைப்பு பல நாடுகளிலும் ஒரேநோக்கத்திற்காய் ஒரே பெயரில் ஒன்றுக்கொன்று தொடர்புகளை பேணியபடி ஒரே அமைப்பாய் செயற்பட தொடங்கி அதன் செயற்பாடுகளும் பாராட்டதக்கதாய் பலரும் போற்ற தக்க விதத்தில் அவர்களது திறைமை உழைப்பு எல்லாமே எம் இனத்திற்கும் எம் நாட்டிற்கும் நன்மை தரும் விதத்தில் நகர்த்தபடுவது நல்லதொரு மாற்றமே.
அவர்களது தாயக பயணமும் அங்கு அவர்கள் ஆற்றிய பணிகளும் அதற்கு சான்றாகும். புலத்து இளையவர் என்றாலே காதில் கடுக்கனும் கலர் அடித்த தலையும் கதா நாயக நாயகி கனவும் காதல் செட்டைகளும் மட்டுமே அவர்களிற்கு தெரியும் என்று இருந்த கதைகளையெல்லாம் காலால் உதைத்து, காலத்தின் உதாரணமாய் நாமிருப்பொம் என்ற காட்ட புறப்பட்டிருக்கும் அவர்களிற்கு கை கொடுத்து மேலும் மேலும் அவர்களது பணிகளிற்கு ஆக்கமும் ஊக்கம் கொடுத்து பராட்டவேண்டியது எமதும் மற்றும் எமது மற்றைய அமைப்பகளின் கடைமையாகும்.
ஆனால் ஒரு வேதனையான விடயம் என்னவென்றால் இங்குள்ள பல பழைய எம்மவர் அமைப்புக்களிற்கொ அதில் பதவிகளை அலங்கரித்திருக்கும் பழசுகளிற்கொ இந்த இளையவரை பாராட்ட மனது வரவில்லை. சரி பாராட்டத்தான் வேண்டாம் சும்மாயிருக்கிறார்களா என்றால் இல்லை . அவர்களின் புறு புறுப்பு என்னவென்றால் அவர்களது நடையையும் உடையையும் பார் நாட்டிற்கு உதுகளாலை என்ன நன்மை தமிழ் உச்சரிப்பே வருதில்லை உருப்பட்டமாதிரிதான் என்று இவர்களின் உளறல்கள்.
உடையாலும் உச்சரிப்பாலும் தான் ஒருவரிற்கு தன் இனத்தின் மொழியின் மீதான பற்று வரவேண்டுமென்றில்லை உடை நாகரிகம் என்பது என்ன? மனிதன் தான் வாழ்ந்த சூழலுக்கு அதன் தட்ப வெட்ப நிலைகளிற்கேற்ப தன்னைபாதுகாக்கவும் தனது மானத்தைமறைக்கவும் ஆடைகளை அணிய தொடங்கினான் காலப்போக்கில் அதில் மற்றங்களும் செய்து கொண்டனர். இவர்கள் இங்கு கூறுவது போல பார்த்தால் எமது பாட்டன் முப்பாட்டன் அணிந்தத போல நாம் இன்றும் கோவணமா அணியவேண்டும். இல்லை சொல்பவர்கள் தான் அதை அணிந்து திரிகிறார்களா??
அடுத்ததாக தமிழ் உச்சரிப்பு என்று பார்த்தால் அவர்களது உச்சரிப்பை அழகிய தமிழ் உச்சரிக்க செய்வது ஒன்றும் கடினமான விடயம் அல்ல ஊருக்கு நாலு கதை பேசுகின்ற நேரத்தில் அதை நீங்களும் நாங்களும் செய்யலாம் இளையோர் அமைப்பினர் தாயக பயணம் மேற்கொண்டிருந்த போது அங்கு அவர்களிற்கான தமிழ் வகுப்புகளும் நடாத்தபட்டன என்பது இங்கு குறிப்பிட தக்கது.
அதற்கும் மேலாக இளையோர் அமைப்பினர் எதிர்நோக்கும் இன்னொரு பிரச்சனை அவர்கள் பெற்றொரிடம் இருந்தே அதாவது பிள்ளை இளையோர் அமைப்பில் இணைகிறது என்றால் எங்கே அந்த பிள்ளை தங்களை விட்டு தாயகத்திற்கு போய்விடுமோ என்று தவறான நினைப்பினால் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த அமைப்பில் இணைய அனுமதிப்பதில்லை அதனால் பலர் பெற்றோருக்கு தெரியாமலேயே இந்த அமைப்பில் பணியாற்ற வேண்டிய நிலை. பல பெற்றொர் தங்கள் பெண்பிள்ளைகளை இந்த அமைப்பில் இணைய விடுவதில்லை இதையெல்லாம் பார்க்கும் போது எழுபது எண்பதுகளில் தாயகத்தில் ஆயுதப் போராட்டம் தொடங்கிய கால கட்டத்தில் பல பெற்றோர்கள் இப்படித்தான் எங்கே தங்கள் பிள்ளை தங்களை விட்டு போராட போய்விடமோ என்கிற பயத்தில் அவர்களை கெஞ்சியும் மிரட்டியும் அவர்களை வெளி நாடுகளிற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கே அவர்கள் ஒரு தமிழராக நடந்து கொள்ளாமல் ஒரு சராசரி தாய் தந்தையாகவே நடந்து கொண்டனர். அதற்காக எமது போராட்டம் அப்படியெ நின்று போகவில்லை வெளிநாடு வந்த பலநூறு இளையவர்கள் திரும்பவும் தாயகம் வந்த போராடினர். அன்று தங்கள் பிள்ளைகளை அனுப்ப அவர்களிற்கு வெளிநாடு என்று ஒன்று இருந்தது ஆனால் இன்று வெளிநாட்டு பெற்றொருக்கு பிள்ளைகளை அனுப்ப எந்த இடம் உள்ளது ?? அடுத்த கிரகத்திற்கா?? தாயகம் மட்டுமே உள்ளது. எனவே இங்கு பெற்றோரும் வீணான பயங்களை விட்டெறிந்து தன்னினத்திற்கும் தன்மொழிக்கும் தாய் நாட்டிற்கும் சேவை செய்ய புறப்பட்டிருக்கும் தனது பிள்ளைகளை பார்த்து பெருமைபடவேண்டுமே தவிர பயப்பட தேவையில்லை.
அடுத்ததாக எமது மக்களை சுனாமி தாக்கிய நேரத்தில் இவ் இளையொர் அமைப்பின் பணி மகத்தானது அந்த தை மாத குளிரிலும் தங்கள் பாடசாலை வகுப்புகளையும் நிறுத்தி விட்டு வீதி வீதியாக வீடு வீடாக ஒவ்வொரு நாட்டிலும் வெள்ளையினத்தவருக்கு அவரவர் மொழிகளில் எமது மக்களின் அவலத்தை எடுத்து சொன்ன அதே நேரம் சிறீ லங்கா என்கிற தேசம் வேறு எங்கள் தமிழர் தேசம் வேறு என்று அவர்களிற்கு புரிய வைத்து பாரிய அளவில் பண மற்றும் பொருளுதவிகளை பெற்று தாயகம் நோக்கி அனுப்பியிருந்தனர் அவர்களது அந்த பணியினை எந்தவொரு அமைப்பும் ஒரு பொது மேடையிலும் இவர்களை மனம் திறந்து பாராட்டவில்லையென்பது மட்டுமல்ல பலஊடகங்கள்கூட இவர்களது பணியினை பற்றி கண்டு கொள்ளவில்லையென்பதும் கவலையான விடயமே.
இதுவரை நடந்தது நடந்தவையாக இருக்கட்டும் இனிமேலாவது மற்றைய அமைப்புகளின் பொறுப்புக்கள் மற்றும் பதவிகளில் இருக்கின்ற எம்மவர்கள் எதிர்கால எமது தேசத்தை கட்டி எழுப்ப போகின்ற எமது இளைய சமூதாயத்திற்கு வழி விட்டு அவர்களிற்கு வழிகாட்டியாக இருந்தலே போதும். இல்லை வழிவிட்டு ஒதுங்கியிருங்கள் அதுவே போதும். இறுதியாக இளையோருக்கும் ஒரு வேண்டுகோள். உங்கள் செயற்பாடுகளால் உங்கள் பெற்றோருக்கும் மற்றொருக்கும் உங்கள் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்பி இன்று எமது போராட்டத்தாலும் போராடியும் களைத்து போனதோர் சந்ததி அவர்களது சுமையின் மீதியை இன்று உங்கள் தோள்களில் சுமத்தியுள்ளது அதை சோகமான சுமையாக நினைக்காமல் சுகமான சுமையாக்கி எத்தனை தடைகற்கள் வந்தாலும் அதனை படிக்கற்களாக மாற்றி அதன்மீது நடந்து இனியொரு விதி செய்வீர்.
http://www.orupaper.com/issue45/pages_K__Sec3_28.pdf சாத்திரி ஒரு பேப்பருக்காய் நன்றி
வணக்கம் அண்ணா,
ReplyDeleteஉங்களை எனக்குத் தெரியாது ஆயினும் உங்களுடைய blog இனை yarl.com இல் பெற்றுக் கொண்டதாக ஞாபகம்.
நான் இங்கு Australia இல் உள்ள இளையோர் அமைப்பில் இருக்கின்றேன்.
உங்களது இந்தக் கட்டுரையினை நான் வாசித்த போது நான் எவ்வாறு நினைத்தேனோ அதயே நீங்களும் எழுதி உள்ளீர்கள்.
அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில் பெரியோரிடம் உவ்வாறான தன்மை ஆரம்பத்தில் காணப்பட்டாலும் இப்பொழுது எம்மை முழுதாக நம்பி நடக்கின்றார்கள்.
இளயோர்தான் நாட்டின் தூண்கள் என்பதனை உணர்ந்து எம்மைத் தட்டிக் கொடுத்து ஊக்குவிக்கின்றார்கள்.
மற்றும் இளையோரும் ஒன்றை நன்கு விளங்க வேண்டும், நாம் சேவை செய்வது நாட்டுக்காகவே அன்றி இங்கு இருக்கும் அங்கிள் மாருக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ அல்ல ஆகவே அவர்கள் என்ன சொன்னாலும் அது நாம் நாட்டிற்குச் செய்யும் வேலையினைப் பாதிக்கக் கூடாது என்பதும் எனது தாழ்மையான கருத்து.